Tuesday, October 17, 2017

இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் அத்வானி, முதல் "அயன்"மேன் சூர்யா

சட்டீஸ்கர் −விவசாயி க்கு ரூ.76 கோடி மின்கட்டணம் செலுத்தும்படி Bill அனுப்பப்பட்டு சர்ச்சைக்குள்ளானது # மல்லைய்யா கிட்டே விட்டதை இப்டி வசூல்?


==============
2 அனைவருக்கும் மின்சாரம் −செளபாக்யா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி# இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?நான் கூட எல்லாருக்கும் 1 சம்சாரம் னு
===============
3 சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்- செய்தி# பரோல் ல வந்து EPS சை பழி வாங்க சசியின் மாஸ்டர் பிளானோ என்னவோ?
=============
4 பாரத் ஸ்டேட் வங்கி− குறைந்த பட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு # அக்கவுண்ட் ஹோல்டர்ஸ் எண்ணிக்கை குறைந்தால் மினிமம் பேலன்ஸ் இன்னும் குறையும்
=============
5 டெங்கு பாதிப்பில் தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ளது; தமிழிசை# வெகு விரைவில் முதலிடத்துக்கு கொண்டுவருவோம்னு சொல்லிடப்போறாங்க===============

6 பாஜகவுடன் கைகோர்க்க தயார்-கமல் # கமல் என்ற"சொல்லுக்கே தாமரை என்றுதானே பொருள் னு சமாளிச்சுக்கலாம்


================


7 ஊழலுக்கு எதிரான நிலையில் சமரசம் இல்லை--மோடி.
# சபாஷ் ஜி,ஆனா OPS க்கு வாழ்த்து சொல்லி சாம்பார் ஆகிட்டோமே?


================


8 ரஜினி ஆன்மீகத்தில் இருப்பதால் பாஜகவுக்கு ஏற்றவர் -கமல் # அப்போ நாத்தீகம் பேசுவதால் இவரு தி.க ல சேர்ந்துடுவாரோ?


================


9 சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் "கொசு இல்லா இல்லம்" என்ற புதிய திட்டம் தொடக்கம்; இலலம் னு"பேர் வெச்சா மேட்சிங்கா இருக்கும்


==============

10 செங்கோட்டையின் தான் முதல்வராக வேண்டியது", EPS சை CM ஆக தேர்வு செய்தது தினகரன்தான்−தீபக்# சொந்தக்காசுல சூன்யம் வெச்சுக்கிட்டாரு


================

11 50000க்கு மேல் பட்டாசு வாங்க ஆதார் கட்டாயம்- ரூ 49,999 வீதம் 10 வெவ்வேற கடைல வாங்கினா எப்டி தடுப்பீங்க ?


===============


12 நான் ,அனைத்து அமைச்சர்களும் ஜெ வை பார்த்தோம்:அமைச்சர் செல்லூர் ராஜூ பார்த்தீங்க சரி,அவரு"உங்களைப்பார்த்தாரா?மில்லியன் டாலர் கேள்வி


=================

13 தீபாவளியை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் -அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் # சிறப்புப்பேருந்துன்னா டபுள் மடங்கு கட்டணம் ?


===============

14 காய்ச்சலுக்கு மக்கள் தனியார்க்கு போகாமல் GHக்கு செல்ல வேண்டும்- பொன் ராதா # உண்மை,நிலவேம்பு கசாயம் இலவசம்.பாராட்டுக்கள்


==============


15 10 க்கும் மேற்பட்ட MLAக்களின் ஆதரவு எனக்கு உள்ளது-ஜெ.தீபா
ஒரு இணை முதல்வர் போஸ்ட் பார்சல்


===============


16 என் கட்சிக்கு மக்களே பணம் தருவார்கள் - கமல்# இவரை நம்ப முடியாது,கட்சி ஆரம்பிக்கறேன்னு வசூல் பண்ணீட்டு மருதநாயகம் ஆரம்பிச்டுவாரு


===============


17 அப்பல்லோவில் ஜெவுக்கு சிறந்த சிகிச்சை, ஆனால் ஜெ சிகிச்சை பெற்றதை நான் பார்க்கவில்லை -மைத்ரேயன்# மெர்சல் படம் பிரமாதம்.ஆனா இன்னும் ரிலீசே ஆகல


===============


18 இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் அத்வானி - மாபா பாண்டியராஜன் # முதல் "அயன்"மேன் சூர்யாவா?ஏதோ பேசனும்கறதுக்காக அடிச்சு விடக்கூடாது


=================


19 வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி ஒரு போதும் சொல்லவில்லை: தமிழிசை # ஒரு வேளை ஜனங்கள் லூசா இருப்பாங்களோ?


=================


20 நான் நினைச்சா 5 நிமிடத்தில் அதிமுக ஆபீஸ பூட்டுவேன்-தினகரன் # ஆனா நினைக்க மாட்டீங்க,அதானே?


================