Tuesday, May 22, 2012

OH ,MY FRIEND (ஸ்ரீதர்) - சினிமா விமர்சனம்


http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/11/Oh-My-Friend-Movie-Review-Oh-My-Friend-Review.jpg
விக்ரமன் டைரக்‌ஷன்ல வந்த பிரியமான தோழி -40%  + பிரசாந்த்-ஷாலினி நடிச்ச பிரியாத வரம் வேண்டும் - 45%  சொந்த சரக்கு 15 % எல்லாத்தையும் கலக்குனா ஓ மை ஃபிரண்ட் தெலுங்கு படத்தோட கதை ரெடி.. 


ஹீரோவும் , ஹீரோயினும் ஒண்ணாங்கிளாஸ்ல இருந்தே க்ளாஸ் மேட்ஸ்.. ஸ்கூல், காலேஜ் தாண்டி அவங்க நட்பு வளருது.. 2 பேரும் ரொம்ப அந்நியோன்யமா இருக்காங்க , ஆர்யா - த்ரிஷா மாதிரி.. பார்க்கறவங்க, அவங்க கிட்டே பழகறவங்க எல்லாம் அவங்களை சிம்பு - நயன் மாதிரி லவ்வர்ஸ்சாவே நினைக்கறாங்க. ஆனா அவங்க லவ்வர்ஸ் இல்லை.. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் அவ்ளவ் தான்.. ஹீரோ ஒரு ஃபிகரையும், ஹீரோயின் வேற ஒரு ஆளையும் லவ் பண்றாங்க . 4 பேரும் பிக்னிக் போறாங்க .. அங்கே அவங்க 2 பேர் அந்நியோன்யமா பழகறதை பார்த்து அவங்கவங்க லவ்வர்க்கு பொறுக்கலை.. லவ்வா? நட்பா? ஏதாவது ஒண்ணு தான் டிசைடு பண்ணுனு சொல்றாங்க.. அவங்க என்ன முடிவு எடுத்தாங்க என்பதே கதை..

>

சித்தார்த் தான் ஹீரோ .. அந்தக்கால கார்த்திக் மாதிரி அதாவது இதயத்தாமரை, கோபுர வாசலிலே கார்த்திக் போல ஆள் சோ ஸ்மார்ட்.. செம துறு துறுப்பு.. பெண்களின் மனம் கவரும் பர்சனாலிட்டி, பாடி லேங்குவேஜ் .. ( ஆண்கள் அதிகம் அவரை விரும்பதில்லை, ஏன்னு தெரியலை )சட் சட் என மாறும் முக பாவங்கள் அவரது பிளஸ்.. சரளமான நடனத்திறமை இன்னொரு பிளஸ்....காதலில் சொதப்புவது எப்படிக்கு முன்னால ரிலீஸ் ஆன படமா இருந்தாலும் தமிழ்ல இப்போ தான் ரிலீஸ் என்பதால் அவருக்கு இந்தப்படம் உதவியா இருக்கும்.. http://moviegalleri.net/wp-content/gallery/oh-my-friend-movie-stills_1/oh_my_friend_movie_stills_0333.jpg


 ஸ்ருதி கமல் தான் ஹீரோயின்.. அதாவது  ஹீரோவோட பள்ளித்தோழி... நடிப்பு எப்பவும் போல்.. இவர் கிட்டே உள்ள மைனஸ்  தன் அப்பா கமல் போலவே “ இதோ இதோ பாரு.. நான் நல்லா நடிக்கறேன் “ அப்டினு கை தட்டி கூப்பிட்டு சொல்ற மாதிரி இருப்பதே..  படத்துல நல்ல டிரஸ்சிங்க்... ஏகப்பட்ட டிசைன்ல ஸ்டெட், பிரேஸ்லெட்,  சுடி.. கலக்கல்,.. 


ஸ்ருதியோட லவ்வரா வர்றவர் நவ்தீப்.. சுமாரான நடிப்பு. டைரக்டருக்கு என்ன பிரச்சனைன்னா அவரை லைட்டா வில்லன் மாதிரி காட்டி ஆகனும்.. ஆனா கேரக்டர் வைஸ் வில்லன் கிடையாது.. அங்கே தான் சிக்கல்.. 


ஹீரோவுக்கு ஜோடி சின்ன குஷ்பூ, பெரிய பல்பு ஹன்சிகா. ஆள்  சும்மா தக தகன்னு ரோஸ் மில்க்கால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனச்சிலை மாதிரி இருக்கார்.. ஆறிலிருந்து அறுபது வரை தியேட்டர்ல கைல கர்ச்சீபோட  வாயை ஆன்னு பார்க்க வைக்கறார்..  இவர் அழுகையில் ஜொலிக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் மழையில் இவரை நனைய விட்டது இயக்குநரின் சாமார்த்தியம். எப்படின்னா அவர் கண்கள்ல கண்ணீர் வர்லைன்னு எவனும் சொல்லிட முடியாது..  மழைல நனைய விட்டா எவனும் பாப்பா முகத்தை கவனிக்க மாட்டான்.. உணர்ச்சிகரமான சீன்ல பாப்பா சரியா நடிக்கலைன்னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் பேசிட முடியாது.. வெல்டன் டைரக்டர்.
http://datastore01.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/h6illz01e036hyac.D.0.Oh-My-Friend-Movie-Stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோ ஹீரோயினை ஏய் கில்லர் எனவும், ஹீரோயின் ஹீரோவை டுபாக்கூர் எனவும் அழைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வது, நட்பு பாராட்டுவது, ஊடல், அன்பு அனைத்தும் அழகு.. இப்படி ஒரு ஃஃபிரண்ட் நமக்கு இல்லியே என ஏங்க வைக்கும் காட்சி அமைப்புகள்
2. ஸ்ருதி, சித்தார்த்குக்கான ஆடை வடிவமைப்பு கலக்கல்..  எத்தனை வித விதமான மாடர்ன் டிரஸ்?
3.  க்ளைமாக்ஸில் சித்தார்த் பேசும் வசனமான “ நாங்க லைஃப்ல எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டோம் கறதுக்காக பெட்ரூமையும் ஷேர் பண்ணிக்கச்சொல்றீங்களே, இது என்ன நியாயம்? என்று கேட்பது கிளாசிக்.. 
4. நட்புன்னா என்னன்னா அப்டின்னு ஆரம்பிச்சு 2 பக்கத்துக்கு வசனம் எல்லாம் சொல்லாம காட்சி அமைப்பின் மூலமே அதன் பெருமையை சொன்னது.. 
5.  ஒரு பாடல் காட்சியில் மெதுவாக நகரும் ஃபாரீன் பஸ்ஸில் இருவரும் அமர்ந்து கால்களால் உந்தி அந்த பஸ்ஸை நகர வைப்பது போல் காட்டுவது கொள்ளை அழகு.. ( பாடல் - சிறுவர் சிறுமி போல் எத்தனை நாட்கள் நானும், அவரும் சுற்றித்திரிந்தோம்)


6. ஸ்ருதியின் லவ்வர் காரில் டிரைவிங்க் சீட்டில் அமரும்போது சித்தார்த் முன் சீட்டில் அமர வர நவ்தீப் நீங்க பின்னால என சைகை காட்ட சித்தார்த் எதுவும் பேசாமல்  ஒரு பார்வை பார்ப்பாரே ஸ்ருதியை ஆஹா.. 
7. ஹன்சிகாவுக்கான காமிரா கோணங்கள் அனைத்தும்  டாப் ஆங்கிளில் டாப்பை குறி வைத்து எடுக்கப்பட்டது டாப் ஹி ஹிhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ4ywktyAgAXfGcIrGhpzmpIAYh5zz1dAU7S_exqtl69JJ6a8fKMX6Kfd-DhT5r1RF_cRB63MeNJdP4nbK4eqwuGVYgg1Ba4rBbB4LLG6CefpESp-pm_37C4JCz2oPjkhIakxUMgXcvI3V/s1600/Shruti+Hassan+At+Oh+My+Friend+Movie+Press+Meet+Exclusive+Images+%25283%2529.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. வழக்கமா கூட்டத்துல அல்லது பஸ்ல ஒரு பொண்ணு பையனை இடிச்சா அவன் எஞ்சாய் பண்ணுவான்.. கத்தி ரகளை பண்ணுவனா?ஸ்ருதி ஒரு பையனை இடிச்சுடறாங்க.. அவன் என்னமோ குலமே அழிஞ்ச மாதிரி கத்தறான்.. அவன் கூட சித்தார்த் ஃபைட் வேற.. வெரி பேடு.. 
2. ஒரு சீன்ல ஸ்ருதி லேப்டாப்ல ஒர்க்கிங்க்.. சார்ஜ் ஏறிட்டு இருக்கு.. சித்தார்த் என்னமோ பேச ஸ்ருதி கண்டுக்கலை, உடனே அவர் சார்ஜ் ஒயரை பிடுங்கிட்டு “ இப்போ நெட்டை கட் பண்ணிட்டேன், என்ன பண்ணுவே?”ங்கறார்.. லேப் டாப்ல நெட் கனெக்டிவிட்டி பென் டிரைவ் இருக்கு 
3. ஓப்பங்க் ஷாட்ல சித்தார்த் தன் ஸ்கூல் மேட்டான ஹன்சிகாவை ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றார்.. 10 நிமிஷம் பேசிட்டு திரும்பறார்.. ஆனா ஃபோன் நெம்பரோ, அட்ரஸோ, என்ன ஏதுன்னு ஒரு விபரமோ கேட்டுக்கலை.. அதுக்குப்பின் நாய் மாதிரி லோ லோ என அலையறார்.. இது தேவையா? இந்தக்காலத்துல முன்னே பின்னே அறிமுகம் ஆகாத ஃபிகர் 10 நிமிஷம் தொடர்ந்து பார்த்தாலே ஃபோன் நெம்பர் வாங்கிடறாங்க .. 10 வருஷம் ஒண்ணா படிச்ச தோழி கிட்டே நெம்பர் வாங்கக்கூடாதா? 
4. அப்புறம் ஸ்ருதி, சித்தார்த் 2 பேரும் ஹன்சிகாவை என்னமோ தீவிரவாதியை ஃபாலோ பண்ற மாதிரி ஏன் ஃபாலோ பண்ணி அட்ரஸ் கண்டுபிடிக்கறாங்க? நேருக்கு நேர் உன் அட்ரஸ் எங்கே?ன்னு கேட்கலாமே?
5. சித்தார்த்,ஸ்ருதி, ஹன்சிகா 3 பேரும் ஸ்கூட்டில ட்ரிபிள்ஸ் போறாங்க, அப்போ டிராஃபிக் கான்ஸ்டபிள் வழில பார்த்து டக்னு ஸ்ருதியை “ நீ ஆட்டோல போ”ன்னு சொல்லிடறார்.. இது கேனத்தனமா இருக்கு.. வேற ரூட்ல வணடியை திருப்பலாம், கொஞ்ச தூரம் அவரை நடக்க சொல்லி எல்லை தாண்டுனதும் மறுபடி ட்ரிபிள்ஸ் போலாம்.. இதுல இன்னொரு கிளு கிளு அட்வாண்டேஜும் இருக்கு.. எப்படின்னா சித்தார்த் பின்னால முதல்ல ஹன்சிகாவும், அதுக்குப்பின் ஸ்ருதியும் சிட்டிங்க்.. அப்போ நெருக்கம் அதிகமாகும்.. ஸ்ருதி இறங்கிட்டா 2 பேர்தானே இடம் இருக்கும், நெருக்கம் குறைஞ்சிடும், ஹி ஹி 
6. ஒரு முக்கியமான வேலையா கொச்சின் போக வேண்டிய சூழல்ல ஸ்ருதி சித்தார்த்துக்கு ஃபோன் பண்றார்.. ஆனா அவர் அட்டெண்ட் பண்ணலை.. அப்புறம் நினைவு வந்து கேட்கறப்போ 2 பேருக்கும் ஃபைட் வருது.. ஏன்? சிம்ப்பிள் மேட்டர்.. ஐ ஆம் கோயிங்க் டூ கொச்சின்னு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


7. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸா இருந்தாலும் அப்படியா கட்டிப்பிடிச்சுக்குவாங்க... காட்சி அமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. 

http://www.movietitbits.com/images/gallery/hansika/hansika_big/Hansika%20Hot.jpg
 மனம் கவர்ந்த வசனங்கள்


1. மாறிட்டேன்னு நினைச்சேன்.. நல்ல வேளை.. நீ மாறலை .. 


நம்ம கிட்டே இருக்கற பெஸ்ட் கேரக்டரை நாம மாத்திக்கவே கூடாது.. 


2. மிஸ்டர்... இங்கே நோ வாக், நோ ஸ்மோக்கிங்க்.. 
 இதையும் உங்க டீச்சர் தான் சொன்னாங்களா? 


 நோ நோ காமன் சென்ஸ் ஹி ஹி .. இது கூட தெரியலையா?
3. ஒரு நல்ல இசை அமைப்பாளன்னு என்னை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு தேவை இல்லை.. தானா உணரனும் எல்லாரும் ( அதெப்பிடி? )
4.  இவளை தெரியுதா?


 ம் ம் அட்டு ஃபிகரா இருந்தாலும் அழகு ஃபிகர் மாதிரி சீன் போடறாளே.. தெரியாம இருக்குமா?
5. மிஸ்.. என்னை ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க?
 யானை உள்ளே போற அளவுக்கு உங்க வாயை திறந்து வெச்சிருந்தா?
6.  பிங்க்கி பிங்க்கி பாங்க்கி...... போட்டுப்பார்த்துத்தான் எதையும் செலட் பண்ணுவேன்


 ஓக்கே மிஸ். இப்போ 9 விரல் காட்டி 9 புக்ல 1 ஐ செலட் பண்ணிட்டீங்க.. சப்போஸ் 12 புக்ல இருந்து 1 செலட் பண்ண வேண்டி வந்தா மீதி 2க்கு எதை காட்டுவீங்க ? ( டபுள் மீனிங்க்  )


7. டியர், கண்ணாடியை பார்த்து எனக்கு நானே நன்றி சொல்லிக்க முடியாது.. அதே மாதிரிதான் உனக்கும்.. நெக்ஸ்ட்


8.  நெக்ஸ்ட் என்ன? 
 வாட்?
 ஜாப் கிடைச்சிருச்சு.. அடுத்து என்ன? ஹி ஹி 


 இதென்ன கேள்வி? வேலைக்கு போவேன்.. 


9. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு எது வேணும்னாலும் அவ அம்மா தான் டிசைட் பண்ணுவாங்க , இப்போ அவங்க இல்லை.. அதனால டெசிஷன் அத்தாரிட்டி யார்ங்கறதுல கன்ஃப்யூஷன்..


10. எல்லார் மாதிரியும் நீயும் ஃபிரண்ட்ஷிப்பை காதலுக்கு யூஸ் பண்ணிக்கப்போறியா?


ஸோ வாட்?அதுல என்ன தப்பு?


11.  ஒரு சின்ன பிராளம். 

 சொல்லு என்ன?


 அது பர்சனல். 

 ஓஹோ.. ஷேர் பண்ற அளவுக்கு நமக்குள்ள ஃபிரண்ட்ஷிப் வளரலையா?


யா. இனி டெயிலி வந்து என்னை படுத்தி எடுக்காதே.. 12.  அவனுக்கு புது ஃபிரண்ட் வந்ததும் பழைய ஃபிரண்டை மறந்துட்டான் .. இதுதான் மனித சுபாவம்.. சராசரி நாம்
13.  லைஃப்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைம் பிரியாரிட்டி கொடுக்க வேண்டி வரும். 
14. உன் பிராப்ளம் என்ன? நீத்துவா? 


 இல்லை.. நீ தான்... 
15. யார் எங்கே இருந்தாலும் ஹேப்பியா இருக்கறது தான் முக்கியம்.. ஆனா இன்னைக்கு நாம எல்லாருமே ஒண்ணா ஹேப்பியா இருக்கோம்
Oh My Friend (2011) DvdRip


16. லைஃப் யாரை எப்போ எங்கே சேர்க்கும்னு சொல்லிட முடியாது.. நேத்து ஃபிரண்ட்டா இருந்தவன் இன்னைக்கு எதிரி, இன்னைக்கு ஃபிரண்டா இருக்கறவன்  நாளை எதிரி.. 
17. கேரியர்க்காக லவ்வையே விட்டுக்கொடுக்கறவங்க இருக்காங்க.. ஆனா ஃபிரண்ட்சிப்க்காக உன் கேரியரையே விட்டுக்கொடுக்கறே.. யூ கிரேட்.. 18. என் பையனோட வெற்றியை என்னால அனுபவிக்க முடியல.. ஏன்னா அவனை நான் என்கரெஜே பண்ணுனது இல்லை


19. கட்டிக்கப்போறவனை விட நீ ஃபிரண்ட்ஷிப்க்கு  முக்கியத்துவம் தர்றே.. 
20. அவளுக்கு ஒரு சின்ன பிராப்ளம்னா  என்னால தாங்கிக்கவே முடியலை.. 
 ஹூம், என் பிராப்ளமும் அதுதான்... லவ்வர் நானே சும்மா இருக்கேன்.. ஃபிரண்ட் நீ ஓவரா அட்டாச்மெண்ட் காட்டறே.. 


21. ஒண்ணு சொல்றேன். நல்லா மைண்ட்ல வெச்சுக்கோ.. ஆஃப்டர் மேரேஜ் யூ ஆர் மை பிராப்பர்டி
22.  புருஷனும், பொண்ட்டாட்டியும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் ஆக முடியுதோ இல்லையோ  பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் புருஷனும், பொண்ட்டாட்டியுமா தாராலமா ஆகலாம்.. 
23. உங்க எதிரே இப்போ ஒரே ஆப்ஷன் தான் இருக்கு.. அது ஃபிரண்ட்ஸா இருந்த நீங்க 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறதுதான்
24. வாழ்க்கைல சாய்ஸ் தேடிட்டே இருந்த நான்  அவர் லைஃப்லயும் சாய்ஸ் ஆவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை
25. டேய் மெரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. பேச்சிலர் பார்ட்டி எப்போ?


 ம்க்கும், என் மேரேஜே பிரேக் ஆகிடுச்சு
26. எந்த நட்புக்குள்ளேயும் ஒரு லவ் இருக்கும். எந்த லவ்வுக்குள்ளேயும்  ஒரு நட்பு இருக்கும்.. 
27. எந்த 2 உறவுகள் சேர்ந்து இருக்கறப்ப அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்காங்களோ அவங்க லைஃப் ஃபுல்லா சேர்ந்து இருக்கறதுல தடையே இல்லை 
28.  அட்ஜஸ்மெண்ட் பண்ணிட்டு வாழ்ந்துடலாம், ஆனா சேக்ரிஃபைஸ் பண்ணிட்டு வாழ முடியாது.. 
29.  உங்க 2 பேருக்கும் நாங்க ஃஃபிரீடம் கொடுத்தது பெரிய விஷயம் இல்லை.. அதை மிஸ் யூஸ் பண்ணாம 2 பேரும் கவுரம் காத்தீங்களே அதான் பெரிய விஷயம். 


30.ஒரு பொண்ணும், ஒரு பையனும் வயசுக்கு வந்த பின் ஃபிரண்ட்ஷிப்க்கு நோ சொல்லிடனுமா?
31.  ஒரு பையனும், பொண்ணும் தூய்மையான நட்போட பழகுனா இந்த உலகம் ஏன் தப்பா பேசுது?https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeYJXvm0ttg83z4nVgcsUtG_RO5V_cxYnwA7FBfZvQOXtsxPaYT2SuNB6oo2oA-7_fF8PooeFxQNh6yci6uXfTwoCBvT_4-ZmIkdpwy6zKtzRgDdz3Bj3izdwCgVbFU8npaaIqn-uQCUVo/s640/Shruti+Hassan+Hot+Saree+Pictures.jpg
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( இது தெலுங்குப்படம் என்பதால் விக்டனில் நோ விமர்சனம் ஜஸ்ட் டூ நோ ஸ்டாண்டர்ட்)
 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 
 சி.பி கமெண்ட் - கண்ணியமான நெறியாள்கை என்பதால் காதலர்கள், பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் பார்க்கலாம்.. இது யூத் ஃபிலிம்.. 
 ஈரோடு ஸ்ரீநிவசாவில் பார்த்தேன்.. http://www.bollygeek.com/wp-content/uploads/hot-hansika-motwani.png

9 comments:

Vijayakumar A said...

vazhthukkal........

Unknown said...

பார்த்திடலாம் !

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நாட்டாமை தீர்ப்பை சொல்லிட்டாரு..
பசுபதி நீ வுட்றா வண்டியை தியேட்டருக்கு ஒரு எட்டு அந்த படத்தை பார்த்துட்டு வந்துடலாம்...
அப்படியே நாட்டாமைக்கு ஒரு நன்றியை சொல்லிடு......

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

தொடர்ந்து சுமாரான படங்களை வெளியிடுவதால் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மீது பிரபல ஹாலிவுட் பதிவர் சிபி செந்தில்குமார் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

Vijayakumar A said...

@hot karthik :-))))))

'பரிவை' சே.குமார் said...

அப்போ பாத்திட்லாங்கிறீங்க...

தாமரைக்குட்டி said...

சுமாரான படம் தான்.. ஆல்ரெடி தெலுங்குல பாத்தாச்சி... பாடல்கள் வேற நல்லா இல்ல.... ”மா டாடி பாக்கெட்” பாடல் ஓகே....

தெளிவான விமர்சனம்....

தாமரைக்குட்டி said...

ஹன்ஷிகா போட்டோ.. ஹிஹிஹிஹி........

Santhosh said...

பாஸ் தியேட்டர்ல உட்கார்ந்து புல் நோட்ஸ் எடுடின்களா?!
விமர்சனத்தில் ஒரு சீன் கூட மிஸ் ஆவல.. யு ஆர் கிரேட் பாஸ் !!!