Tuesday, May 08, 2012

YAKSHIYUM NJANUM -மேக்னாராஜ் -ன் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzVEOW5enkMWyxqfz4wi4ik3R8ePuz8kS6_TGHj-W1b3gyQtLb4X5I15-wWW7k4n-oF63LMLw5zazX2KWo9mX28mhSvi1HqHXhedFZZJVSN3ris5qnkBHih7MtrLDpa4kI3mnGD8tip2_4/s1600/Yakshiyum-Njanum.jpg 

யக்‌ஷியும் ஞானும்  படம் 2011  ஏப்ரல் 8 ந்தேதி கேரளாவுல ரிலீஸ் ஆச்சு.. மேக்னா ராஜ் நடிச்ச இந்தப்படம் கிட்டத்தட்ட ராம நாராயணன் ஃபார்முலாவு;ல வந்த ஒரு பேய்ப்படம்தான்.. ஆனா இயக்கம் மட்டும் வினயன்.. இதை சத்தம் இல்லாம  2012ல தெலுங்குல லங்கேஸ்வரி என்ர பெயரிலும், தமிழ்ல ஜக்கம்மா என்ர பெயரிலும் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. 3ம் ஒரே படம் தான்.. மொழி மட்டும் தான் வேற.. இதை ஏன் நான் சொல்றேன்னா நம்ம ஆளுங்க போஸ்டரை பார்த்தோ, மேக்னா ராஜை பார்த்தோ 3 டைம் ஒரே படத்தை பார்த்து ஏமாறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல சொல்றேன்.. ஏன்னா 3 பட போஸ்டர் டிசைனும் வேற வேற மாதிரி இருக்கு.. 



ஒரு வனாந்திரம்.. அங்கே ஒரு அல்லக்கை வர்றான்.. இவன் ஒரு அரசியல்வாதியின் எடுபுடி.. யாருமே இல்லாத அந்த காட்டுல மேக்னா ராஜ் ஒரே ஒரு பாவாடை, ஒன்லி ஒன் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு குளிக்குது, பாட்டுப்பாடுது, குனியுது, சிரிக்குது.. அந்த 50 மார்க் ஃபிகரை பார்த்து இவன் பல்லைக்காட்டறான்.. பாப்பா கவர்ச்சி காட்டுது..

 இதை இப்படியே 3 ரீல்க்கு இழுத்த பின்னாடி ஃபிளாஸ்பேக்.. 


http://nowrunning.com/content/movie/2011/Lankeswari/stills/Lankeswari10.jpg



அந்த ஊர்ல ஒரு வீணாப்போன நாட்டாமை கம் கிராம தலைவரு.. அங்கே அவர் வெச்சதுதான் சட்டம்.. அவரு பண்ற அராஜகத்தை ஒருத்தன் தட்டி கேட்கறான்.. அவன் தான் ஹீரோ.. அவனுக்கு ஜோடி தான் இந்த மேக்னா ராஜ்.. சுப்ரமிணியம் சாமி மாதிரி அவன் ஓவரா வாய் பேசுனதால ( பொதுவா நியாயமாப்பேசுனாலே ஓவர் வாய்னு சொல்ற தேசம் இது) ஹீரோவை போட்டுத்தள்ளிடறாங்க.. 

 ஹீரோவைப்போட்டுத்தள்ளுன வில்லன்க 3 பேரும் கெக்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டு இருக்கறப்ப அந்த பேக்கு ஹீரோயின் அங்கே வருது.. விவரமான ஃபிகரா இருந்தா கிராமத்துல ஜனங்க யாரையாவது கூட்டிட்டு வரும்.. தனியே தன்னந்தனியா நான் மாட்ட மாட்ட வந்தேன்னு பாட்டு பாடாத குறையா அந்த பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்து பாப்பா மாட்டிக்குது.. 

 அந்த பேக்குப்பாப்பாவை விட படு பேக்கா வில்லன்க 3 பேரும் இருக்காங்க.. ஏன்னா யாருமே இல்லாத அந்த பங்களாவுல தனியா வந்து மாட்டுன ஃபிகரை  ரேப் பண்ணாம மர்டர் பண்ணிடறாங்க.. சீன் போச்சேங்கற ஆதங்கத்துல நான் இதை கேட்கலை..  3 மொள்ளமாரிகளும் தண்ணி அடிச்சுட்டு மப்புல தான் இருக்கானுங்க.. ஃபிகர் வேற  சந்தனக்கட்டை மாதிரி இருக்கு.. பாப்பா ஒண்ணும் குணச்சித்திர நடிகையும் கிடையாது.. 20% கவர்ச்சி காட்டுன்னா 60 % கவர்ச்சி காட்டும் மசாலா கஃபே ஓவியா மாதிரி  தாராள மனசுள்ள ஃபிகர் தான் இந்த மேக்னா ராஜ்.. 

 ஆனாலும் டைரக்டர் விபரம் இல்லதவரா இருப்பதாலும், அநியாயத்துக்கு நல்லவரா இருப்பதாலும் ரேப் சீன் இல்லை.. ஒன்லி மர்டர்,... 

 இப்போ அந்த 3 வில்லன்களை மேக்னா ராஜ் பழி வாங்கற துதான் மிச்ச சொச்ச கதை..


படத்தோட முதுகெலும்பே பாப்பா மேக்னா ராஜ் தான்.. பாப்பாவுக்கு காஸ்ட்யூம் ஒரே ஒரு பாவாடை, ஒரு ஜாக்கெட் மட்டும் தான் படம் பூரா சுதந்திரமா திரியுது.. 12 தடவை குனியுது.. 29 தடவை சிரிக்குது.. அவ்ளவ் தான்.. நடிப்பெல்லாம் எவன் பார்த்தான்.. 

சாஜன் மாதவ் தான் அவருக்கு ஜோடி.. ஆக்ரோஷமா அவர் வில்லன்க கிட்டே டயலாக் பேசறப்ப மீசை வெச்ச அப்பாஸ் மாதிரி இருக்கு.. ஜூபின் ராஜ், கேப்டன் ராஜ், திலகன் என வி ஐ பிங்க எல்லாம் இருக்காங்க.. எல்லாம் வேஸ்ட்.. அதுவும் திலகன் பிரமாதமான நடிகர்.. அவருக்கே சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. 

கிராஃபிக்ஸ் காட்சிகள் மகா மட்டம்.. காமெடி காட்சிகள் படு கேவலம்..  சண்டைக்காட்சிகள் உஷ் அப்பா முடியல ரகம்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0900.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. ரெண்டு லாரிக்கு நடுவே மாட்டுன எலி மாதிரி  அவன் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கறான்.. ஆமா... ஒரு டவுட்.. இவனால அவளுங்களுக்கு என்னா யூஸ்?


பிப்பெடுத்தா சொறிஞ்சு விடுவான்னு நினைக்கறேன்.. மற்றபடி எந்த யூசும் இருக்கற மாதிரி தெரியலை.. 


2. நல்லவன் தான் வாசல்ல உக்காருவான்.. ரவுடிங்க, பேய் எல்லாம் வீட்டுக்குள்ள தான் இருக்கும்.. 


3. டேய்.. நாயே.. சட்டை போடாம எக்சசைஸ் பண்ணாதே.. இப்போ எல்லாம் பேய்ங்களுக்கு உரிச்ச கோழிங்க தான் ரொம்ப பிடிக்குதாம்

4. செஞ்சபாவங்களை மறக்க  காலம் பூரா  குடிச்சுட்டே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்  ( மனசுக்குள்ள கோவை தீபக்னு நினப்பு)

5.  எப்போ பாரு  எரிஞ்சு விழறியே.. நீ என்ன ஜென்மம்?

 புலி ஜென்மம்

6. உனக்குத்தான் ஊருக்கு ஒரு பொம்பள இருக்கே.. எதுக்கு இந்த பங்களாவுல ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருக்கே?


7.  சண்டை போட்டுக்கிட்டோம்னு லவ்வர்ஸ் சொல்றாங்க.. ஆனா எப்போ பாரு சந்தோஷமாவே இருக்காங்களே.. ( நல்லா பாருய்யா.. கட்டிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கறதை பார்த்துட்டு சண்டைன்னு முடிவு பண்ணிட்டியோ என்னவோ?


8.. நீங்க எங்களுக்கு தெய்வமா இருக்கீங்க.. 

 அதெல்லாம் எதுக்கு..? நீங்க மனசாட்சியோட இருந்தா போதும்.. 


 9.  என்னப்பா? ஜோலி முடிஞ்சுதா? 

 ( கோழியை பார்த்தாலே ஜோலி முடிஞ்சதா?னு கண்டு பிடிக்க மாட்டீங்களா? )




http://g.ahan.in/malayalam/Meghana%20Raj/Meghna-Raj-hot%20(45).jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அநியாயத்தை தட்டிக்கேட்க புறப்படும் ஹீரோ பார்க்க பரிதாபமா இருக்கார்.. ஒல்லி.. ஆனா வில்லன்க 3 பேரும் கில்லி மாதிரி இருக்காங்க.. எந்த தைரியத்துல அவர் தனியா போனாரு?


2. அதைக்கூட ஏத்துக்கலாம்.. ஹீரோயின் ஏன் லூஸ் மாதிரி தனியா போய் மாட்டிக்கனும்? வில்லன்க பாத பூஜை பண்ணி கும்பிடுவாங்கன்னு நினப்பா?


3. சரி.. ஆனது ஆச்சு.. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் செத்தாச்சு.. ஆவியான பின் உடனே டக்னு பழி வாங்காம எதுக்கு ஹீரோயின் படம் பூரா அரைகுறையா அலையனும்:? அடிக்கடி குளிக்கனும்? நம்ம டார்கெட் வில்லனை பழி வாங்கறதா? சீன் காட்டறதா?


4.  சந்திரமுகி எஃபக்ட் கொண்டு வர ஏன் அவ்வளவு சிரமப்படறீங்க?

5. அந்த 3 பேரு காமெடிக்காட்சிகள் மகா எரிச்சல்...  ஒரு திகில் படத்துக்கு, பேய்ப்படத்துக்கு இந்த மாதிரி லூஸ் தனமான காமெடிகள் எதுக்கு?

6. பின்னணி இசை மகா மட்டம்.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே.. 



http://kerala-zone.com/entertainment/actress/malayalam/meghana-raj/meghana-raj-103.jpg


எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37 ( விகடன் டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம்.. இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக)

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - டி வில போட்டா மட்டும் பாருங்க.. மேக்னா ராஜ்க்காக பார்க்கற அளவுக்கு புதுசா எதும் இல்லை.. ஆல்ரெடி அவர் பல பழைய படங்கள்ல காட்டுனதுதான்.. ஐ மீன் நடிப்பில் ஹி ஹி ஹி

 ஈரோடு ராயல், அன்னபூரணி என 2 தியேட்டர்ல ஓடுது...,. நான் ராயல்ல பார்த்தேன்


http://cinetara.com/photos/files/2012/2012/03/26/8864/Meghana-Raj-Latest-Hot-Stills_024.jpg
a

diSki -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


http://www.lateststills.com/wp-content/uploads/2011/04/Meghna_Raj_photos_8_-300x300.jpg

5 comments:

கோவை நேரம் said...

மாலை முதல் வணக்கம்

ராஜி said...

எந்த ஒரு மொழி படத்தையும் விட்றதில்லையா?!

கோவை நேரம் said...

இந்த படம் நான் சன் ஆக்சன் இல் பார்த்தேன்.வினயன் எடுத்த மொக்க படம்..ஜக்கம்மா என்று இப்போ எந்த மகராசனோ டப் பண்ணி காசு பாக்க போறான்னு நினைக்கிறேன்

MARI The Great said...

உங்களுக்கு எங்கிருந்துதான் ஸ்டில்ஸ் கிடைக்குதுன்னு தெரியலை ..,

ரைட்டு கிளப்புங்க ..!

J.P Josephine Baba said...

பேயும் பாவடை சட்டை போட ஆரம்பித்துட்டா?