Saturday, May 26, 2012

'ஜக்குபாய்’ டூ-'கோச்சடையான் - கே எஸ் ரவிக்குமார் பேட்டி @ vikatan

ன் மகள் ஜனனியின் திருமணத்தை முடித்த பூரிப்பும் கல்யாண வேலை களைப்பும் சரிவிகிதமாகப் பிரதிபலிக்கிறது கே.எஸ்.ரவிகுமார் முகத்தில். ''முறுக்கு சாப்பிடுங்க... பலகாரக் குடத்துக்காக வீட்ல ஸ்பெஷலா செஞ்சது!'' என்று உபசரிக்கிறார்.


http://chennaionline.com/images/gallery/2012/May/20120505100929/KS_Ravikumar_Daughter_Wedding_Reception_48.jpg


 1''ஒரு காலத்தில் ரஜினியைவெச்சு அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர் நீங்கள். ஆனா, இப்போ 'ஜக்குபாய்’ தொடங்கி 'கோச்சடையான்’ வரை ரஜினிக்காக ரொம்ப வருஷமாக் காத்திருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''



'' 'ஜக்குபாய்’ படத்தின் இரண்டாம் பாதி சரியா இல்லைனு அப்போ ரஜினி சார் நினைச்சதால்தான் அந்தப் படத்தைப் பண்ண முடியலை. 'ராணா’ ஆரம்பிக்கும்போது திடீர்னு அவருக்கு உடல் நலப் பிரச்னை. ரெண்டாவது படமும் இப்படி ஆச்சேனு வருத்தப்பட்டவர், 'கோச்சடையான்’ படத்தை முதல்ல என்னைத்தான் இயக்கச் சொன்னார். ஆனா நான்தான், 'அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எனக்கு அனுபவம் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் தெரிஞ்ச சௌந்தர்யாவே இயக்கினால் நல்லா இருக்கும்’னு சொல்லி, அந்தப் படத்தை இயக்குறதில் இருந்து விலகினேன். 


'ரஜினியை அடுத்து இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார்’னு ஏதேதோ செய்தி வரும்போது எல்லாம், 'அடுத்த படம் எந்தப் படம், யார் படமா இருந்தாலும், உங்ககிட்ட சொல்லாம எதையுமே கமிட் பண்ண மாட்டேன். நீங்க இல்லாமப் பண்ண மாட்டேன்’னு சொல்லி இருக்கார் ரஜினி!''



'2. 'நீங்க சொல்லுங்க... இப்போ ரஜினி எப்படி இருக்கார்?''



''ரஜினி சார் நல்லா இருக்கார். ரொம்பவே நல்லா இருக்கார். பழைய ஃபார்முக்கு வந்துட்டார். ஆனா, இப்பவே 'ராணா’வுக்கு இழுத்துட்டுப் போய், அவரை டயர்ட் ஆக்க வேணாம்னு நினைச்சோம். 


அதான் 'ராணா’வைத் தள்ளிவெச்சுட்டு 'கோச்சடையான்’ ஆரம்பிச்சோம். அனிமேஷன் படம்கிறதால, லொகேஷன் அலைச்சல், காஸ்ட்யூம், மேக்கப்னு எந்த டென்ஷனும் இல்லை. மாஸ்க் மாட்டிக்கிட்டு ஏ.சி. ஹால்லயே நடிச்சா போதும். மோஷன் கேப்ச்சரிங் டெக்னாலஜியில் இந்தியாவில் உருவாகும் முதல் படம் இது. சாதாரண ஷூட்டிங்கில் நூறு, இருநூறு பேர் வெயில், மலை, காடுனு வேலை பார்த்தால், இந்தப் படத்தில் அதைவிட ஐந்தாறு மடங்கு ஆட்கள் ஏ.சி. ஹால்ல வேலை பார்க்கணும். ரொம்பப் பெரிய பட்ஜெட். ரஜினிங்கிறதால சாத்தியமாச்சு.''


3. ''சமீபத்தில் பார்த்த படங்கள், நம்பிக்கை தர்ற இயக்குநர்கள்?''


'' 'மௌன குரு’, 'மெரினா’, 'ஆரண்ய காண்டம்’னு நிறையப் படங்கள் ஈர்த்தன. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மட்டுமே டார்கெட் வெச்ச 'ஒரு கல் ஒரு கண்ணாடி’யும் பிடிச்சிருந்தது. சற்குணம், பாண்டிராஜ்னு நிறைய இயக்குநர்கள் பளிச்னு செய்தி சொல்றாங்க. மெகா பட்ஜெட் படங்களையும் தாண்டி, சின்னப் படங்களும் நல்ல விஷயங்களோட வந்து ஹிட் ஆறதுதான் ரொம்ப நல்ல விஷயம்.''



4. ''வழக்கமான கமர்ஷியல் படங்கள் தவிர்த்து 'புரியாத புதிர்’ மாதிரியான படங்களை உங்களிடம் இருந்து இனி எதிர்பார்க்க முடியாதா?''



'' 'புரியாத புதிர்’ எனக்கு ரொம்பத் திருப்தி கொடுத்த படம். ஆனா, அப்போ அது சிட்டியில் மட்டும்தான் ஓடுச்சு. தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கணுமேனு நான் ரூட் மாறிட்டேன். ஆனா, இப்போ கிராமங்களில்கூட கம்ப்யூட்டர் வந்துடுச்சு. சினிமா தொழில்நுட்பம் பேசுறாங்க. பேய்ப் படம் எடுத்தாக்கூட இன்னைக்குப் பிரமாதமாப் போகும். இப்போ அந்த மாதிரிப் படங்கள் எடுக்கலாம். பார்க்கலாம்.''






5. ''ஆட்சி மாற்றத்தால் சினிமாவுக்கு எதுவும் நல்லது நடந்திருக்கா?''


''அறிவிச்ச ஸ்டிரைக்கை நிறுத்தி இருக்காங்களே... அதுவே நல்ல விஷயம்தானே? படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா மட்டும் பத்தாது, அது தரமான படமா இருந்தாத்தான் வரிவிலக்குனு சொல்லியிருக்கிறதும் நல்ல விஷயம். இன்னும் நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.''



6. ''ஃபெப்சி, தயாரிப்பாளர் சங்கம் மோதல்ல நீங்க எந்தப் பக்கம்?''


''நான் எப்பவும் சினிமா பக்கம்.''



1 comments:

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே..
மிகவும் யதார்த்தமான இயக்குனர் கொடுத்த பேட்டி
கேள்விகளுக்கு தகுந்த அழகான பதில்கள்..