Tuesday, October 03, 2017

சினேகனால் கூட தொட முடியாத.....

அதிமுகவுல இருந்து மட்டுமில்லை...திமுகவிலிருந்தும் வருவார்கள் - பொன்.ராதா # மிச்சம் சொச்சம் வெந்தது வேகாதது இதெல்லாம்?

=================

2 அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பா.வளர்மதி நீக்கம் - டிடிவி # என்னது?இத்தனை நாளா இலக்கியத்தை காப்பாத்துனது இந்தக்காவா?


===============


3 எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது - ஸ்டாலின்
# சினேகனால் கூட தொட முடியாதா?


=================

4 ஆட்சி கலைப்பு ஏற்பட்டு தேர்தல் வந்தால்,அது திமுகவுக்கே சாதகம்-திருமா # அந்த அதிர்ஷ்டம் இப்போதைக்கு"இல்லை என்பதே திமுக வின் ஜாதகம்


=================


5 நமது எம்ஜிஆர், ஜெயா டிவியை கைப்பற்றுவோம் - ஓபிஎஸ், இபிஎஸ்
# டைம் கிடைக்கும்போது மக்களுக்கு எதுனா நல்லது செய்வீங்களா?


================


6 நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது அதிமுகவில் நிலவுவது உட்கட்சி குழப்பம் -ஆளுநர் # நீங்க ஆளுநர்தானா?னு"எங்களுக்கு குழப்பமா இருக்கு


=================

7 மீன்கள்அதிகம்இனப்பெருக்கம் ஆனதால்வைகையின்நீரளவு குறைந்துள்ளது -செல்லூர் ராஜூ # மீனம்மா அதிகளவு ட்வீட்டியதால் ட்விட்டர்"ஹேங்"ஆகிடுச்சும்பாரோ?

=================

8 சசிகலா எடப்பாடியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்- புகழேந்தி
உடம்பு எப்டி இருக்கு?ன்னாரா?
உடம்புக்கு எப்டி இருக்கு?ன்னாரா?


================

9 ஹைகோர்ட்டை அரசியல் மேடையாக பயன்படுத்தக்கூடாது என திமுகவுக்கு கோர்ட் கண்டனம் # நாம வடிவேல் மாதிரி,எங்கே எந்த கெட்டப்ல போனாலும் அடி விழுது


================


10 தான் உல்லாசமாக இருக்க 400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய ராம் ரஹீம் சிங்"# ஆலை இல்லாத"ஊர்ல இலுப்பை பூ சர்க்கரை ஆகிடும்னு நினைச்ட்டாரு

================

11 முதல்வரை மாற்றுவது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை: தமிழிசை # ஆறு மாசத்துக்கு ஒரு டைம் ஒரு புது முதல்வர்னா ஜாஸ்தியா இல்ல?


================

12 எடப்பாடியுடன் இணைய தினகரன் தயாராகவே இருக்கிறார்:
அப்படி இல்லையெனில் ஸ்டாலின் - தினகரன் அரசு அமையும்: சு.சுவாமி# முதலை வாயா? ஆத்து சுழலா

==================


13 விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் – தினகரன் # என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் மொமெண்ட்


================


14 "இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக்கிறது" -் கமல் # ஜனங்க துரத்தி விட்ட ஜூலி க்ரூப்பை மீண்டும் உள்ளே விட்டப்ப எங்களுக்கும் அதே


=================


15 தற்போது தமிழகத்தில் நடைபெறுவது அம்மா வின் நல்லாட்சி, அதில் ஊழலுக்கு இடமில்லை.−Ops # அப்புறம்"எப்டி நமக்கு இடம் கிடைச்சுது?


================

16 தமிழகஅரசை அகற்ற ஆளுநர் தவறினால் திமுக தனது பந்தைப் பயன்படுத்த தயங்காது.# மார்க்கபந்து துன்மார்க்கபந்து ஆகிடுவாரோ?

===================

17 நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை: தம்பிதுரை
# ஆரவ் மாதிரியே கப்ஸா விடறாரு


=================

18 தேவை வரும்போது கோட்டையை நோக்கி புறப்படுவோம் -் கமல் # இவரும் கலைஞர்"மாதிரியே"கல்யாண"விசேஷங்கள்ல அரசியல் பேச ஆரம்பிச்ட்டாரு

==================


19 சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஏரிகளை பார்வையிட செல்கிறேன் - ஸ்டாலின் # முதல்வர் அரியணையில் ஏறி அமர்வார்னு பார்த்தா ஏரி டூர் போறாரு

=================


20 அதிமுகவை கூறுபோட விடமாட்டோம்-எடப்பாடி பழனிசாமி.
# அதான் கூறு கெட்டுக்கிடக்கே?

=================

0 comments: