Wednesday, May 16, 2012

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 2

 
 அடக்க ஒடுக்கமாக கை கட்டி நல்லவரை போலவே காட்டிக்கொள்ளும் மன்னர் கசிவு எனும் அவினாசி ஆதீனம் கம் ராஜன் லீக்ஸ்  மி, இலவசமா விட்டுட்டே இரு மாமு 

ஒரு விழாவை வெற்றிகரமா நடத்தி முடிக்கறது சாதாரண காரியம் இல்லை.. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப்பார் வரிசையில் இலக்கியக்கூட்டம் நடத்திப்பார் என்பதும் பொருந்தும்... ட்வீட்டப், பதிவர்கள் சந்திப்பு இவையும் இலக்கிய  கூட்டம் போலத்தான் .. என்ன ஒரு வித்தியாசம்னா இலக்கியக்கூட்டத்துல பேசுறது பாதி புரியாது.. இங்கே கொஞ்சம் ஜாலியா, ஜனரஞ்சகமா இருக்கும்.. ஆனா அதுக்காக செய்யப்படும் உழைப்பும், வேலையும் ஒண்ணுதான்..


 நான் நெல்லையில் உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை பதிவர் சந்திப்பு,  ஈரோடு கதிர் நடத்திய ஈரோடு சங்கமம் -தமிழகம் தழுவிய பதிவர்கள் சந்திப்பு  என இந்த ஒரு வருட பதிவுலக வாழ்க்கையில் 2 விழாக்களை சந்தித்தேன்.. இது  3 வது.. மூன்று விழாக்களிலும் நான் பெற்றுக்கொண்ட பாடங்கள், நட்புகள், அனுபவ அறிவு இவை அதிகம்..


எக்ஸ்பர்ட் சத்யா, செந்திலநாதன், கரையான் , பரிசல் இவர்களை முதலில் வாழ்த்தி விடுகிறேன்.. ஏன்னா யாரையாவது பாராட்டனும்னு தோணுச்சுன்னா நம்ம மனசு மாறுவதற்குள் பாராட்டிடனும்கறது  என் கொள்கை. பரிசல் ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டர்ல “ பெண்கள் பயம் இல்லாமல் ட்வீட்டப்பில் கலந்து கொள்ளலாம்”னு ஒரு ட்வீட் போட்டப்ப நான் கூட மனசுல நினைச்சேன்.. அது சாத்தியம் தானா? என்னா கூட்டம் சேர்ந்த பின் மனிதனின் நடத்தை ஒரு மாதிரியும், தனியா இருக்கறப்ப வேறு மாதிரியும் இருக்கும்.. அது சைக்காலஜி..


பெரிதும் துணை நின்ற ராவணன் சார்ஆனா பரிசல் சொன்னதை செஞ்சு காட்டினார்.. ஒரு காலேஜ் லெக்சரர் போல கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.. அவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.. அதே போல் கூட்டத்துக்கு வந்திருந்த 120 பேரும் கண்ணியமாகவே நடந்து கொண்டனர்..  யாரும் தண்ணி அடிச்சுட்டு வர்லை.. யாரோ சிலர் விழாவில் கைதட்டலுடன் விசிலும் அடித்த போது  நம்மாளுங்க நோ விசில் என அதையும் கட்டுப்படுத்தினர்.. சபாஷ்..


ஓக்கே  லெட் அஸ் கம் டூ த மேட்டர்.. விழாவில்

1. திவ்யா அவர்களின்  வாழை இயக்கம் பற்றிய அறிமுக உரை ( இது பற்றி பாகம் 4-ல்)


2. செல்வகணபதி வர்களின் “ என்னால் முடியும்” குழந்தைக்கல்விக்கான இயக்கம் பற்றிய அறிமுகம்.. அவர்கள் பணீ பற்றி ஒரு பார்வை ( இது பற்றி பாகம் 5-ல்)


3. ட்விட்டர்களின் சுய அறிமுகம்.


4. க்ரேசி கோபாலின்  டாக்டர் டி ஆர் எம் செல் ஃபோன் - கலாய்ப்பு நிகழ்ச்சி

5. எம் ஜி ரவிக்குமார் - க்ரேசி கோபால் மிமிக்ரி நிகழ்ச்சி


6. கருப்பையாவின் கவிதை வாசிப்பு
 இந்த 6 நிகழ்ச்சிகளும் போன பதிவில் பார்த்தோம்.. இதை ஏன் நான் ரிவிசன்  பண்றேன்னா எங்க குடும்பமே ஒரு டீச்சர் ஃபேமிலி.. அம்மா, அக்கா, மனைவி, ஹவுஸ் ஓனர் பொண்ணு.. இவங்க கூட தினம் பழகி பழகி எனக்கும் டீச்சர் பிளட் லைட்டா ஓடுது. அதனால அதே சாயல் தொத்திக்குச்சு..  ( ஹவுஸ் ஓனர் பெண் பற்றி தனிப்பதிவு ஹி ஹி )


எல்லாரும் சரியா படிச்சுட்டு வர்றீங்களா? ஏன்னா 6 பாகம் முடிஞ்ச பின் கேள்வி எல்லாம் கேட்பேன்.. கரெக்டா பதில் சொல்லனும்..


ஈரோடு தங்கதுரை  திடு திப்னு வந்து 18 நிமிஷம் ஒரு கலக்கு கலக்கிட்டார்.. . எந்த விதமான தடுமாற்றமும் இல்லாம மனுஷர் பட படனு பேசித்தள்ளீட்டார்/.. மதுரை முத்து, ஈரோடு மகேஷ் பாணியில் வெகு சரளமான நகைச்சுவையில் அவர் பேச்சு இருந்தது.. அவரோட கான்செப்ட் திண்டுக்கல் ஐ லியோனி “ மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? “ பாகம் 1. 2 ,3 என 1999 ல வந்த ஆடியோ கேசட்ல இருந்து கொஞ்சம், மதுரை கு ஞானசம்பந்தன் எழுதிய  சிரிக்கலாம் வாங்க, கவலையை மறக்கலாம் நீங்க என்ற புத்தகத்தில் இருந்து கொஞ்சம், வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய ஜோக்ஸ் டைரி புக்கில் இருந்து கொஞ்சம் எடுத்தாளப்பட்டு இருந்தாலும்  மிக இயல்பான  பேச்சாக இருந்தது..  ( இது பற்றி முழு விபரம் பாகம் 6 -ல் )


 ஆடியன்சின் ஆரவாரமான கை தட்டல் இவருக்கு கிடைத்தது.. பொதுவா திறமையானவரை கை தட்டி ஊக்குவிக்கும் தமிழன் அந்த திறமையானவர் நமக்கு பழக்கமானவர், நண்பர் என்ரால் இரு மடங்கு ஆர்வத்துடன் பாராட்டுவான்..

அவர் தன் சொந்த செலவிலோ, அல்லது புதிதாக அவர் ஈரோட்டில் சேர்ந்திருக்கும்  கம்பெனியின் ஸ்பான்சர் மூலமாகவோ விழாவுக்கு வந்த அனைவருக்கும்  அழகிய பேனா பரிசாக கொடுத்தார்.. அதுல அவர் பேர் போட்டு இருந்தது.. இதுவும் தமிழனின் பாரம்பரிய பழக்கம் தான்.. எப்படின்னா கோயில்களில் அந்தக்காலத்திலேயே டியூப் லைட் தானம் செய்தால் அந்த லைட்டில் உபயம் மாடசாமிக்கவுண்டர் என்பது மாதிரி ஒரு விளம்பரம் இருக்கும்.. இது சகஜம் தான்..

கூட்டத்துக்கு வந்த 120 பேர்ல இந்த ஐடியா யாருக்கும் தோணலை பாருங்க.. அங்கே தான் நிக்கறார் தங்கதுரை..

அடுத்து பாட வந்தாரு கிரி... இவர் ஆள் பார்க்கத்தான் ஒரு மார்க்கமா இருப்பார்..  ட்விட்டர் வி பில வில்லன் ஃபோட்டோ வெச்சிருந்தாலும் ஆள் கிராமத்து மண்.. பிரமாதமான குரல்..   அவர் பாடல்களுக்கு அபார வரவேற்பு கிடைத்தது..  அவரது ரெகுலர் ரசிகைகள் ஃபாரீனில் இருப்பதால், இங்கே வர முடியததால் நேரில் காண முடியவில்லை அவர்களால்..


நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.நம்மாளுங்க அப்பப்ப ட்வீட் போட்டு ரகளை பண்ணுனாங்க.. சரியா தெரியலை.. இருட்டா இருக்கு.. அப்டின்னு.. ஹால்ல பெரிய அளவில்
 பிரகாசமான அளவில் லைட் வசதிகள் இல்லாததால் தான் தெரியலைன்னு நினைக்கறேன்.. நோ பிராப்ளம்.. 


ஆனந்த விகடன், ஜீ தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்தனர். சமூக வலைத்தளங்கள் இளைஞர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் 26 பேரிடம் பேட்டி எடுத்தார்கள்... ( அந்த விபரம் பாகம் 5 -ல் )


அடுத்து நம்மாளு கோமாளி செல்வா பற்றி சொல்லனும்.. ட்விட்டர் உலகில் செல்வு எஃபக்ட் என்ற புதிய புரட்சியை கொண்டு வந்தவர்.. அதாவது நம்ம எல்லார் மனசுலயும் ஒரு முட்டாள் ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான்.. பிக்குளித்தனமா சில காரிங்கள் நாம செய்வோம்.. ( என்னை மாதிரி ஆளூங்க எப்பவும் அப்படித்தான் ஹி ஹி )

அதை முன்னிலைப்படுத்தி ட்வீட் போடுவார்.. மேலோட்டமா பார்க்கறப்ப மொக்கை போல் தோணும்.. ஆனா அவை உணர்த்தும் கருத்துக்கள் அற்புதம்.. அவர் கோபியில்  வசிக்கிறார், பாரியூரில் காதல் கணக்கு வைத்திருக்கிறார் ( ஃபிகர் பாரியூருங்கோவ் ) திருப்பூரில் பணி.. இவரது லட்சியம் ரேடியோ ஜாக்கி ஆவது.. சமீபத்தில் ஆனந்த விகடன் வலை ஓசையில் இவரது பிளாக் பற்றிய விபரம் 2 பக்கங்கள் வந்தது.. 

 ( எல்லாருதும் விகடன்ல வலை ஓசைல வருது, ஏன் உன்னுது மட்டும் வர்லை? என கேட்பவர்களூக்கு, கேட்க நினைப்பவர்களுக்கு, எள்ளி நகையாடுபவர்களுக்கு.... 1. கண்னியமான, கவுரமான தளங்களுக்கு மட்டும் தான் அங்கே அனுமதி.. 2. நாமளே பாதி போஸ்ட் விகடன்  காபி பேஸ்ட் போஸ்ட் தான் ஹி ஹி )
 கோபியர் கொஞ்சும் செல்வா , கோபியர் போல் மிமிக்ரி செஞ்சு கலாய்க்கும் கோபால்

அப்படிப்பட்ட செல்வா தன் ட்வீட்களை தொகுத்து செல்வு எஃபெக்ட்ஸ் என புத்தகமா வெளியிட்டார்.. கரையான் அவர்கள் தான் அதை , அந்த புக் வெளீயீட்டுக்கான பிராசஸ் ஒர்க் கவனித்தார்.. அந்த புக் வெளீயீட்டுக்கு பெண் கீச்சர் @amas32   செல்வாவுக்கு  தனிப்பரிசு கொடுத்தார்.. அடடா வடை போச்சே என நினைச்சுக்கிட்டேன்.. நான் அவர் கிட்டே தனியா போய் “ எக்ஸ் க்யூஸ் மீ மேடம்.. எனக்கு அதே பரிசு 1000 ரூபா கொடுங்க, நான் அடுத்த வருஷம் புக் போடறேன் அப்டின்னேன்.. அவங்க நீங்க போடுங்க, அப்போ பார்க்கலாம்னு நழுவிட்டார்.. நற நற .. 

 இவர் யாருன்னு அடையாளம் தெரியாதவங்க ட்விடர்  டி பி ல ஹெல்மட் மாதிரி ஒரு கேப் போட்டிருப்பார். மேடம் மேல் மருவத்தூர் ஆதி பரா சக்தி பக்தைன்னு நினைக்கறேன் ( சிவப்புக்கலர் டிரஸ்)

 மீரான் (@karaiyaan) தொகுத்த தமிழ் ட்விட்டர்கள் கையேடு (Tamil Twits தளத்தில் வந்த தகவல்களின் தொகுப்பு) வெளியிடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு காப்பி இலவசமாக வழங்கப்பட்டது. ஃபிரியாக்கொடுத்தா நாங்க தான்.. ஹி ஹி வாங்கிக்கிட்டோம்.. அனைத்து ட்வீடர்களிடமும் இருக்க வேண்டிய உபயோகமான கையேடு.. 

 இந்த இடத்துல கரையான் அவர்களை பற்றி சில வரிகள்.. இவர் ஆனந்த விகடன் மற்றும் மற்ற பத்திரிக்கைகளில் வரும் ட்வீட்ஸ் பக்கங்களூக்காக எதையும் கீச்சுவதில்லை.. மக்களுக்கு உபயோகமான லிங்க்ஸ், படைப்புகள் மட்டுமே பகிர்கிறார்.. சுயநலம் என்றால் என்ன? என்று கேட்பவர்.. மிகச்சிறந்த மனிதர்.. ஏன்னா இந்தக்காலத்துல நல்ல மனுஷங்களை பார்ப்பதே அபூர்வம் தான்.. 
மெகா ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டரில் எக்ஸ்பர்ட் சத்யா  நீங்க ட்வீட் போட்டதுலயே நல்ல ட்வீட்சை எனக்கு மெயில் பண்ணுங்கன்னார்.. அதுல இருந்து தேர்வான சில ட்வீட்ஸ்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் நடந்த சில ஹை லைட்ஸ்1.பிரபல ட்வீட்டர் - எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம், எப்படின்னா டி எல் ல யார் கூடவும் கடலை போடவே மாட்டேன், ஜஸ்ட் ஆப்போசிட் டூ கட்டதுரை-------------------------------

2. ட்வீட்ஸ்களில் கலக்கும் ஐ ஆம் கார்க்கியும், ராஜன் லீக்ஸும் மெகா ட்வீட்டப்பில் அடக்கி வாசித்தது அவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்


---------------------------

3. பிரபல ட்வீட்டர் - எனக்கு கூச்ச சுபாவம், அதனால தான் ரூமை விட்டு வரவே இல்லை # அடடே, உங்க மேரேஜ் அப்போ மண்டபத்துல 1800 பேர் வந்தாங்களே?


----------------------------

4. கேசவன் ஒரு மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் என ராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை, நேற்று நேரில் கேசவனை பார்த்ததும்...... ஹி ஹி


---------------------------

5. பிரபல ட்வீட்டர் - நான் ரூம் நெம்பர் ---- ல் தங்கி இருக்கேன். நான் ஹால்க்கு வர மாட்டேன், ஆனா என்னை பார்க்க விரும்பறவங்க ரூம்க்கு வரலாம் :)----------------------------

6. டாக்டர்னா கோட் போட்டிருக்கனும், அல்லது நர்ஸ் கூட வரனும், ரியாஸ் விதியை மீறிட்டார்


--------------------------

7. மெகா ட்வீட்டப்பில் கலந்து கொண்டவர்களில் கள்ளங்கபடம் அற்ற கறுப்பழகன் அண்னே ஒரு விளம்பரம், சிவப்பழகன் எம் ஜி ஆர் ரவிக்குமார்


----------------------------

8. தான் மட்டும் தனியாவே வந்த மாதிரி காட்டிக்கிட்ட நெல்லை அல்வா பார்ட்டி ஃபிரியா விட்டுட்டே இரு மாமுவின் டேலண்ட்டை கண்டு நான் வியக்கேன்


---------------------------
 கிரி வேணும்னே அப்படி முறைக்கறாரு, ஹோம் மினிஸ்டர் முன்னால பம்முவாரு


9. இவர் இல்லாதப்ப என்னென்னெமோ நடந்தது, அப்போ எல்லாம் மிக்சர் சாப்பிட்டுட்டு, வேடிக்கை பார்த்து கோடை விட்டுட்டு , இப்போ கேள்வி கேட்கறாரு:)


---------------------------

10. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத நமக்கே அவ்லவ் காஸ்ட்லி பேனா பரிசா தந்தார்னா ஈரோடு தங்கதுரை அந்த ரயில் மயில்க்கு என்ன கொடுத்தாரோ>


-----------------------------

11. ட்விட்டர் டைம் லைனில் தல தல என அழைக்கும் மண்டபத்தில் அடக்கி வாசித்தது ஏனோ? :)


-------------------------

12. ட்விட்டப்க்கு வந்த மச்சக்காரன் கடைசி வரை தன் மச்சத்தை யாருக்கும் காட்டவே இல்லை :)


----------------------------

 13. மெகா ட்வீட்டப்க்கு சோனியா வந்தார், மங்கை வரவில்லை,அடுத்த வருட ட்வீட்டப்க்கு மங்கை வருவாராம், சோனியா வர மாட்டாராம் ஹி ஹி-----------------------------

14.  கேபிள் சங்கர்,மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஃபிலாசபி பிரபாகரன்,  போன்ற பிரபல பிளாக்கர்ஸ் வந்தார்கள்...  ஆனா கடைசி வரை இருக்கலைன்னு நினைக்கறேன்..


--------------------------------

15. மன்மதன்  அம்பு கமல் கெட்டப்பில் இருக்கும் ரவி அல்லோலகல்லோலப்படுத்தினார் ( அல்லோல கல்லோலம்னா என்ன>)


----------------------------

16. லா ஓ சி () சந்து, திருட்டுக்குமரன் ( இருட்டுக்குமரியும், திருட்டுக்குமரனும் கடலை போட்டால் என இவர் பற்றி ஒரு போஸ்ட் போட்டேனே ) இவர்கள் மறக்க முடியாதவர்கள்


-------------------------------

17. ராவணன் சார் நிகழ்ச்சிக்காக பெருந்தொகை கொடுத்தது பாராட்டுக்குரியது.. அவருக்கு அனைத்து ட்விட்டர்கள் சார்பாக நன்றிகள்

 கேபிள் சங்கர், அருகே சுரேகா அவர்கள், அண்ணே ஒரு விளம்பரம்---------------------------------

பெண் ட்வீட்டர்கள் பற்றி எதுவுமே சொல்லலையே..  சி பி பிளாக்னா லேடீஸ்  இல்லாமயா? என கேட்பவர்களுக்கு வெயிட் 24 அவர்ஸ்.. பாகம் 3-ல் கல கலப்பான, கலக்கலான கலாய்ப்புகளுடன்.........முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய பார்வை பாகம் 3 -ல்


டிஸ்கி - முதல் பாகம் படிக்கம எஸ் ஆனவர்கள் படிக்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
  மன்மதன் அம்பு கமல் ரவி உடன்8 comments:

மன்மதகுஞ்சு said...

கட்டாயம் வீட்டு ஓனர் பொண்ணு பற்றி தனி பதிவு போடுமாறூ கேட்டுக்கொள்கிறோம்.. இப்பவே எல்லா பாதிவு எழுதி வைச்சிட்டு ஒரு நாளைக்கு ஒவ்வொண்ணா ரிலீஸும் உங்கள் அறிவு கண்டு வியக்கேன் டாடி சார்..அத்துடன் இப்பவாச்சும் உங்கள் கறூப்பு கண்ணாடிக்கு பின்னாடி உள்ள ஸ்டோறீ என்னான்னும் விளக்கவும்.டிவிட்டப் முழு பதிவு ஒரே மூச்சாக திரும்ப படிக்கவேண்டும் போல் உள்ளது எப்போ 1,2,3,4,5,6 ரிலிசாகும் என்றூ ஆர்வத்துடன்

ராஜி said...

எனக்கு அதே பரிசு 1000 ரூபா கொடுங்க, நான் அடுத்த வருஷம் புக் போடறேன் அப்டின்னேன்.. அவங்க நீங்க போடுங்க, அப்போ பார்க்கலாம்னு நழுவிட்டார்..
>>>
ஹா ஹா அடுத்த வருசம் 1000 ரூபா வாங்க வாழ்த்துக்கள்

MARI The Great said...

கலக்கல் ., அடுத்த பாகத்திற்கு வைய்ட்டிங் ..!

கூடல் பாலா said...

மேக் அப் பத்தாதுண்ணே...

Cable சங்கர் said...

viLambaram mukkiyam.. :))

Nathan said...

இங்கே குறிப்பிடப் பட்டதை என் பாக்கியமாக கருதுகிறேன் தல.. :)

கடைசி நேர ஏற்பாடுகள் என அலைந்ததல் யாருடனும் பேச முடியவில்லை தல...
அடுத்த ட்வீட்டப்பில் எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாமல் எல்லோரையும் கலாய்ப்பதை மட்டுமே செய்வேன் என உறுதியளிக்கிறேன் தல..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, கொஞ்சம் இளமையா தெரியரிங்க...... லேடிஸ் கூட்டம் அதிகமோ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சந்திப்பு ரொம்பவே சுவாரஸ்யமா இருந்திருக்கும் போல...

பாகங்களை தொடருங்க...