Friday, February 14, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (14 2 .2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1. இது கதிர்வேலன் காதல் -ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் "இது கதிர்வேலின் காதல்". சுந்தரபாண்டியனை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் தான் இதையும் டைரக்ட் செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், கேமரா பாலசுப்பிரமணியம் என ஓகே ஓகே டீம் அப்படியே இதிலும் கண்டினியூ ஆகிறது. ஷூட்டிங் அத்தனையும் முடிந்து விட்டது.

தந்தை மகனின் பாசப்போராட்டம்தான் ஒன்லைன். ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னை தந்தையிடம் இருந்து பிரிஞ்சுடுவாளோன்னு பயம் உதயநிதிக்கு. அதனால ஆஞ்சநேய பக்தனாகி பெண்களையே ஏறெடுத்து பார்க்குறதில்லை. மகனுக்கு எப்படியாது ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சு பாக்கணும்னு அப்பாவோட ஆசை. அதனால சந்தானம் மூலமா மகனை காதலிக்க தூண்டுறார். சந்தானம் போடும் எல்லா லவ் பிளானிலிருந்தும் தப்பிக்கும் உதயநிதி "ஆபரேஷன் நயன்தாரா" பிளானில் இருந்து தப்ப முடியாமல் மாட்டிக் கொள்கிறார்.கடைசியில ஜெயிச்சது தந்தை பாசமா, காதலா அல்லது இரண்டுமா என்பதுதான் படத்தோட கிளைமாக்ஸ். டெக்னிக்கல் வேலை நடந்த ஏரியாவிலிருந்து கசிந்த கதை இதுதான். நயன்தாரா ஹோம்லியா அழகா இருக்காங்களாம். இது எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்


ஈரோடு அபிராமி  , வி எஸ் பி , சண்டிகா வில் ரிலீஸ் 


 2. டி டே ( ஹிந்தி )  - கடந்த ஆண்டு “நிகில் அத்வானி” இயக்கத்தில் “ஸ்ருதிஹாசன்” நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம் 'டி டே'. 


இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். 


இந்நிலையில் டி டே படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் இந்த படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தபடம் வெளிவரவிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் ரெடியான உடன் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஈரோடு அன்னபூரணி , சீனிவாசாவில்  ரிலீஸ் போலீஸ் ஸ்டோரி பாகம் 6 -ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்
ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12357&id1=5#sthash.GdxjHX5c.dpuf
ஈரோடு தேவி அபிராமி , ஆனூர் இல்  ரிலீஸ்


`சந்திரா - வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் `சந்திரா' என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா நுங்கம்பாக்கத்தில் உள்ள `போர்ப்ரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டு, இப்போது கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே... அது பற்றி...

பதில்: `சந்திரா' படத்தில் கதைதான் கதாநாயகன். கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டால் எனக்கு ஹீரோ யார் என்பது பற்றி கவலை இல்லை.

கேள்வி: சந்திராவில் இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி மேக்கப் போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் உள்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள்.

சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருக்கலாம்...

சனாகானுக்கு கண்டனம்

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனா கான் அப்படி சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்களை பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களை பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி:- ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாகக் கூறப்பட்டதே... என்ன ஆயிற்று?

பதில்: அந்த தகவல் உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் 'மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

பின்னர் சந்திரா படம் குறித்து அதில் நடித்துள்ள விவேக், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் பேசினர்.

இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 5   MV  GO -  இது  ஒரு இங்க்லீஷ் படம், எந்த விபரமும் கூகுள் ல  கிடைக்கலை \\


ஈரோடு ராயல் ல்  ரிலீஸ் 
6  நிலா காய்கிறது  - இது கில்மாப்ப்டமா ? லோ பட்ஜெட் காதல் படமா ? தெரியலை . எந்த விபரமும் கிடைக்கலை . ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை

0 comments: