Thursday, October 26, 2017

ஒரு நாளைக்கு ஒரு GB பத்த மாட்டிங்குது

`1 பட ரிலீஸ் அன்னைக்கு மொட்டை அடிச்சு  பட டைட்டிலை  தலைல பச்சை குத்திக்குவோம்

 அட பொறுங்கப்பா , படம் ரிலீஸ் ஆனதும் செம மொட்டை அடிப்பாங்க


=================


2 பச்சோந்தி  கிட்டே ஏன் கலர் மாறிட்டு இருக்கே?னு ஏன் கேட்கறே?

பச்சோந்தி அமைச்சர்கள் பதில் சொல்லலை, அட்லீஸ்ட் இதாவது சொல்லுதா பார்ப்போம்


===============

சார்,உங்க ஒவ்வொரு படத்துலயும் ஒரு காலை மட்டும் தூக்குன மாதிரி ஒரு போஸ் தர்றீங்களே,எதுக்கு?


"தலை"யை தூக்கி வெச்சு கொண்டாடினா பிடிக்காது==================


4 கீரைகளின் ராஜானு பொன்னாங்கண்ணி கீரையை அழைப்பதை நான் ஒத்துக்க மாட்டேன்


ஏன்?
கன்னி னு வருது,அப்போ ராணி தானே கரெக்ட்?================


5 சார்,நம்ம படம் ரிலீஸ் ஆக நீங்கதான் மனசு வைக்கனும்


அது இருக்கட்டும்,ஆளப்போறான்"தமிழன் னு பாட்டு வரி இருக்கே,அப்போ நான் யாரு?=================


6 எங்க ஆள் படம் ரிலீஸ் ஆகுதுன்னா ஒரு அரசாங்கமே பயப்படுது,எப்டி அவர் பவரு?


பிரமாதம்,இப்போ யாரு யாரை சந்திக்க வீடு தேடி போனது?=================


7 சார்,நம்முளுது ஆக்சன் மசாலா படம் தானே?சஸ்பென்ஸ் படம்னு சொல்றாங்க?


படம் சொன்ன தேதி ல ரிலீஸ் ஆகுமா?ஆகாதா?னு கடைசி வரை சஸ்பென்சாவே இருக்கும்=================


8 குருவே! நீங்க நல்ல குடும்பத்தில்தானே பிறந்தீங்க?


ஆமா,அதுக்கென்ன?நல்லகுடும்பத்துபெண்கள் சபரி மலைக்கு வரமாட்டாங்களாம்,அப்போநாம தக்காளிதொக்கா?

=================

9 தலைவரே!டெங்கு பாதிப்பைப்பாத்து மெர்சல் ஆகிட்டீங்க போல.


ஆமா,ஏன் கேட்கற?
டெங்குவை தடை பண்ணுங்கன்னா மெர்சல் படத்தை தடை பண்ணி இருக்கீங்க?==================


10 கமலோட அபூர்வ சகோதரர்கள் கதையை சுட்டுட்டோம்னு அபாண்டமா பழி போட்டவங்க முகத்துல கரி பூசிட்டோம்


எப்டி?
விகாந்த்ன் பேரரசு கதை யைத்தான் சுட்டோம்================11 நெட் ல ரிலீஸ் ஆன எங்க பட கதை ஒரு ஃபேக் நியூஸ்
ஓஹோ, அப்போ உண்மையான கதை என்ன? இதான் ......
இது அதை விட கேவலமா இருக்கே? ====================


12 ஜோசியரே! நம்ம படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது

புரியல

 அதான் கிடைக்காதுன்னு சொல்லிட்டனே?

================

13 சார், 120 ரூ டிக்கெட், ஏன் 112 ரூ தான் தர்றீங்க?

20 நிமிச காட்சிகள் கட் பண்ணீட்டீங்க இல்ல .160 நிமிச படத்துக்கு 120 ரூ -ன்னா 140 க்கு 112


================


14 சார், நீங்க சொன்னபடி படம் லாஸ் ஆச்சுன்னா காம்பன்சேசனா 35 கோடி தந்துடறேன்

பத்தாது
ஏன்?
காம்ப்பன்சேசனுக்கு GST இருக்காம்


=================


15 என் எதிரே ஒரு எதிரி கூட கிராஸ் பண்ணமுடியாது

என்னங்க்ணா, ஒரு ஜூஜூபி ப்ளூ கிராஸ் ஒரு காட்டு காட்டிடுச்சே?


===============


16 சார்,ஹாலிவுட் தரத்துல சில காட்சிகள் வெச்சிருக்கீங்களாமே?

ரகசியமா வெச்சுக்குங்க The prestige படத்துல இருந்து நைசா சுட்டுட்டோம்.(மேஜிக்)


=================


17 ஒரு நாளைக்கு ஒரு GB பத்த மாட்டிங்குது

பெட்ரோல் நனைச்சு பத்தி பாருங்க


================


18 சார்,அந்த ஊர் ல 110 அடி கட் அவுட்,இந்த ஊர் ல 140 அடி கட்"அவுட்.உங்களுக்கு என்ன தோணுது?

"அடி" பலமா இருக்கும் போல னு தோணுது


=================


19 Dr.் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நினைவாற்றல் அதிகரிக்குமா?

S மிஸ்,குங்குமம் வைக்காம மறந்திருந்தா நினைவு வரும்


===============


20 மேடம்,தீபாவளிக்கு எல்லாரும் அதிரசம்,முறுக்கு சுடுவாங்க,நீங்க வடை சுட்டுட்டு இருக்கீங்க?

விஜய் ரசிகை
இப்பவே,சுட்டு வெச்ட்டா நாளை ஈசி
ஹிஹி

=================

0 comments: