Sunday, October 22, 2017

நம்ம ஸ்லீப்பிங் பார்ட்னரே ஸ்லீப்பr செல்லா இருந்தாரே?

காவிக்கு மாறிய அரசு விழா! பார்ப்பவர் கண்ணில் கோளாறு " இது காவி அல்ல சிவப்பு நிறம்"- அமைச்சர் ஜெயக்குமார் ரத்தம் வருது சாரே


===========2 டாக்டர் அனுமதி இல்லாமல் இனி மருந்து வாங்க கூடாது :விஜயபாஸ்கரன்

கமிசன் அதிகமா தர்ற மெடிக்கல்ஷாப் தானே டாக்டர்சோட பேவரைட்?

============


3 கயிற்றுக் கட்டில் ஆயிரம் டாலர்.ஆஸ்திரேலியாவில் இந்திய மாடல் கட்டில் ஆன் லைனில் விற்பனை # கோடீஸ்வரன் ஆக எளிய வழி,எப்டி எல்லாம் ஏமாத்தறாங்க


=============


4 ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் - ராகுல்
நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டிங்க,வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா கூப்டு்ங்க


=============


5 இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைத்தாலும் உபயோகம் இல்லை - பொன்.ராதா # அதாவது பாஜக வுக்கு உபயோகம் இல்லை?


=============

6 ஜெயா டிவிக்கு எதிராக வருகிறது அம்மா டிவி- எடப்பாடி # ஜெயா டிவி ,அம்மா டிவி இந்த 2 க்கும் எதிராக வருகிறது ஜெயாம்மா /ஜெயா அத்தை டிவி −ஜெ.தீபா


=============


7 ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் கமல் மோடியுடன் தான் இணைய வேண்டும் | S.v சேகர் # அதுக்கு அதிமுக ல சேர்ந்துடலாம்.டெல்லியின் தமிழக கிளை


==============


8 டெங்குவை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது.
-விஜயபாஸ்கர் # நம்ம கட்சிக்காரங்களையே"கட்டுப்படுத்த முடியல,4 அணி

=============


9 ஆளுநரை வாழ்த்துவதில் பதவி சார் மரபு மீறப்பட்டுள்ளது! வித்யா சாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்யமாட்டார்−ஸ்டாலின் # புது தவறு செய்வார்?

=============


10 தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் -பொன்.ராதா # முதல்ல டாஸ்மாக்கை மூடனும்.அப்புறம் அதிமுக அமைச்சர்கள் வாயை.

===============

11 மதுவுக்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது: மோடி # வயசான வங்க சரக்கு அடிச்சுக்கலாமா?


================

12 இளைஞர்களை வேலையை விட்டு நீக்கினால் தான் சொந்த தொழில் தொடங்குவர்:பியுஷ் கோயல் # பியூஸ் போன பல்பு கூட எதுக்காவாது ,யாருக்காவது பயனா இருக்கும்


==================

13 ஆட்சியை விட்டுகொடுத்து ஜெ.விற்காக சிறைக்கு சென்ற சசிகலா தேசதுரோகியா?- தினகரன் # செஞ்சது திருட்டு,இப்போ எதுக்கு இந்த புரட்டு?


==============


14 தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்து உள்ளது கவலை அளிக்கிறது: தமிழிசை ",+2 ல 800 மார்க் எடுத்தவங்க எல்லாம் டாக்டர்ங்கறாங்க


================

15 சினிமா டிக்கெட் விலை 25%வரை உயர்த்தலாம்- தமிழக அரசு# கொள்ளை அடிப்பதில் 15% அரசுக்கு தந்தா போதும்


================


16 பிக்பாஸ் 2வது வந்த எனக்கு எந்த பரிசுதொகையும் வழங்கப்படவில்லை - சினேகன்
#8 பொண்ணுங்களை 16 தடவை கட்டிப்பிடிச்சு தடவுனதுக்கு சரியாப்போச்சு

==============


17 கூட்டணியே இனி கிடையாது, தனித்தே போட்டி - விஜயகாந்த்# குடிகாரர் பேச்சு விடிஞ்சா போச்சு,அரசியல்வாதி வாக்கு அந்த நிமிசமே காலாவதி ஆச்சு


===================18 ஜெ. சொத்துக்களுக்கு நானும் தீபக்கும் மட்டுமே வாரிசுகள்-தீபா வழக்கு. அந்த 4 வருச தண்டனையை ஆளுக்கு 2 வருசம் எடுத்துக்க ரெடியா?


================


19 டி.டி.வி. தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக பசும்பொன்பாண்டியன் இருந்துள்ளார்: ஜெ.தீபா # நம்ம ஸ்லீப்பிங் பார்ட்னரே ஸ்லீப்பr செல்லா இருந்தாரே?


================

20 வாரிசு அரசியல் மாற வேண்டும்": கார்த்தி சிதம்பரம் கருத்து. போறவங்க ஒரு கருத்து சொல்லிட்டு போறாங்க

==============

0 comments: