Thursday, October 12, 2017

தாமரையை"வளர விட்டா நமக்கு ஆபத்து தான்

ஜூலி பாமக வில் சேரும்னு யூகிக்கறேன்

ஏன்?
அன்புமணிக்கு ஓவியா க்கு ஓட்டு விழுதேனு பொறாமை,ஜூலி க்கு ஓட்டு விழலைனு கோபம்

==================

2 பிக்பாஸ் ல விஷால் வருவார்னு எப்டி சொல்றே?

லட்சுமி மேனனும் ,வரலட்சுமியும் வர்றாகளாம்

================

3 இந்த வாரம் ரைசா தான் தலைவராம்.சினேகன் எனி அப்ஜெக்சன்?

அடடே.இருங்க.போய் ரைசாவை கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்லிட்டு வந்துடறேன்


=================

4 தலைவரே!நீட் தேர்வுக்கு இனி எதிர்ப்பு வராது

எப்டி?
மருத்துவ முத்தம் பிராக்டிகல் க்ளாஸ் உண்டாம்

==================

5 குருவே!சுயநலமா யார் இருந்தாலும் அவங்களை எனக்கு பிடிக்காது

சிஷ்யா!உன்னையே நீ வெறுத்துட்டா எப்டி?


===============

6 மிஸ் ரைசா! திடீர்னு தமிழ் நல்லா பேசறீங்களே,எப்டி?

அது வந்து ஆங்.டாஸ்க் படி அப்டி

================

7 சினேகன் − எல்லோரும் கேம் விளையாண்டப்ப நான் மட்டும் விளையாடலை

ஏன்?
எனக்கு பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடவே டைம் சரியா இருக்கு

================

8 ஜட்ஜ்= எதுக்காக கொலை செஞ்சீங்க?

எனக்கு 18 வயசு ஆகிருச்சுல்ல. தப்பு பண்ணலாம்.நான் கோபத்தில இருக்கப்ப செஞ்சதெல்லாம் தப்பே இல்ல


==================

9 காயத்ரி! எதுக்காக ஆரவ் கூட டான்ஸ் ஆடுனீங்க?

ஓவியாவை வெறுப்பேத்த எனக்கு தெரிஞ்ச வழி இதான்

=================

10 ஆரவ் =தப்பு செய்வது மனித இயல்பு

என்ன தப்பு செஞ்சே?
ஓவியா க்கு கிஸ் தந்தேன்

எப்டி இதை சரி பண்ணப்போற?
இன்னும் 3 பேருக்கு தந்து..

===================

11 எதுக்காக டைவர்ஸ் கேட்டீங்க?

கெட்ட வார்த்தைல திட்னேன்
புருசனையா?
நோ நோ அவர் குடும்பத்தை மட்டும் தான் திட்னேன்.அது தப்பா?

===================

12 ஜட்ஜ் =BF ல நடிச்சீங்களா?

ஆமா.
தப்பில்லையா?
சரி நடிச்ட்டேன்.அதை"ஏன் ஹைலைட் பண்ணி காட்டனும்.சென்சார் பண்ணி லைட்டா"காட்டி இருக்கலாமே?

=====================

13 என் தொழில் ல அடிக்கடி கெட்ட வார்த்தை பேச வேண்டி இருக்கும்

ஓஹோ,அவ்ளோ கேவலமான தொழிலை ஏன் செய்யனும்?வேற கவுரவமான தொழில் செய்யலாமே?

===================

14 சார்.உங்க போன்"நெம்பரை ஆதார் எண்ணுடன் இணைக்கனும்

ஓஹோ,கனெக்சன் தர்றப்ப ID Proof பா எதை வாங்குனீங்க?
ஆதார்கார்டு.ஓ.சாரி சார்

==================

15 விஷாலுக்கும் ,சினேகனுக்கும் தகராறு வரும்னு யூகிக்கறேன்

எதனால?
எப்டியும் லட்சுமிமேணன் அழும்போது பாய்ஞ்சு போய் கட்டிப்பிடிச்சு தடவிடுவாரு


==================

16 எனக்கு 18 வயசு ஆகிடுச்சு,அதனால கெட்ட வார்த்தை பேசுவேன்.

மேடம் வெளில வந்து பாருங்க,எத்தனை பேரு உங்களை திட்றாங்கனு


=================

17 பாசமலர் ரீமேக் எடுக்கலாம்னு இருக்கேன்

அண்ணனா சினேகனையும் தங்கச்சியா ஜூலியையும் புக் பண்ணிடுங்க.11 மணிக்காட்சியாவே 100 நாள் ஓடும்


===================

18 குருவே!விவாதம் செய்ய தயங்குபவர்கள் கருத்து சொல்ல தயங்குவதில்லை!!அது ஏன்?

விவாதம் பண்ணா விதண்டாவாதம் ஆகிட்டா வம்பு.கருத்து சொல்றது ஈசி


===================

19 குருவே! ஆகாய தாமரை குளத்தில்,ஆற்றில் வளர்ந்தா நீராதாரம் பாதிக்கப்படுமா?

சிஷ்யா!பொதுவாவே தாமரையை"வளர விட்டா நமக்கு ஆபத்து தான்

================

20 டாக்டர்
எனக்கு மூளைக்காய்ச்சல்னீங்க
ஆமா
உடம்பெல்லாம் மூளை போல
ஆனா உடம்பெல்லாம் கொதிக்குதே?


===================

0 comments: