Sunday, May 27, 2012

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு!''- தன் சினிமா அறிமுகம் குறித்து கண்கள் மின்னப் பேசுகிறார் விக்ரம் பிரபு.


 அன்னை இல்லத்தின் மூன்றாவது தலைமுறையும் வெள்ளித் திரை தொடுகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன், 'கும்கி’யின் கதை நாயகன்... விக்ரம் பிரபு!

 ''லிங்குசாமி சார்... எங்க குடும்பமே மதிக்கும் இயல்பான மனிதர். 'இனி சினிமா தான்’னு முடிவு பண்ணினதும் அவரைத் தான் சந்திச்சேன். 'என்ன மாதிரி படம் பண்ணலாம்?’னு ஆரம்பிச்சு, 'இந்த மாதிரி இருக்கணும், இப்படிலாம் இருக்கக் கூடாது’னு நிறைய விஷயங்களைப் புரியவெச்சார். பிரபு சாலமன் சார் படத்தில் கமிட் ஆனதும், 'நம்ம புரொடக்ஷன்லயே படம் பண்றீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டார். எனக்குக் கிடைச்ச நல்ல அண்ணன் அவர்!''

''காடு, யானைனு முதல் படத்துலயே நிறைய சவால் போல..?'

'
''நிச்சயமா! ஒரு யானைப் பாகனாகவே வாழ வேண்டிய கேரக்டர். 'நம்ம ஹீரோ மாணிக்கத்தை முதல்ல ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க’னு பிரபு சாலமன் சார் சொல்லிட்டார். சும்மா ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புனா, அக்செப்ட் பண்ற ஆளா மாணிக்கம்? மாணிக்கம் என்ற யானையை ஃப்ரெண்ட் பிடிக்க கேரளா போனேன். மாணிக்கம் மேல் எப்படி ஏறுவது, இறங்குவது, அவர் நடக்கும்போது எப்படி ஃபேலன்ஸ் பண்ணி உட்கார்றதுனு பதினஞ்சு நாள் பயிற்சி. மாணிக்கத்தோட பாகன் அதை மலை யாளத்தில் பழக்கியிருந்தார்.


 அதனால அதுக்குத் தெரிஞ்ச மலையாள வார்த்தை களை நானும் கத்துக்கிட்டேன். யானைகள் ரொம்ப ஸ்மார்ட். நம்ம கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் நாம சொல்ற தைக் கேட்கும். 'இவன் பயப்படுறான்’னு அதுக்குத் தெரிஞ்சுட்டா... அவ்வளவுதான். அதனால உள்ளுக்குள்ள உதறுனாலும் வெளிய காமிச்சிக்காம கொஞ்ச நாள்லயே மாணிக்கத்தை நல்ல ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன்!''

''நடிக்க வர்றதுக்கு முன்னாடி ரஜினி, கமலைச் சந்திச்சு வாழ்த்து வாங்கினீங்களே... என்ன சொன்னாங்க?''


''கமல் சார் எனக்கு என்னென்ன தெரியும்னு முழுசாக் கேட்டுட்டு, இன்னும் என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு டீடெய் லாப் பேசினார். 'எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும்... ஒரு படத்தை எப்படிப் பார்க்க ணும்னு அவர் சொல்லிக்கொடுத்த எல்லாமே சினிமா பாடங்கள்.


 'முதல் படத்திலேயே ஹீரோயிசம், பெர்ஃபார் மன்ஸுனு மாட்டிக்காம எல்லாத்தையும் கலந்து பண்ணுங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நம்மை அவங்க எப்படி ஏத்துகிறாங்கங்கிறதைப் பொறுத்து அப்புறம் முடிவு பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னார். ரெண்டு பேருமே அவங்கவங்க சக்சஸ் ஃபார்முலாவையே எனக்கு சொல்லிக் கொடுத்ததாத் தோணுச்சு!''

''சினிமா குடும்பப் பின்னணியோட நடிக்க வர்றதும், முதல் வெற்றியும் ஈஸிதான். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறது வாழ்நாள் போராட்டமாச்சே...


''
''உண்மைதான்! ஆனா, அதுக்கு நான் தயாரா இருக்கேன். கலிஃபோர்னியா சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ்ல ஆரம்பிச்சு, கார்பென்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்புனு சினிமா தொடர்பா 'ஏ டு இசட்’ கத்துக்கிட்டுதான் வந்திருக்கேன்.


'சர்வம்’ படத்தில் விஷ்ணுவர்தன் சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன்.என்னை சினிமாவுக்காக எப்படியும் வளைக்கலாம்கிற அளவுக்கு மாத்திக்கிட்டேன். தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். நேர்மையா உழைச்சா எந்த விஷயமும் சாத்தியம்னு நம்புறவன் நான்!''

3 comments:

rajamelaiyur said...

முதல் பிலிம் ..

rajamelaiyur said...

மைனா இயக்குனர் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது ..

'பரிவை' சே.குமார் said...

வெற்றி பெறட்டும்...
வாழ்த்துக்கள்.