Tuesday, May 15, 2012

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 1ஈரோடு தங்கதுரை பேருக்கு முன்னால தான் ஈரோடு வெச்சிருக்காரே தவிர  ஆளை ஈரோட்ல பார்க்கவே முடியாது.. ஒசாமா பின் லேடன் மாதிரி ஆள்மறைஞ்சுட்டே இருப்பாரு.. எப்பவாவது ஈரோடு வந்தாக்கூட நைஸா மீட் பண்ணாம எஸ் ஆகிடுவாரு..  அப்பேர்ப்பட்ட நல்ல மனுஷனே எனக்கு ஃபோன் பண்ணி சென்னைக்கு 2 பேரும் ஒண்ணா போலாம்னு சொன்னதும் நித்திக்கு ஆதீனம் பதவி கிடைச்சதும் ஜிஞ்சிதா எப்படி சந்தோசப்பட்டாஙகளோ அந்த அளவு சந்தோசப்பட்டேன்.;. போதாததுக்கு மதுரை டாக்டர் ரியாஸ் கூட சென்னைல காலைல மீட் பண்ணி 3 பேரும் ஒரே ஹோட்டல்ல தங்கறதா பேச்சு..


விழா தொகுப்பாளர் பரிசல்காரன்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் நைட்  9 மணிக்கு.. அண்ணன் தங்கதுரை சாயங்காலம் 6 மணிக்கு ஃபோன் பண்ணி ஹோட்டல் சிவரஞ்சனில  இருக்கோம்.. சாரி இருக்கேன்னாரு.. அப்பவே அண்ணன் தடுமாறுகிறாரே?ன்னு நான் உஷார் ஆகி இருக்கனும்.. யதார்த்தமா நினைச்சுட்டேன்.. அப்புறம் ஒரு பிட்டுப்போட்டாரு.. நீங்க ரயில்ல முன்னால போங்க.. நான் பஸ்ல பின்னாலயே வர்றேன்னு சொல்லிட்டாரு.. சரி.. ஹோட்டல்ல எங்கே தங்கி இருக்கீங்க? ரூம் நெம்பர் என்ன? னு கேட்டேன் , அண்ணன் சொல்லலை.. பாவம் என்ன தர்மசங்கடமோ.. யார் கூட வந்தாரோ? சரி.. அது  அவர் பர்சனல் மேட்டர்.. நமக்கு என்ன போச்சுன்னு  நான் கிளம்பிட்டேன்..


நைட் 8.45 க்கு தங்கதுரை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்து வழியனுப்பினார்.. ( அவர் மட்டும்  தனியாதான் வந்தாரு)காலைல  4 மணிக்கு  சென்னை போயாச்சு.. ஆக்சுவலி டைம் 4.30க்குத்தான் போகனும்.. அட்வான்ஸா போயிடுச்சு..


அப்புறம் நான் பாண்டி பஜார் சரவணா ஹோட்டல்ல தங்குனது, மெட்ராஸ் பவன்  பிளாக் ஓனர் காரு சிவக்குமாரை மீட் பண்ணுனது, இயக்குநர் எஸ் எஸ் குமரன், அவர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் முருகன் மீட் பண்ணுனது எல்லாம் அப்புறம் பார்ப்போம்.. மதியம் 2.45 க்கு அடையாறு போய் சேர்ந்துட்டேன்.. அப்போ தான் ஒரு புண்ணியவான் ( ஐ திங்க் யோகா குணச்செல்வன்) ட்விட்டர்ல அப்டேட் பண்ணுனாரு, அடையாறு டிப்போ ஸ்டாப்னு./. நல்ல வேளை.. அடையாறுலயே இறங்கி இருப்பேன்.. இறங்கி யூத் ஹாஸ்டல் எங்கே?ன்னு விசாரிச்சா வழி சொன்னாங்க... ரைட் கட் பண்ணி பெட்ரோல் பங்க் தாண்டி அரை பர்லாங்க் தூரம் வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் ( இந்த வாக்கபிள் டிஸ்டேன்ஸ்க்கு ஏதாவது வரை முறை இருக்கா? ஆளாளுக்கு வாக்கபிள் டிஸ்டேன்ஸ்னு சொல்லிக்கறாங்களே?)


 கறுப்புத்தங்கம்  அண்ணே ஒரு விளம்பரம்,வேதாளம் அர்ஜீன், எம் ஜி ரவிக்குமார்


 யூத் ஹாஸ்டல் வந்தாச்சு.. முத ட்வீட்டர் செந்தில்நாதன்.. பைக்கை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுட்டு இருந்தார்.. இவர் ரைட்டர் சி எஸ் கேவோட க்ளோஸ் ஃபிரண்ட்.. ரைட்டர் சி எஸ் கே எல்லாருக்கும் தெரியும்,, இருந்தாலும் தெரியாதவங்க ஈசியா அடையாளம் கண்டுக்கனும்னா டெயிலி காலைல 7.47 AM க்கு  ட்விட்டர்ல கவிதை லிங்க் ஷேர் பண்ணுவாரு.. யாருக்காக இந்த சேவைன்னு கேட்டா எல்லாம் உங்களுக்காகத்தான்னு சொல்வாரு.. பாவம் நல்ல மனுஷன்.. பொய்யே பேச மாட்டாரு.. இவர் ராஜன் லீக்ஸ்ன் பங்காளி.. எதுலன்னு கேட்கக்கூடாது.. 

உள்ளே எண்ட்டர் ஆனா ஆல்ரெடி ஒரு பெரிய கேங்க்கே அங்கே இருக்கு.... அவங்களை பார்த்ததும் எனக்கு செம உற்சாகம்.. ஸ்கூல் ஃபிரண்ட்சை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ற மாதிரி ஒரு ஃபிலிங்க்.. பறவைகள் பல விதம் படத்துல ராபர்ட் ராஜசேகரன் இந்த மாதிரி ஒரு சீன் வெச்சிருப்பாரு..

 பாலாஜி தான் முதல்ல என்னை அடையாளம் கண்டு பிடிச்சு  மாப்ஸ் நீங்க கூலிங்க் கிளாஸ் இல்லாம வரலாமா?ன்னு அவர் ஓசில வாங்கி வெச்சிருந்த கூலிங்க் கிளாசை எனக்கு ஓசில கொடுத்தாரு.. வழக்கமா எனக்கு ஓ சி வாங்கி பழக்கம் இல்லை.. ஆனா மேத்ஸ் ல மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ்ங்கற மாதிரி ஓசி இண்ட் ஓசி சொந்தம்ங்கறதால வாங்கிக்கிட்டேன்..

 ஈரோடு தங்க துரை, நவீன்


ட்விட்டர் டி பி ல 2 கைலயும் குழந்தையோட இருப்பாரே அப்பாவி பையன் செந்தில் சே அவர் ஒரு கைல ஹெல்மட்டும், இன்னொரு கைல பேக்கும் வெச்சுக்கிட்டு நின்னாரு.. யோவ் உன் 2 கைக்கும் ரெஸ்ட்டே கொடுக்க மாட்டியாய்யா?ன்னு கேட்டா முறைக்கறாரு..

அப்புறம் என்ன? ஒரே ரகளை தான்.. எல்லாரும் சேர்ந்து ஃபோட்டொ  எடுக்கறதும், கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்றதும், ஒருவரை ஒருவர் அறிமுகம் செஞ்சுக்கறதும் செம ஜாலிதான்.. ஏன்னா எல்லாருக்கும் இதுதாம் முதல் சந்திப்பு.. எல்லாரையும் படைப்பின் மூலமாவும், ட்விட்டர் டி பி வாயிலாகவும் தான் தெரியும்..


விழா ஏற்பாட்டாளர்கள் எக்ஸ்பர்ட் சத்யா,  மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் கேசவன், பரிசல்காரன், கரையான் மிகச்சிறப்பா எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இருந்தாங்க.. விழா 3 மணிக்குன்னு அழைப்பிதழ்ல இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியப்படி ஒரு மணி நேரம் கழிச்சு விழா துவங்குச்சு..

வாழை என்ற அமைப்பை சேர்ந்த  திவ்யா என்பவர் சமூக விழிப்புணர்வு ஊட்டும் அந்த அமைப்பு பற்றி 17 நிமிடங்கள் பேசினார்.. பின்னர் நம்மால் முடியும் என்ற அமைப்பை சேர்ந்தவர் குழந்தைகள் கல்வி பற்றி பேசினார்.. அவை விரிவாக பின்னர்..

 வலம் இருந்து இடமாக குட்டி சாகசன், மீ, கருப்பையா , --------------??


பிறகு ட்விட்டர் அறிமுகம்.. மைக்கை அவங்க கிட்டேயே கொடுத்து அவங்களை பற்றி ஒரு சுய அறிமுகம்.. இது நல்ல ஐடியா.. எப்படின்னா  மேடை ஏறி பேசச்சொன்னா 2 டிரா பேக்.. 1. பலருக்கு மேடை பயம் அல்லது மேடைக்கூச்சம் இருக்கும்..  2.  சராசரியா 160 பேர் கலந்த இந்த விழாவுல வ்வொருவரையும் மேடை ஏத்துனா  ஒரு ஆள் மேடை ஏறி இறங்கவே 1 நிமிஷம் நு கணக்கு போட்டாலும் 160 பேருக்கு  2 மணி நேரம் 40 நிமிஷம் வேஸ்ட் ஆகி இருக்கும்..

ராவணன் என்ற சீனியர் பதிவர் தான் முதல்ல வந்திருந்தார்.. நான் ராமன் என்ற ஹேண்டில் வந்திருந்தா செம ஜாலியா கலாய்ப்பா இருந்திருக்கும், அவர் வர்லை.. சின்னப்பையன் என்ற ஹேண்டில் என் அப்பா வயசுல இருந்தார்.. அவர் தான் அறிமுகத்தில் அதிக கைதட்டல் பெற்றவர்..
அறிமுகங்கள் முடிஞ்சதும் எம் ஜி ஆர் ஃபோட்டோவை டி பி ல வெச்சிருக்கும் ரவிக்குமார் எம் ஜி மிமிக்ரி பண்ண மேடை ஏற்றப்பட்டார்.. ஆள் செம கலர்.. விழாவுக்கு வந்த பசங்கள்லயே அவர் தான் செம கலர்.. பவுடர் போடாமயே தக தகன்னு மின்னறார். பெண் ஃபாலோயர்ஸ் இந்நேரம் எகிறி இருக்கும்... அவர் பலகுரல்களில் மிமிக்ரி செஞ்சார்.. ஜாலியா இருந்துச்சு.. கிரேசி கோபால் ஊடால புகுந்தாரு.. அவர் ஆல்ரெடி சன் டி வி ல நைட் 10.30 க்கு மிமிக்ரி செய்யறவர் தான்.. இது முன் பின் ரிகர்சல் ஏதும் இல்லாமல் ஆன் த ஸ்பாட் நடந்த விஷயம்.. ரவி என்ன பேசுனாரோ அதுக்கு டக் டக்னு இவர் கவுண்ட்டர் கமெண்ட் கொடுக்க விழா களை கட்டியது.. கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது..

 இந்தியாவின் நெம்பர் ஒன் தமிழ் ட்விட்டர் ஐ ஆம் கார்க்கியுடன்


 அப்புறம் கிரேசி கோபல்ட்ட டாக்டர் டி ஆர் எம் பல்பு வாங்குன நிகழ்ச்சி.. அதாவது கோபால்க்கு என்ன ஹாபின்னா பிரபல ட்வீட்டர்களுக்கு ஃபோன் பண்ணி பெண் குரல்ல அவங்களை கலாய்க்கறதுதான்.. ஆனானப்பட்ட ராஜன் லீக்ஸே அவர் கிட்டே ஏமாந்துட்டாராம்.. ( ஏமாந்து என்ன செஞ்சார்னு சரியான தகவல்கள் இன்னும் வர்லை.. )

அடுத்து கருப்பையா கவிதை வாசிக்க வந்தாரு... ஆள் பேரு தான் கருப்பய்யா.. ஆனா வெள்ளய்யா,, லுக் லைக் என்னத்தை கன்னைய்யா.. அவர்  வாசிச்ச கவிதை..


 கரையான் உடன்என்னை தொலைத்த நான் :

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???
 விழாவின் சில ஹைலைட்ஸ்- தொடரும்


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 

22 comments:

Butter_cutter said...

அருமை !நான் நேரில் வந்த உணர்வு பெறுகிறேன் !

மன்மதகுஞ்சு said...

வெயிட் பண்ணிட்டே இருந்தேன் அண்ணேஎ உங்களோட இந்த பதிவை எதிர்பார்த்து.. நிகழ்வுகளை தொகுத்து சுவையாக பதிவாக தருவதில் உங்களுக்கு போட்டி நீங்கள் ... நிகழ்ச்சிக்கு வராத என்னை அப்படியே கையை புடிச்சு ( ஹாண்டிலை புடிக்ககூடாது) கூட்டிட்டு போய் சுத்திக்காட்டிய உணர்வு.. அடுத்த பார்ட்டுக்காக எதிர்பார்த்திருக்கிறேன்..அத்துடன் முடிந்தால் மற்றையவர்களின் அனுபவங்களையும் கோர்த்து எழுதினால் இன்னும் முழுமையாக இருக்கும்

ராஜி said...

நகரத்து வாழ்க்கையில் உரக்க பேசக் கூடாது, தலை, உடல் சொறியக்கூடாது, கூட்டத்தில் சாப்பிடும்போதும் கொஞ்சமா, சிறு விள்ளல்கள் மட்ட்மே சாப்பிடனும்ன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன்களோடு சுயம் தொலைத்துதான் வாழ் வேண்டி இருக்கிறது. அழகான கவிதையை தந்தமைக்கு நன்றி

Pulavar Tharumi said...

கலக்கல் பதிவு! உங்களின் எழுத்துப் பாணியே தனி. விழாவில் கலந்து கொண்ட உணர்வை தந்தது. இரண்டாம் பாகத்தை படிக்க ஆவலாக உள்ளது.

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் சந்திப்புகள் எல்லாருக்கும் வாழ்த்துகள், அய் நண்பன் ரவிகுமார் அங்கே வரை வந்துட்டாரா தூள்....!!!

Vijay said...

தொடர்ச்சிக்கு ஆவலாய் காத்திருக்கிறேன்

Nathan said...

தல இது நியாயமா... உங்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றதை மறைச்சிட்டீங்களே...

@naanraman வந்திருந்தார்...

@imcheenu அந்த 6 வது படத்தில் நீங்கள் கோடிட்ருப்பவர்

இது என்ன சீரியல்காரங்க மாதிரி தொடரும் எல்லாம்.. டச் விட்டு போயிடும் தல.. சீக்கிரம் :)

Unknown said...

டுவிட்டர் மீட் இன்னும் எத்தனை பதிவோ!

Unknown said...

சென்னையிலிருந்தாலும், பார்வையாளராக்கூட வந்து கலந்துக்க முடியலை. உங்கள் பதிவு அந்த மனக்குறை தீர்த்தது. நன்றி சிபி.

RAMA RAVI (RAMVI) said...

நித்திக்கு ஆதீனம் பதவி .....
ஹா.. ஹா..

ஆரம்பமே சுவாரசியமாக கலக்கலாக இருக்கு..தொடருங்கள்.

//மழையில் நனைவதென்பது அத்தனை பெரிய குற்றமா //

கருப்பையா அவர்களின் கவிதை மிக அருமை.

Mohamed Mydeen said...

நீங்க உணர்ச்சி பொங்க உரையாற்றுனதா சொன்னாங்க அத
சொல்லவே இல்ல

Unknown said...

சித்தப்பு! மாடுபுடி மைனர் மாதிரி பனியன் தெரியற மாதிரி சட்டை......கலக்குங்கய்யா....!

Unknown said...

கவிதை மழைத்தண்ணியில ஆடினதால? இல்லை வேற தண்ணியில ஆடியதால? உங்களுக்கு எந்த பழக்கமும் இல்லையே....? கவிதை நல்லாயிருக்கு யாரு எழுதிகொடுத்தா....?

சி.பி.செந்தில்குமார் said...

@வீடு சுரேஸ்குமார்


கருப்பையாவின் கவிதை அது.. என்னுது அல்ல.. ஹி ஹி பதிவை நல்லா படிக்கவும். என்னை மாதிரியே படிக்காம கமெண்ட் போடக்கூடாது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நேரடி வர்ணனை போல இருந்தது.
கரு(த்து)ப்பையா கவிதை !

சு. திருநாவுக்கரசு said...

கலா மாஸ்டர் பாணியிலே சொல்லறேன்! சும்மா கி..கி...ச்சுட்டீங்க!
அடுத்த ’பதிவு எப்போ? எப்போ?’ என்று தூண்டுகிறது உங்கள் பதிவு!
காட் ப்ளவுஸு யூ! :))

சாகசன் said...

மாம்ஸ் நமக்கு லெஃப்ட் சைடு நிக்குறது சீனு.... @imcheenu

சாகசன் said...

கமெண்ட் மாடரேசன காணோம் ??? என்னாச்சு ????

K.Arivukkarasu said...
This comment has been removed by the author.
K.Arivukkarasu said...

ட்விட்டப் வர முடியாத வருத்தம் ......... உங்கள் பதிவைப் படித்ததும் மேலும் அதிகரித்தது ..... அடுத்த மெகா ட்வீட்டப் கோவையிலாமே ? அப்படியா ? .......... ஜேசு ஏன் உங்களை கழட்டிவிட்டார் என்று வரும் பதிவில் தெரிவிக்கவும் !

சேலம் தேவா said...

//வலமிருந்து இடமாக குட்டி சாகசன்,மீ,கருப்பையா,.....??//

சேலத்து புகழ் கில்லாடி கிட்டு :)

Unknown said...

@சேலம் தேவா நம்ம பக்கத்து ஊரு! அதான் மறந்துட்டாரு! ;)