Tuesday, May 15, 2012

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன் கலகலப்பு @ மசாலா கஃபே -

1. அண்ணன் இல்லை, வெளீல போய் இருக்கார்.. 


 எனக்குத்தெரியும்.. அதான் கிளம்பிட்டு இருக்கேன்.. 

 நீங்களா போனா எப்படி? நான் சொல்லி அதுக்குப்பின் நீங்க போனாத்தான் எனக்கு  அண்ணன் கிட்டே இருந்து காசு கிடைக்கும்... 


-------------------------------------------


2.  மிஸ்.. என் வண்டில வந்து விழறப்ப எப்படியோ தெரியலை... ஆனா வண்டில இருந்து இறங்கறப்ப  வலது காலை வெச்சு இறங்குங்க ஹி ஹி 


--------------------------


3. மிஸ். நீங்க தான் என் வண்டில வந்து விழுந்த முதல் ஃபிகர்.. ஐ லவ் யூ.. 


நீங்க எப்பவும் இப்படித்தானா? இப்படித்தான் எப்பவுமா?---------------------


4. ஹி ஹி .. எப்படியாவது கரெக்ட் பண்ணலாம்னு வந்தேன்.. 


கரெக்ட் பண்ணலாம்னா என்ன? ---------------------------


5. மேடம்.. எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம்னு மட்டும் நினைச்சுடாதீங்க.. மீறி அனுப்பிச்சா... 


அனுப்பிச்சா.?

 செத்துடுவேன்


--------------------------------

6. எந்த ஹோட்டல்ல நாயை கிச்சன் ரூம்ல உக்கார வெச்சிருக்காங்க?

 அது என்னோட க்ளோஸ் ஃபிரண்டுங்க.. யார் எது கொடுத்தாலும் கவ்விட்டு நம்ம கிடே வந்து கொடுத்துடும்.. 


-------------------


7. யோவ்.. நீ எனக்கு பெரிய தலைவலிய்யா.. 


டோண்ட் ஒர்ரி. ஹெல்மெட்டாதான் இருப்பேன். ஹெட் ஆக்கா இருக்க மாட்டேன்.. 


----------------------------


8.   டிரைவர். வண்டியை மசாலா கஃபேக்கு விடு.. 

 வேற நல்ல ஹோட்டல்க்கு போலாம் மேடம்

 யோவ்! நாம போறது ரெயிடுக்கு.. 


------------------------

9. இன்னும் கொஞ்ச நாளுக்கு அஞ்சு வட்டி அழகேசன் தொந்தரவு இல்லை.. நைஸா துரத்தி விட்டாச்சு.. 


அதான் இப்போ நீ வந்துட்டியே.. 


------------------------------

10. நீ இவ்ளவ் அழகா இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா .... 


தெரிஞ்சிருந்தா?


 துபாய்ல ஒரு மொக்கை ஃபிகர் கிட்டே லவ் யூ சொல்லி இருக்கவே மாட்டேன்


 அதுக்காக அவ தானே வருத்தப்படனும்?


--------------------------------
11. பாஸ்.. எதுக்கு முட்டாள்களை எல்லாம் வேலைக்கு வெச்சுக்கறீங்க?


 முட்டாள்கள் தான் நாம எது சொன்னாலும் யோசிக்காம சொன்னதை மட்டும் செய்வாங்க. 


---------------------------------


12. அடுத்தவன் ஃபிகருக்கு ஆசைப்பட்டா சொந்த ஃபிகர் சப்பையாத்தான் அமையும்


----------------------------


13. சம்பந்தம் இல்லாம கேள்வி நீ கேட்கறே.. இப்போ புரியுதா?

 ஏதோ சம்பந்தம் இல்லாம பேசறேன்னு புரியுது... 


--------------------------------

14. மிஸ்.. எனக்கு அந்த ஃபிகரை டாவ் அடிக்கறதுல எந்த அப்ஜெக்‌ஷனும் இல்லை.. 

 யோவ்.. அப்ஜெக்ட் பண்ணவேண்டியது அவ தான். 


-----------------------------------

15.  மாப்பி, எனக்கு அந்த ஃபிகர் செட் ஆகுமா? 


டெஃபெனட்டா.. ஏன்னா அட்டு ஃபிகருக்கு லட்டு ஃபிகர் செட் ஆகறதுதான் உலக நடப்பு


--------------------------------

16. சூர்யா மாதிரி ஃபிகர் முன்னால சிரிச்சு மயக்குடான்னா சுருளிராஜன் மாதிரி சிரிக்கிறியே.. 


---------------------------

17. அநியாயத்துக்கு எதிரா குரல் குடுக்கறவங்களை எனக்கு பிடிக்கும். 

 அவன் பேசவே மாட்டான். என்ன பண்ணுவீங்க?


------------------


18.  ஹலோ.. மிஸ். நீங்க என்ன செல் ஃபோன் கம்பெனியா? அடிக்கடி பிளானை மாத்திட்டே இருக்கீங்க?


--------------------------------

19. என்ன டல்லா இருக்கே? வியாபாரம் படுத்துக்கிச்சா?


நானே படுத்துட்டேன்... உடம்பு சரி இல்லை.. 


-----------------------------

20.  போலீஸ் ஸ்டேஷன்ல கூட அவ்ளவ் போலீஸ் இருக்காது, எப்போ பாரு என்னை சுத்தி போலீஸ்ங்க சுத்திட்டே இருக்கு


-

------------------------------


21.  நான் யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்குவேன்.. 

 மிஸ்.. நல்லவேளை பயந்துட்டேன்.. 


-----------------


22. ஊமைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுனீங்களா? வாவ்.. சூப்பர்னு கத்துனான் பார்க்கலை?


--------------------------


23. என்னை பார்ட்னர்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் மிஸ்.. ஹி ஹி 


--------------------


24.  மிஸ்.. எனக்கு பேக் ( BACK)  போச்சு.. உங்களூக்கு பேக் ( BAG) போச்சு-----------------------


25. உன் ஆள் போகுதுடா... 

 அவ பாட்டுக்குப்போய்ட்டு போறா.. என்னை ஏண்டா உசுப்பேத்துறே.. 


-----------------


26. பொண்ணுங்க கிட்டே வயசைத்தான் கேட்கக்கூடாது..  சைசை கேட்கலாம். 


வாட்?


 எதுக்கு ஜெர்க் ஆகறீங்க? முன்னே பின்னே தெரியாத கடைக்காரன் கிட்டே எல்லாம் உங்க சைஸை சொல்வீங்க.. என் கிட்டே சொல்ல மாட்டீங்களா?


சரி காதை குடுங்க, சொல்றேன் --------


 அய்யோ.. நான் செப்பல் சைஸ் கேட்டேன்.. நீங்க இந்த சைஸ் சொல்லீட்டீங்களே.. 


--------------------------


27. பொண்ணுங்க ஜாலியா , சந்தோஷமா இருக்கனும்னா அவங்களுக்கு  ஆயிரக்கணக்குல செலவு பண்னனும்.. அதே பசங்க சந்தோஷமா இருக்கனும்னா ஒரு குவாட்டர் ஒரு சோடா ஊறுகா போதும்------------------------


28. அய்யய்யோ போலீஸ் போலீஸ்.. 


சும்மா கத்தாதே.. அது ஆம்புலன்ஸ்.. 

 இப்போ எல்லாம் எது போலீஸ்.. எது ஆம்புலன்ஸ்ஸே சொல்ல முடியாது. 


----------------------------------


29. மிஸ்.. டோண்ட் ஒர்ரி.. இந்த ஹேண்ட்பேக்கை க்டைக்காரங்க டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. 


 யோவ். எந்த கடையிலாவது ஒரே ஒரு ஹேண்ட் பேக்குக்கு டோர் டெலிவரி பண்ணீ பார்த்திருக்கியா?


----------------------------


30. ஃபாஸ்ட் ஃபுட் மேல ஏன் மக்கள் இவ்வளவ் ஆர்வம் காட்டராங்க.. நோயும் ஃபாஸ்ட்டா வந்துடும் --------------------


31. பெரிசா ஜெயிக்கனும்.. 


 பெருசு கண்டிப்பா ஜெயிக்கும் ஹி ஹி 


---------------------


32. இது பழைய ஐடியா . எடுபடுமா?

 பழைய பில்லா படம் ரீமேக் பண்ணி ஓடலையா? அப்போ பழைய உணவு பழக்கம் ஏன் ஹிட் ஆகாது?


--------------------------


33.  ஒருத்தன் தப்பானவனா? இல்லையா? என்பதை போலீசை விட பெண்ணால் தான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்


------------------------------

34. எனக்கு மசாலா வடைன்னா பிடிக்கும் மிஸ்.. ஹி ஹி 


-----------------------

35.  எனக்கு எப்பவும் வடைன்னா பிடிக்கும் ஹி ஹி 


-------------------------

36.  மாப்பி.. உன்னால 5 கிலோ அரிசி மூட்டையைக்கூட ஒழுங்கா தூக்க முடியலை. நீயா அவளை தூக்கப்போறே?


------------------------

37.   மாப்பி.. நிறுத்து.. 

 கூப்பிட்டதும் சடன் பிரேக் போட்டு நிறுத்த நான் சைக்கிளா ஓட்டிட்டு இருக்கேன்..? சண்டை போட்டுட்டு இருக்கேன் ராஸ்கல்ல். 


--------------------------------


38. சண்டை போட வர்றவன் மாதிரியா இருக்கே? சாத்துக்குடி ஜூஸ் தர வர்றவன் மாதிரி இருக்கே.
--------------------------

39.  மாமா ஒரு வார்த்தை  சொன்னா போதும் இந்த ஏரியா லேடீஸ் எல்லாரும் கேட்பாங்க... 


 மாமா சொன்னா அத்தையே கேட்க மாட்டாங்க. எப்படி மத்த பொண்ணுங்க கேப்பாங்க?


-------------------------------


40.  சும்மா சீனை போடாதடி. 


 சீனோ, பேனோ நாங்க போட்டாதான் ரசிக்கற மாதிரி இருக்கு?


-------------------------


41  மாப்பி, நீ ஏன் நடுத்தெருvவுக்கு வந்துட்டே.?


டேய்.. நாயே ஜீப வந்துட்டு இருக்கேன்.. நடுத்தெருவுல வராம 4 வீடு புகுந்தாடா வர முடியும்?


--------------------------42.அவ சொல்றதை எல்லாம் நீ நம்பறியா?

ஆரம்பத்துல நானும் நம்பலை, ஆனா நம்புனாத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட பிறகு நம்பித்தானே ஆகனும்?


---------------------------

43.  ஏண்டா. மணி மிட் நைட் `12 ஆகுது.. பேய் பிசாசே டியூட்டியை முடிச்சுட்டு போய் இருக்கும்.. இங்கே இந்நேரத்துல என்னடா பண்றீங்க?


------------------


44. ஆமா. நாங்க நைட் 12 மணிக்கு பொண்ணை கடத்தப்போற மேட்டர் உனக்கு எப்படித்தெரியும்?

 அடப்பாவி.. நான் சும்மா எதேச்சையாத்தான் கேட்டேன். நீயே உளறிட்டே


-------------------------------

45.  என்னை யாரும் தடுக்க முடியாது.. கடலுக்கே கேட்டா? புயலுக்கே பூட்டா?


----------------------

46.  பாஸ்.. நான் வீடு வரை போய்ச்சு வந்துடவா? சுகர் டேப்லெட்டை மறந்துட்டு வந்துட்டேன்..


 ஹூம்.. சுகர், பைல்ஸ்,முடக்குவாதம் வந்தவனை எல்லாம் அடியாளா வெச்சுக்கீட்டா இப்படித்தான்..


--------------------------------------------


47. ஊர்ல இருக்கற எல்லா ரவுடிகளும் இப்படி என்னப்பார்த்து பயந்து பயந்து ஓடினா அப்புறம் நான் யாரைப்பார்த்துதான் சவால் விடறது? யார் கிட்டேதான் ஃபைட் போடறது?


---------------------------

48. நாய் முனகற சத்தம் கேட்குதே?

 இது குளிர் காலம்.. கண்ட கண்ட காரணத்துக்காக எல்லாம் நாய் முனகும்.. கண்டுக்காத.


-----------------------------------


49. எவ்ளவ் தைரியம் இருந்தா நம்ம வீட்டுப்பெண்ணை தூக்க நம்ம வீட்டுக்கே வருவாங்க. ?

 டேய். ஏதோ பேசனும்கறதுக்காக பேசாதே.. நம்ம வீட்டுப்பெண்ணைத்தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கா போவாங்க?
-------------------------------------

50. டேய் நாயே.. நான் பொம்பளை வேஷம் போட்டு வந்திருக்கேன்.. அவனு நினச்சு என்னைத்தூக்கறியே. அப்போ அவளை இந்த இடத்துல பிடிச்சுத்தான் தூக்குவியா?


-----------------------------------

51. வெட்டியா இருந்தாலே 4 கொலை பண்றவன் நான், இப்போ வெறுப்புல இருக்கேன்.. எத்தனை கொலை பண்ணப்போறேனு எனக்கே தெரியாது.


-----------------------


52. பாஸ்.. எனக்கு ஒரு ஐடியா.


சொல்லு சொல்லு..


சாயங்காலம் தேடிப்பார்க்கலாம். இப்போ போய் சாப்பிடலாமா?


-----------------------------

53. என்னைப்பற்றி உங்களுக்குத்தெரியாது.. இந்த ஊர்ல சமாதில இருக்கறவங்க பாதிப்பேரு என்னால கொலை செய்யப்பட்டவங்க தான்.


--------------------------------

54.  எல்லா வேலையையும் பறந்து பறந்து  செய்யனும்னு சொல்றேன். நீ என்னடான்னா பறந்து போய் சாவேங்கறியே..


--------------------

55.  இவளுக இம்சை தாங்க முடியலைடா.. ஓவரா சீன் போடறாளுக.-------------------------------


56.  தப்பை தப்பா செய்யறவன் தான் மாட்டறான்------------------

57. எல்லாரும் ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்பா போட்டு  என்னை மாட்ட வெச்சுட்டீங்களே. டேய். ஆனா நீ என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடிக்கறே பாரு அதுதான் தாங்கிக்கவே முடியலை. ..-------------------------

58.  இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்  ( ரமணா டயலாக்)

 டேய். நாயே , இங்கே அடிச்சா இங்கே தாண்டா வலிக்கும். அங்கே எப்படி வலிக்கும்?


-----------------

59. டேய்.. அடியாளுங்களா? இப்படி எதுக்கு என்னை சுத்தி சுத்தி வர்றீங்க?  இது என்ன சுடுகாடா? நான் பொணமா?


--------------------------


60. முறைப்பெண்ணும், மொட்டை மாடில காய வெச்சிருக்கும் வத்தலும் ஒண்ணுதான், எப்போ யார் தூக்கிட்டு போவாங்கன்னு சொல்லவே முடியாது..----------------------

61.  விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படும் நு சொன்னியே. அந்த பின் விளைவுகள் இதானாடா?----------------------------------


62.  அடி வாங்கறதைக்கூட கேட்டு வாங்கிக்கறானே. அடி என்ன கேபிள் கனெக்‌ஷனா?---------------------------------


63. கட்டைக்குத்தானே சண்டை.. இந்த இந்த கட்டையை நீயே வெச்சுக்க. எதுக்கு கத்தியை எடுக்கறே?-------------------------------


டிஸ்கி - படத்தில  மொத்தம் 68 ஜோக்ஸ். 5 மறந்துட்டேன்.. நினைவில் உள்ளவர்கள் கமெண்ட்டில் சொன்னால் பதிவில் சேர்த்துக்கறேன்

5 comments:

ராஜி said...

மறாந்து போன அந்த 5 ஜோக்கை நினைவுப்படுத்த மறுபடியும் ஒரு முறை போய் படம் பாருங்களேன்

MARI The Great said...

என்ன மறந்துட்டீங்களா ..? ஹி ஹி ஹி .., யானைக்கும் அடிசருக்கும்னு இதுக்குத்தான் சொல்லியிருக்காங்க போல ..!

Admin said...

ஒரு படத்தோட காமெடிய எண்ணி குறிப்பிடும் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்..சபாஷ்..

Mohamed Mydeen said...

ellaame 140 kuLLathaan irukku

Unknown said...

nice