Thursday, May 17, 2012

சாதா தமிழன், ஸ்பெஷல் தமிழன் இன்னா வித்தியாசம்? ( ஜோக்ஸ்)

கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
1.டாக்டர், அடிக்கடி பல் கம் வலிக்குது.. ஏன்? 


நீங்க கம்முனு இருக்கனும், புருஷனை பார்த்து பல்லை கடிச்சுட்டு இருந்திருப்பீங்க :0
?

----------------------------

2. புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்:புது திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு # புனிதா கூட போனாலும் உண்டா?----------------------------------

3. காலைல எந்திரிச்சதும் டீக்கடைலயோ, சலூன்லயோ பேப்பர் படிச்சா நீங்க சாதா தமிழன், ட்விட்டல வந்து கடலை போட்டா நவ நாகரீக தமிழன்--------------------------------

4. அரசின் சாதனைகளை விளக்க வெட்டியாக நாளிதழ்களில் விளம்பரம் பண்ண அரசு மக்கள் வரிப்பணத்தை வீணாக்க சட்டத்தில் இடம் இருக்கா?


-----------------------------------


5 .COME B1, COME B2, COME B3  அப்டினு மெசேஜ் வந்தா யாரும் அதை படிக்காதீங்க, உங்களை கம்பி எண்ண வெச்சுட்டதா கெக்கலிப்பாங்க :)


-------------------------------


நீ திருந்து..
நாடே திருந்தும்…

6. இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்குப்பதிலாக நாயை அறிவித்து விட்டால் நமக்கு நன்றி உணர்வு இருந்திருக்குமோ என்னவோ?


-------------------------

7.  டியர், நீதான் என் சிம் கார்டு.. நான் தான் உனக்கான செல்ஃபோன்....


 ஓஹோ, நீங்க எப்பவும் டூயல் சிம் ஃபோன் தானே? அந்த 2 வது சிம் யாரு? #  SMS


----------------------------

8. இலக்கிய ரசிகராக டாக்டர் இருந்து ஆபரேஷன் தியேட்டரில் அமர்ந்து சுப மங்களா படித்தால் பேஷண்ட்சின் கதி?


-------------------------

9. ஆண்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்? ஆணின் கடமை பெண்ணை வெட்கப்பட வைப்பதும், அதை ரசிப்பதுமே!


--------------------------

10. சென்னையில் ஒரேநாளில் 5 பெண்களிடம் 20 பவுன் வரைசெயின்பறிப்பு # என்னய்யா, ரொம்ப கம்மியா இருக்கு? ஒரு பெண்ணிடம் 4 பவுன் தானா? 


---------------------------
11. டெய்லர் வருடா வருடம் நம் அளவு மாறும் என்பார், நாம் தான் ஒருவரை நல்லவர் என நம்பி விட்டால் காலம் பூரா அவர் நல்லவர் என்பொம்---------------------------

12. ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என வருந்த வேண்டாம், அன்பே! நம் உள்ளங்கைகள் இரண்டும் இணைந்த போது 10 பொருத்தமும் பொருந்தக்கண்டேன்----------------------------

13. ரயில் நிலையங்களில் வழி அனுப்ப வந்தவர்கள் கண்ணீரில் , பிரிவுத்துயரில் ரயில் நிலையம் வெப்பமானது,தரைகள் தெப்பமானது--------------------------------


 14. சில மனத்தாங்கல்களால்  தற்காலிகமாக பிரிந்து வாழும் தம்பதிகளின் பரஸ்பர நம்பிக்கைகள் அபாரமானவை, நுட்பமனவை----------------------------

15.  மனதுக்குப்பிடித்தவரின் நிராகரிப்புதான் உலகின் மோசமான வலி, மனம் விட்டுப்பேசுவதுதான் வலி நீங்கிட ஒரே வழி


-----------------------------------


16.  அத்தான். உங்க பேக் கிரவுண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..


 உலகத்துலயே என் வழுக்கைத்தலையை பிடிக்குதுன்னு சொன்ன ஒரே ஃபிகர் நீதான்


------------------------------

17. என் கல்யாணத்துக்கு பல ஹீரோக்கள் வரவில்லை - சினேகா வருத்தம் # கல்யாண முகூர்த்தம்னா அப்டித்தான், பேக் அடிப்பாங்க.


---------------------------

18. .குழந்தை பாக்யம்  இல்லாமல் கோயில் கோயிலாக சுற்றுபவர்களை காண நேரிட்டால்  மழலை மேல் கை வைக்க தாய்மார்கள் யோசிக்கக்கூடும்---------------------------

19. கோடை வெய்யிலில் கூட ரயிலில் பர்த்தில் ஃபிகர் ஜக்காடு பெட்ஷீட் ஏன் போர்த்தி இருக்குங்கரது எனக்கு புரிஞ்சுடுச்சு! ஆண்டவா! பெண்களை ஏன் இவ்லவ் விவரமா படைச்சே?-------------------------------

20. ரயிலில் அமர்ந்திருக்கும் புதுமணத்தம்பதிக்கு வணக்கம், கொஞ்சம் அடக்கி வாசிக்கவும், எனக்கும் சம்சாரம் வீட்ல இருக்கு ஹி ஹி----------------------------------


எதையும் உன்னிலிருந்தே தொடங்கு !மன்னை முத்துக்குமார்

1 comments:

ராஜி said...

. புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்:புது திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு # புனிதா கூட போனாலும் உண்டா
>>
காசிக்கு போனாலும் கர்மம் விடாதுன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அதுப்போல உங்க புத்தி உங்களை விட்டு போகுதா பாருங்க.