Thursday, October 05, 2017

,கமல் சகலகலாவல்லவரா?

அண்ணனும் ,தங்கச்சியும் ஒரே பெட் ல பக்கத்து பக்கத்துல படுத்திருக்காங்க,திடீர்னு இடி மழை


இன்செஸ்ட் கதையா?
யோவ்.பிக்பாஸ் டாஸ்க்"இதான்==============

2 தம்பி, ஒரிஜினல் லைசன்ஸை எடு,இல்லைனா 3 மாசம் ஜெயில்தான்


நான் வண்டியே ஓட்டலையே?
படத்தை மட்டும் அந்த ஓட்டு ஓட்டுனியே?


====================


3 திருச்சி மலைக்கோட்டைக்கு ஒரு டிக்கெட் கொடுங்க


அங்கே எதுக்கு இப்போ?
தேவை ஏற்பட்டா கோட்டைக்குப்போவோம்னு கமல் சொன்னாரே?=========================

4 ரொம்ப கஷ்டமான டாஸ்க் கொடுத்துட்டீங்களாமே?


ஆமா,ஒரு மாப்ளை ,2 பொண்ணு ,2 வெவ்வேற ஸ்பாட்ல பர்ஸ்ட் நைட் கொண்டாடனும்.எப்டி நம்ம க்ரியேட்டிவிட்டி?


==============


5 FBல ஒரு பக்கி கூட இதுவரை இம்ப்ரஸ் பன்னல .எல்லாம் காமெடி பீசுக

மிஸ்,இதுல சோகம் என்னன்னா அதை சொல்றவக நயன் Dp ல இம்ப்ரஸ் பண்ண பார்ப்பதுதான்


==================

6 நான் பாடின பாட்டை ஒருத்தருக்கு அனுப்பினேன்
அப்ப FBவிட்டு போனவர் தான்
இன்னும் காணம்
ப்ளூவேல் கேமை விட டேஞ்சர் கேம் போல


===============

7 தலைவரே!நமது அடுத்த கட்ட போராட்டம் என்ன?

விஜய் ஆண்ட்டனியோட "அண்ணாதுரை" டைட்டில் க்கு எதிர்ப்பு,எப்டி நம்ம விழிப்புணர்வு?


================

8 சார்,என்"ட்வீட்டை RT பண்ணுனா உங்க டிபி க்கு மார்க்"போடுவேன்

ஓஹோ,முதல்ல மார்க் போடுங்க.அப்பாலிக்கா அப்போக்காலிப்டா

===============

9 நான் 55k ஃபாலோயர்ஸ்
டச் பண்ணிட்டா
ட்ரிட் வைப்பேன்,நீங்க?
சாரி,பிரண்ட்சா இருந்தாலும் ,பாலோயரா இருந்தாலும் டச் பண்ணாமதான் பேசுவேன்


================

10 ஜட்ஜ் = கூட்டத்தை கண்ட்ரோல் பண்ற சாக்குல லேடி போலீஸ் கிட்ட தப்பா நடந்துக்கிட்டீங்களா?

பொண்ணை பாத்ததும் என்னை என்னாலயே"கண்ட்ரோல் பண்ண முடியல


=================

11 பிக்பாஸ் ஜூலி அரசியலுக்கு வரனும்

ஏன்?
தகுதியே இல்லாத டாக்டருங்களே அரசியலுக்கு வந்தாச்சு,நர்ஸ்"வரக்கூடாதா?

==============

12 சார்,உங்க ஆளோட அடுத்த பட டைட்டில் "ஆர்ச்சி" னு எப்டி சொல்றீங்க?

மகேஷ்பாபுவோட அடுத்த பட டைட்டில் ஸ்பைடர் ஆச்சே?


=================

13 அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பண்ற எதுவுமே எனக்குப்பிடிக்கல
ஓஹோ,என்ன செஞ்சீங்க?
ட்விட்டர்ல ,FB ல அவரை பிளாக் பண்ணிட்டேன்,எப்டி நம்ம சாமார்த்தியம்?


==================


14 தலைவரே! நீங்க முதல்ல"திரைச்சித்ரா படிச்ட்டு அதுக்கப்புறம்தான்"விருந்து" படிப்பீங்களாமே,அது ஏன்?

ஏன்னா எனக்கு முதல்ல படம்,பின்"தான் கதை


==================


15 சார்,ஆரவ் ஓவியா கிஸ் சீன் காட்டாததுக்கு என்ன வியாக்யானம் சொன்னீக?

குழந்தைங்க டிவி பாக்கறாங்க னு
அப்போ இன்னைக்கு 6 கிஸ் சீன் காட்னது?


==================


16 இனிமே 25 நாட்களுக்கு டாஸ்க் ரொம்ப சிரமமா இருக்கும்

ஓஹோ.என்ன செய்யனும்
பொண்ணுங்க கூட கபடி ,தொட்டு விளையாட்டு எல்லாம் விளையாடனும்


===================

17 காதலி(விஜய் ரசிகை) =நீ முதலா முடிவா??? ❤❤❤

காதலன்(அஜித் ரசிகன்) = நான்"அசல்


===================

18 தலைவரே!நமக்கு தமிழ் தெரியுமா?

நஹி,மாலும் நஹி
தமிழ் தெரியாதவங்க தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாது,கெட் அவுட்


================


19 மேடம்,ஏ 4 ஷீட் பூரா நீட் நீட் னு ஸ்ரீ ராமஜெயம் மாதிரி எழுதி வெச்சிருக்கீங்க?

எனக்கு தெரிஞ்சதைத்தானே எழுதமுடியும்?


=================

20 மேடம்,கமல் நல்ல பாடகர்,டான்சர்,டைரக்டர்,டயலாக்ரைட்டர்

ஆங்,நான் நம்ப மாட்டேன்
அவர் ஒரு நடிகர்,அவருக்கு எப்டி சகலமும் தெரியும்?சகலகலாவல்லவரா?


================

0 comments: