Monday, February 24, 2014

சுனந்தா வாயில் விஷம் ஊற்றி கொலை ; சசிதரூரை தப்ப விட மாட்டேன்: -சுப்பிரமணியசாமி திடுக் தகவல்

புதுடில்லி: சமீபத்தில் மர்ம முறையில் இறந்த மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா வாயில் விஷயம் ஊற்றி கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பான விசாரணையில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் சசி தரூர் காதல் மனைவி சுனந்தா, பிரபல நட்சத்திர ஓட்டலில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தரப்பிலோ, மருத்துவ ரிப்போர்ட்டிலோ எவ்வித சந்தேகமும் நீக்கப்படவில்லை. இவரது மர்மம் நீடித்து வந்தது. இது குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், தனது மனைவி இறந்த விஷயத்தில் தான் எதையும் மறைக்கவில்லை என்றும், சுனந்தா அன்புக்கினியவர் , மனித நேயமிக்கவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சுப்பிரமணியசாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சுனந்தா மரணம் என்பது பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இவர் இறந்ததும் அவசர, அவசரமாக தகனம் செய்யப்பட்டது ஏன் ? சசி தரூர் இவரது இறப்பு இயற்கையானது தான் என்றும் அவர் சொல்லவில்லையே ? சுனந்தாவின் மூக்கு அழுத்தப்பட்டுள்ளது. அவரது வாயில் ரஷ்ய விஷம் ஊற்றப்பட்டுள்ளது. அவரது அடி வயிற்று பகுதியில் சிறிய காயம் இருந்துள்ளது. இவ்வளவு இருக்கும் போது அவரது மரணம் இயற்கையானதாக இருக்க முடியுமா ? என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது. கோர்ட்டில் முறையிட்டு விசாரணையை துரிதப்படுத்துவேன். இவ்வாறு திடுக்க தகவலை சாமி கூறியுள்ளார். 


THANX - DINAMALAR


READERS VIEWS 


1. இவர்தான் ராஜீவ் கொலையின் சூத்திரதாரி.. எப்படியோ அமெரிக்க சிஐஏ தயவில் சுற்றிக்கொண்டிருக்கிறார் 2  அந்த கொலையாளி மூஞ்சை பார்த்தாலே தெரியுது, இந்த விஷயத்தில் சுப்பிமணியம் சுவாமி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 


3  சு.சா மற்றும் சசி இருவருமே சரியான குழப்பவாதிகள் இருவரையும் உள்ளே தள்ளுங்க நாட்டுள்ள ரெம்ப மக்கள் சந்தோசம் அடைவார்கள். தினம் ஏதாவது ஒரு புரளியை அள்ளிவிடுவதில் பலே கில்லாடி பாவம் இந்த கைப்புள்ள பேச்சை ஒரு பயலுங்க கேட்பதில்லை இந்த நபரால் பாஜகவின் வாக்கு வங்கி குறையும் என்பதில் சந்தேகமில்லை. karthick உங்களுக்குதான் ஏகப்பட்ட ரகசியங்கள் தெரியுமே...... அப்டியே ராஜபக்சேவுக்கு ரசாயன ஆயுதங்கள் குடுத்து பல லக்ஷம் ஈழ தமிழர்களின் உயிர்களை கொன்றது சோனியா அண்ட் கோ தான் எனும் ரகசியத்தையும் மக்களிடம் ஆதாரபூர்வமாக சொல்ல வேண்டியதுதானே சாமி. எனக்கு அந்த ரகசியம் தெரியும் இந்த ரகசியம் தெரியும்னு எங்க காதுல பூ சுற்ற வேண்டாம். 5 இது அழகு....ஆதாரம் இருந்தா நீதிமன்றத்தில தாக்கல் செய்து வழக்கை துரிதபடுத்துவேன்னு சொல்றாரு... டெல்லியில காங்கிரஸ் கட்சியோட பினாமி ஒருத்தரு இருந்தாரே....அவரு வாயாலேயே மட்டும் தான் வட சுடுவாரு...


 

0 comments: