Thursday, May 24, 2012

டபுள் மீனிங்க் காமெடி ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 

''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!''



2.'' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 

 நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!''



3. ''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ, பஜனை கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங் களா?'' 


''கலாய்ச்சுட்டாராமாம்!''



4. ''உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம் என்ன?''
''என் நண்பன் ஜிலானியின் மரணம். என்னோட மிக நெருங்கிய நண்பன் அவன். என்னை நிறைய மாத்தினவன். பெரிய பணக்கார வீட்டுப் பையன். அவன்கூட கம்பேர் பண்ணா, நான் ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும், என்னைக் கூடவே வெச்சு சுத்திட்டு இருப்பான். 'லொள்ளு சபா’ பண்ணிட்டு இருக்கும்போது, என்கிட்ட கார் எல்லாம் கிடையாது.


அப்போ கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக்கக் கூப்பிடுவாங்க. சிம்பு, 'ஜெயம்’ ரவி மாதிரியான ஹீரோக்கள் செம பாலீஷா, சொகுசான கார்களில் வந்து இறங்குவாங்க. நான் ஆட்டோவுக்கே காசு இல்லாம அல்லாடிட்டு இருப்பேன். அப்போலாம் லான்சர் மாதிரி கெத்து கார்ல என்னை கூட்டிப் போய் இறக்கிவிட்டு இருந்து கூட்டிட்டு வரணும்னு டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவான். எப்பவுமே எங்கயுமே என்னைவிட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னை இந்த அளவுக்கு முன்னேத்திவிட்ட நல்ல நண்பன். பாண்டிச்சேரி போய்ட்டு வரும்போது பைக் விபத்துல இறந்துட்டான். என்னோடஉண்மை யான 'நண்பேன்டா’ அவன். ஐ மிஸ் யூ ஜிலானி!''


5. ''உங்க அம்மா, அப்பா, வீட்டுக்காரம்மா, குழந்தைகளுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?'' 

''என் அம்மா, அப்பா, சம்சாரம், குழந்தைங்க, தோஸ்துங்க எல்லாருக்கும் பிடிச்ச காமெடியன்... நான்தான். வேற யாரையாச்சும் சொன்னா, சோறு போட மாட்டேன்ல. நான் மொக்கை காமெடி பண்ணினாலும் பயங்கரமா சிரிச்சு, அப்ளாஸ் கொடுத்து என்னை வளர்த்துவிட்டது அவங்கதான். நமக்குப் பிடிச்ச பேட்ஸ்மேன் டொக்கு போட்டாலும் 'வாவ்... வாட் எ ஸ்ட்ரோக்’னு கைதட்டுவோமே... அந்த மாதிரி!

ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்குற பிள்ளை. என் டார்ச்சர் தாங்காம ஒரு தடவை என் அம்மா, 'ஊர்ல நாலஞ்சு புள்ள பெத்தவள்லாம் சந்தோஷமா இருக்கா. ஒரே ஒரு புள்ளையப் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’னு அலுத்துக்கிட்டாங்க.


அதைத்தான் காப்பி பண்ணி 'பாஸ்’ படத்துல பேஸ்ட் பண்ணேன். ஷூட்டிங் பரபரப்புல வீட்டுக்குப் போகலைன்னா, அம்மா அந்த டயலாக்கைத்தான் சொல்லிட்டு இருப்பாங்க. என் வீட்டுக்காரம்மாவுக்கு பொண்ணு பாக்குற காமெடி சீன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நான் ஊர்ல இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட 'லொள்ளு சபா எபிசோட்ல பாத்துக்கோங்க’னு வீட்ல சொல்லிட்டாங்க. அன்னைக்கு எபிசோட்ல 'பதினாறு வயதினிலே’ படத்தைக் கலாய்ச்சிருந்தோம்.


அதுல என்னைப் பார்க்க என் சம்சாரம் கிராமத்தையே துணைக்கு வெச்சுக் கிட்டு டி.வி. முன்னாடி காத்துட்டுஇருந்திருக் காங்க. கைல பீடி, சாராய பாட்டில்னு ஒரு நல்ல குடிமகனா நான் மிகச் சிறப்பாகச் சலம்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'டி.வி-ல நாலு பேரு பாக்கும்போதே இப்படிக் குடிக்குறானே... இவன்லாம் தனியா இருந்தா எப்படிக் குடிப்பான்’னு பொட்டு பொடிசுல ஆரம்பிச்சு கிழவிங்க வரை திட்டியிருக்காங்க. 'சிகரெட் கிகரெட் குடிச்சாகூடப் பரவாயில்லை.


பீடி குடிக்குறானே!’னு பெருசுங்க பொருமியிருக்காங்க. 'இப்படி ஒரு பரதேசிக்கு வாக்கப்படணுமா?’னு என் மனைவி சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எல்லாம் சொல்லிப் புரியவெச்சுக் கல்யாணம் பண்ணினேன்.

'மந்திரப் புன்னகை’ படத்துல மாமனார் வீட்டுக்காரங்க கும்பலா வந்து இறங்குனதும், 'வந்துட்டாங்கப்பா... மாயாண்டி குடும்பத்தார்’னு கமென்ட் அடிப்பேனே... அதோட இன்ஸ்பிரேஷன் இந்தச் சம்பவம்தான். என் பசங்களுக்கு 'ஓ.கே. ஓ.கே.’ பட பார்த்தா கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது கோபத்துல திட்டுனாக்கூட, 'ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு’னு சொல்லிக் கலாய்க் குறாங்க. எப்படிச் சமாளிக்குறதுனுதான் தெரியலைங்க!''


6. ''நீங்க பேசுற காமெடிகள் எல்லாத்தை யும் போறபோக்குல 'ஜஸ்ட் லைக் தட்’தட்டி விடுறீங்களே... எப்படி?'' 

''டயலாக் பேசுறது ஜஸ்ட் லைக் தட் ஃப்ளோவா இருக்கும் பிரதர். ஆனா, அதை ஹிட் ஆக்குறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு யோசிப்போம். புதுசா ஒரு வார்த்தை பிடிக் கும்போதே, அது மக்களுக்குப் பிடிக்குமா? எவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு மூளையைக் கசக்கிட்டே இருப்போம். ஒரு காமெடி சீன் பண்ண குறைஞ்சது மூணு நாள் ஆகும்.


இப்போ நடிச்சுட்டு இருக்குற 'சேட்டை’ படத்துல நான் இன்னொருத்தர்கிட்ட 'பக்கத்து அபார்ட்மென்ட்ல கில்மா நடக்குது’னு சொல்ல ணும். கில்மா பழைய வார்த்தையாச்சேனு யோசிச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி, 'சிக்காய் முக்காய் நடக்குது’னு சொல்வேன். 'அப்படின்னா’னு இன்னொருத்தர் கேட்க, 'அதாங்க கிலிகிலிகிலிபிலிபிலிபிலி... இப்பவும் புரியலையா? ஸ்கிஸ்கிஸ்குஸ்குஸ்குஸ்ங்க’னு சொல்லும்போதே டைரக்டர் கண்ணன் சிரிச்சிட்டார்.


இந்த ரெண்டு வார்த்தையைப் பிடிக்க எங்களுக்கு ரெண்டு நாளாச்சு. இந்த உலகத்துல எதுவுமே ஜஸ்ட் லைக் தட் கிடைக்காது நண்பா!''


7. ''உங்க காமெடிகளைக் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை  ரசிக்குறாங்க. ஆனா, நடுநடுவுல திடீர்னு ரெட்டை  அர்த்த வசனம் வெச்சுடுறீங்களே... தேவையா?'' 

''உண்மைதான். தெருக்கூத்தோ, மேடை நாடகமோ, சினிமாவோ... எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தணுமே! 'டபுள் மீனிங் டயலாக்’ ரசிக்கவே ஒரு குரூப் இருக்கே. அவங்க கோட்டாவுக்கு நாங்க ஏதாவது கொடுத்தாகணுமே?

அதான் டபுள் மீனிங் காமெடி. குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியாது. புரியும்போது ரசிக்க ஆரம்பிச்சிடுறாங்க. என் அக்கா பையன் 'மன்மதன்’ படத்துல நான் பண்ணின காமெடியை முன்னாடி பாத்தப்ப, இரான் சினிமாவை சப்- டைட்டில் இல்லாமப் பார்க்குற மாதிரி உட்கார்ந்துட்டு இருந்தான். இப்போ அதைப் பார்க்குறப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறான். நம்மளா யாருக்கும் சொல்லிக் கொடுக்குறதில்லை பிரதர்!''


8.''சினிமாவுல ஹீரோ - ஹீரோயின்னுகூடப் பார்க்காம எல்லாரையும் செமையா கலாய்க்கிறீங்க... நிஜ வாழ்க்கைல நீங்க செமத்தியா கலாய் வாங்கியிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணுங்க?'' 

 ''காலேஜ் படிக்கும்போது வி.ஜி.பி-ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடை ஏறித் தயாரா இருந்தோம். ஒருத்தன்கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் நிறைய கும்பல் வந்து இறங்குச்சு. 'மச்சான், இவங்களைச் சிரிக்கவெச்சு ஸ்கோர் பண்ணிருவோம். அப்பதான் இன்னொரு நாள் புரொகிராம் கொடுப்பாங்க’னு பேசி வெச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சோம்.


 எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படிக் கலாய்க்குறோம். எல்லாம் பொணம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து கைதட்டுறேன். அப்பவும் பய புள்ளைக ஒருத்தன்கிட்டயும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு கட்டத்துல ரொம்பக் கடுப்பாகி, 'யோவ்! கைதட்டுனா என்ன குறைஞ்சா போயிருவீங்க’னு திட்டுனா, 'ஏண்டி பாபு... ஏனு செஸ்தானு?’ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில நாங்க வாங்குன பிரமாண்டமான மொக்கைங்க அது!''

- அடுத்த வாரம் 

''மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 



''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?


''
- இன்னும் கலாய்க்கலாம்...


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html





சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 

4 comments:

rajamelaiyur said...

//
2.'' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?''

நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!''



///

எதார்த்தமான பதில்

rajamelaiyur said...

எங்கள் தல சந்தானம் பேட்டி வெளியிட்ட விகடனுக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி

Nirosh said...

கலக்கல்.... பேட்டி :))

Menaga Sathia said...

கலக்கல் பேட்டி!!