Monday, February 17, 2014

அத்வானி தன் வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் ஊழல் பட்டியல்

புதுடில்லி:கடந்த, 10 ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில் பகிரங்கமாக பட்டியலிட்டுள்ளார். 'சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சி இது' என்றும், கடுமையாக, அவர் விமர்சித்துள்ளார். அது போல், பெருமையாக பிரதமர் பதவியில் அமர்ந்த மன்மோகன் சிங், ஊழல்வாதி என்ற பெயருடன், வெளியேற உள்ளார் என்றும் அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, 10 ஆண்டு கால, ஐ.மு., கூட்டணி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும், அவர், பட்டியலிட்டுள்ளார்.
'கை சுத்தமானவர்':


அவர் கூறியுள்ளதாவது:நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நிதி அமைச்சராக பதவி வகித்தவர், மன்மோகன் சிங். அப்போது, அவருக்கு, 'கை சுத்தமானவர்' என்ற, நற்பெயர் இருந்தது. அவர், பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, படித்தவர்களும், பொருளாதாரவாதிகளும், பொதுமக்களும், அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு

வைத்திருந்தனர்.ஆனால், அவரின், 10 ஆண்டு கால ஆட்சி, சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சியாக திகழ்ந்தது. நாட்டில், இதுவரை இருந்த அரசுகளிலேயே, மிக மோசமான அரசை நடத்தியவர் என்ற, களங்கம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.டில்லியில் நடந்த, 'காமன்வெல்த்' விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த, பிரமாண்ட ஊழல், அவரின் ஆட்சி கால ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

எம்.பி.,க்களுக்கு லஞ்சம்:


இதையடுத்து, 'ஸ்பெக்டரம் '2ஜி' ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததும், வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேடுகள் அனைத்தும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தாக்கல் செய்த அறிக்கை வாயிலாகவே, வெளி உலகிற்கு தெரிந்தன.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, மிக மோசமான முறைகேடு, பார்லிமென்ட்டில் நம்பிக்கை ஓட்டு பெறுவதற்கு, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தான்.அமெரிக்காவுடனான, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன.இதையடுத்து, அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், நம்பிக்கை ஓட்டு பெறுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க, பேரம் பேசப்பட்டது.
கட்டுக்கட்டாக:


இதுகுறித்து, மூத்த காங்., தலைவர் ஒருவர், அமெரிக்க அதிகாரி ஒருவருடன் பேசிய விஷயங்களை, 'வீக்கிலீக்' இணையதளம் அம்பலப்படுத்தியது. பத்திரிகை ஒன்றிலும், இந்த செய்தி வெளியானது.கடந்த, 2008, ஜூலை, 22ம் தேதி, பார்லிமென்ட் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக அமைந்தது. மூன்று எம்.பி.,க்கள், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதற்க்கு, தங்களுக்கு பேரம் பேசப்பட்டதாக, கட்டுக் கட்டாக, ரூபாய் நோட்டுகளை, பார்லிமென்டில் கொண்டு வந்து கொட்டினர்.தற்போதும், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊழல்கள் மட்டுமல்லாமல், காங்., கட்சியின் குழப்பமான நடவடிக்கைகளால், பார்லிமென்டும் அடிக்கடி முடங்கி விடுகிறது.தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மசோதாவை தாக்கல் செய்தபோது, பார்லிமென்ட்டில் நடந்த அமளி, பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை நான் பார்த்திராத ஒன்று.இவ்வாறு, அத்வானி, அதில் எழுதியுள்ளார்.

அத்வானி வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல்

1. காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்
2. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல்
3. நம்பிக்கை ஓட்டெடுப்பில் நடந்த முறைகேடு
4. நிலக்கரி ஊழல்
5. ஹெலிகாப்டர் ஊழல்நன்றி - தினமலர் 


 மக்கள் கருத்து \\\\\


1 ganapati sb அத்வானி ஒரு சிறந்த தன்னலமற்ற தலைவர். நாட்டின் ஜனநாயகம் காப்பதற்காக அவர் செய்த பங்களிப்புகளை எதிர்கால வரலாறு எழுதும். emergencY ஐ எதிர்த்து சிறை சென்றார். தன்னை விட்டால் வேறு கட்சி இல்லை என்ற மமதையில் இருந்த காங்கிரசுக்கு மாற்று உண்டு என ஜனதா கட்சி உருவான போது அதில் இணைந்து தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக இருந்து தணிக்கை முறையில் வெளியான செய்திகளை நடு நிலையோடு சுதந்திரமான செய்து வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். ஜனதா கவிழ்ந்து கலைந்த போது மீண்டும் எதிர்க்கட்சி இல்லாமல் காங்கிரஸ் அராஜக ஆட்சி நடத்தியபோது BJP யை வாஜ்பாயோடு இணைந்து உருவாக்கி வெறும் 2 MP கொண்ட கட்சியை 180 MP கொண்ட கட்சியாக congressirkku maatraana aalum கட்சியாக matri makkalukku தேர்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்கி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். தானே பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் வாஜ்பாயை பிரதமராக்கினார். எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இரையாகாமல் பொதுவாழ்க்கையில் தூய்மையை கடைபிடித்து வருகிறார் மோடி ஜெட்லி நாய்டு மகாஜன் சிந்திய சௌஹான் ராமன் கத்காரி ராஜ்நாத் போன்ற அடுத்தகட்ட தலைவர்களை இனம் கண்டு உருவாக்கி அவர்கள் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு பெற தடையாக இருக்காமல் அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அவர்களுக்கு துணையாக நின்று வழிகாட்டினார் கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் பயணம் செய்து அணைத்து பிரச்சனைகள் பற்றி தெளிவான அறிவும் அதற்க்கான தீர்வும் வைத்திருந்தார் சென்ற தேர்தலில் அவர் பிரதமராகி இருந்தால் கண்டிப்பாக கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்திருப்பார். அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்திருந்தால் மோடியே தலைமை ஏற்க்க வந்திருக்க மாட்டார். அவர் ஆரம்பக்கவலை மோடி பற்றி இல்லை. நிதிஷ் மம்தா நாய்டு ஜெய பட்நாயக் போன்றோரோடு உருவாக வாய்பிருக்கும் கூட்டணி மோடை பற்றிய பொய் பிரசாரங்களால் இழக்க வேண்டி இருக்குமே என்பதால்தான். ின்னர் மோடியின் வளர்ச்சி பிரசார அலையில் மற்ற கூட்டணிகள் அமையாவிட்டாலும் பரவாயில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து மோடிக்கு ஆதராவாக உள்ளார். அத்வானி ப்ரனபிர்க்கு அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். சுயநலமுள்ள தலைவர்களை விமர்சிக்கும் பொது அத்வானி போன்ற தன்னலமற்ற தலைவர்களை நாடு போற்றினால் தான் நல்ல அரசியல் தலைவர்கள் பலர் உருவாவார்கள்.2
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
17-பிப்-201407:03:37 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஊழலை பற்றி பாஜக பேசுவதா ??? ஊழலை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்... சவ பெட்டியிலும் ஊழல் செய்த உத்தமர்கள் தானே இந்த பாஜக அரிசியல் வியாதிகள்.. இன்று நடந்த மாபெரும் 2 g ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவரே பாசக் கட்சியை சேர்ந்த பிரமோத் மகாஜன் தானே ??? மறுக்க முடியுமா ? காங்கிரஸ் செய்த பல ஊழல்களில் பாஜகாவின் பங்கு கண்டிப்பாக உண்டு என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிறிய உதாரணம் - இயற்கை எரிவாயு ஊழலில், நமது இந்திய மக்களை ஏமாற்றி, காங்கிரஸ் , பாஜக கட்சிகளின் துணையுடன், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொள்ளை அடித்தது மட்டும் - 1.2 லட்சம் கோடி ரூபாய் என்று தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு 54, 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு என்று குறிப்பிட பட்டுள்ளது. இந்த மாபெரும் பணமுதலை காங்கிரஸ் , பாஜக கட்சிக்கு தேர்தல் நிதி எவ்வளவு தரும் என்று நமக்கு தெரியாத ? காங்கிரஸ் , பாஜக கட்சிகளின் ஆதரவுடன் தானே இவ்வளவு பணத்தினை ஆட்டைய போட்டார்கள் ??? இதை தட்டி கேட்க ஆம் ஆத்மி கட்சி முன்வந்தால், ஊழல் கட்சியான பாஜகவும் , காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தானே ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கினர் ? அம்பானிகளின் அப்பட்டமான பினாமிகளான மோடியின் பாஜக , காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் நிதி கிடைக்கும் என்று கொஞ்சம் ஊகித்து பாருங்கள்.. ?? பிறகு மற்ற தொழில் நிறுவனங்கள் எவ்வளவு கொடுக்கும் ? இதுபோன்ற பணத்திற்கு விலைபோகும் கட்சிகள் இருப்பதால் தானே இது போன்ற கார்பரேட் கம்பனிகளின் பணமுதலைகள் அரசை ஏமாற்றி , மக்களின் வரிபணதினை சுரண்டி , சாமானிய மக்களின் ரத்தத்தை குடிக்கின்றன ?? பாஜக , காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சிகளை ஆதரிக்காமல், ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டால் ?? இந்த கார்பரேட் கம்பனிகளின் கோட்டம் அடங்கி விடுமே ??? பொதுமக்களே சிந்தியுங்கள்.. ஊழலை பற்றி பேசும் பாஜக- எதற்காக, ஆம் ஆத்மி கொண்டு வந்த கடுமையான ஊழலுக்கு எதிரான சட்டமான ஜன் லோக்பால் சட்டத்தை எதிர்க்க வேண்டும் ? அதில் ஏதேனும் ஒரு குறையை பாஜக சுட்டி காட்டி உள்ளதா ?? காங்கிரஸ் உடன் கை கோர்ந்து கொண்டு அன்று டெல்லி சட்ட சபையில் பாஜக அந்த மசோதாவை சட்டமாக்க கூடாது என்று வாக்களித்து, அந்த மசோதாவை தோற்கடித்தது நாம் எப்போதும் மறக்கவே கூடாது. ஊழலை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக கட்சிகளிடையே வேறுபாடே கிடையாது. இரண்டு கட்சிகளும் ஒன்றே,... ஏழை , நடுத்தர மக்களின் வாழ்வு முன்னேற, எந்த கட்சி துணை நிற்கும் என்று யோசியுங்கள்.. அவர்களுக்கு வாக்களியுங்கள்.. ஊழலில் ஊறிய பாஜக , காங்கிரஸ் கட்சிகளை கட்டாயம் புறகணியுங்கள். 3 ..சவ பெட்டி ஊழல் காங்கிரஸ் கட்சியால் கூறப்பட்ட ஊழல் புகார் ...உச்ச நீதிமன்றம் அதற்க்கு தீர்ப்பு அளித்து குற்றசாற்றை தள்ளுபடி செய்து விட்டது.....நாம தான் நக்சல் கொள்கை கொண்டவர்களாயிற்றே...... அப்பறம் எப்படி ஜனநாயக வழியில உச்ச நீதி மன்றம் சொன்ன தீர்ப்பை கேப்போம்...ஏன் இப்போ பத்து வருஷமா இவனுங்க தானே ஆட்சி செய்யாறாங்க . ..மேல் முறையீடு மறுமுறையீடு என எல்லாத்தையும் செய்ய வேண்டியது தானே ...ஏன் செய்யல???? ஏன்னா திரும்ப போனாங்கன்னா உச்சநீதி மன்றம் ஓங்கி நங்குன்னு கொட்ற கொட்டுல மண்டை முட்டை மாதிரி ஆயிடும் .....அப்பறம் காங்கிரஸ் கட்சி மேல இருக்கற புகார் எல்லாம் எதிர் கட்சி சொல்லல ..அரசின் நிர்வாக அமைப்பு தான் சொல்லிச்சு...அதில ஒன்னு தான் தணிக்கைத்துறை.......அவிங்க ஆதாரத்தோட புட்டு புட்டு வச்சிட்டாங்க....அதனால தான் ஊழலே வெளியே தெரிஞ்சது...அப்பறம் பிரமோத் ஊழலுக்கு புள்ளையாரு சுழி போட்டாருன்னு ஒரு வாதம் வேற...2 ஜியில் ராஜா பேச்சை கேட்டுகிட்டு எப்படியாவது பா.ஜ வை உள்ளுக்குள் இலுக்கலாமுன்னு என்னென்னவோ தில்லாலங்கடி எல்லாம் சொக்க தங்கம் செஞ்சி பார்த்துட்டு ஓன்னுமே வேலைக்கே ஆவாம போனது தான் மிச்சம்....காரணம் முறைகேடு நடந்து இருந்தாதானே...அப்படியே நடந்து இருந்திருந்தா இந்நேரம் காங்கிரஸ் நீங்க சொல்ற மாதிரி வெரலை சூப்பிகின்னு இருக்க மாட்டாங்க...இதிலிருந்தே தெரியலையா....இன்னொரு வாதம் என்னன்னா தெகல்க்கா பத்திரிக்கையோட விதி வலையில ஒரு அப்பாவி சிக்கினாரு...அவரு தான் ஆந்திர பா.ஜ தலைவர்... (பங்காரு லக்ஷ்மன்)....இப்போ அந்த பத்திர்க்கையோட தலையே பொம்பள கேசுல ஜாம்மீன்ல்ல வரமுடியாத அளவுக்கு ஜெயில்ல கெடக்கராறு....அப்போ அந்த செய்தி எப்படி இருந்திருக்கும் என்பது இப்போது பலர் யூகித்து விட்டனர்...காரணம் காங்கிரஸ் தான்...அவரை மாட்டி விட இவர்கள செய்தி சதி மற்றும் அந்த ரகசியம் இப்போது தெரிஞ்சிடுமோன்னு தூக்கி உள்ளே ஒக்கார வச்சிட்டாங்க...எடி மேல இருந்த வழக்க பெங்களூரு நீதிமன்றம் மற்றும் லோக் ஆயுக்தா ரத்து பண்ணிப் புடுச்சி....இப்பவும் காங்கிரஸ் கட்சி தானே ஆட்சியிலே இருக்கு...ஏன் மேல் முறையீடு செய்யல???காரணம் அங்க ஒன்னும் நடக்கலையே...போதாகுறைக்கு மோடியின் நண்பர் அமித் ஷா சம்மந்தமுடைய வழக்கில் குற்ற பத்திரிக்கையில் பேரே இல்லாம போயிடிச்சி...இது எல்லாம் பா.ஜ ஜனநாயக ரீதியாக சட்டத்தை எதிர் கொண்டு வெற்றி பெற்று உள்ளார்கள்...இத்தனைக்கும் இதில் கூறப்பட்ட பாதிக்கும் மேலான விஷயங்கள் காங்கிரெஸ் ஆட்சியில் தான் அவர்கள் நிரபராதி என்று வந்துள்ளார்கள்...ஒரு தீப்பொறியை வைத்து பெரும் தீயை உருவாக்கும் காங்கிரஸ் இதில ஒன்னும் செய்ய முடியாமல் போனதிற்கு காரணம் நேர்மை..உண்மை தான்........அப்பறம் வெளக்கமாறு பா.ஜ வை பார்த்து இப்படி ஜனநாயகமா நடந்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை படித்து அல்லது அனுபவித்து தெரிந்து கொள்ளட்டும் ...பெறவு ஆட்சி செய்யலாம்...ஒரு சட்டத்துக்கே ராஜினாமான்னுட்டு ஓடிட்டாங்க...நின்னு போராடனும்...போராடி ஜையிக்கிரதல கிடைக்கிற ஒரு ஆத்ம திருப்தி வேறெதிலும் கெடையாது....அதுக்கு மன உறுதி வேண்டும்...இப்படி போராட்ட குணம் துணிவு,நேர்மை,உண்மை,சத்தியம் அர்பணிப்பு கொண்டவர் தான் மோடி...அதனால் தான் சத்தியம் வென்று கொண்டு இருக்கிறது...அவரும் மென்மேலும் வளர்ந்து கொண்டு இருக்கிறார்...அதனால் தான் அவர் பின்னால் நாட்டை நல் வழிபடுத்த பலர் இணைந்துள்ளனர்...கட்சிகளுக்கு அப்பாற்பட்டு...சகோதரர் ராதா அவர்கள் சொன்னது போல் வெவரம் இருந்து உண்மை புரிந்திருந்தால் அதை எழுதுங்கள்..வெவரம் இல்லையெனில் மற்ற கருத்துக்களை ஆழ்ந்து படித்து விட்டு பின் நியாயத்தை எழுதுங்கள்...நாங்கள் ஜாம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் பினாமி என்று கூறுவதற்கு கூட பல காரணங்கள் மற்றும் ஒற்றுமைகள் இரு கட்சிகளுக்கு இடையில் இருப்பதை உணர்ந்தே கூறுகிறோம்...அதுவும் நாளாக நாளாக உண்மையாகி கொண்டு இருக்கிறது......

0 comments: