Monday, May 21, 2012

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3ஓப்பனிங்க்லயே ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லிடறேன் ( சட்டை பேண்ட் போட்டிருக்கேன் ) நாங்க எல்லாம் ஒண்ணாங்கிளாஸ் டூ அஞ்சாங்கிளாஸ் படிச்ச காலத்திலயே  கோ எட் படிச்சவங்க.. அப்புறம்  ஆறாங்கிளாஸ் டூ 10 வது வரை  பசங்க மட்டும் படிக்கற ஸ்கூல்.. அப்புறம் பிளஸ் 1 , பிளஸ் 2 ,  படிக்கறப்ப மீண்டும் கோஎட்.. இந்த கால கட்டத்துல என் படிப்பு கிராஃப் பார்த்தீங்கன்னா கோ எட் படிச்சப்ப மட்டும் என் ரேங்க் பிரமாதம்.. ஹி ஹி 

 பெண்கள் என்றால் ஒரு உற்சாகம் தான்.. எதிர் பால் ஈர்ப்பு வருவது மனித இயல்பு.. சிலர் அதை மென்னு முழுங்குவாங்க.. நான் தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிட்டேன்.. அவ்ளவ் தான் வித்தியாசம்.. மெகா ட்வீட்டப்னு சொன்னதும் நான் சந்திக்க விருப்பப்பட்ட பெண் ட்வீட்டர்கள் யார்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடலாம்.. 

 ஆரம்ப கட்டத்துல  ட்விட்டர்க்கு வந்த புதுசுல டைம் லைன் கான்வர்சேஷனை வாட்ச் பண்ணுனப்ப திங்கள் கிழமை காலைல 11 மணிக்கு டி பி கேடி ( இவர் கேடி அல்ல, இனிஷியலே அப்படி ) என்பவர் கூட ஒரு பொண்ணு வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தது.. அப்புறம் எதேச்சையா வெள்ளிக்கிழமை சாயங்காலம் பார்த்தப்ப இன்னும் அதே பாப்பா அதே ஆள் கிட்டே சண்டை போட்டுட்டு இருந்தது.. அடேங்கப்பா... 

 அதுக்கப்புறம் தான் நோட் பண்ண ஆரம்பிச்சேன்.. பாப்பாவுக்கு பார்ட் டைம் ஜாப்பே  ஃபைட் போடறதுதான்ன்னு.. கன் ஃபைட் காஞ்சனான்னு பேர் வெச்சாங்க ட்விட்டர்ல .. ( யார்னு கேட்காதீங்க அது  சிதம்பர ரகசியம் ).. இவங்க என்ன பண்ணுவாங்கன்னா  டைம் லைன்ல அவங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு கேள்வியை கேட்டுட்டு  கிளம்பிடுவாங்க.. இருக்கறவங்க விக்கி பீடியா , ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி, எல்லாம் ரெஃபர் பண்ணி பதில் சொல்வாங்க .. ஆனா ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல மாட்டார்..

 அமஸ் மேடம்

டைம் லைன்ல யாருக்காவது பிறந்த நாள், 1000 ஃபாலோயர்ஸ் அப்டின்னா ஊரே கூடி தேர் இழுக்கும்.. பாப்பா கண்டுக்காது. யாரையும்... தன்மானத்தை  விட்டு நம்மாளுங்க  “ மேடம்.. எனக்கு பிறந்த நாள் வாழ்த்துங்க”ன்னு கேட்டு வாங்கி பாயாசம்  சாப்பிடுவாங்க.. அதுக்குப்பின் “ தாமதமான பி நா வா” ( பயப்படாதீங்க.. பிறந்த நாள் வாழ்த்து என்பதைத்தான்  அவங்க அப்படி சொல்றாங்க ) சொல்ற லேட் பிக்கப்  லேகா அவங்க 

   டைம்லைன்ல பெண்களை மட்டம் தட்டி, அல்லது கிண்டல் பண்ணி யாராவது  ட்வீட் போட்டா உடனே எம் ஜி ஆர் மாதிரி ஆலமர விழுதெல்லாம் பிடிக்காமயே டைம் லைன் ஆஜர் ஆகி அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கும் வைஜயந்தி ஐ பி எஸ் கம் லேடி எம் ஜி ஆர்.. 

 அப்பேர்ப்பட்ட அப்பாடேக்கர்   அஞ்சலி பாப்பா மாதிரி எதுக்கெடுத்தாலும் அவங்கப்பா கிட்டே பர்மிஷன் கேட்கற பச்ச மண்ணுங்க.. 

 மெக ட்வீட்டப் ல கலந்துக்க அவர் அவங்கப்பா கிட்டே பேசறாங்க 

 டாடி.. ட்வீட்டப் நடக்குது.. சென்னை போகனும்.. 

 எத்தனை பேர்ம்மா கலந்துக்கறாங்க?

 200 பேர் டாடி.. ஒரே டைம்ல 200 பேர் கிட்டே சண்டை போடலாம்.. ஜாலி ஜாலி ப்ளீஸ் டாடி போய்ட்டு வர்றேன்.. 

 வேணாம்மா.. இன்னொரு டைம் போய்க்கலாம்..  நானும் கூட வந்தா நல்லாருக்கும்.. போன த டவை  ஆஃபீஸ் ஃபிரண்ட் மேரேஜ்க்கு போனப்ப டி டி ஆர் கூட நீ போட்ட சண்டைக்கே இன்னும் விடை தெரியலை..,. 

 அய்யய்யோ டாடி.. அப்புறம் என் இமேஜ்  என்னாகறது? எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க.. 


 நீ ஏம்மா அப்படி சொல்றே? வழக்கமா ஏதாவது பொய் சொல்வியே ஆஃபீஸ்ல ஒர்க் இருந்துச்சு, லீவ் கிடைக்கலை அப்டி ஏதாவது சொல்லி சமாளி..

 அவங்க விஷயத்தை விடுவோம்.. இப்போ ட்வீட்டப்ல யார் வந்தாங்கன்னு பார்ப்போம்..
 ஹால் ல  நாங்க எல்லாம் கூடி கும்மி அடிச்சுட்டு இருந்தோம்.. அப்போ முதன் முதலா 2 பொண்ணுங்க வந்தாங்க..  அப்போ இலவசமா  கிடைச்சா எதையும் விட்றாதே அங்க்கிள் சூடம் கொளுத்தாம சத்தியம் பண்ணுனாரு.. இவங்க யாரோ புது ட்வீட்டர்.. ரெகுலரா நாம கடலை போடற ஆள் கிடையாதுன்னு.. 

 அவர் சொன்னது உண்மைதான்..  திவ்யான்னு பேரு.. வாழை என்ற அமைப்பை சேர்ந்தவங்க போல .. அவங்க முன் வரிசைல போய் உக்காந்துட்டாங்க.. 

அடுத்தது அமஸ் அப்டினு ஒரு மேடம் வந்தாங்க. டி பில ரெட்டை  ஜடை மாதிரி இருந்தாங்காட்டி நாங்க எல்லாம் டீன் ஏஜ் கேர்ள்னு நினைச்சோம் .. அவ்வ்.. ஆனா அவங்க எல்லார் கிட்டேயும் சகஜமா பேசி ஸ்மைலிங்க் ஃபேஸ் உடன் இருந்தாங்க.. 

ரைட்டர் சுபா தேசிகன் வந்தாங்க.. இவங்க அதிகமா பழக்கம் இல்லை.. இவரோட கணவர் புதிய தலை முறை  இதழில் பணி ஆற்றுபவர்.. அவங்களோட ஃபோட்டோ எடுத்துகிட்டேன்.. 


இப்போ நம்மாளுங்க வருத்தம் எல்லாம் என்னான்னா ரெகுலரா பேசிட்டு இருக்கற லேடி ட்வீட்டர்ஸ் யாரும் வர்லையே என்பதுதான்.. நல்ல வேளை அப்புறமா 3 பேர் ஒண்ணா வந்தாங்க ..


அதீஷாவை பார்ப்பது லேடி ரைட்டர் சுபா தேசிகன், மைக்கர் அதீஷா,யுவகிருஷ்ணா


 மெடிக்கல் ஷாப் மேனகா .. இவரோட கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீசர்... வீட்டில்  தன் மனைவி  கிட்டே கஷ்டப்படற ஆஃபீசர்.. டைம் லைன்ல எல்லா லேடீஸ்க்கும் சமையல் குறிப்பு பிரமாதமா கொடுப்பார்.. ஆனா சமையல் ஹா ஹா ஹா  அதை எப்படி என் வாயால சொல்வேன்? அவர் கணவர் ஒரு டைம் கேட்டிருக்கார்.. சமையல் டிப்ஸ் எல்லாம் பிரமாதம்.. ஆனா  சமையல் ஏன் இப்படி? என்றால் அதுக்கு அவர் பதில் “ சமைத்துப்பார்” ஜஸ்ட் லுக் இட் .. ஒய் ஈட்டிங்க்? அப்டின்னாராம் .. 

 அவரோட கணவர் எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட்.. அந்த மேட்டர் மேனகாவுக்குத்தெரியாது.. அடிக்கடி ஃபோன்ல அவர் பண்ற அட்டூழியங்கள், கலாட்டாக்கள் எல்லாம் சொல்லிடுவார்.. 

 இவரோட பிளஸ் பாயிண்ட் என்னான்னா  எல்லார்ட்டயும் சகஜமா பழகறதுதான்..  அவர் வர்ற வரை பெண் ட்வீட்ட்ரகள் பலர் கொஞ்சம் ஃபிலிம் காட்டிட்டு இருந்தாங்க.. இவர் வந்த பின் தான் எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க.. இவர் எல்லா நண்பர்களிடமும் ஒரே மாதிரி பழகுவார்.. 

 ஆரம்பத்துல  கடலை மட்டும்  போட்டார்.. இப்போ நல்ல ட்வீட்ஸ் எல்லாம் போடறார்.. இவர் மங்கை என்ற பெயரில் இன்னொரு ஐ டியில் கீச்சுவதாக நம்பத்தகாத வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல் ஹி ஹி

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்கும்ப்பா, ம்க்கும், அஸ்கு புஸ்கு ஸ்பெஷலிஸ்ட்.. ஆனந்த விகடனில் இவர் ட்வீட்ஸ் வந்த அன்னைக்கு அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் விகடன் புக் வாங்கிக்குடுத்து படிக்கச்சொல்லி எல்லாரையும் டார்ச்சர் செஞ்சதா அருகம் பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வழக்கு இருக்கு.. 

 இப்பேர்ப்பட்ட தல புராணம் கொண்ட மேனகா  லைட் ரோஸ்  கலர் சுடிதார்ல வந்தார்..தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீக்கு பொன்னுக்கு வீங்கி வந்தா எப்படி கன்னம் வீங்கி இருக்குமோ அப்படி இருந்தாங்க .. இவங்க ட்விட்டர் ஹேண்டில் “ ராஜகுமாரி” அதுக்கான காரணம். அவரோட ஹவுஸ் ஓனர் ஐ மீன் அவரோட ஆத்துக்காரர் செல் ஃபோன் ரிங்க் டோன் “ ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி” அந்த பாட்டு தன்னை நினைச்சுத்தான் வெச்சிருக்கறதா அவருக்கு ஒரு நினைப்பு


 பியூட்டி பார்லர்ல இருந்து நேரா வந்துட்டார் போல .. ஹய்யோ அய்யோ .. மெடிக்கல் ஷாப் மேனகா பெயர்க்காரணம் - 24 மணி நேரமும் ட்விட்டர்லயே இருப்பவர்..  பயங்கரமான விஜய் ரசிகை.. இவரை சீண்டனும்னா அஜித் பற்றி ஒரு ட்வீட் போட்டா போதும்.. 27 வருஷமா வாக்கிங்க் போகும் பழக்கம் உள்ள இவரது கணவர் மேரேஜ்க்குப்பின் வாக்கிங்க் கூட போறதில்லை.. ஏன்னா நடப்பது அஜித்தின் ஸ்பெஷல்.. அதனால் அவங்க தான் விஜய் ரசிகை ஆச்சே.. எப்படி நடப்பதை அனுமதிப்பார்?

அவங்க பாட்டுக்கு நல்ல பொண்ணு மாதிரியே அமைதியா சீட்ல உக்காந்துட்டாங்க.. எந்த படமும் போடலை.. யார் கிட்டேயும் சரியா பேசலை.. ( அப்புறமா நிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிடறப்போ பேசுனாங்க.. காரணம் கேட்டதுக்கு வந்த வேலையை முடிக்காம என் கவனத்தை எதுலயும் சிதற விட மாட்டேன்னாங்க )- வந்த வேலை = ஓ சி சாப்பாடு

3வது திருச்சி திருப்பாச்சி, மலைக்கோட்டை மரப்பாச்சி.. ரியல் ரீனு.. இவங்க ட்வீட்ஸ் எல்லாம் செம காமெடியா இருக்கும்.. ஆஃபீஸ்ல நடக்கற அனுபவங்களை, பல்பு வாங்குன அனுபவங்களை சொல்வார். இவரே பல்பு சைஸ் தான்  இருக்கார்..

 இவர் ஸ்கூட்டி பியூட்டி.. .. திருச்சில செகன்ஸ்ல 21 ஆவது ஆளா கை மாறுன ஒரு ஸ்கூட்டியை வெச்சு இது வரை 89 ட்வீட்ஸ் போட்டிருக்கார்..  சென்னை ட்வீட்டப்க்கு வந்த லேடீஸ்லயே அதிக மேக்கப் இவர் தான்.. ஃபேரன் லவ்லி, பேத்தி ஜிவ்லி, ரோஸ் பவுடர்,  மிஸ் பவுடர் எல்லாம் போட்டு ஐ டெக்ஸ் மை டப்பா காலி ஆகற அளவு கண்ல மை வெச்சுக்கிட்டு வந்திருந்தாரு.. ஸ்மைலிங் ஃபேஸ்.. எனக்கு இப்போதான் ஒரு டவுட் வந்தது.. இவங்க பாட்டுக்கு வந்தாங்க.. உக்காந்திருக்காங்க. யாரும் எதும் கண்டுக்கலையே.. நம்மாளுங்க அம்புட்டு நல்லவங்களா?னு யோசனை பண்ணி ஸ்டேஜ் பின் பக்கமா போய் ஸ்க்ரீன் ஓரமா நின்னு  ஆடியன்சை ஏரியல் வியூ பார்த்தேன்.

 அவங்க 3 பேரும்  ( லேடீஸ்) செல் ஃபோன்ல என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க... சரி ட்விட்ஸ் தான் போடறாங்க.. ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்கன்னு நினைச்சேன்.. என் ஃபோனை எடுத்து  ட்விட்டர் டைம் லைன் பார்த்தா அவங்க 3 பேர் ட்வீட்ஸ் எதும் வர்லை.. யார்தும் ஆர் டியும் பண்ணலை ..

 அப்புறமாத்தான் கண்டு பிடிச்சேன்.. அவங்க  செல் ஃபோன்ல அவங்க ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் கிட்டே சேட்டிங்க்னு..
அப்புறம் நிகழ்ச்சி முடியற டைம்ல  பஃபே சிஸ்டம்ல சாப்பாடு போட்டாங்க.. அவங்க எல்லாம் நாசூக்கா சாப்பிட்டாங்க... ரொம்ப கம்மியா. ...பார்த்தா கண் பட்டுடும்னு..

நான்  பெண்களை கண்டுக்காத ஆள் என்பதாலும்,  தாலி கட்டிய மனைவியைத்தவிர வேறு எந்தப்பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கக்கூடாது என்ற மனோபாவமும்  உள்ளவன் என்பதால் நான் அவங்களை கண்டுக்கலை.. ( அவங்க ளும் என்னை கண்டுக்கலை... தானிக்கு தீனி சரியாப்போச்சு )

சின்னவள்


 இந்த ட்வீட்டப்பில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கபட்ட பிரபல பெண் ட்வீட்டர்கள் ( மக்களால் மீன்ஸ் என்னால் ஹி ஹி )


1. எப்போ பாரு காலேஜ்க்கே போகாம ஓ பி அடிக்கும் டோரா புச்சி பாப்பா ( டி பில  டோரா புச்சி பாப்பா வெச்சதால எனக்கு மக முறை ) ”சிரி”க்காதே வித்யா

2.  இப்போதான் மேரேஜ் ஆன பெண் என்பதால் எந்த கிண்டலும் பண்ண முடியாத சூழலில்  எஸ் ஆன அந்தா இந்தா  பிருந்தா

3. நூறு நாளில் 1000 ஃபாலோயர்ஸ் பெறுவது எப்படி? என்று மணிமேகலைப்பிரசுரத்துக்காக புக் எழுதும் இன்னல் சுதா சாரி மின்னல் சுதா
4. கணவர் லேப்டாப் தராததால்  கோபிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போய் அடம் பிடிச்ச கவிதை வேங்கை மங்கை ( இவங்க வீட்டுக்குப்போனா ஏகப்பட்ட காலண்டரும், பழைய பாட்டுபுக்ஸும் நிறைஞ்சு இருக்கும்... இன்ஸ்பிரேஷன்... ஹி ஹி )

5. கல்யாண வீட்ல ஒரே நாள்ல 3 புடவை மாத்திடற மாதிரி ட்விட்டர் வரலாற்றில் முதல் முறையாக 3 மாதத்தில் 87 தடவை டி பி மாற்றிய  கேரளத்துக்கிளி மேஹா ஓவியா ( கலகலப்பு ஓவியா நஹி களவாணி ஓவியா )


6. பஸ்ஸில் பிரயாணம் செய்யறப்ப தன் பின்னே ஜஸ்ட் நின்ற ஒரு ஆளை 4 இஞ்ச் நீளமுள்ள கொண்டை ஊசியால் நறுக் என குத்திய வீராங்கனை அய்யய்யோ தமிழச்சி ( மேட்டர் கேள்விப்பட்டதும் மீ அன் ஃபாலோ  ஹெர்.. ஹி ஹி )


7. ஸ்விஸ்-ல் வாழ்ந்தாலும் அடிப்படையில் இலங்கைப்பெண் என்பதால்  எப்போ பாரு கவிதையில் சோக ரசத்தை பிழிந்து புலம்பல் புனிதவதி ஆக இருந்து மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மாப்பிள்ளை கிட்டே வந்ததும் என்ன நடக்குது அங்கேன்னு ஸ்டேட்டஸ் கேட்டா கமுக்கமா கம்முனு இருக்கும் அமுக்கல் அமராவதி


8. எகத்தாளம் எஃப் எம்  தன்யா - விடிகாலைல 3,.30 டூ 5 இவங்க டைம் லைன் பார்த்தா நீங்க இங்கிலீஷ் கோர்ஸே போகத்தேவை இல்லை.. எனக்கு எதும் புரியாது.. ஆனாலும் குட்மார்னிங்க்.. ஹவ் டூ யூ டூ, ஐ ஆம் பிஸி இப்படி 4 வார்த்தை வெச்சு சமாளிச்சிங்க்..


9. பல்லவ மன்னன், இலவசமா எது கிடைச்சாலும் விட்றாத மாமா இருவரையும் தாடி விட வைத்த லேடி  “ பசு அறிவு”ஊ1 )- ஃபிகருக்கு மே 25 மேரேஜாம்...ட்விட்டர் துக்க நாளா மதுரையும், நெல்லையும் கொண்டாடறாங்களாம்:((


10. அமலா படம் போட்ட டி பி வெச்சிருக்கும் பிரபல பெண் ட்வீட்டர் ( சென்னைல தான் இருக்கார், ஆனா யாருக்கோ மொட்டை அடிக்க திருப்பதி போய்ட்டார்)

11. சென்னையில் வசித்து இப்போது சேலத்தில், கேரளாவில் ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கும்  அஹானா, சஹானா,கஹானா. ( இவர் கிட்டே 180 கேள்விகள் கேட்டா 2 வருஷம் கழிச்சு ஹாய் அப்டினு ரிப்ளை வரும்)


12. புதுசா பிரபலம் ஆகிவரும் தேவ சீமா, சங்கீதா,அர்த்த ராத்திரி லேடி டாக்டர்

13.. தன் பையன் கிட்டே வாங்குன பல்ப்ஸ் வெச்சே  ட்வீட்ஸ் தேத்தும் லெமன் ரைஸ் ஸ்பெஷலிஸ்ட் சிங்கை சாந்தி ( இவர் லெமன் ரைஸ் பண்றப்ப மட்டும் கணவர் ஹோட்டல் கோயிங்)

14. தமிழ் பெண் ட்வீடர்களிலேயே அதிக ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கும் கோவை பாவை அரட்டை கேர்ள்

15. மதுரை உமா கிருஷ்

16. ஆர் டி தோழி எனும் ஃபேக் ஐடியில் உலா வரும் ஒளிக்கதிர், தூத்துக்குடி சாத்துக்குடி, நல்லா பாத்துக்குடி ஜீன்ஸ் போட்ட பீன்ஸ்/.


17. ஆனந்த தொல்லை , அம்மா பிள்ளை, புரோட்டா புவனா ( லவ்வர் கூட எங்கே போனாலும் 8 புரோட்டா சாப்பிடுவாராம் அவ்வ்வ் )


18.  ஐ ஆர் எட்டின் தோல்வி ( இவங்க ஒரு டீச்சர்.. டீச்சர்னாலே மீ பயம்.. ரீசன் ஆல் ஆல்ரெடி யூ நோ.. மை அக்கா, மம்மி, ஹோம் மினிஸ்டர் ஆல் டீச்சர்ஸ்.. சோ நோ வம்பு வித் ஆல் டீச்சர்ஸ்)

19.  டால்ஃபின் குட்டி, ரேணுகா ரெயின்,குந்தவை அனு,ஃபேஸ்புக்கில் 7 மணீ நேரம் டெயிலி குடி இருக்கும் உமா கணேஷ்


20. தலைவன் மொழி என்ற பெயரில் நம்மை எல்லாம் கொலையா கொன்னெடுத்த  வானதி நடனம் ( டெயிலி டான்ஸ் ஆடிக்கிட்டே வாக்கிங்க்கும் போவாங்களாம்) மேரேஜ் இப்போ தான் ஆச்சு


 உஷ் அப்பாடா.. இவங்க போக மீதி இருக்கும் , டைம் லைனில் உலா வரும் அனைவரும் ஃபேக் ஐ டிகள் தான்.. ஏமாந்து விடாதீர்கள் நண்பர்களே..( மொத்தம் 127 பெண் ஐ டி கள் இருக்கு, அதுல ஒரிஜினல்  46 மட்டுமே... எனக்கு பழக்கமானவர்கள் 17 பேர்தான்.. விடு பட்டவர்கள் மன்னிக்க


 ஆல் தோட்ட பூபதி கரூர் ஜெகன் எப்படி ஹால்க்கு வராம பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல தங்கி அவர் விருப்பப்பட்ட பிரபல ட்வீட்டர்களை மட்டும் செலக்ட் பண்ணி ரூம்க்கு வர வெச்சு சந்திச்சாரோ அதே மாதிரி கனடா டாக்டர் ஐ மம்மி மீ டம்மி, யூ ஜிம்மியும் செஞ்சார்.

 ஏதோ மேரேஜ் அட்டெண்ட் பண்ண தமிழ் நாடு வந்தவர் ஹால்க்கு எவ்ளவ் வற்புறுத்தியும் வரவே இல்லை.. இந்த பதிவில் மற்ற பெண் பதிவர்கள் அவங்க ஃபோட்டோ போட வேணாம் என்று சொல்லீட்டாங்க...


டிஸ்கி -0


இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

டிஸ்கி -1 ட்விட்டரில் நடக்கும் பாலிடிக்ஸ்,  சில அதி மேதாவிப்பதிவர்களின் ( கம் ட்விட்டர்)அதிகப்பிரசிங்கித்தனம் பற்றிய என் ஆதங்கங்கள், ட்வீட்டப்பில் நான் பேசிய சர்ச்சையை கிளப்பிய பேச்சு பாகம் 4 ல் செவ்வாய் அன்று.


டிஸ்கி 2 - நாளை வெளி வர இருக்கும் ட்வீட்டப் பாகம் 4 யார் மனதையாவது புண் படுத்தினால் அதுக்கு இப்பவே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இப்படிக்கு எதையும் முன் கூட்டியே செஞ்சிடும் முன் ஜாக்கிரதை முத்தம் அண்ணா  (துரை)


டிஸ்கி 3 - விடு பட்ட பெண் ட்வீட்டர்கள் பெயர்கள் நினைவு படுத்தினால் சேர்க்கப்படும்.. அதுக்காக டால்ஃபின் குட்டி போலவோ, ரேணுகா ரெயின் போலவோ டி எம்மில் மிரட்டத்தேவை இல்லை :) மீ பயந்த சுபாவம்.. ஹி ஹி


டிஸ்கி - 4 - நேரடியாக மோத தைரியம் இல்லாத சில வீரப்பிரதாபர்கள் சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர்களை டார்ச்சர் பண்ணியும், திட்டியும் இந்த தளத்தில் இடம் பெற்ற சில படங்களை , சில தகவல்களை  நீக்கச்செய்து விட்டார்கள்..அவர்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் வாழ  வாழ்த்துகிறேன்


14 comments:

maruthamooran said...

“சமந்தா- அஞ்சலி“ படத்தை எதிர்பார்த்து வந்தால் இப்படி சொதப்பிட்டீங்களே மக்கா!

குறிப்பு: 'கனடா கண்ணம்மா' டாக்டரைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை கவனிக்க!

Unknown said...

வணக்கம பாஸ்! என்னா அலசல்!!

Unknown said...

//மருதமூரான்//
இங்க பார்ர்றா! எப்பிடி பாஸ் இப்பல்லாம் உங்கள காணவே முடியிறதில்ல! :-)

maithriim said...

கானடா கண்ணம்மாவும் சென்னையில் இருந்தாங்களா? ஏன் வரவில்லை?
நல்ல தொகுப்பு. நீங்க குறிப்பிட்டுள்ள பெண்களில் நான்கு பேருடன் தான் நான் பேசினேன். மற்றவர்களை மிஸ் பண்ணிவிட்டேன்.
amas32

maithriim said...

இன்னொரு பாய்ன்ட், அதென்ன லேடி ரைட்டர்? ரைட்டர் என்றே சொல்லலாமே! :-)

amas32

சி.பி.செந்தில்குமார் said...

@amas


in that foto 3 writers r there.. this is ladies spl.. so i mention her separately

Pulavar Tharumi said...

மூன்று பாகங்களில் இது தான் சூப்பர். அட்டகாசமான எழுத்து நடை. சுவாரசியமாக இருக்கிறது.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

யப்பா முடியல

சி.பி.செந்தில்குமார் said...

@hot karthik

:) ஆமா, இன்னும் 3 பாகம் இருக்கு முடியல

SELECTED ME said...

சரி - நீங்கள் கலாய்க்கும் இவர்கள் எல்லோரும் ஆள் வைத்து அடித்தால் என்ன செய்வீர்கள்?

சி.பி.செந்தில்குமார் said...

@நிலவன்பன்

யோவ், சொல்லிக்குடுக்கற மாதிரி தெரியுது?

Nirosh said...

அப்பாடா ஒரு பெரிய சல்யூட் பாஸ் உங்களுக்கு... இப்போதான படித்து முடித்தேன் ஏனோ தெரியவில்லை இனிமையாய் இனித்தது.:))

Shubashree said...

Lady writer? pudhusa irukke... ! nalla padhivu

தாமரைக்குட்டி said...

தூத்துக்குடி சாத்துக்குடி பாத்துக்குடி... ஹிஹிஹிஹி......