Tuesday, May 22, 2012

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4

 

சமூக வலைத்தளங்களுக்கு வர்றவங்க பல வகை.. டைம் பாஸ்க்காக வர்றவங்க,வீட்டில், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மனத்தாங்கல்கள், நெருக்கடிகளை மறக்க வருபவர்கள்,முகம் தெரியாத நட்பை விரும்புவர்கள்,மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க இதை ஒரு கலனாக ,களனாக கொள்பவர்கள் என சொல்லிக்கிட்டே போகலாம்.. 


நான் முதன்முதலா பிளாக் உலகத்துக்கு வந்தது 2010 ஜூலை 17...அப்போ ட்விட்டர் பற்றி எதுவும் தெரியாது.. பிளாக்கிற்கான லிங்க்கை ஷேர் பண்றதுக்கு மட்டுமே அதை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..ஆனந்த விகடன் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்களின் ட்வீட்ஸ் தான் என்னை ட்விட்டர் உலகத்துக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஆல் தோட்ட பூபதி எனும் கரூர் ஜெகனின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. 

2011 ஜனவரி மாசம் ட்விட்டர் உலகத்துல நான் எண்ட்டர் ஆனேன்.. கிட்டத்தட்ட 18 வருஷங்கள் நான் பத்திரிக்கைத்துறையில் பணி ஆறியதால் ஐ மீன் ஜோக்ஸ் எழுதி வந்ததால் அந்த பழக்கம் அப்படியே வந்தது.. ஜோக் ஃபார்மேட் எனக்கு நல்லா செட் ஆச்சு.. 2 பேர் பேசிக்கற மாதிரி மேட்டர் தான் எனக்கு வந்தது,.,. 

 ஆனா ட்விட்டர் ரொம்ப அட்வான்ஸ்.. நறுக் சுருக் என ஹைக்கூ வடிவத்தில் 140 எழுத்துக்களில் படிப்பவரை கவர வேண்டும் என்ற சவால் என்னை பார்த்து எள்ளி நகையாடியது.. ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட்டேன்.. ( படிக்கறவங்க அதை விட சிரமப்பட்டாங்க)


 இன்னொரு மேட்டர்.. எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் சுத்தமா இல்லை.. மென்ஷன் பார்க்கத்தெரியாது.. டி எம் அனுப்ப, பார்க்க தெரியாது.. மெயில் ஐ டிக்கு வர்ற டி எம் தான் பார்ப்பேன். ரிப்ளை பண்ணத்தெரியாது.. அதனால ஆரம்பத்துல சிலர் “ இவன் தலைக்கனம் பிடிச்சவனா இருக்கான்.. நோ ரிப்ளை டூ அதர்ஸ்”னு ஒரு டாக் இருந்துச்சு.. 


2011 ஏப்ரல்ல இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்கிட்டேன்.. ராஜன் என் ட்விட் ஒண்ணை RT  பண்ணுனாரு.. கலைஞரை நக்கல் அடிக்கும் ட்வீட் அது.. ஆனந்த விகடன்ல வந்த முத ட்வீட் அதுதான்.. 



 அதுக்குப்பிறகு ட்வீட்ஸ்ல  ஒரு ஃபார்முலா வெச்சுக்கிட்டேன். அதாவது கரண்ட் நியூஸ் ஏதாவது 2 லைன்ல எடுத்து போட்டு அதை  பற்றி ஒரு கமெண்ட் அடிப்பது... காதல் கவிதை அல்லது ஏதாவது ஒரு தத்ஸ் , மூணாவதா நம்ம மனசுல என்ன நினைக்கறோமோ அதை அப்படியே எந்த விதமான அலங்காரங்களோ இல்லாம  சொல்றது.. 

 எனக்கு என்ன பிரச்சனைன்னா எங்க வீட்ல நெட் கிடையாது.. ஆஃபீஸ் டைம்ல டைப் அடிச்சாத்தான்.. சமீபத்துலதான் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குனேன்.. அதுவரை பேசிக்  மாடல் சாதா ஃபோன் தான்.. 


 ட்விட்டர் உலகை கூர்மையா கவனிச்சதுல எனக்குத்தோன்றியதை அப்படியே உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கறேன்.. நல்ல படைப்பு எப்போ வந்தாலும், அதை யார் படைச்சு இருந்தாலும் உடனே அதை மற்றவங்களுக்கு ஷேர் பண்ணிக்குங்க. அதாவது  RT பண்ணுங்க.. நம்மாளுங்க பண்ற 2 மிஸ்டேக்ஸ் என்னான்னா ஐ ஆம் கார்க்கி, பாரத் பாரதி ,ஆல் தோட்ட பூபதி இந்த மாதிரி பிரபல ட்வீட்டர்கள் RT பண்ணுன பிறகு  அவங்களும் RT பண்ணறாங்க.. 

 அது தேவையே இல்லை.. நமக்குப்பிடிச்சிருந்தா உடனே அதை ஆர் டி பண்ணனும்.. ரெண்டாவது நம்ம டைம்லைன்ல ஏதாவது படைப்புகள்  RT ஆனா நம்ம ஆளுங்க அதை படிச்சுட்டு அப்படியே விட்றாங்க. ஆர் டி யின் முக்கிய நோக்கமே புதிய படைப்பாளியை அறிமுகம் செய்வதுதான்.. நல்ல படைப்பு நம்ம டைம்லைன்ல வந்தா உடனே நாம செய்ய வேண்டியது அந்த படைப்பாளியை  ஃபாலோ பண்றதுதான்.. ஆல்ரெடி நாம ஃபாலோ பண்ணி இருந்தா நம்ம ஃபாலோயர்ஸ்க்கு இவர் இந்த வகைல கெட்டிக்காரர், இவரை ஃபாலோ பண்ணுங்க  அப்டின்னு சொல்லிடனும்.. 


ட்விட்டர்ல புது ஃபார்மேட்ல யார் யார் -யார் யாரை ஃபாலோ பண்றாங்க அப்டி ஸ்டேட்டஸ் காட்டுனப்போ ஒரு பிரபல பெண் ட்விட்டர் நக்கலா கமெண்ட் அடிச்சாங்க “ பொண்ணுங்களா தேடித்தேடி போய் ஃபாலோ பண்றாரு”ன்னு.. நான் கேட்டேன்” அதுல என்ன தப்பு? தமிழனின் மொய்க்கு மொய் ஃபார்முலா தெரியுமா? நம்மை யார் ஃபாலோ பண்றாங்களோ அவங்களை நான் ஃபாலோ பண்றேன்.. இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு? 



 என்னோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக்கும் ஃபாலோயிங்க் எண்ணிக்கைக்கும் 524 தான் வித்தியாசம்.. எத்தனை பேரு அப்படி ஃபாலோ பண்றாங்க? 3000 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கற பல ட்வீட்டர்ஸ் 300 பேரைக்கூட ஃபாலோ பண்ணாம இருக்காங்க.. அதுக்காக  நான் சொல்ல வர்றது அவங்களை எல்லாமே ஃபாலோ பண்ணனும்கற அர்த்தம் இல்லை.. அது அவங்கவங்க விருப்பம்.. டைம் லைன் நம்பிக்கும்..(நிரம்பிடும்) ஒரு குறிப்பிட்ட அளவு தான்  ஃபாலோ பண்ண முடியும்.. 

நான் ஒரு சாதாரண ஆள் தான். என் ட்வீட்ஸ் எல்லாம் சுமாராத்தான் இருக்கும். இதுவரை 21,900 ட்வீட்ஸ் போட்டிருக்கேன்னா அதுல நல்லாருக்குன்னு தேறுனது 345 தான்.. அதிக  RT பெற்றவை அதாவது 10 டூ 15 ஆர் டி ஆன ட்வீட்ஸ்னு கணக்கெடுத்தா 212 தான் இருக்கும்.. மீதி எல்லாமே மொக்கை தான் .. சும்மா ஜாலிக்கு டைம் பாஸ்க்கு போட்டவை தான்.. 

நான் பாராட்டுக்கோ, அங்கீகாரத்துக்கோ அலையற ஆள் இல்லை.. எல்லாரும் நம்மை , நம்ம படைப்பை பாராட்டனும்னு வெறி இல்லை.. ஆனாலும் மத்தவங்க நம் படைப்பை பாராட்ட்டுனா ஆர் டி செஞ்சா ஒரு சந்தோஷம்.. மன திருப்தி அவ்ளவ் தான்.. 

 ஒரு படைப்பாளிக்கு அதிக  மன திருப்தியை தருவது முகம் அறியாத அன்பு உள்ளங்களின்  அங்கீகாரமும், பாராட்டுமே.. ஏன்னா நம்ம வீட்ல இருக்கறவங்க பெரும்பாலும் நம்ம படைப்பை கண்டுக்க மாட்டாங்க . நம்மையே கண்டுக்க மாட்டாங்க .. அதனால  மத்தவங்க பாராட்டும்போது ஒரு அல்ப சந்தோஷம் அவ்ளவ் தான் .. 

இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி என் ட்வீட்ஸ் 18 ஐ இதுவரை ஆர் டி பண்ணி இருக்கார். கமர்ஷியல் ட்வீட்டர் ராஜன் இதுவரை 14 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்..தோட்டா 12 ,  குடத்தில் இட்ட  விளக்குகளை குன்றில் ஏற்றிய தீபங்களாய் ஆக்கும் பாரத் பாரதி இதுவரை 43 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்.. ஆனா ரொம்ப நாளா ஒரு குறை எனக்கு.. ஒரு பிரபல ட்வீட்டர் மட்டும் இதுவரை என் ஒரு ட்வீட்டைக்கூட ஆர் டி செஞ்சதே இல்லை .. அதாவது என் தனிப்பட்ட ட்வீட்.. ( பிளாக் லிங்க் ஷேர் அல்ல )

நானும் இதை முதல்ல கவனிக்கலை.. எனக்கு ஒரு  டவுட்.. நாம தான் ரொம்ப மொக்கை போடறோமா? அல்லது அவர் டைம் லைன்ல இல்லாதப்ப போடறதால அவர் கவனிக்கலையோன்னு .. அதனால நான் என்ன செஞ்சேன்.. அவர் டைம் லைன்ல இருக்கறப்போ ட்வீட் போட ஆரம்பிச்சேன்.. ஆனா அவர் கண்டுக்கலை.. எனக்கு புரிஞ்சிடுச்சு.. அண்ணன் பாலிடிக்ஸ் பண்றார்னு.. 



 இதை அப்படியே விட்டிருப்பேன்.. ஒரு நாள் என்ன செஞ்சாரு? அண்ணன் டைம் லைன்ல “  என்னய்யா ட்வீட் போடறே? ரொம்ப மொக்கையா இருக்கே?” அப்டின்னு கேட்டாரு.. வழக்கம் போல நான் ஸ்மைலி போட்டுட்டு கிள ம்பிட்டேன்.. 

 இது ஒரு டைம் 2 டைம் இல்லை 7 முறை நடந்தது.. அதாவது லேடீஸ் எல்லாம் டைம் லைன் இருக்கற டைமா பார்த்து வேணும்னே நோஸ்கட் பண்ண வேண்டியது.. எனக்கு செம கடுப்பு ஆகிடுச்சு.. என்னை மொக்கைன்னு சொன்னதுக்காக இல்லை.. 

 ஏன்னா என்னை ஆல்ரெடி ட்வீட் உலகின் வெற்றி மாறன் ஐ கிருஷ், கார்க்கி,ராஜன் உட்பட பலர் அப்படி சொல்லி இருக்காங்க.... அவங்க மேல ஏன் எனக்கு வருத்தம் இல்லைன்னா என் நல்ல படைப்பு வந்தப்ப அவங்க ஆர் டி பண்ணி இருக்காங்க.. அவங்க தான்யா உண்மையான் நண்பன்க்கு அடையாளம்.. படைப்பு நல்லா இருக்கறப்போ அங்கீகாரம் கொடு.. நல்லா இல்லைன்னா  திட்டு .. வேணாம்கலை.. 

ஒரு படைப்பாளியை பாராட்டனும்னா அவனை டைம்லைன்ல பாராட்டு.. அவனது குறைகளை சுட்டிக்காட்டனும்னா டி எம் ல சொல்லு.. என் ஃபோன் நெம்பர் இருக்கு மெசேஜ் பண்ணு.. அல்லது கால் பண்ணி சொல்லு.. அதை விட்டுட்டு டைம் லைன்ல எதுக்கு கேவலப்படுத்தனும்?

 அண்ணன் ரெகுலரா கடலை போடும் ஒரு பிரபல பெண் ட்வீட்டர் கிட்டே என் ஆதங்கத்தை டி எம் ல சொன்னேன்.. அவங்க ஒத்துக்கவே இல்லை... அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. பலரது ட்வீட்சை ஆர் டி பண்ணி இருக்காரு அப்டின்னங்க.. நானும் அதை ஒத்துக்கறேன். ஆனா என் ட்வீட்ஸ் அவர் ஏன் ஆர் டி பண்ணலை?ன்னு கேட்டேன்.. வாக்குவாதம் வளர்ந்தது... 

 நான் சொன்னேன்.. சரி . நான் இதுவரை போட்ட கேவலமான, ரொம்ப மொக்கையான ட்வீட்ஸ் 2 தர்றேன் அதை உங்க ஐ டி ல போடுங்க.. அண்ணன் என்ன பண்றார்?னு பார்க்கலாம்னேன்.. அவங்க  அதுக்கு ஆரம்பத்துல சம்மதிக்கலை.. உங்க ட்வீட்ஸை நான் எப்படி போட முடியும்? அதுவும் என் பேர்ல? வேணும்னா உங்க ட்வீட்டை நான் ஆர் டி பண்ற மாதிரி போடவா?ன்னாங்க


 ம்ஹூம் அது சரிப்படாது.. எனக்குத்தெரிய வேண்டியது./. அவர் படைப்பை பார்த்து ஆர் டி பண்றாரா?  அல்லது ஆளை பார்த்து ஆர் டி பண்றாரா? என்பதே அப்டின்னேன்.. 


 நீண்ட யோசனைக்குப்பின் அந்த பெண் ட்வீட்டர் என் மொக்கையான, படு கேவலமான ட்வீட்ஸ்  ரெண்டையும் போட்டார்.. அந்த ட்வீட்ஸ் 2ம் எவ்வளவு கேவலம்னா தினத்தந்தி குடும்ப மலர்ல கூட வராது அவ்ளவ் கேவலம்,,. அவர் பேருல போட்டுட்டாரு.. 


 ட்வீட் போட்ட 4 வது நிமிஷத்துல அந்த 2 ட்வீட்ஸ்ல ஒண்ணை அண்ணன் ஃபேவரைட் பண்ணினாரு.. ஒண்ணை ஆர் டி செஞ்சாரு,.. சும்மா இல்லை முன் குறிப்பா அவேசம் ட்வீட்  அப்டின்னு.. ஹய்யோ அய்யோ 

 அந்த பெண் ட்விட்டர்க்கு முகமே இல்லை.. எனக்கு படு திருப்தி.. அவரது முக மூடியை கிழிச்சதுல.. 



இப்பவும் நான் அவர் பேரை குறிப்பிட முடியும்.. ஆனா அப்புறம் அவருக்கும் , எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.. நான் சொல்ல வருவது  மற்றவர்களை மற்றவர் முன்னிலையில் பாராட்டுங்கள், குறைகளை டி எம்மில் சொல்லுங்கள் என்னும் கருத்தைத்தான்.. மற்றபடி அவரை குறை கூறும் எண்ணம் இல்லை.. 


அடுத்த பதிவில் மதுரை டாக்டர் ரியாஸ் உட்பட 167 பேரை பிளாக் செஞ்ச பிரபல ஆண் ட்வீட்டர் பற்றிய ஒரு அலசல்.. 


சினிமா விமர்சனத்தில் இயக்குநர் பற்றி அவர் படைப்பை பற்றி நீ மட்டும் குறை சொல்லலாமா? என கேட்டுடாதீங்க .. அது வேறு, இது வேறு..அதுவும் இல்லாம சினிமா விமர்சனத்துல இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், ரசித்த வசனங்கள் எல்லாம் சொல்லிட்டு கடைசியாத்தான் இயக்குநரிடம் சிலகேள்விகள் என லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி கேட்டிருப்பேன்




இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html



  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 



27 comments:

maithriim said...

இவ்வளவு விஷயம் எல்லாம் இருக்கா, ட்விட்டர் உலகத்துல? ட்விட்டரில் இருப்பவர்களுக்கு நிறைய நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க, வாழ்த்துகள். :-)
amas32

தல தளபதி said...

இம்புட்டு நடக்குதா டிவிட்டர்ல?...யாருனு சொல்லிடுயா...ஆவ்வ்..

ராஜி said...

அதாவது லேடீஸ் எல்லாம் டைம் லைன் இருக்கற டைமா பார்த்து வேணும்னே நோஸ்கட் பண்ண வேண்டியது..
>>
நோஸ்கட் பண்ணது உங்களுக்கு பெருசா தெரியலை. பொண்ணுங்க இருக்குற டைமல் நோஸ்கட் பண்ணதுதான் பெருசா தெரியுதா?

rathinamuthu said...

இதுவரை தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். கடந்த மூன்று பதிவுகள் மெகாட்வீட்டப் இவை தான் சிறந்ததாக கருதுகிறேன். வாழ்த்துகள்.

மன்மதகுஞ்சு said...

டாடி சார் டிவிட்டரின் அண்டர்வேர்ல்ட்டை அப்படியே வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கீங்க .நல்லா இருக்கு சுவரஸ்யமா இருக்கு,நீங்க சொல்லவாறது யாருன்னு புரிஞ்சிடிச்சு.. சரி விடுங்க.. நாங்கெல்லாரும் இருக்கோம் பாராட்டுறதுக்கும்,விமர்சிக்கிறதுக்கும்,ஆர் டி பண்ணுறதுக்கும்..

சி.பி.செந்தில்குமார் said...

ட்விட்டரில்
திலீப் (@samdhil)


@senthilcp சார், உங்களோட ரசிகனோட வேண்டுகோள். உங்க ப்ளாகுக்கும் டிவீட்ச்கும் எத்தனையோ ரசிகர்கள். அதுல நானும் ஒருத்தன். உங்க சினிமா விமர்சனத்த நெறைய பேருக்கு ஷேர் பண்ணி ரசிச்சிருக்கேன். எப்படி ஒரு படத்துல இவ்வளவு விஷயத்த நோட் பண்ண முடியும்னு வியந்திருக்கேன்.. குறிப்பிட்ட யாரோ ஒருத்தர பத்தி நீங்க கவலை படாதீங்க.. நாங்க இருக்கோம் சகா.. சொல்லனும்னு தோணுச்சி.. சொல்லிட்டேன். தப்ப இருந்தா மன்னிச்சிடுங்க! ஜாலியா உங்க வேலைய செய்ங்க.. ensoy! :) http://tl.gd/hgtq7t · Reply
Report post (?)

Athammohamed said...

நானும் பல முறை யோசிச்சிருக்கேன், பிரபல கீச்சர்னா தலைக்கனம் பிடிச்ச மாதிரி செருக்கவே இருப்பானுங்க போல., நாம எதுனா கேட்டோம்னா அவனுங்களை தொந்தரவு பண்ணிட்ட மாதிரி ரொம்ப சலிச்சுக்குவாணுங்க.வெல்டன் செந்தில், சூப்பர் பதிவு.

Athammohamed said...

இங்கே கருத்து சொல்லி இருக்கிற ஒரு புண்ணியவான் கூட நீங்க சொல்ற டைப் தான் பிரதர். உங்ககிட்டே நடிக்கிறாரு.

Prabu Krishna said...

உண்மையான பகிர்வு. நானும் இனி அடிக்கடி இதை செய்கிறேன்.

தாமரைக்குட்டி said...

அடடா.... நான் ஒரு பிரபல டுவிட்டர்... என்னிய உட்டுட்டு எப்பிடியா மீட்டிங்ங் போட்டீங்க...????

scenecreator said...

சி.பீ, படிக்க வேண்டிய பதிவு இது.

மதன் , விகடன் தொடர்பாக சி.பீ யின் பதிவு.
http://www.adrasaka.com/2012/05/vs.html
விகடனின் உண்மையான முகம்.
http://savukku.net/home1/1561-2012-05-18-18-20-48.ஹ்த்ம்ல்
என் பதிவில் http://scenecreator.blogspot.in/2012/05/blog-post_17.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ட்விட்டி(ரி)க்ஸ்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ட்விட்டி(ரி)க்ஸ்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ட்விட்டி(ரி)க்ஸ்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார். இப்படியெல்லாம் நடக்குமா
சார் அது என்ன டிஎம், மென்சன் எனக்கு கொஞ்சம் அதைபத்தி தெரியபடுத்துங்களேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ட்விட்டி(ரி)க்ஸ்.

SELECTED ME said...

ட்விட்டர்ல இம்புட்டு நடந்திருக்கா? அவ்வ்வ்!

ஒண்ணுமே தெரியாம அப்பாவியா இருக்கேன்! நிஜமா ட்விட்டர்ல எது fake எது originalனு கூடத்தெரியாத அப்பாவி!

இப்படி அப்பாவியா இருப்பதும் நல்லதுதான் போல!

”தளிர் சுரேஷ்” said...

ட்விட்டரில் இவ்வளவு விசயம் இருக்கா? நானும் ஏதோ தேமேன்னு எனக்கு தெரிஞ்சதை டிவிட்டிகிட்டு இருப்பென்! இப்ப அதிகம் வர்றது இல்லை! உண்மையிலேயே சூப்பர் பதிவு! வாழ்த்துக்கள்!

Astrologer sathishkumar Erode said...

இவ்ளோ புள்ளிவிவரம்,எவ்ளோ உன்னிப்பா கவனிக்கிறது எதுக்குன்னு புரியல..ஜாலியா டைம் இருக்கும்போது 10,20 டிவிட் போடுங்க போதும்..மத்தபடி இவ்ளோ சீரியஸா புள்ளிவிவரம் எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு,போனா,அடிட் ஆகிட்டோம்னு அர்த்தம்

Unknown said...

நீங்களும் பிரபல ட்விட்டர் தானே?



உங்களுக்கு எதுக்கு இன்னொருத்தர் அடையாளம் காட்ட... வழக்கம் போல தயக்கம் ஏதுமில்லாமல் கலக்குங்க சி.பி.

Unknown said...

நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க பாஸ்... புது ட்விட்டர்களை அடையாளம் காட்ட நானாச்சு..

anandrajah said...
This comment has been removed by the author.
anandrajah said...

நீங்க பிரபலமான ட்விட்டர்...! அதான் எளிதான வாசிப்பை எல்லோரையும் சென்றடைந்து விட்டது.. வாழ்த்துக்கள்..இது உங்க கருத்து தானே.. சரியா ரெண்டு நாளைக்கு முன்னே அண்ணன் செந்தில்குமார் இதே விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்..! நீங்க கவனிச்சிருக்க மாட்டிக போல..! வாசித்து விடுங்கள்..! http://kaalachchuvadugal.blogspot.in/2012/05/twitter.html

கட்டதொர said...

விடுங்க சிபி..! ட்விட்டர் மாதிரி ஒப்பன் கம்யுனிட்டில இதெல்லாம் தவிற்க்க முடியாமதான் போய்டுது. இதெல்லாம் கணக்குல எடுத்துகிட்டா..நான்லாம் தினமும் நாலுமுறை தூக்குல தொங்கனும்! சியர்ஸ்.!! கட்டதொர.!

IKrishs said...

நீங்கள் எதிர்மறை விமர்சனங்களையும் ஸ்போர்டிவ் வாக எடுத்து கொள்வது + வரவேற்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே..RT பொறுத்தவரை உங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவும் , குறிப்பிட்ட அந்த பெண் ட்விட்டர் ரை ஊக்கப்படுத்தும் வகையிலும் செய்திருக்கலாம்..இதற்காக ஸ்டிங் ஆபரேஷன் ரேஞ்சில் டென்ஷன் ஆகணுமா சிபி? #Cool !

Pulavar Tharumi said...

அவர் உங்களை கேலி செய்ததும், உதாசீனம் செய்ததும் உங்களை வருத்தப்பட வைத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் நகைச்சுவையாக பேசுவதால், அவரும் நகைச்சுவையாகவே அப்படி எழுதியிருக்கலாம். நீங்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வீர்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். அவர் கேலியாக எழுதியிருந்தாலும், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எல்லோரையும் நாம் திருப்திபடுத்திவிட முடியாது. சாதனை மனிதர்கள் எல்லோரும் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

யானை தெருவில் போகும் போது நாய்கள் குறைக்கும். ஆனால் யானை அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கம்பீரமாக நடந்து செல்லும்.

ட்விட்டரில் அவரவரின் அப்போதைய மன நிலைக்கு ஏற்றார் போல் வரும் கீச்சுகளை RTயோ ஃபேவரைட்டோ செய்கிறோம். பெண்கள் என்றால் ஆண்கள் சலுகைகள் அளிப்பது இயற்கை தானே :)

ட்விட்டருக்கு வரும் புதியவர்கள் பலர், தங்கள் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள் என்று கவலைப்படுவதை நீங்களும் கவனித்திருக்கலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு பிரபல பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், பதிவர் மற்றும் ட்விட்டர். உங்கள் எழுத்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, நீங்கள் இதெற்கெல்லாம் கவலைபடலாமா?

புதியவர்களின் நல்ல கீச்சுகளை RT செய்வது என்னும் உங்கள் மற்றும் பாரதியின் கொள்கை பாராட்டத்தக்கது. நன்றி :)

VIMALA PATTI said...

நீங்கள் எழுதிய அனைத்தையும் வரி விடாமல் படித்தேன் . உண்மையை கலப்படமில்லாமல் எழுதி இருக்கிறீர்கள் . நான் டுவிட்டேரில் ஆங்கிலத்தில்
மட்டுமே டுவீட் செய்து கொண்டு இருந்தேன் . தமிழ் டைப் செய்ய முடியும்
என்று தெரிந்த பிறகு , தமிழ் டுவீட் செய்ய ஆரம்பித்தேன் . நீங்கள்
குறிப்பிட்ட கர்வம் படைத்த மற்றும் உங்களுக்கு மட்டும் நல்லவர்களாக உள்ள பிரபலங்கள் அனைவரையும் கவனித்து மட்டும் அல்ல அவர்களின் நாடி அறிவேன் . டுவிட்டேரிலும் சில க்ரூப்கள், வட்டங்கள் உள்ளன . சில
அவர்களுக்குள்ளே மட்டும் ஜாலி ஆக இருப்பார்கள் . மற்றவர்களை
நட்புடன் பார்த்தாலும் குரூப் அக்கறை வெளிப்படும் . ஆனால் மற்றவர்களை
காயப்படுத்தும் போக்கு இருக்காது . சில நேர்மாறனவை.சிலர் புதியவர்களை
அல்லது விவரமில்லாதவர்களை உரசியும் காயபடுத்தவும் செய்கிறார்கள் .
பாலோ எண்ணிக்கை தனக்கு குறைவாக காண்பிக்க ஹாக்கிங் செய்து
ராஜாவாக காண்பித்து கொள்ளுபவர்களையும் புரிந்து கொண்டேன் .
பாலோ எண்ணிக்கை குறைவாக இருப்பது தனது தலைமை பண்பை
குறிக்கும் என்ற எண்ணம் உள்ளவர்களும் உண்டு .
மொத்தத்தில் சக மனிதனை மதிக்கும் தன்மை நமது கீச்சாளர்கள்
மத்தியில் மிகவும் குறைவு .கருத்து பரிமாற்றம் , ஆரோக்கியமான விவாதம் ,
எவரையும் புண்படுத்தாத நகைசுவை , புரியாத ,தெரியாத விஷயங்களை
பகிர்ந்து கொள்ளுதல் , முதலியவை புறம் தள்ளுதல் டுவிட்டேரின் நோக்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல .