Monday, October 30, 2017

மெர்சல் பட "லிங்க்

தொழில் சார்ந்த எந்த ஊழலிலும் என் மகன் ஈடுபடவில்லை # அமித் ஷா.# அப்போ ஊழல் சார்ந்த தொழில் பண்றாரோ என்னவோ?


===============
2 அரசு மருத்துவமனையில் இறந்தால் மட்டுமே டெங்கு கணக்கில் வரும்: துரைக்கண்ணு - சாகற நிலைல இருக்கும்போது ஜிஹெச் அட்ரஸ் கேட்டு அங்கே போயிடனுமா
================
3 மோடி 3 லட்சம் இளைஞர்களை ஜப்பானுக்கு அனுப்பி தொழில்துறை வல்லுநர் ஆக்க ஜப்பானிய அரசுடன் ஒப்பந்தம்! பாதிப்பேர் அங்கேயே செட்டில்,ஆகிட்டா?
==============
4 தமிழக அரசியலில் கலைத்துறையினருக்கு இடமில்லை!' - தம்பிதுரை # MGR,JJ,கலைஞர் எல்லாம் யாரு?
============
5 பட்டாசு வெடிங்க, ஆனா புகை வராம பாத்துக்கங்க - அமைச்சர் ஹர்த்வர்தன் # எல்லாரும் மேரேஜ் பண்ணிக்குங்க, ஆனா ஒரு பய/பொண்ணு பேபி மட்டும் ம்ஹூம்
================
6 மழைகாலத்தில் காய்ச்சல் வரும் - அமைச்சர் செல்லூர் ராஜு # ஆமா, வெய்யில் காலத்தில் வேர்வை வரும்,குளிர் காலத்தில் MOOD வரும்,வேற வேற
=============
7 எதிர்க்கட்சி தலைவர் என்னை அவமரியாதை செய்ததில்லை: ஸ்டாலினுக்கு வித்யாசாகர் ராவ் புகழாரம்... # அவரு கலைஞரோட வாரிசு,பூடகமாதான் நக்கல் அடிப்பாரு
===============
8 பிஜேபியைப் பார்த்து நேரு பயப்பட்டார்-மோடி # நேருவைப்பாத்து மவுண்ட்பேட்டன் பிரபுவே பயப்பட்டாராம்.அப்போ யாரு டான்?
===============9 மெர்சல் பட GST பற்றிய வசனங்களை நீக்க சொல்லி தமிழிசை கண்டனம் # மொத்தப்படத்துல அந்த ஒத்த வசனம்தான் ஒரிஜினல்.அதையும் நீக்கச்சொனனா எப்டி?===============


10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவேன்: ஜெ.தீபா # 2017 தீபா வலி ஜோக்


===============

11 கடந்த 2 மாதத்தில் காங்கிரஸில் 25 லட்சம் பேர் இணைந்துள்ளனர் - திருநாவுக்கரசர்
#25 லட்சம் பேரோட ஆதார் கார்டு நெம்பர் சொல்லுங்க பார்ப்போம்


===============

12 நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் டாக்டரோ விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
# வசூல்ராஜா MBBS பார்த்தீங்கன்னா இதுக்கு பதில் உண்டு


=============

13 கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறேன்: ஓவியா
வேற சாபம் எல்லாம்"விடுவாரே?


===============


14 ஜெ மரணம்− சசிகலாவை தனியாக விசாரித்தால் உண்மை வெளிவரும் - EVKS# தனியா விசாரிச்சா லஞ்சம் குடுத்துடுவாப்டி.10 பேர் விசாரிக்கனும்.லைவ்"ரிலே


===============


15 வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடவில்லை - ரிசர்வ் வங்கி தகவல் எல்லா வங்கி வாசல்லயும் ஆதார் எண் அவசியம் னு போர்டு எதுக்கு?


=================


16 பாஜகவுக்கு "பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் வீக்கு".. போட்டுத் தாக்கும் குஷ்பு # ஆனா காங் க்கு 2 மே வீக் ஆச்சே?


==============


17 பேச்சுரிமைக்கு திமுக எப்போதும் ஆதரவு: ஸ்டாலின் # கத்தி ல 2ஜி ஊழல் பத்தி விஜய் பேசுனதை சொல்றார் போல


=============


18 தமிழகம் முழுக்க எழுச்சிப் பயணம்.. நவ.7ம் தேதி தொடங்குகிறார் ஸ்டாலின் # ஊர்வலம் சேலத்துல தொடங்கி ஊட்டி தொட்டபெட்டால முடியுதாம்


==============


19 மெர்சல் பட "லிங்க்"கை பகிர்ந்து வசூலைக் கெடுப்போம்... டாக்டர்கள் சங்கம் # நல்ல எண்ணம்.ஆபரேஷன் பண்ண வேண்டிய பேஷண்ட் விஜய் ரசிகர்னா?


=============


20 மெர்சல்−் மருத்துவ பரிசோதனை குறித்து தவறான கருத்துக்கள்− அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஒரிஜினல் வெர்சன் ரமணா பார்க்கல போல

============

0 comments: