Monday, May 07, 2012

CLICK - திக் திக் - சதா,சினேகா உல்லாள் -ன் பாலிவுட் திகில் -சினிமா விமர்சனம்

http://www.metrojoint.com/photos24/joints_41928239_16860789_92676653.jpgCLICK - FILM REVIEW


ஹீரோ ஒரு ஃபோட்டோகிராஃபர்.. அவர் சதா தன் கேர்ள் ஃபிரண்டோடயே சுத்திட்டு இருக்கார்.. அதாவது ஹீரோயினே நம்ம சதாதான்.. கமல் - கவுதமி , மாதிரி பிரபுதேவா - 9 தாரா மாதிரி லிவ்விங்க் டுகெதரா லவ்விங்க் 2 கெதரா ஒரே பிளாட்ல 2 பேரும் இருக்காங்க..

கார்ல போறப்ப ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ ஒரு ஃபிகரை தூக்கி அடிச்சுட்டாங்க.. போய் பார்த்தா மாட்டிக்குவோம்னு காரை நிறுத்தாம வந்துடறாங்க.. அதுக்குபிறகு வரிசையா அமானுஷ்ய சம்பவங்கள்..

காலேஜ்ல ஃபேர்வெல் பார்ட்டி அப்போ எடுத்த ஒரு குரூப் ஃபோட்டோல ஒரு ஆவி ரூப சுந்தரி லைட் ஷேடுல சிரிக்குது.. அப்புறம் ஹீரோ கனவுல , ஹீரோயின் கனவுல பேய் எல்லாம் வருது..

 ஹீரோயின் எதேச்சையா ஒரு ஃபோட்டோ ஆல்பம் கண்டு பிடிக்கறாங்க.. அதுல ஹீரோ வேற ஒரு ஃபிகரோட ஜோடியா நிக்குது.. சினேகா உல்லாள்.. அவர் தான் தன் ஆளோட முன்னாள் ஆள்-னு தெரிஞ்சும் அந்த பேக்கு அது பற்றி பெரிசா அலட்டிக்கலை.. யார் ? என்ன?னு சும்மானாச்சுக்கும் ஒப்புக்குச்சப்பாணீயா விசாரிக்கறாரு.. ஹீரோ ஃபிளாஸ் பேக் கதை சொல்றாரு..

அதாவது காலேஜ் படிக்கறப்ப ஹீரோ அந்த ஹீரோயினை ( சினேகா உல்லாள்) பிராக்கெட் போட்டுட்டாரு.. மேட்டரை முடிச்சுட்டாரு.. மேரேஜ் பண்ணிக்க சொன்னப்ப “ இப்போ முடியாது, நான் என் லட்சியத்துல ஜெயிச்ச பின்னாடி தான் மேரேஜ்ங்கறார்.. ந்க்கொய்யால லட்சியம்  அடையறதுக்கு முன்னால மேட்டர் மட்டும் செய்யலாமா?ன்னு அந்த ஃபிகரும் அவன் சட்டையை பிடிச்சு உலுக்கி எல்லாம் கேட்கலை..https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEzgvu7fxxJbD-AsaalxNGZws3-WPkg9969kr_aFVzRVYZdaCLTBd-MdWmYpilvdisb0Z5rZHec4khABofn0jMy1g0sFdCXnDhZ_ll9cjpKtK6imLzaYWEKx7UZcb-jO5p5a1_GxTfMQ/s1600/5.jpg
--


 பாப்பா அழுவுது... மணணிக்கட்டுல கத்தில அறுத்துக்கிட்டு அட்டெம்ப்ட் சூசெயிட்..ஆனா எப்படியோ பிழைச்சுக்குது.. ஹீரோ அவரை சமாதானப்படுத்த 3 பேர் கொண்ட குழுவை ஹீரோயின் வீட்டுக்கு அனுப்பறார்.. அவங்க ஹீரோவோட ஃபிரண்ட்ஸ்.. அவங்க இன்னா பண்றாங்க.. சமாதானப்படுத்தாம பெட்ல படுத்துடறாங்க.. அதாவது ஹீரோயினை கேங்க் ரேப் பண்ணிடறாங்க  .. எல்லா சேதமும் ஆன பின்னாடி மினிஸ்டர் ஹெலிகாப்டர்ல சேதமிட்ட பகுதிகளை பார்வையிட வர்ற மாதிரி ஹீரோ வர்றார்,..

 அப்போ ஹீரோயின் குத்துயிரும், ரேப்புயிருமா கிடக்கா.. ஹாஸ்பிடல் போலாம்னு ஹீரோ சொல்ல மற்ற ஃபிரண்ட்ஸ் எல்லாம் தடுக்கறாங்க,.. ஏன்னா போனா போலீஸ்ல மாட்டிக்குவேனு.. அது கூட பரவாயில்ல.. ஹீரோயினை அவங்களே கொலையும் பண்ணிடறாங்க..

 கொலை செய்யப்பட்ட ஹீரோவின் முதல் லவ்வர் தான் ஆவியா வந்து ஹீரோ ஃபிரண்ட்சை 3 பேரையும் பழி வாங்கிடறா.. ஆனா பாருங்க ஹீரோவை பழி வாங்கலை.. அவன் மேல இருக்கற காதலால காலம் பூரா அவன் தோள்லயே உக்காந்துக்கறா.. அவ்ளவ் தான் கதை..

ஹீரோ ப்ளே பாய் கேரக்டர்.. அதனால நடிக்க அவசியம் இல்லை.. சும்மா ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறது, டூயட் பாடறது இந்த மாதிரி வேலை தான்...

 ஹீரோயின் 2 பேரு.. கரண்ட் லவ்வர் அதாவது தற்போதைய காதலி  நடிகை சதா.. படம் பூரா ஸ்லீவ்லெஸ் சுடில வலம் வர்றார்.. லோகட் காட்சிகள் அதிகம் என்பதால் படம் பார்க்கும் ரசிகர்கள் பேய், மிரட்டும் இசை ஆகியவ்ற்றில் மனதை, கண்களை அலை பாய விடாமல் டார்கெட்டிலேயே குறியாக இருந்தால் பயன் பெறலாம் ஹி ஹி

2வது ஹீரோயின் சினேகா உல்லாள்.. கண் அவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஹீரோயின் சதா 8 ரீல்களில் செய்யாததை 4 ரீல்களில் வரும் இவர் செஞ்சுடறார்.. அதாவது ரசிகர்கள் மனசை கவர்றார்.. இவருக்கும் லோ கட் , லோ ஹிப் காட்சிகள் உண்டு..

படத்தில் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. இந்தப்படம் ஒரு பெரிய ரவுண்ட் வந்த படம்.. அந்த சுவடே தெரியாமல், யாருக்கும் நன்றி சொல்லாமல் எல்லாமே தன் சொந்தக்கதை  மாதிரி டைட்டிலில் போட்டுக்கொண்ட சாமார்த்தியம்... சபாஷ்... சார்.. ஏன்னா இந்தப்படம் 2004-ல் ஷட்டர் என்ற பெயரில் வந்த தாய்லாந்துப்படத்தின் அப்பட்டமான உல்டா..  பிறகு அந்தப்படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து 2007 -ல் சிவி என்ற டைட்டிலில் தமிழில் படம் வந்தது.. இதை எல்லாம் மென்ஷன் பண்ணாமல் தன் படம் போல் காட்டிக்கொண்டது திறமை தான்


2. சதா, சிநேகா உல்லாள் இருவரையும் முடிஞ்ச வரை திறமை காட்ட வெச்சது..

3.. மார்க்கெட்டிங்க்காக, போஸ்டர்ல பேர் போட்டுக்கறதுக்காக முன்னணி நடிகைகள் 3 பேரை ஒரு பாட்டுக்கு ஆட வெச்சது ( படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னா கூட )


4. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ லேப்டாப் பார்த்துட்டு இருக்கறப்போ பின்னால சதா வர்றதை டக்னு பிம்பமா பார்த்து பயப்படற செம சீன்


5. சினேகா உல்லாள்-ன் மம்மி கேரக்டர் சினேகாவ விட செம கட்டையாக இருப்பது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg_eFSplKlQzrRtyl2_Z70khjkgNG-6-Dp8FeJJ2iYeWb2tdO5O1bF3yiaUgVL6YD2wsXYFZ19WJZhv78OaRfhxj_Zp7_owO6AT6qi9zpWPz_fSAyY-HQtJcjXxfKxizuucZJFlwSsxm4/s400/sneha_ullal_wallpapers+(sneha_ullal_hot_pics)11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்,, திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.ஹீரோ தோள்ல பேய் பர்மணண்ட் டேரா போட்டிருக்கு.. அதனால கழுத்து வலிக்குதுன்னு டாக்டர்ட்ட செக்கிங்க்கு போறார்.. வெயிட் மிஷின் 120கிலோ வெயிட் காட்டுது...உடனே டாக்டர் வெயிட் மிஷின் ரிப்பேர் போல-னு சொல்றார்.. ஆனா அவரே அதுல ஏறியோ, அல்லது ஹீரோயினை ஏறச்சொல்லியோ ( வெயிட் மிஷின்லயா) வெயிட் செக் பண்ணி இருக்கலாம்..

2. ஹீரோ ஆள் ஜை ஜாண்டிக்கா இருக்கார்.. ஆள் எப்படியும் 80 கிலோ குறையாம இருக்கும், சினேகா உல்லாள் வெயிட் 54 கிலோ ( நான் தூக்கிப்பார்க்கலை, அவங்க ஃபேஸ் புக்ல படிச்சேன் ) அப்போ 134 தானே காட்டனும்?

3. ஹீரோ ரொம்ப குழப்பமான மன நிலைல இருக்கார்.. மயக்கம் என்ன தனுஷ் மாதிரி பல பிம்பங்கள் உருவங்கள் அவரை தொந்தரவு பண்ணுது.. 10 நிமிஷம் இது நடக்குது.. அப்போ கார் ஓட்டத்தெரிஞ்ச சதா ஏன் டிரைவிங்க் பண்ணலை? நீங்க ரெஸ்ட் எடுங்க , நான் ஓட்டறேன்னு சொல்லி இருக்கலாமே?அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமே?


4. பழி வாங்க முடிவெடுத்த பேய் வந்தமா, போட்டெறிஞ்சமா? போனோமா?ன்னு இல்லாம ஏன் 8 ரீல் இழு இழுன்னு இழுக்குது? படத்தை இழுக்கவா?


5. செத்துப்போன சினேகா உல்லாள் உண்மையாவே ஹீரோ மேல லவ் உள்ள ஆளா இருந்தா அடுத்த நாளே பழி வாங்கலை தொடங்கி இருக்கனும்.. 4 வருஷம் ஏன் கேப்? சம்மர் கேம்ப்பா? சதாவை லவ் பண்ணி மேட்டர் எல்லாம் ஹீரோ முடிச்ச பின்னாடி ஏன் பழி வாங்கனும்?


6. தன் காதலன் ஒரு பொம்பள பொறுக்கி-ன்னு தெரிஞ்ச பின்னும் சதா ஏன் கோபமே படலை? அட்லீஸ்ட் ஒரு அறுவெறுப்புக்கூட வர்லை? எப்பவும் போல காதலன் கூட கில்மா பண்ணிட்டு இருக்கு?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwemZMWNcYKcgdy4xAikbH8I15LGnM8mBH3iLK9shf_ttyitXX5RPw-9dHPsPrIq_SDY150BwuronfkPyxj0f3HVrK0T1sYU10vwatCy6P-BIPjd3jcE2lBb8I5pHh2yyeMqbI1jWXSFje/s1600/Sneha-Ullal-Hot-2.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஃபிரண்டை விட்டு விலகிட்டேன். காரணம் பயம் தான்.. அவ என்னை விட்டு பிரிஞ்சுடக்கூடாதே. அதான்


2. நீ எது செஞ்சாலும் எனக்குக்கோபம் வராது, ஆனா காதலை மட்டும் கொச்சைப்படுத்திடாதே..


3. இந்த உலகத்துல உண்மையா காதலிக்கறவங்க  ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க


4. நீ நினைக்கறது உண்மைதான். ஆனா எல்லாமே உண்மை அல்ல..


ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆனால் தமிழ்ப்படமான சிவியை விட இது குவாலிட்டி கம்மிதான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8tr7CF0OqdqjAKQG6ec3JJgKoUIWRxiHmxE3d53inYLJByVCAJXvzlNob3lCyWyFPrjsmfyXOn5m5H1f8YliLzb_lsZCl_ToPoAcnVBX93HFLpgMZjixMUvBp8L-iBGhu97JuQ7WOwWT/s400/s2.jpg


 டிஸ்கி 1 -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
.
  திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


டிஸ்கி - 2 - க்ளிக் படம் பார்த்ததுமே எனக்கு இந்தப்படம் ஆல்ரெடி பார்த்தாச்சு என்ற எண்ணம் வந்துடுச்சு,, ஆனா படம் பேரு நினைவில்லை. ட்விட்டர் நண்பர்களிடம் கேட்டேன்.. 18 நண்பர்கள் உதவினார்கள்.. அதில் முக்கியமான தகவல்களை கொடுத்த  அதிஷா, மற்றும் NJGANESH ( நியூஜெர்சி கணேஷ்) இருவருக்கும் நன்றிகள்

2 comments:

Unknown said...

there was an english movie with the same story line already shown in PIX or Times now channel.

கோவை நேரம் said...

ஓஹோ///இதுதான் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவதா..?