Sunday, October 01, 2017

தேசியக்கொடி லன்ச்

ஜட்ஜ்=சிறையில் இருந்து சாதாரண உடையில் ஷாப்பிங் போனீங்களா?

கைதி = ஆமாங்க எஜமான்.எளிமை தான் அருமை னு என் கணவர் சொல்வாரு

=================

2 டியர்,இப்ப என்னதான்
உன் பிரச்சினை ்னு
வாயைத்திறந்து கேட்டாலே
பாதிப் பிரச்சினை
ஆனா,என் பர்ஸ் முழுசா தீர்ந்து போகுமே?
தீர்ந்து போகும்.

==============


3 தலைவரே!ஊழலை ஒழிக்கப்போறேன்னு FB ல ஸ்டேட்டஸ் போட்டிருந்தீங்களே?

ஆமா

ஒழிச்சாச்சா?
அந்த ஸ்டேட்டசை அழிச்ட்டேன்


====================

4 என்னய பாத்தா எப்டி தெரியதுன்னு தெரில.. யார பாத்தாலும் அதே கேள்விய கேக்குறாங்க

ஓஹோ!என்ன கேள்வி,அது?

இதோ,இப்போ நீங்க கேட்டீங்களே?அதான்


=================

5 இன்னைக்கு நெறய ட்விட் போஸ்ட் பண்ணிட்டு டெலிட் பண்ணிட்டு இருக்கேன்... 😖😖😖

அப்போ 2 தடவையும் வெட்டி வேலை தான்"செஞ்சிருக்கிங்க?


===================

6 நம்ம எது சொன்னாலும் நம்ப மாட்டேன்றாங்களே!! என்ன"செய்ய?

நான் சொல்ற எதையும் நம்பாதீங்க"னு சொல்லிப்பாருங்க


=================

7 இனி பெண்களை வர்ணிக்கும் படியான கவிதைகள் எழுதுவதாக இல்லை.

ஓஹோ.திருந்தீட்டீங்களா?

ஒன் பை ஒன் வர்ணிக்கப்போறேன்.க்ரூப்பா வர்ணிக்கமாட்டேன்

================

8 எனக்குப் பிடித்த எல்லா பெண்களிடமும் இந்தப் பாடலை பாடச்சொல்லி கேட்ருக்கேன்

அவங்களுக்குப்பிடிச்ச எல்லா ஆண்களிடமும் பாடி காட்டி இருப்பாங்களா?


===============


9 ரைசா = டைம் கிடைக்கும்போதெல்லாம் நான்"ஜோக் அடிச்ட்டு இருப்பேன்,அது தப்பா?

அதை ஜோக் னு நீங்களா நம்பிட்டு இருக்கறதுதான் தப்பு


================

10 சார்,படம் எப்டி இருக்கு?

Fans எல்லாரும் லட்டு ஊட்டி விட்டுட்டு இருக்காங்க.

பட ரிசல்ட்"கேட்டா கேண்ட்டீன் ரிவ்யூ தந்துட்டு இருக்கீங்க


=================

11 செப் 1

லைசன்சை எடு

இந்தாங்க
இது ஒரிஜினல் இல்லையே?

நான் விஜய் ரசிகர்ங்க
புரியல
அசல் அஜித் படம் ஆச்சே?

=================


12 டியர்,உன்
புருவம் எனக்கு வானவில்லை நியாபகப்படுத்துகிறது

7 கலர் யூஸ் பண்ணலையே?ஒரே கலர் தான்,அதுவும் ஐடெக்ஸ்"மை தான்


=================


13 சார்,தகுதி இழந்துட்டாங்கனு வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்ல நுழைவது ஜனங்களை ஏமாத்தற மாதிரி ஆகாதா?

அரசியல்வாதிதான் ஏமாத்தனுமா?


====================

14 யுவர் ஆனர்.15 வயசு சிறுமியை ரேப் பண்ணினா என்ன தண்டனை?

சாமானயன்னா தூக்கு/ ஆயுள்"தண்டனை,
சாமியார்னா 10 வருசம்


===================

15 ஜட்ஜ் = 85 வயசான கிழ போல்ட்டே!எந்த தைரியத்துல ரேப் செஞ்சே?

தீர்ப்பு வர எப்படியும் 15 வருசம் ஆகிடும்கற தைரியத்துலதான்


=================


16 டியர்,ஒரு காக்கை நாம் வைக்கும் உணவை சாப்பிடுவது எதனால?

நாமும் சாப்பிடலைன்னா யார்தான் சாப்டுவாகனு நினெச்சிருக்கும்


==================


17 மை பூசிக்கொள்ள
மறுக்கும் பிடிவாதக்காரி
நிலா என வர்ணிக்க முடியாது

அரு"மை" நிலா என்றால் ஏத்துக்கும்தானே?


=================

18 மாப்ளைக்கு விளையாட்டு புத்தி ஜாஸ்தி,அதான் பொண்ணு தர யோசிக்கறோம்,

அதனால என்ன?

ப்ளூவேல்ஸ் கேம்ஸ் விளையாடிட்டா?


================


19 டியர்,தினமும் தயிர் சாதத்தை எப்படி சாப்பிடுறீங்க?
முதல்ல தக்காளி சாதம்,பின் தயிர்சாதம்,கடைசியா கொத்து மல்லி சாதம் .இதுதான்"தேசியக்கொடி லன்ச்


====================

20 டேய்.ஒரிஜினல் லைசன்ஸ் எங்கே"வெச்சிருக்கே?

சொப்பன சுந்தரிட்ட அடமானம் வெச்சிருக்கேன்;

இப்போ அவ எங்கே?
அவளை யார் வெச்சிருக்காங்களோ"தெரில


======================

0 comments: