Tuesday, October 03, 2017

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

குருவே!முட்டாளாய் இருந்தாவது
நிம்மதியாய் வாழ விரும்புகிறேன்

சிஷ்யா!ஜூலியாவா இருந்தாலும் ஜாலியா இருப்பேன் கறே?ஹும்,என்னத்த சொல்ல?

================

2 அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன்
அதிகாரத்திற்கு அல்ல

அப்டியா?அப்போ திருக்குறள் ல அன்பு அப்டீனு அதிகாரம் இருக்கே?அதுக்கு கட்டுப்படுவியா?

==================

3 டியர்,என்னை உன் நிழலா ஏத்துக்குவியா?

ம்.ஆனா ராத்திரி என்னை பாலோ பண்ணமுடியாதில்ல?


==================

4 மேடம்,Big boss is a lady... I mean the creative head...னு எப்டி"கெஸ் பண்றீங்க?

பொதுவா ஆம்பளை அடுத்தவங்களை முட்டாள் ஆக்கி அதை ரசிக்கமாட்டான்


================


5 சார்.சொல்ல வந்ததை நேரடியா சொல்லாம ட்வீட்டா போட்டிருக்கீங்களே?உங்க பொண்ணுக்கு புரியுமா?

புரியும்னு சொல்லல ்,புரிஞ்சுக்கிட்டா நல்லாருக்கும்


================

6 சார்,உங்க டிராமால சமையல் பண்றதை 2 மணி நேரமா காட்றீங்களே ஏன்?

அப்டி காட்னாத்தான் ஸ்பான்சர்"பைசா தருவேன்னு ஆச்சி மசாலா சொல்லிடுச்சு


================


7 சார்,உங்க ஊர் ல பொண்ணுங்களுக்கு ஏதாவது கஷ்டம்னா சொல்லி அனுப்புங்க

எதுக்கு?

அவங்களை ஆறுதல்படுத்தவே ஒரு ஆளை நேர்ந்து விட்டிருக்கோம்


===============================================


8 நான் எங்கே போனாலும் எனக்கு ரெட் கார்பெட் விரிக்கனும்

ஏன்?

அப்போதான் ஊரே சிரிக்கனும்

===============

9 dear ,என்னை உப்பு மூட்டை தூக்கனும்

பாவ மூட்டை தூக்க எனக்கு பிடிக்காது


================

10 தலைவரே!திருக்குறளைவிட பகவத்கீதை உயர்ந்ததா?எப்டி?

திருக்குறள் 133 பக்கம்தான்.ஆனா கீதை அதை"விட பல மடங்கு பக்கம் அதிகம்.அப்போ அதானே டாப்?


==================


11 மேடம்.கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா?

தெரில.வழக்கமா அவனை பேர் சொல்லி எல்லாம் கூப்பிடமாட்டேன்.டேய் வாடான்னா வந்துடுவான்


=================

12 நான் இன்னைல இருந்து ஒரு வாரம் மவுன விரதம் இருக்கப்போறேன்

அப்டியா?முத நாளே பேசிட்டீங்களே?


================

13 உள்ளே இருக்கறவங்களுக்கு இந்த வாரம் எலிமினேசன் இல்லைனு தெரியாது

இதே டயலாக்கை 10 டைம் சொல்லீட்டீங்க
அப்ப நிச்சயம் தெரிஞ்சிருக்கும்


==================


14 குருவே! நாளை நடப்பதை இன்னைக்கே சொல்வீங்களாமே?சொல்லுங்க பார்ப்போம்

சினேகன் அடுத்ததா ஆறுதல் சொல்லப்போறது பிந்து மாதவிக்கு


=================

15 மிஸ்,கேமரா இருக்கு ,கண்காணிக்குதுனு தெரியுமா?தெரியாதா?

யும்

அப்போ ஏன் உங்க பாய் பிரண்ட் பத்தி சொன்னீங்க?


================


16 அமைச்சரே! நால்வகைப்படைகளும் தயாரா?

ஆம் மன்னா! ஓவியா ஆர்மி ,பிந்துமாதவி ஆர்மி , ரைசா ஆர்மி ,நயன்தாரா ஆர்மி அனைவரும் ரெடி

================

17 எனக்கும் அவளுக்குமான இடைவெளி
முத்தங்களால் நிரப்பப்படுகிறது

அதாவது காலத்துக்கும் பிளையிங் கிஸ் தான்?


================


18 பிந்துமாதவி ஆர்மி உருவாகும்னு 300 வருசம் முன்பே நம் முன்னோர்கள் கணிச்சிருக்காங்க

எப்டி?

பந்திக்கு முந்து
படைக்கு பிந்து னு பழமொழி இருக்கே?


==================


19 உழைப்பவனுக்கு யோகாவும் தேவையில்லை... தியானமும் தேவையில்லை..

எப்டி?சப்போஸ் அவன் யோகா மையத்தி்ல் மாஸ்டரா இருந்தா?


================


20 இனிமே கேரளா தமிழகத்துக்கு ஆதரவாதான் எல்லா விஷயத்துலயும் இருக்கும்

எப்டி?

அவங்க ஆளு ஓவியா க்கு நம்ம ஆளு சப்போர்ட் பண்றாங்க இல்ல?


===============

0 comments: