Monday, October 02, 2017

நாட்டுக்கு சேவை செய்ய நாகரீகக்கோமாளி வந்தாரய்யா

மற்ற கட்சிகளை விட பாஜகவிற்கு அதிக தமிழ் உணர்வு உள்ளது - தமிழிசை # ஆனா நாம எது செஞ்சாலும் தமிழகத்துக்கு எதிராகத்தான் உள்ளது,அது ஏன்?


===============


2 அரசியல் பிரச்சினைகள் பற்றி பதில் சொல்ல மாட்டேன் -செங்கோட்டையன் # எக்சாம் ஹால் வந்துட்டு கொஸ்டீன் பேப்பர் வாங்க மாட்டேன்னா எப்டி?

==============

3 ஈபிஎஸ் ஒபிஎஸ்
இருவரும் பாஜகவின்
அடிவருடிகள்-ஸ்டாலின்
# நமக்கு காங்கிரஸ் கிரேஸ்,வீட்டுக்கு வீடு ஒரு சினேகன்

==================

4 வீட்டுக்கு போகணும்..தினகரன் தரப்பு பெண் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி.
# சீரியல் பாக்கனும்.அக்கம் பக்கம் வம்பு பேசனும்,எத்தனை வேலை இருக்கு


=================


5 அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போன்றது-செல்லூர் ராஜூ # பச்சோந்தி போன்றது ன்னா மேட்சிங்கா இருக்கும்


==================


6 பாஜக என்ற கங்கையில் யார் மூழ்கினாலும் புனிதம் அடைந்து விடுவார்கள் -் பொன் ராதா # அப்போ ஜெயில் கைதிகளை கட்சில சேர்த்து நிரபராதினு ரிலீஸ்?


================


7 மோடி இந்தியாவுக்கு பிரதமர், பாஜகவுக்கு அல்ல - உயர்நீதிமன்றம் விமர்சனம் | # ஜட்ஜ்ங்க எல்லாம் கமல் மாதிரி பேச ஆரம்பிச்ட்டாக


==============

8 சாமியார்களுக்கு எதிராக சதி நடக்கிறது - சுப்ரமணிய சாமி..# சாமிகள் ,சாமியார்கள் ஜாக்கிரதை,டைம் சரி இல்லை


===============


9 இந்துக்கள் பகுதியில் இசுலாமியர்களுக்கு வீடு கூடாது - பாஜக எம்.எல்.ஏ
# நீங்க சாப்ட்ட சாப்பாடு ஒரு முஸ்லீம் விவசாயி உருவாக்கிய அரிசியானா?


===============


10 சாமியார் குர்மீத்துக்கு சிறையில் சிறப்பு வசதிகள் இல்லை - சிறைத்துறை
# நல்லா செக் பண்ணிக்குங்க.சாமியாரே சிறையில் இல்லைனு நியூஸ் வரலாம்


=================

11 முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சி பதவி பறிப்பு; தினகரன் அறிவிப்பு
# அப்டியே இந்த ஜனாதிபதி ,கவர்னர்,பிரதமர் பதவிகளையும்...


=================

12 புறவாசல் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது - பொன்.ராதா # அதுக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டாரே?


=========================


13 நானே "கம்"முனு இருக்கேன்,என்"வாயைக்கிளறாதீங்க −அமைதிப்படை கஸ்தூரி # சரி,அல்வா கிளறுவோம்.Gumமா ஒட்டிக்கும்,சைலண்ட் மோடு க்கு போய்டலாம்

===============

14 திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற முடிவை திருமா மறு பரிசீலனை செய்ய வேண்டும்
-வைகோ நிம்மதியா இருந்தா இவருக்கு பொறுக்காதே?

================

15 Stunt artistக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என் வீட்டு கதவு திறந்தே இருக்கும்
- ரஜினி # ஏன்னா ஸ்டண்ட் விடறவங்க சாரோட பேவரைட்ஸ்


===================


16 31 பேரை பழிவாங்கத் துடிக்கிறது ஜெ. ஆவி! -கேரள ஜோதிடர் ஸ்ரீ வேங்கடசர்மா # பேட்டி வந்தது பகுத்தறிவு பகலவர் சன் டிவி ல,சபாஷ்


=================


17 காலையில் TTV அணி, மாலையில் Eps அணி மாறினார் திருப்பரங்குன்றம் தொகுதி MLA போஸ் # கட்டிப்பிடிக்க ஆள் சிக்கினா போதும்கற சினேகன் மாதிரி


===================


18 கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம்−ஸ்டாலின் # அவரும் நடவடிக்கை எடுக்கலைன்னா பிரதமரை சந்திப்பாரா?


=================


19 ‘டி.டி.வி.தினகரன் நவீன கோமாளி’ அமைச்சர் கே.சி.வீரமணி"# நாட்டுக்கு சேவை செய்ய நாகரீகக்கோமாளி வந்தாரய்யா


==================

20 டி.டி.வி.தினகரனுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு− நாஞ்சில் சம்பத் # நல்ல கண் டாக்டரை அணுகவும் .20 எப்டி 60 ஆகும்?


================

0 comments: