Thursday, October 05, 2017

நடிகை நதியா வுக்கு டெய்லி ஏன் மிஸ்டு கால் கொடுத்தே?

குருவே!தாமரை இலைல ஏன் தண்ணி ஒட்டறது இல்ல?

சிஷ்யா!தமிழ்நாட்ல தாமரையே ஒட்டாதப்ப தாமரை இலையைப்பத்தி என்ன கவலை?


===============


2 டாக்டர் கிருஷ்ணசாமி ஜோதிகா வை நாயகி ஆக்கி படம் எடுத்தா"என்ன டைட்டில் வைப்பாரு?

மகளிர் மட்டம்

================
தலைவரே! எதுக்காக இன்னைக்கு ஆளுநரை சந்திச்சீங்க?

சன் னுக்கு ஏது சண்டே?
அது"சரி,ஆனா ஆளுநருக்கு சன்டே லீவ் வேணாமா?


================


4 சார்,ஹீரோ கிட்டே கால்ஷீட் வாங்கியாச்சு,படத்துக்கு கதை ரெடி பண்ணியாச்சா?

ஹீரோ சூட்டிங் வராம எப்டியும் இழுத்தடிப்பாரு.அப்ப ரெடி பண்ணிக்கலாம்


================


5 நான் வெறித்தனமான சூர்யா ரசிகை,ஆறு படத்தை 4 தடவை பாத்தேன்
அடடா,அதுக்கு 24 படத்தை ஒரு தடவை பாத்திருக்கலாமே?
6*4 = 24
புரியல


================

6 சார்,பிக்பாஸ் ஷோ க்கு இன்னைக்கு சம்பளம் தர்லை இன்னும்
நீங்கதான் தரனும் புரில
உங்க சொந்த கருத்தை எல்லாம் சொன்னீங்களே,அதுக்கான சார்ஜ்

==============

7 ஐ டி ல ஒர்க் பண்றவங்களை கொலை செய்யும் பேய்ப்படம்தான் ஹாலிவுட் படமான ஐடி
டேய் டகால்டி அது இட் (IT)


=============


8 மேடம்.திருச்சி மீட்டிங்க்கு பெரிய கூட்டம் வந்ததுன்னீங்களாமே?
அது"வந்து வயசுல பெரியவங்க"கூட்டம் வந்ததுன்னேன்


==============


9 என்"படம் பெரும்பாலும் இருட்லதான் கதை"நடக்கும்
அதுவும் நல்லதுதான்,ஷூட்டிங்க்கு ஹீரோ வர்லைன்னாக்கூட டூப் போட்டு எடுத்துடலாம்


===============10 நடிகை நதியா வுக்கு டெய்லி ஏன் மிஸ்டு கால் கொடுத்தே?
யுவர் ஆனர்,அப்போதான் நதிகளை இணைக்க முடியுமாம்


==============

11 மிஸ்,உங்க கதைக்கு ஒன் லைன் வேணும்னு FB ல ஸ்டேடஸ் போட்டீங்களே?கிடைச்சுதா?
யா,மீதி 3071 பாலோயர்சும் அனுப்புனா முழுக்கதையும் ரெடி ஆகிடும்


==============


12 தலைவரே! நீட் எக்சாம் எழுத"நீங்க"தயாரா?
யோவ்,படிப்பு ஏறி இருந்தா நாங்க ஏன் அரசியலுக்கு வர்றோம்?


===============


13 கைதி − .எனக்கு மசாஜ் பண்ணி விட ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாமா?
இது ஜெயிலா?மசாஜ் க்ளப்பா?நான் ஜட்ஜா?மாமாவா?


=============

14 இன்ஸ்பெக்டர்,தமிழ் ராக்கர்ஸ் அட்மினை அரெஸ்ட் பண்ணீட்டோம்
கிழிச்சீங்க,அவர் FB ல "நான் அவன் இல்லை"னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்காப்டி


================


15 சாப்டியா, கைகழுவுனியா,ப்ளேட்கழுவுனியா தூங்குனியா,குளிச்சியா கேள்விக்லாம் பதில் சொல்லமாட்டேன்.
சரி மிஸ்.போன் நெ ?அட்ரஸ்?FB link?

==============

16 மிஸ்!உங்க பாலோயர்ஸ் வாட்ச் பண்ணனும்னா டெய்லி நல்ல ஸ்டேட்டஸா போடுங்க
தேவை இல்லை,டெய்லி ஒரு புது வாட்ச் கட்டி போட்டோ அப்டேட்டினா போதும்

==============


17 இந்தியாவில் இருக்கும் எல்லா நதிகளையும் ஜீவநதி ஆக்க என்ன செய்யனும் குருவே?
நடிகை ஜீவிதா வை ஆல் இண்டியா ரிவர் பாத் டூர் அனுப்பனும்


===============


18 தமிழ் மிஸ் தன்யா −கரும்பு= தோட்டமா? தோப்பா? ஏன்?
ஒரே வகை தாவரம் இருந்தா அது தோப்பு,காக்டெயில் போல் பல வகை இருந்தா தோட்டம்

================


19 சத்குரு ,காடுவெட்டி குரு என்ன வித்யாசம்?

ஜாதிக்கட்சில இருக்கும் ரவுடி
மதவாதக்கட்சில இருக்கும் கேடி
இருவராலும் சமூகத்துக்கு கேடு


===================20 காலையிலே சுடு சாதத்துல கொதிக்க கொதிக்க சாம்பார் ஊற்றி சாப்பிடுவது வரமா? சாபமா?

ஆற அமர சாப்பிட்டால் வரம்,
அரக்க பரக்க சாப்பிட்டால் சாபம்

===============

0 comments: