Monday, October 02, 2017

சினேகன் அவ்ளோ நல்ல கேரக்டர்"கிடையாதா?இதுதான்"உங்க டக்கா?

நவோதயா பள்ளி தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அரசியலாக்க வேண்டாம் -தமிழிசை# சரி,சினிமா ஆக்கறோம்,ஆனா ஓடாதே?

=============


2 ரெயில்வே அதிகாரி எனக்கூறி 3-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது # அடப்பாவி,ரயில்வே மினிஸ்டரே அத்தனை பண்ணலையே?


=============

3 EPS ம் OPSம் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு கட்சியை மீட்பார்கள் - வளர்மதி # அப்போ டெல்லி போவது எப்போ?அடகு வெச்சதை மீட்கனும்ல?


=============


4 நாட்டை காப்பாற்றவே ராமர் லட்சுமணன் போல OPS,EPSம் இணைந்துள்ளனர் - உதயகுமார்
,துரியோதனனும்னு சொன்னாலாவது பொருத்தமா இருக்கும்


================

5 ஓபிஸ்சும், இபிஸ்சும் சசிகலாவிற்கு துரோகம் இழைத்துவிட்டனர் -T.T.V. தினகரன் # ஒவ்வொரு அரசாட்சியிலும் துரோகம் ஒளிந்திருக்கும்,ஜெ வுக்கு சசி


================

6 கோதாவரி, கிருஷ்ணா நதிகளை பாலாற்றுடன் இணைப்போம்: எடப்பாடி - நம்ம ஆட்சில பாலாறும் ,தேனாறும் ஓடுச்சுனு வரலாறு சொல்லும்


================

7 கர்நாடக ரிசார்ட்டுக்கு தமிழக போலீஸ் வருகை ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி
கிடைக்குதுன்னா மாஸ்கோ வரை கூட போவாங்க


===============


8 அரசியலோ, ஜாதி, மதமோ எதுவும் இந்த சமுதாயத்தை சீர்கெடுத்துவிட முடியாது: கமல் # பிக்பாஸ் ,மானாட மயிலாட,சீரியல்கள் போதும் அந்த வேலைக்கு


================


9 ஐசியுவில் நடராஜன்... தொடர்ந்து டயாலிசிஸ் - கல்லீரல் கோளாறு - கவலையில் சசி # செரீனா மீது போட்ட பொய்யான கஞ்சா கேஸ்,ஜெ க்கு செஞ்ச துரோகம்


===============


10 நான் காங்கிரஸ் தலைவர்
பதவிக்கு தயாராயிட்டேன் - ராகுல்# நம்ம ஜாதகப்படி திருமண யோகம் ,தலைவர் யோகம் 2 ம் தள்ளிப்போகும்னு பட்சி சொல்லுது


===============


11 தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் −விஷால்#இங்கே எல்லாருமே அவங்கவங்க "தேவை"க்கு தான் அரசியலுக்கு வர்றாங்க,மக்கள் சேவைக்கா வர்றாங்க?


==============


12 மோடியின் ஆட்சி - "நிறையப் பேச்சு, குறைந்த செயல் " − ஜப்பான் டைம்ஸ். # நம்ம புகழ் ஜப்பான் வரை பரவிடுச்சா?மகிழ்ச்சி


===============


13 ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராக கொந்தளித்த தினகரன் # ஆக்கல்,காத்தல் தொழிலை விட அழித்தல் ஈசி


================


14 அதிமுகவிற்கு இனி பொதுச்செயலாளர் கிடையாது-பொதுக்குழுவில் தீர்மானம் # ராசி இல்லாத பதவி ,அப்போலோ,சொர்க்கம் ,ஜெயில்


===============


15 நதிகள் பூமியின்
ரத்தநாளங்கள்
அவற்றை காப்பது
நம் கடமை
மிஸ்டு கால் கொடுங்க
-ரஜினி
தர்றேன்னீ்க?
கொடி யா? அது தனுஷோட ஹிட் படம்
சார்,கோடி

=================


16 வருகை பதிவில் மாணவர்கள் ஜெய்ஹிந்த் கூற வேண்டும் -மபி அரசு
# அட்டென்டென்ஸ் எடுக்கும்போது அவங்க ஏன் ஆக்சன் கிங் அர்ஜூன் பட டைட்டில் சொல்லனும்?

================


17 தமிழகத்தில் ஆட்சியை அகற்ற காலம் கனிந்துவிட்டது| மக்கள் அனைவரும் போருக்கு தயாராகுங்கள் -.ஸ்டாலின்
# ஆபிஸ் போக தயாராகவே டைம் சரியா இருக்கு


===============


18 ரவுடிகள், சமூக விரோதிகள் மூலமாகவே சுங்கச்சாவடிகளில் வசூல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் # போலீசை விட்டு வசூலிச்சிடலாமா?ஈசி


================


19 அடுத்தகட்ட போராட்டம்
ஆட்சிக்கெதிரான
அச்சுறுத்தல் போராட்டமாக
இருக்கும்-ஸ்டாலின்
# இவரும் டெய்லி ஒரு டாஸ்க் பண்றாரு,ஆனா பிக்பாஸ் ஆகமுடியல


==============

20 தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி - ஸ்டாலின் # என்னது?சினேகன் அவ்ளோ நல்ல கேரக்டர்"கிடையாதா?இதுதான்"உங்க டக்கா?


================

0 comments: