Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!




46 comments:

Narasimman S P said...

Super Boss,

I really welcome your comments. You missed speaking about the guest Selvam Puviyarasu. How can he comment on some one's ability in a public forum. மனுஷன மனுஷனா மதிக்க தெரியாதவன் எழுத்தழனா இல்ல மனுஷனாவெ இருக்க முடியாதே.

Narasimman S P said...

Super Boss

Mari Raja said...

Nice Article

Saravanakumar Karunanithi said...

I agree, Power Star fans are really being increased

Bhuvana said...

எனக்கு கோபிநாத்தின் மேல் தனி ஒரு மரியாதை இருந்ததுண்டு. ஆனால் 27 மே நீயா நானாவிற்கு பிறகு அந்த மரியாதை குறைந்து ஒரு வித வெறுப்பு வந்து விட்டது என்றே கூறலாம். நடிகர் சீனிவாசனை வரவழைத்தது போலி கெளரவம் பற்றி அவருடைய கருத்தை கேட்கவே ஒழிய அவரை அழைத்து வந்து அசிங்கபடுத்த அல்ல. போலி கெளரவம் பற்றி அவ்வளவு சாடுபவர் எதற்க்காக ஒரு ஒரு நிகழ்ச்சிக்கும் கோட் அணிந்து செல்கிறார்? இதுவும் ஒரு வகையான கௌரவ தேடல்தானே.
அண்ணன் செந்தில்சிபியின் வாதம் உண்மையிலேயே செருப்படிதான்.

thangs said...

கோபிநாத்தின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.எவ்வளவு திறமை இருந்தாலும் இதுபோன்ற செயல்கள் இவர்போன்றவர்களை சீக்கிரம் காணாமல் போக செய்துவிடும்.அண்ணாமலையில் ரஜினி மேல போறதும் சரத்பாபு கீழ வர்றதும் ...சீன் தான் நியாபகத்திற்கு வருது.அந்த நாள் ..."பவர்ஸ்டார்" மேல போக ஆரம்பிச்சாச்சு.

Narasimman S P said...

Read this as well http://www.cineikons.com/power-star-video/

Unknown said...

எங்க சிபி சித்தப்புவை பார்த்து எப்படி இப்படி ஒரு பதிவு எழுதலாம் என்று கோபி கேட்க முடியுமா.....? கேட்டால் நிலமை என்ன ஆகும்?

Unknown said...

Superb.... Keep it up ...

நிரூபன் said...

வணக்கம் குருஜி,
இது நீங்களா எழுதிய பதிவு,
ஆச்சரியமாக இருக்கிறது. நீண்ட நாட்களின் பின்னர் இந்தப் பக்கம் வந்தேன். தர்க்க ரீதியான காரணங்களுடன் கோபிநாத்தின் முகத்தில் அறைவது போல ஓர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

கோபிநாத்தின் இச் செயல் கண்டனத்திற்குரியது.

Astrologer sathishkumar Erode said...

ரிப்போர்ட்டரில் இந்த வாரம் பவர்ஸ்டாரின் இன்னொரு முகத்தை காட்டியிருக்காங்க..பண மோசடி...அதைதான் கோபி வெளிப்படுத்த முயற்சி செஞ்சார்ன்னு சொல்றாங்க..கவனிங்க

Santhosh said...

தல நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் 100% உண்மை. ஒன்றும் இல்லாத ஒரு விசயத்தை ஊதி பெரிது படுத்தி நல்ல காசை பார்க்க இவர்கள் செய்யும் முட்டாள்தனமான வேலையாள் சமூகத்திலும், குடும்பத்திலும் பெரிய கொலப்பத்தை ஏற்படுத்தப்படுத்தபடுகின்றன... அனால் ஒன்று இதன் முலம் நான் அண்ணன் power star ரசிகர் ஆகிறேன்.. thanks vijay tv....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கோபிநாத்தின் கேலி கிண்டல் பேச்சுக்களை இன்முகத்தோடு எதிர்கொண்டு பண்போடு பதிலளித்த அண்ணன் பவர்ஸ்டார் அவர்களை வாழ்த்துகிறேன்!

Unknown said...

summa nach!!!!!oru nagal eduththu giramaththil irunthu vanthuvittu nagaraththileye pirantha komaan maathiri nadanthukollum avarukku puriyattum!!!

sethu said...

வாழைப்பழத்தில் ஊசி

Sudhesamithran said...

I am not seeing any difference between this and what Vijay (airforce thalapathi), Pranab mukherjee, mannumohan or chidhambaram talks... manmohan talked against corruption last week..is power star talking worse than that? Naanga kalaignar sevai seirennu pesuropave sirikaama kekravanunga..

Venu, perundhurai solraa madhiri oru Rajiniyayo, Azhagiryayo koopitu kekka oru aambalaiyaa irukanum... summa mic kidaichu oruthan porumaiyaa irundhaa enna venaalum pesida koodadhu

Sudhesamithran said...

"Super Boss,

I really welcome your comments. You missed speaking about the guest Selvam Puviyarasu. How can he comment on some one's ability in a public forum. மனுஷன மனுஷனா மதிக்க தெரியாதவன் எழுத்தழனா இல்ல மனுஷனாவெ இருக்க முடியாதே." - I agree with Narashimhan, andha pulliraja sorru puviyarasu sudhandhira poraata thiyagiyaa? illa 10 ground schoolku donate pannaanaa?

Francis Rajesh said...

அண்ணா ஒரு விஷயதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் தயவுசெய்து விஜய் டிவி புரட்சி செய்தது என்றெல்லாம் சொல்லாதிங்க அவிங்களும் காப்பி தான் அடிச்சாங்க ஸ்டார் ப்ளஸ் ல போட்டு ஹிட் ஆன நிகழ்ச்சிகளா பார்த்து இவங்க அடுச்சாணுங்க அத நம்ம ஆளுங்க காப்பி அடுச்சாணுங்க அவ்ளொதான்

Unknown said...

பவர்ஸ்டார் ஜெண்டில்மேன் ஆகிட்டார்:)

Unknown said...

All time power star rockzzzzzzzz

”தளிர் சுரேஷ்” said...

இந்த நிகழ்ச்சியை நேரடியாக நான் பார்க்கவில்லை! நண்பர் ஒருவர் செல்லில் பதிவு செய்து வந்து காண்பித்தார். ஒரு ஐந்து நிமிட வீடியோதான் அது! ஆம்! கோபிநாத் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டார்! கோபிநாத்தின் ரசிகன் என்றாலும் உங்களின் வாதங்கள் சரியாகத்தான் உள்ளன. இனியாவது தன்னை மாற்றிக்கொள்ளட்டும் கோபிநாத்!

Thangasivam said...

அருமையான பதிவு...

Thangasivam said...

அருமையான பதிவு .....

ராஜ் said...

அருமையான பதிவு...தன் குழந்தை சிரிப்பால் அந்த கோபிநாத் குரங்கிற்கு நல்ல பதிலை தந்து விட்டார் பவர்.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.ஒருவர் எனக்குச் சொன்னார்.பவர் ஸ்டாரை கோபிநாத் வாருகிறார் என்று.எப்படியோ பலரின் கருத்துகளையும் கூட பகிர்ந்திருக்கிறீர்கள்!உங்க நேர்மை புடிச்சிருக்கு!

Unknown said...

என்னுடைய கீச்சுகளில் இந்த விடயத்தை பற்றி சொல்லியிருக்கிறேன் ..

வெறும் கைதட்டலுக்காக,மட்டம் தட்டி பேசும் கோபி போன்றோர்கள் ,நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் ..

குறைந்தபட்ச நாகரிகத்தை கூட கடைபிடிக்காமல் ,சகட்டுமேனிக்கு வன்மமான கேள்விகளை கேட்பதற்கு கோட் போன்ற நாகரிக உடை எதற்கு ?

Unknown said...

கோபிநாத் அவர் பிற மத்தியில் புத்திசாலித்தனம் நிரூபிக்க முயற்சி செய்க ஆனால் அவர் மீண்டும் தனது முகத்தின் மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது

vivek kayamozhi said...

இது ஒரு வகை மன நோய். சுமாராக இருப்பவன் சீன் போடுவதை தாங்க முடியாத பொ--- எரிச்சல்,கோபி தம்பிக்கும் அதுதான் ... அவர் பேசுவது ,அலுங்காமல் திரும்புவது, அளவாக சிரிப்பது என ஒரு ரோபோ மாதிரிதான் நிகழ்ச்சி நடத்துகிறார்,அதில் புண்ணாக்கு மாதிரி டாபிக் வேறு .
கர்மம் எப்படித்தான் பார்த்து கூசாமல் அவர் ரசிகனாக இருந்தேன் என்று கூறுகிறீர்களோ...

இவர்கள் கேட்டதை டாக்டர் விசயிடமோ,அல்லது டைட்"டானிக் " கேப்ட்டனிடமோ, அஞ்சாநெஞ்சனின் தளபதி ஜே.கே.ரித்தீசிடமோ கேட்டிருந்தால் பாராட்டலாம். பாவம் பவர் ஸ்டார்...நிஜமாகவே நல்ல மனிதர் போலும்....

AsHoK NaNdHa said...

Very good post! Appreciated!!

MARI The Great said...

இவ்வளவு அவமானத்திற்கு பிறகும் சிரித்துக்கொண்டே கையசைத்து விடைபெறுகிறார் பாருங்கள் .., சத்தியமாக உங்களாலும் என்னாலும் முடியாத ஒன்று .. !

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

உண்மையில் பவர் ஸ்டார் மீது மிகுந்த மரியாதை வருகின்றது எல்லாக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவரது பண்பு சிறப்பு கோபிநாத்தை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறார் பவர்ஸ்டார்

Mr. Lonely said...

இன்றுடன் நானும் ஒரு பவர் ஸ்டார் ரசிகன் ...!

Senthil kumar said...

நீங்கள் யாரை எதிரி என்று நினைகிறீங்க? என்று கோபி கேட்டதும் சற்றும் யோசிக்காமல் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அசிங்க படுத்தும் நீங்க தான் என்று சீனிவாசன் சொல்லும் போது, சபை நாகரீகம் உள்ளவர், அதற்க்கு மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும் அதை செய்ய தவறிவிட்டார் கோபி.

சு.செந்தில் குமரன் said...

நியாயமா கோபிநாத் ?
*********************************

நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் (பவர் ஸ்டார் ) சீனிவாசனிடம் கோபி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள் .

இந்த நிலையில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது .

பத்து வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் 'ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகள்' என்ற பெயரில் டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி நானா வாரவாரம் எழுதுவேன் .

அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் ஒரு கபடி வீரரும் சின்னத்திரை நபர் பாஸ்கியும் எதிர் எதிர் நிலையில் வாதம் செய்தார்கள் .கபடி கிரிக்கெட் இரண்டில் எந்த விளையாட்டு உசத்தி என்பதுதான் டாபிக் .

நிகழ்ச்சி நடத்துனராக இதே கோபிநாத் ,

கபடி வீரர் மிகவும் கண்ணியமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்க, பாஸ்கியோ கிரிக்கெட்டுக்கு ஆதரவாகப் பேசுவதை விட்டு விட்டு கபடியையும் கருப்பாக உள்ள அந்த கபடி வீரரையும் கிண்டல் செய்தே பேசிக் கொண்டிருந்தார் . கோபிநாத் அதைக் கண்டிக்கவே இல்லை .

நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அதீத கோபம் . மறுவாரம் தேவி வார இதழ் சின்னத்திரைக் குறிப்புகள் நிகழ்ச்சியில் என் நியாயமான கோபத்தை கட்டுரையாக வடித்தேன் . இதில் பாஸ்கியைக் கண்டிப்பதை விட , இதை அனுமதித்த கோபிநாத் தான் பெரிய குற்றவாளி என்று எழுதினேன் . காரணம் , நியாயம் இல்லை என்றாலும் பாஸ்கி ஒரு தரப்புக்கு பேசுகிறார் . கோபிநாத்தோ நிகழ்ச்சியை நடத்துபவர் . எப்படி ஒரு பத்திரிக்கையில் நிருபர் எழுதும் கருத்துக்களுக்கு ஆசிரியரே பொறுப்பாக ஆகிறாரோ , அது போல பாஸ்கி பேசிய விசயங்களுக்கு கோபியே பொறுப்பு என்று எழுதினேன் .

பிறகு ஒருமுறை முதன் முதலாக கோபியை சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது நான் யாரென்று தெரிந்ததும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக கோபி என்னிடம் மன்னிப்பு தெரிவிக்கும் விதத்தில் பேசினார் .

ஒரு நிகழ்ச்சி நடத்துனராக என்னை செழுமைப் படுத்தியதில் ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டதாக எல்லாம் எனக்கு செய்திகள் வந்தன

அது வளரும் கோபிநாத் .

ஆனால் இன்று இருப்பவர் வளர்ந்த கோபிநாத் .

வேறு என்ன சொல்ல?

Jayadev Das said...

சம்பந்தப் பட்ட நடிகரே தான் அவமானப் படுத்தப் பட்டதாகச் சொல்லாத போது நீர் எதற்காக ஐயா இப்படி குதிக்க வேண்டும்? கோபிநாத் கேட்டது அட்சேபகரமாக இருந்திருந்தால் அந்த நிகழ்ச்சியிலேயே அந்த நடிகர் சுட்டி காட்டியிருக்கலாமே? கோபிநாத் யார் யாரைப் பத்தியெல்லாம் கேள்வி கேட்க முடியுமா என்று நீர் கேட்டிருக்கும் நபர்களை எதிர்த்து நீரே பதிவும் போட முடியாதே, அப்புறம் எதற்கு இந்த வீண் சவடால்? அவர் தன்னியடிப்பார், தம் அடிப்பார் என்றெலாம் தெரிந்த பின்னர் அந்த கல்லூரி நிர்வாகம் எதற்காக அத்தனையும் நிறைவேற்றி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லா வேண்டும்? காந்தி மாதிரி எவனாச்சும் வாழ்கிறானா என்று பார்த்து அழைத்துச் செல்லலாமே? அண்ணன் கோபிநாத்துக்கு அறிவுரை கூறும் சி.பி. அவர்களே, உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன், உலகத்திலேயே ரொம்ப ஈசியான விஷயம் மத்தவங்களுக்கு அறிவுரை சொல்வது, ரொம்ப கடினமான விஷயம் அதே அறிவுரையை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுவது.

samraj180 said...

nachu nu irruku thalaiva

சகலகலா ஜீன்ஸ் said...

Paavam gobinaath.. but he deserves it

சீனு said...

@Narasimman S P Well said.

படிச்சவனுங்க எல்லாம் பெரிய்ய புடுங்கிங்க மாதிரி தான் பேசுறானுங்க...

saravanan said...

Gopinath is worst, Power Star is BEST

zx said...

தலைவா யூ ஆர் கிரேட்

vimalanperali said...

நிறைய்ய்ய்ய,,,,,,, சொல்லி இருக்கிறீர்களே/

afzal rahman said...

nan salem power star rasigar manra thalaivan.puratchi vedikum.by all india power star fans.

afzal rahman said...

ivarukku arivurai solvatharku mun nengal sariyaga irkerirgala.pothu idathil medai nagarigam yenru onru irukirathu.athai muthalil purinthu kollungall.

Unknown said...

Power star ippotu super staraga mari vittar......gobinath ippotu dummy piece aga mari vittar

GILBERT RAJA said...

@நிரூபன்

சம் said...

foolish comment because you and gobinath are foolish