Thursday, October 19, 2017

பவர்ஸ்டார் சீனிவாசன் கூட இந்த அளவு காமெடி பண்ணலை

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் #15 கோடியை இவங்க ஒதுக்கிக்கிட்டு ?

===============

2 Hராஜாவின் தந்தை மரணத்திற்கு CM EPவாழ்த்துக்களை கூறினார் என உளறிய அமைச்சர் உதயகுமார் # அஞ்சலி செய்யவேண்டிய"இடத்துல"அஞ்சலி எங்கே?னு கேட்ட கத

==============


3 இந்திய கலாச்சாரப்படி தாஜ்மஹால் கட்டப்படவில்லை - யோகி உ.பி CM. # புத்திசாலிங்க பூரா பாஜக வா?பாஜக காரங்க பூரா புத்திசாலிகளா?

==============

4 இன்றிலிருந்து 3 நாளைக் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படும்- தமிழக சுகாதாரத்துறை# நிலைமை ரொம்ப சீரியஸ் என கொள்க


==============


5 திமுக நடத்தியது கொள்ளை அரசு.. அதிமுக நடத்துவது வெள்ளை அரசு.. ஜெயக்குமார் # அவங்க அடிச்சது கொள்ளை,நாம அடிப்பது பகல் கொள்ளை


================


6 என்னை மாதிரி குண்டா இருப்பவர்கள் சைவ உணவு உட்கொண்டால் உடல் ஸ்லிம்மாகலாம் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முதல்ல ஒல்லி ஆகி காட்டுங்க


==============


7 இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் வெளிநாட்டு மது அருந்தலாம்: மத்திய அமைச்சர் சேர்ந்தால் இது போல் லூஸ் தனமாய் எதுனா உளறலாம்


==============


8 ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா விதத்திலும் மாற்றம் வரும்- லதா ரஜினிகாந்த்
மாற்றம் ஸ்கூல் வாடகை பாக்கி செட்டில்மெண்ட்?


=================


9 திருப்பதியில் வேண்டிக்கொண்டதால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது- EPS வெங்கடாசலபதியோட மச்சினனாம்

===============


10 நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினி மனதில் இருக்கும்: லதா ரஜினி கிட்டே கூடத்தான் ஏகப்பட்ட திட்டம் இருக்கு−அமலாபால்


=================


11 டெங்கு கொசுக்கள் டெல்லியிலிருந்து வந்தவை - அ.தி.மு.க. MP.காமராஜ் #
விசிட்டிங் கார்டு,ஆதார் கார்டெல்லாம் காட்டி இருக்குமோ?


===============

12 சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
-ஜெயக்குமார் & OPS மட்டும் ஊர்ல இருக்கமாட்டாங்க,அதானே?

===============


13 மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தீபாவளி முதல் திரையரங்குகள் மூட முடிவு # கள்ளக்காதல் ஜோடிகள் இனி எங்கே போவாங்க பாவம்?


==============


14 உ.பி சுற்றுலாதளப் பட்டியல்ல இருந்து தாஜ்மகால் நீக்கம்.
−செய்தி மன்னரின் படைப்பு என்பதாலா?முட்டாள்தனமான முடிவு


==============


15 எனக்கு தல கூட நடிக்க ஆசை − பிக்பாஸ் ஜூலி # நம்ம தளபதி கூட நடிம்மா,100 கோடி vs கேடி மேட்சிங்கா இருக்கும்


==============


16 தீபாவளி முதல் திரையரங்குகள் மூடல் # தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸ் ஆகும்னு சொன்னதாலயா?


================


17 சசி யின் 15 நாள் பரோல் மனு ரிஜக்டட் # அடுத்த கட்டமா சின்னம்மா திட்டம் படு பயங்கரமா இருக்கும்


===============


18 இளைத்த உடலை பெற சைவ உணவை சாப்பிடுங்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # பவர்ஸ்டார் சீனிவாசன் கூட இந்த அளவு காமெடி பண்ணலை

=====


19 சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்க அதிமுக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது:ஆர்.பி. உதயகுமார்
தலைக்கு மேல ஒரு குடை வெச்சிருக்கலாம்


=============


20 ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்−−லதா ரஜினி நல்லது செய்வார்னு படிச்ட்டேன்

=============