Wednesday, October 18, 2017

சந்து மக்கள் சந்தி சிரிக்க வெச்சிடுவா ங்க

சிகரெட்டை தனித்தனியாக விற்க தடை # கூட்டுக்குடித்தனம் நல்லது,அதுக்காக இப்டியா?


============
2 ஜெ மரணம் குறித்து மாறுபட்ட கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டாம் - வைத்தியலிங்கம் # ஆமா, சசியிடம் கேட்டுட்டு ஒரே மாதிரி ஒப்பிக்கவும்==============
3 இந்தியாவிலேயே தூய்மையான கோவில்- மதுரை மீனாட்சி அம்மன் மத்திய அரசு தேர்வு இத்தனை நாள்ல தமிழ்நாட்டுக்கு செஞ்ச ஒரே நல்லது
==============4 அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்று எனக்கு தெரியாது கமல்ஹாசனுக்கு தெரியும்: ரஜினிகாந்த் # ஆனா 2 பேருமே தனுஷ் கிட்டே ஏமாந்துட்டீங்க
==============
5 சிகரெட்டை தனித்தனியாக விற்க தடை # அடுத்த்தா டாஸ்மாக்ல சிங்கிள் பாட்டில் ஸேல்ஸ் இல்லை , கேஸ் ஃபுல்லா ( பாக்ஸ்) தான் நு சொல்வாங்களோ?===============
6 ஜெ மரணம் குறித்து மாறுபட்ட கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டாம் - வைத்தியலிங்கம் # ஓ , கருத்தா பேசிட்டாராம்

=============

இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: மத்திய அரசு தேர்வு # அறிவிப்பு வந்த பின் ஆளாளுக்கு இங்கே டேரா அடிச்சு குப்பை போட்டுட்டு போகாம பார்த்துக்கனும்

=============


8 அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்று எனக்கு தெரியாது கமல்ஹாசனுக்கு தெரியும்: ரஜினிகாந்த் # அது தெரியாம தான் “போர் வரும்போது பார்த்துக்கலாம்னு அடிச்சு விட்டீங்களா? எதுவுமே படிக்காத ஸ்டூடண்ட் எக்சாம் வரும்போது பார்த்துக்கலாம்னு சொன்ன மாதிரி

=================


9 மக்களை முச்சந்தியில் விட்டதுதான் மத்திய அரசின் 3 ஆண்டு கால சாதனை. ஸ்டாலின் # அடுத்த தேர்தல்ல இந்த சந்து மக்கள் சந்தி சிரிக்க வெச்சிடுவா ங்க

=======================


10 அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கேட்டால் என் கூடவா என் அழைக்கிறார் கமல் # அவர் கூட போனா உங்க வாக்கு வங்கியை வெச்சு அவர் ஜெயிச்சிடுவார்


=================

11 ஓ.பி.எஸ். ஒரு அதிர்ஷ்டசாலி: ரஜினி! # அப்போ தமிழக மக்கள் துரதிர்ஷ்டசாலிகள்?

===============


12 சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம்-செல்லூர் ராஜூ #
என் பையன் நல்லா படிக்கறானாம்
வாத்தியார் சொன்னாரா?
;மொமெண்ட்
என் பையனேதான் சொன்னான்

===============


13 அம்மாவிடம் இருந்து 20,000கோடியை திருடியுள்ளார் தினகரன் - ஜெயக்குமார் # மாசம் 1 ரூபா சம்பளம் வாங்கின ஜெ 10 வருசம் × 12=120 மாசம்×1 =120 rs


================


14 குவைத் மன்னருக்கு தெரிவிக்க வேண்டிய நன்றியை சவுதி மன்னருக்கு தெரிவித்த தமிழிசை # குவைத்
சவுதி
நன்றி
3ம் 3 எழுத்துத்தானே?தப்பில்லைம்பாரோ?

================


15 நடிகர் விஜய் முதலமைச்சர் ஆனால் மகிழ்ச்சி: எஸ்.ஜே.சூர்யா..# தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸ் ஆகறதுல இவரே வேட்டு"வைப்பார் போல


================


16 மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ # நாம"சர்க்கஸ் கோமாளி"மாதிரி நடந்துக்கறமே?


================


17 அதிமுக ஆட்சி 200 ஆண்டுகள் தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார் # இதுக்கு பரிகாரம் எதுனா இருக்குங்களா?


================


18 வளர்ச்சி வேண்டுபவர்கள் /விரும்புகிறவர்கள் வரி கட்டுங்கள் - அருண் ஜெட்லி # அப்போ நமீதா ரசிகர்கள் மட்டும் தான் கட்டுவாங்க வரியை


===============


19 டெல்லி கொசுக்களால்தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது - அதிமுக MP காமராஜ்
கேஜ்ரிவாலை அரெஸ்ட் பண்ணிடுவோமா?

================


20 ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொசு ஒழிப்பு நாளாக
கடைபிடிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் # மீதி 6 நாட்களையும் கொசு உற்பத்தி நாளா கொசு கொண்டாடுமோ

========================

0 comments: