Sunday, October 15, 2017

இந்தி தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் ஆதார் கார்டு வழங்கப்படும்!?

எரிபொருட்களின் விலை குறைய துவங்கி உள்ளது− பெட்ரோலியதுறை மந்திரி ஏத்தும்போது 5 ரூபா,10 ரூபா,குறைக்கும்போது 5 பைசா 10 பைசா


==============

2 நோய்த்தொற்றின் காரணமாக, ஜெ வை டாக்டர்கள் கூட பார்க்கவில்லை." - தினகரன்
கூட பார்க்கலைன்னா எப்டி நோய் எப்டி"குணமாகும்?


==================

3 அனைவரும் இந்தி கற்க வேண்டும் - பிரதமா் மோடி.
தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் ஆதார் கார்டு வழங்கப்படும்னு சொல்லலையா ஜி?

==============

4 ஜெ சிறை சென்றிருந்தாலும் அவரை கட்சியிலிருந்துநீக்கி இருப்போம்-OSமணியன்
,வரலாறு தெரியாம பேசக்கூடாது,நாம நெடுஞ்சாண்கிடையாதானே கிடந்தோம்

================

5 “அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களும் என் பின்னால் உள்ளனர்
- ஜெ. தீபா # எனக்கு தெரிஞ்சு கார் டிரைவரும் ,புருசர் மாதவனும் மட்டும்தான் இருக்காங்க

================

6 ஜெ இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் என்று நான் சொல்லவில்லை− திண்டுக்கல் சீனிவாசன் பல்டி பைத்தியம் ஆக்கிடுவாங்க இந்த பைத்தியங்க


=================

7 எனது மகனுக்கு பல கணக்குகள் இருப்பதாக கூறுவது பொய்: CBI புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு. # எந்த திருடனாவது ஆமா,நான் திருடன்னு ஒத்துக்குவானா?

=======================


8 மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டுடனும் தொடர்புகொள்ள முடிகிறது: மோடி.. நம்மால தொடர்பு கொள்ளவே முடில


===============

9 செந்தில்பாலாஜி நண்பர்கள் நிறுவனங்களில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.#100 கோடி,அப்போ அவரு விஜய் ரசிகரா இருக்கும்


===============


10 ஜெயலலிதா மரணம் பற்றி யாரும் கருத்து கூற வேண்டாம்: அமைச்சர் கடம்பூர் ராஜு உண்மை பேச மாட்டோம்,பேச வர்றவனையும் பேச விட மாட்டோம்


=================

11 தீபாவளி பண்டிகைக்கு காதிப்பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள்
-மோடி# காதிப்பொருளுக்கு வரிவிலக்கு,அரசு உதவித்தொகை தந்தாலே போதுமே


==================

12 உண்மையான அதிமுக நாங்கள் தான்; கட்சியும், சின்னமும் எங்களுக்கே சொந்தம்: ஜெ.தீபா # நாங்க நாங்க ன்னா யார் யார் மேடம்?
நான்,மாதவன்,டிரைவர்


==================

13 “ஜெ மரணம் தொடர்பாக விசாரணை நடந்தால் EPS அணியினர் தான் சிக்குவார்கள்”: புகழேந்தி# Ops,Eps,சசி,தினகரன் 4 பேருமே கூட்டுக்களவாணிகளா இருக்கும்


===================


14 ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழிசை # ரைட்டு,நேத்து வரை டவுட் வரலை,இப்ப தான் லைட்டா டவுட் வருது


================


`15 மோடி பாராட்டும் வகையில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது - விஜயபாஸ்கர்# அம்மா இட்லி"சாப்பிட்டார்,எங்களைப்பார்த்து சிரித்தார்


=================


16 பொது இடங்களில் கட்டிபிடிப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்
~பாஜக M.P
சாக்ஷி மகராஜ் . # சினேகன்கள் ஜாக்கிரதை


==================

17 சேவை செய்து விட்டு கமல் அரசியலுக்கு வரட்டும்-சரத்குமார்
சேவை செய்தா போதுமா?உன்னால் முடியும் தம்பி லயே அதை செஞ்சுட்டாரே?


==============


18 உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் # தூத்துக்குடி காரர் யாரையோ அட்டாக் பண்றார் போல


==============


19 ஜெயலலிதா 3நாள்மட்டுமே சுயநினைவோடு இருந்தார்-தீபக்
#3 வருசம் கழிச்சு இதை சொல்லலாமில்ல?இப்ப என்ன அவசரம்?


================


20 சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு! சூழல்ல ஜெ வை கவனிக்காம ஏன் வீடியோ எடுத்தாரு?கேப்பமில்ல?


==============

0 comments: