Friday, October 13, 2017

பொங்கலுக்கு மாற்றாக ராமராஜன்(பசு நேசன்) விழா

கமல் கட்சி தொடங்கி அழைப்பு விடுத்தாலும் இணையமாட்டேன் - குஷ்பு"# கேரளா சிஎம் .டெல்லி சிஎம்னு அவர் சந்திக்கற லெவலே வேற,அவராவது அழைப்பதாவது


==============

2 பசுவை நேசிப்பவர்கள் வன்முறையில் ஈடுப்பட மாட்டார்கள்...

மோகன் பகவாத் # மெர்சல்"ல"பைட் சீனே இருக்காதுங்கறாரா?


==============


3 கமல்-கெஜ்ரிவால் சந்திப்பு ஒன்றும் தமிழக அரசியலில் புரட்டி போடாது − தமிழிசை # ஆனா எல்லா தலைவர்களும் பதறி அறிக்கை விடறாங்களே அது ஏன்?


=================

4 காவிரி விவகாரத்தில் மத்தியஅரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்-வாசன் & EPS இருவருக்கும் இடையில் நடுநிலையா கவர்னரை கை கொடுக்க வெச்சது போலா


===================================


5 ”மருத்துவமனையில் ஜெ இட்லி சாப்பிட்டதாக பொய்சொன்னோம்; - திண்டுக்கல் சீனிவாசன்
படம் போல எதுவும் ஒரிஜினல் இல்ல?


==============

6 மருத்துவமனையில் ஜெ வை"பார்க்க சசிகலா மட்டுமே உள்ளேசெல்ல முடிந்தது” - திண்டுக்கல் சீனிவாசன்
"உள்ளே தான் இருக்காரு,ராசி அப்டி


==============


7 ட்ரம்ப் ஒரு மனநோயாளி

-கிம்ஜோங்
கிம்ஜோங் ஒரு பித்துபிடித்தவர்
-ட்ரம்ப் # அதிமுக கோஷ்டிகளை"விட தர லோக்கலா இறங்கிட்டாங்களே?=================


8 தமிழக முதல்வராக விரும்புகிறேன்,− கமல் விரும்பிக்குங்க,தடை இல்லை,சீமான்,அன்புமணி,விகாந்த்,ஸ்டாலின் எல்லாரும்தான் விரும்பறாங்க


==================


9 அர்விந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்

# டைரக்டா பிரதமர் ஆகிடலாம்னு"பிளான்"போடறார்"போல======-====================================

10 தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது "நாமே திட்டத்தை கொணடு"வந்தது வேணா திமுக வா இருக்கலாம்,ஆனா பாஜக தான் அதை


==============

11 அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் திருமா இருக்கிறார் பார்த்துகொள்வார் என்று ஓய்வு எடுத்திருப்பார்-.ஸ்டாலின் # நல்லவேளை,அவரு"இல்ல


==============

12 மூன்றே குண்டுகளில் உலகத்தை அழித்து விடுவோம் - வடகொரியா மிரட்டல் # ஜூலித்தனமா பேசறாங்க,அவங்களும் இந்த உலகத்தில்தானே வாழறாங்க?


==============

13 மருத்துவமனையில் சசிகலா கூட ஜெ-வை பார்க்கவே இல்லை - தினகரன் # டாக்டரும் பார்க்கலை போல,அல்லது பார்க்க விடலை போல.உங்களை எல்லாம் நம்பி...


=================

14 கோவைமக்களின் சோப்பின் நுரைதான் நொய்யல் ஆற்றில் வருகிறது:அமைச்சர் கருப்பணன்

# அதெப்டி கட்சி ல எல்லாரும் அறிவுக்கொழுந்துகளாவே இருக்காங்க?=================

15 சிசிடிவி காட்சிகளை வைத்து பூஜை செய்கிறீர்களா? - டிடிவி தினகரனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி # எடிட்டிங் ,மார்பிங்,கிராபிக்ஸ் நடக்குதோ


==================


16 தீபாவளிக்கு மாற்றாக நரகாசுரன் விழா கொண்டாடுவோம் - வீரமணி # பொங்கலுக்கு மாற்றாக ராமராஜன்(பசு நேசன்) விழா கொண்டாடனுமா?மெர்சலா இருக்கும்

=================


17 ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து லட்சம் ரூ கொள்ளை.# கொள்ளை அடிச்சது ஒரு முஸ்லீம்"தீவிரவாதியாதான் இருக்கும்னு புத்திசாலித்தனமா சொல்லலையா?

=================


18 ஜெ.சிகிச்சை விபரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச் சொன்னதை வெளியே சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்# சொன்னதை"சொல்லும் கிளிப்பிள்ளைகள்


================

19 கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 70 வயதான சுவாமி கவுசலேந்திர பிரபாஞ்சாரி பலஹரி மகாராஜ் கைது."சாமியா"பாவித்தா இப்டித்தான்

====================

20 எனது குடும்பத்திற்கோ, எனக்கோ வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்து இல்லை − ப.சிதம்பரம் # அப்போ ஏன் மகன் தலைமறைவா இருக்கனும்?


================


0 comments: