Wednesday, May 30, 2012

ஐ பி எல் மேட்ச் - ட்விட்டரில் நடந்த வெட்டி பெட்டிங்க்-ஒரு அலசல் எனக்கு கிரிக்கெட்ல அவ்வளவா நாலெட்ஜ் கிடையாது , (மத்ததுல மட்டும் என்ன வாழுது?)நானும் ஒரு காலத்துல கிரிக்கெட் மேட்சை டி வி ல வெறியோட உக்காந்து பார்த்தவன் தான் , ஆனா மேட்ச் ஃபிக்சிங்க் வந்த பிறகு எல்லாமே பணம் தான் தீர்மானிக்குதுன்னு தெரிஞ்ச பிறகு ஒரு விரக்தி வந்துடுச்சு.. 


யாரோ பணம் சம்பாதிக்க யார் கிட்டேயோ  காசை வாங்கி வெற்றி தோல்வியை தீர்மானிக்கறாங்க.. அதை நாம ஏன் நேரம்,காலம் எல்லாம் வேஸ்ட் பண்ணி பார்த்து பி பியை ஏத்திக்கனும் என்பதே என் நினைப்பு.. 

ஐ பி எல் மேட்ச் நடக்கறப்ப ட்விட்டர்ல நம்மாளுங்க பெட்டிங்க் வெச்சு விளையாடுனாங்க..அது பற்றி இப்போ நான் கருத்து சொன்னா நல்லா இருக்காது. அதனால நண்பர் கட்டதுரையின் நட்புக்காக அவர் அனுப்பிய மெயிலை அவருக்காக போடறேன்.. 

பெட்டிங்க்ல ஜெயிச்சவங்களூக்கு வாழ்த்துகள்
ரெண்டு மாசமா ஐபிஎல் அலப்பறையோட..இந்த வெட்டி பெட்டிங் இம்சை தாங்க முடியாம தலையில அடிச்சுகிட்ட சந்துவாழ் பெருமக்களுக்கு முதல் வணக்கம். ஏதோ ஒரு வகையில உங்க சகிப்பு தன்மைய வளர்த்ததுக்கு நீங்க தான் நியாயமா எங்களுக்கு நன்றி சொல்லனும். J)

ஏதோ நாலு, அஞ்சு பேருக்கு விளையாட்டா ஆரம்பிச்ச வெட்டி பெட்டிங்..50 பேருக்கும் மேல சேந்து..டைம் லைன அதகளம் பண்ணீயதும் நடந்துச்சு.  ஒரு லிமிட்ல சாட்டிங் பன்றோன்னும் கல்லெறிய ஆரம்பிச்சு..ஜிமெயில்ல ஒண்ணு கூடி சலம்புனோம். @VaiRajaVai னு ஒரு ட்விட்டர் ஐடி கூட போட்டு கதைச்சோம். எவ்ளோ கதைச்சாலும் தீரலை. இது மாதிரி ஒரு பரிசாட்தர்த்தமான ஆன்லைன் பெட்டிங்..சக்ஸஸ்புல் ஆக்கின எல்லோருக்கும் நன்றி.

ஒவ்வொரு நாள் டீலும் ஓவ்வொரு மாதிரி..டாஸ் போடுறதுலெருந்து..முதல் பால் டாட் பாலாகுமா பாக்குறதுலெருந்து, ரன் அவுட் ஆகும் போது கீழ வுழுந்து வாறுவாங்களான்ற வரைக்கும். புனே, டெக்கான்னு விளையாடுற சொத்தை மேட்ச்லாம் கூட டாபிக்கா இருந்துச்சு..இன்னிக்கு யார் வாய்ல மண்ணுவிழுந்துச்சுன்னு பாக்க அவ்ளோ ஆர்வம். அந்த வகையில இந்த ஐபிஎல்-5 பாக்க உந்துதலா எங்க வெட்டி பெட்டிங் எங்களுக்கு அமைஞ்சதுன்னுதான் சொல்லனும்.
கங்குலி..இன்னிக்கு கண் அடிப்பாரா இல்லியான்னு சில பேரு போட்ட டீல பாத்து,சந்தே காறிதுப்பினிச்சுன்ன்னா பாருங்களேன்.

இப்ப வெட்டி பெட்டிங்ல வெற்றி பெற்ற, கீழ வுழுந்து வாறின..பயமக்களை வரிசையா பாக்கலாம்.!

@kattathora – ஆரம்பிச்சு வச்சது இவருதான். ஒரு நாள் மாலை நேரம் மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்கும் போது கிடைச்ச ஐடியா இது. இவரு மத்தவங்கள சிரிக்க வைக்க ட்விட்டருக்கு வந்து..சிரிப்பா சிரிச்சத, தலைவர் சிபி..தனி பதிவா போடுவாரு (அப்பாடா..ஒரு இண்டர்வியுக்க்கு அடி போட்டாச்சு.!). பாய்ண்ட்ம் சொரனையும் ஒரே நேரத்துல மைனஸ்ல போனாலும், முதல் பத்து இட்த்துக்கு ரூல்ஸ் எல்லாரும் சேட்டிஸ்ஃபை பண்ணாத்தால..போனா போவுதுன்னு இவருக்கு 100ரூ புக் பரிசா கொடுத்தாங்க # (மாலைமதி குடுத்து கவுத்துபுடாதீங்க மக்கா.!)

@thoatta இவரு..ஸ்ட்ராஜிட்டியே தனிதான். சனி பொணம் தனியா போவாதுன்ற மாதிரி..இவரு தோத்தா..ஒரு கும்பலே இவரு சொல்றத கேட்டுட்டு..வேட்டிய இழந்து நிப்பாங்க. பாய்ண்ட் டேபிள..டாப்பர் லிஸ்ட்ல பாதி கேம்க்கு மேலா..டாமினெட் பன்னாரு. ரொம்ப எதிர் பாக்க பட்டு கடைசியா முதலிடத்துக்கு வந்துட்டாரு (அதாவது கீழெருந்து!) 0. பாய்ண்ட். 100ரூ புக்கு பரிசா வாங்கிட்டாரு.

@திரு – ரூல்ஸ் கிங்கு..இவரு..வெட்டி பெட்டிங்கல இருக்குற சந்து பொந்த எல்லாம் அடைச்சு..ரூல்ஸ் போட்டு..கிடுக்கு பிடியா பெட்டிங்க கொண்டு போனாரு. என்ன கொடுமைன்னா..அவரு மத்தவங்களுக்கு வச்ச ஆப்புல தெரியாம அவரே உட்காந்து..பரிசு வாங்க முடியாம போய்ட்டாரு.

@விஜய் ராப்பகலா..கண்ணுமுழிச்சு பாய்ண்ட் அப்டேட் பண்ணி ஒரு சோப்புடப்பா கூட பரிசு வாங்காத விஜய். கூகிள் டாக்ஸ் வேலை செய்யாத சைனாவுக்கு எல்லாம் போய் கஷ்டபட்டு..பாய்ண்ட் அப்டேட் பண்ணாரு.

@ராஜன் இன்ஸ்டண்ட் பெட்டிங் இல்லைன்னு சொன்னதால நான் வரலை போங்கய்யான்னு கோச்சுகிட்டு துண்ட உதறி தோள்ல போனவரு இவரு.

@ஜானி வெட்டி பெட்டிங்ல ஆரம்ப நாள்ளெருந்து இருக்குற ஜீவன் இவரு..எனக்கு தெரிஞ்சு 2 முறை கடன் வாங்கி..திவால் ஆகி. ஒரு பத்துநாள் தலைமறைவா இருந்தாரு. விளையாடதவங்க பாய்ண்ட்ட பிரிச்சு கொடுக்கும் போதும் , எங்கிருந்தோ வந்து குதிச்சு..மானியமா கிடைச்ச பாய்ண்ட வச்சி..மானவாரியா ஜெயிச்சு..மூன்றாம் பரிசா 16ஜிபி பென் ட்ரைவும், 500ரூ புக்கும் பரிசா ஜெயிச்சாரு இவரு.

@குஞ்சு – இலங்கைக்கு எப்டி பரிசு அனுப்பீவீங்க..கொரியர் செலவு யாருதுன்னு ஒவர் கான்ஃபிடண்ட்ல பேசி பல்பு வாங்கினவரு இவரு. வெட்டி பெட்டிங்கல இவரு கைபக்குவம் அதிகம்

@அதிஷா – இவரு ஸ்டார்டிஜிய மட்டும் யாரும் புரிஞ்சுக்கவே முடியலை. எல்லாரும் ஜெயிக்கும்னா , இவரு மட்டும் தோக்கும்னு டீல் போடுவாரு. சென்னை ஜெயிக்காதுன்னு ஒரு மெகா டீல் போட்டு தோட்டா வேட்டிய உருவி அதை அவரே பரிவட்டமா கட்டிகிட்டாரு. முதல் பரிசா 64ஜிபி பெண்ட்ரைவ் , 500ரூ புத்தகம் பரிசு

@ஜென்னு – வெட்டி பெட்டிங்கல இருந்த ஒரே பொண்ணு இதுதான். தொடந்து 3 பெட் தோத்து தலைமறைவா இருந்துச்சு. சென்னை தோக்கனும்னு முண்டகண்ணியம்மன் கோவில் போய் அங்க பிரதட்சனம் பன்ற அளவுக்கு தமிழ் பற்று உண்டு அம்மனிக்கு.!

@திருட்டு குமரன் – பாதி பெட்டிங்ல மாட்டு லோன் மான்யம் வாங்கி சட சடன்னு எல்லாரையும் லைட்டா திரும்பி பாக்கவைச்சவரு. இவரு ஒமன் உளவாளியாயும் அறிய படுறாரு. நல்லா விளையாண்டு..கடைசியில இண்டென்சிவா ஆடாத்தால 100ரூ புக்கோட திருப்தி பட்டுகிட்டாரு! # அந்த புக்க கில்மா புக்கா கேளுன்னு, இவரு நண்பன் குள்ளபுஜ்ஜி படுத்தி எடுக்குறான்னு ஒரு தகவல்.!

@PSkumar கதிர்ன்னு பாதி டீல் போட்டு, பிஎஸ்குமார்னு பாதி டீல் போட்டு, கடைசியா..யாருய்யா இது..டீ கடையில புதுசா ஒரு ஆளுன்னு கேட்டுடாங்க. குய்யோ முறையோன்னு அழுது ப்ப்ல போய் 6 பீர் குடிச்சுட்டாரு. (பயபுள்ளை ..அப்பவும் பாய்சன் குடிக்குதா..பாருங்க!) கடைசியா 100ரூ புக் ஜெயிச்சு..என்னவோ எல்லா கோப்பையும் நானே ஜெயிச்ச மாதிரி ஆர்டி பண்ணிகிட்டு அலைஞ்சாரு!

@கோளாறு – மாட்டு லோன் வாங்க கொஞ்சம் கூட வெட்க மானமே பாக்காத ஒரே டீலர் இவருதான். தோட்டா சொல்றத கேட்காத மாமுன்னு படிச்சு படிச்சு சொன்னாலும்,  தோட்டாவுக்கு முன் மண்டை பள பளன்னு இருக்கு..அதுனால கண்டிப்பா தோட்டா புத்திசாலியாதான் இருக்கனும்னு, நம்ம்ம்ம்ம்பி நாசமா போனவரு. ஷேர் ஆட்டோல்லாம் கட்த்திருக்கோம், பாத்து போட்டு குடுங்கன்னு, வாசல்ல் உட்காந்து அழுதே..100ரூ புக்க பரிசா வாங்கினவரு.!

@சேட்டை – இவர பாதி டீல்ல காணொம்னு பஸ்ஸ்டான் ஃபுல்லா போஸ்டர் ஒட்டினோம். ஃபோட்டோவ பாத்தவங்க எல்லாம், நார்த்லெருந்து வந்துருக்குற செயின் வழி பறி கும்பல தேடுறாங்கன்னு நினைச்சுட்டங்காளம். இவரு விட்டு போன வேட்டி இன்னும் எங்க கிட்ட தொவைக்காம தான் இருக்கு. அடையாளம் சொல்லி வாங்கிட்டு போகலாம்.!

@நீலு – புயல் மாதிரி டீல் போட்டு, புயல் மாதிரியே காணம போனவரு இவரு. பரிசு கிடையாது வெளிய போய்யானு திரு தொறத்தியும், இவ்ளோ கவுரமா விளையாடினே ..எனக்கு ஒரு பரிசு இல்லியான்னு, கவுரவம், சிவாஜி ரேஞ்சுக்கு கேட்ட்து, கட்ட்தொர நெஞ்ச சொறிஞ்சதால, கட்ட்தொர அவர் பரிச தொலையுதுன்னு அவருக்கு தர ஒத்துகிட்டாரு.!

@சனியன்சகடை – எல்லா டீலுக்கும்ம் முன்னாடி திராணி இருந்தா என் கூட மோதுங்கன்னு சவால் வுடுற கைப்புள்ளை இவரு. கடைசியில எதிர் பாத்த மாதிரியே ஒன்னும் கிடைக்கலை. ஒரு பால்பென் பென்னாவது குடுத்துருக்கலாம்னு, டீகடை பெஞ்சுல பேசிகிட்டாங்களாம்.!


இன்னும் நிறைய பேரு இருக்காஙக்..பின்னூட்டத்துல போடுவோம்!

வெட்டி பெட்டிங் சக்ஸஸ்ஃபுல்லா ஆக்கின எல்லோருக்கும் நன்றி.!
கட்டதொர


!பெட்டிங்க்ல ஜெயிச்சவங்களோட விபரம் -https://docs.google.com/spreadsheet/ccc?key=0AqT8e-2UI68jdEJ6SG50UU5PU0pPWGVaSnBfRXBBMlE#gid=22


-தொடரும்

2 comments:

pskumar said...

மச்சி..அதுவும் என்ன பத்தி சொன்னது தான் அசத்தல் ..6 பீரு குடிச்சா நான் எல்லாம் ஸ்பாட் அவுட் மச்சி..super duper ...:))

மன்மதகுஞ்சு said...

பார்ட் 2 எப்போ வரும் மாப்பி சூப்பரா லைவ் கமென்ட்ரி கொடுத்திருக்கே ,இப்படியே சம்பியன்ஸ் லீக்குக்கு ஆடுவோமா