Thursday, May 24, 2012

BAY RONG - ( BLACK DRAGON) - ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.asiatorrents.com/imgz/images/bayrongcla.jpg

ஏழாம் அறிவு படத்துல  ஹிப்னாடிச  வில்லனா வந்தாரே டோங்க்லீ  அவர் தான் ஹீரோ கம் திரைக்கதை ஆசிரியர்  பேரு johnny nguyen. அவர் நடிச்ச இந்தப்படத்தை  இந்தியாவுக்கு வர்றப்போ பிளாக் டிராகன் அப்டினு டைட்டில் கொடுத்து ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. ஆனா ஆல்ரெடி 2009 ல அங்கே ரிலீஸ் ஆன படம் 


ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்.. அதாவது ஹீரோயின்  ஒரு கடத்தல் கேங்க்ல எப்படியோ மாட்டிக்கிட்டா.. அவ ஒரு டிக்கெட்.. அவளுக்கு பிறந்த ஒரு குழந்தையை வில்லன் ஒளிச்சு வெச்சு மிரட்டி அவனுக்குத்தேவையான கடத்தல் வேலைகளை வாங்கிக்கறான்.. 

ஒரு லேப்டாப்.. அதுல நாட்டோட  ராணுவ ரகசியம் எல்லாம் அடங்கி இருக்கு.. அந்த லேப்டாப்பை அபேஸ் பண்ணிட்டு வர்ற பிராகஜ்ட் தர்றான்.. அதை சக்சஸா முடிச்சுட்டா  குழந்தை அவளுக்கு அப்டினு டீல் 

ஹீரோயின் இந்த  லேப்டாப் வேலைக்கு 4 பேர் கொண்ட குழுவை ரெடி பண்றா. அதுல ஒரு ஆள் தான் நம்ம ஆள்.. பல அடிதடி ஆக்‌ஷன்க்கு நடுவே , அல்லது ஓரத்துல அந்த லேப்டாப்பை கைப்பற்றிடறாங்க.. 



http://files.myopera.com/doanhientt88/albums/850261/BayRong4.jpg

 ஆனா ஒரு ட்விஸ்ட்.. போக்கிரி படத்தை பார்த்து உல்டா பண்ணிட்டாங்க போல ஹி ஹி ஹீரோ ஒரு போலீஸ்.. இந்த சமூக விரோத கும்பலை பிடிக்கத்தான் இப்படி வேஷம் போட்டிருக்கான். ஹூம் எத்தனை படத்துல இந்த சஸ்பென்சை பார்த்திருப்போம் .. 

 க்ளைமாக்ஸ்ல வில்லனை முடிச்சுக்கட்டிட்டு, ஹீரோயினை கண்ணாலம் கட்டிக்கிட்டு ஹீரோ சுபம் + சுகம் ஹி ஹி


ஹீரோயின் நடிப்பு செம ( நாம எந்தக்காலத்துலயாவது பெண்களை குறை சொல்லி இருக்கோமா? )ஆள் பார்வை, பாடி லேங்குவேஜ், ஆக்‌ஷன் ஸ்பீடு எல்லாம் அபாரம்.. ஹீரோ கிட்டே தன் சொந்தக்கதை சோகக்கதை சொல்றப்போ சோகம், தன் அடியாள்ங்க கிட்டே முதலாளி அம்மா பாவனை, வில்லன் கிட்டே பம்ம வேண்டிய சூழல், குழந்தைக்கு ஏங்கும் அம்மா என நவ ரச நாயகி தான் போங்க .. எல்லா பிளஸ்க்கும் மேல ஹீரோ கூட ஒரு கில்மா சீன் இருக்கு ஹி ஹி  ஆனா கண்ணியமான காதல் காட்சி தான்


ஹீரோ வந்ததும் தியேட்டர்ல விசில் பறக்குது. ஆனா நம்மாளுங்க என்ன எதிர்பார்க்கறாங்கன்னா  அவர் ஏழாம் அறிவுல வந்த மாதிரியே  ஹிப்னாடிசம் மாதிரி அசால்ட்டா வில்லனை அடிக்கனும்னு பார்க்கறாங்க.. அவர் என்னடான்னா கமல் மாதிரி  நேச்சுரல் நடிப்பு பிளஸ் அடி வாங்கு வாங்குன்னு வாங்கறார்,, க்ளைமாக்ஸ் ஃபைட் செம .. எனக்கென்னமோ அவர் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு தோணுது.. 


அநேகமா ஹீரோயின் ஃபைனான்சியரோட ஃபியான்சியா இருக்கும் , அதனால ஃபிகரை முன்னிறுத்தி அண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டார் போல .. 

 வில்லன் குரூப் 2 லேப்டாப் வெச்சிருக்காங்க. அதுல எது ஒரிஜினல் லேப்டாப்னு கண்டு பிடிக்க அங்கே கலவரம் நடப்பது போல் சீன் கிரியேட் பண்ண  வில்லன் டக்னு ஒரிஜினலை தன் பக்கம் இறுக்கிக்க அதுதான் ஒரிஜினல் என்பதை அறியும் காட்சியில் இயக்குநர் அப்ளாஸ் அள்ளறார்

 http://files.myopera.com/doanhientt88/albums/850261/thumbs/BayRong10.jpg_thumb.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  முடிவு எடுக்கறதுலயும் சரி, ஆளை முடிக்கறதுலயும் சரி கிங்க் மேக்கரா இருக்கனும்.. 


2. நமக்கு வெற்றி கிடைக்கும்கறதுக்காக யாரை வேணாலும் இழக்கலாம்.. 



3. நாய் வேஷம் போட்டா குரைக்கற வேலையை மட்டும் தான் செய்யனும்
வாலை ஆட்டக்கூடாது.. 


 சும்மா சீனைப்போடாத.. கிளம்பு காத்து வரட்டும்



4.  கையை குடு கோர்த்துட்டே ஜோடியா உள்ளே போலாம்// 



 ம் என்ன தைரியம்?

 உன் அழகுல மயங்கி இதை செய்யலை.. இன்னைக்கு நாம கப்பிள்சா ஆக்ட் பண்றோம்

 அதுக்காக மேல கை வைப்பீங்களா?  ( ஹி ஹி  ஸ்டெப் பை ஸ்டெப்பாத்தானே வர முடியும் மேடம் ? )


5.டேய்.. சைலண்ட் மோடுல  படுடா.. ( அவ்வ்வ்வ்)


6. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு  எனக்குத்தெரியும்.. என்னை சுட வைக்காத..


7. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது..



http://www.chud.com/wp-content/uploads/2011/08/Clash6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல 2 ஃபிகருங்க போரிங்க் பைப் லேடீஸ் மாதிரி பயங்கரமா அடிச்சுக்குதுங்க/.. அதுல ஒரு லேடி இன்னொரு லேடியை கன்ல ஷூட் பண்ணிடுது.. அந்த பெண் கைலயும் ஆயுதம் இருக்கு.. பொதுவா ஜாக்கிரதையாதான் எல்லாரும் இருப்பாங்க.. ஆனா அது பெப்பெரப்பேன்னு நிக்குது.. சாகற சூழல்ல எல்லாருக்கும் பயங்கர ஆவேஷம் வரும்.. பல பேரை கொலை செய்த அந்த ஃபிகருக்கு அது தெரியாதா? தேமேன்னு நின்னு அதும் பொட்டுன்னு போயிடுது



2. ஹீரோயின் முகத்தை வில்லன் பார்த்துடறான்.. எந்த விதமான மாறுவேஷமோ அல்லது அட்லீஸ்ட் கூந்தல் அலங்காரமாற்றமோ செய்யாம ஹீரோயின் தானா வலியனா போய் பார்ட்டில டேன்ஸ் ஆடி வில்லன்கிட்டே மாட்டிக்கறா.. எப்படி?


3. ஹீரோ போலீஸ் தான் என்பதை வில்லன் கண்டு பிடிக்கற சீன் படு கேவலமா இருக்கு.. அதாவது வில்லன் ப்ளேஸ்ல போலீஸ் ஒருத்தர் வேவு பார்த்துட்டு நிக்கறார்.. ஹீரோ பக்கத்துல வில்லனை வெச்சுக்கிட்டே நீ கிளம்பு என்பது போல் தலையை ஆட்டுறார்.. ஹய்யோ அய்யோ.. இந்த சீனை பார்த்தா குருதிப்புனல் க்ளைமாக்ஸ் சபாஷ் போட வைக்குது.. 


4. ஹீரோயின் வில்லி கிடையாது.. சந்தர்ப்ப வசத்தால வில்லன் கிட்டே பணயக்கைதியா ஆகிட்டா.. ஹீரோ ஒரு போலீஸ்னு தெரிஞ்சதும் அவ பெருமைதானே படனும். இல்லைன்னா பயப்படனும்.. அதை விட்டுட்டு அவனை கொலை பண்றதா மிரட்டறது எல்லாம் ஓவர்.. என் பேபி வில்லன் கிட்டே இருக்குன்னு கடைசி வரை அவ சொல்லவே இல்லை


5. இந்த கதைக்கு ஹீரோயின் ஒரு டிக்கெட் என்ற விஷயம் தேவையே இல்லை..  ஏன்னா ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சில ஒரு கிளு கிளுப்பே வர்லை. எப்படியும் அது ஒரு டிக்கெட் தானே எப்படியும் செட் ஆகிடும்னு ஒரு அசால்ட் ஆடியன்ஸ்க்கு வந்துடுது ( கவனிக்கவும், ஆடியன்ஸ்க்கு தான், எனக்கு  இல்லை )


6. க்ளைமாக்ஸ்ல ஹீரோவை வில்லன் சுட்டுடறான்.  ஹீரோ கீழே விழறார்.. வில்லன் , ஆடியன்ஸ், ஹீரோயின் எல்லாரும் ஹீரோ செத்துட்டதா நினைக்கறாங்க.. 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயினை வில்லன் கொலை பண்றப்போ டக்னு ஹீரோ குறுக்கே வந்து காப்பாத்தற சீன் ஓக்கே .. அவ்லவ் டேஞ்சரான சூழல்ல டக்னு வில்லனை பொட்டுத்தள்ளாம அவன் கிட்டே ஹீரோ செய்முறை விளக்கம் காட்டிட்டு நிக்கறாரு.. அதாவது மார்புக்கவசம் ( புல்லட் புரூஃப்) போட்டிருந்தேன்னு அதை காட்டிட்டு நிக்குது பக்கி .. ஹய்யோ அய்யோ


ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்


http://www.giaoduc.edu.vn/upload/image/2009/05/29/vhnt/bay-rong-2.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள் பார்க்கலாம்.. 18 + மட்டும் , ஏன்னா படத்துல ஒரு சீன் இருக்கு , படம் சரியா 87 நிமிஷம் ஓடுது.. சீன் வர்ற நேரம் படம் போட்டு 37 வது நிமிடம்  ஹி ஹி ( சீன் வர்றப்போ நான் வெளில போய்ட்டேன், 2 நிமிஷம் கழிச்சுத்தான் உள்ளே வந்தேன், # நீதி - மீ எ குட் பாய் )



http://pixhost.me/avaxhome/a1/ac/0019aca1_medium.png

3 comments:

Thalapolvaruma said...

அண்ணா நல்ல விமர்சனம் கடைசியாய் வெளிய போய்டேன் என்று சொன்னதை நம்பிட்டேன் நானும் அப்படிதான்....

JR Benedict II said...

சூப்பர் அண்ணா.. அருமையான விமர்சனம்..

நான் கடந்த வாரம் தான் பதிவுலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்.. உங்கள் ப்ளாக் அருமை.. மேலும் உங்கள் விமர்சனங்கள், ஜோக்ஸ் எல்லாம்

அருமை.. மனதார வாழ்த்துக்கள்..

rajamelaiyur said...

ஓகே அப்ப 35 நிமிடம் கழித்து தியடர் போன போதும்ன்னு சொல்றிங்க ...