Tuesday, October 24, 2017

நாம எடுக்கற படங்கள்தான் டூப்ளிகேட்னு பாத்தா..

இரட்டை கொலை வழக்கில்
கொலையை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாததால் பெற்றோரை விடுவித்த ஹைகோர்ட்# ஜட்ஜ்க்கு ஆதாயம் எனில் ஆதாரம் இல்லாமதான் போகும்


=============

2 டெங்கு அரசு ஒழிந்தால்தான் தமிழகத்தில் டெங்கு ஒழியும் - ஸ்டாலின்#நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெங்கு யாருக்கும் வராது ,இதையும் அடிச்சு விடுங்க


=================

3 டெல்லி தலைமைச் செயலகம் அருகே CM அரவிந்த் கெஜ்ரிவால் கார் திருடு போனதால் அதிர்ச்சி # திருடன் யார் கிட்டயோ பந்தயம்"கட்டி திருடி இருப்பான்


=============


4 சமூக வலைத்தளத்தில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பிய நபர் கைது
# டெய்லி 100 மீம்ஸ் வருது,அதை எல்லாம் பாக்கறதில்ல போல


================


5 டெங்குவை தடுக்க சாணத்தை வாசலில் தெளிக்கலாம்;செல்லூர் ராஜூ # நோ என்ட்ரி போர்டு வைக்கலாம்,ஏமாந்து திரும்பிப்போய்டாது?


===============


6 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ச்சி இல்லை -பொன்.ராதா #50 ஆண்டுகளாக பாஜக வுக்கு தமிழகத்தில் வளர்ச்சி இல்லை என திருத்தி படிக்கவும்


===============


7 பீரின் விலை ரூ.5-ம், குவார்ட்டரின் விலை ரூ.12-ம் அதிகரிப்பு
# 120 ரூ ஏத்தினாலும்"குடிகாரன்"குடியை விடப்போறதில்லை,


================


8 தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தது # இந்த 5 பேருக்கும் டெங்கு வந்துடப்போகுது.ஜாக்கிரதை


===============


9 மின் தேவைக்காக நிலக்கரி கேட்கவே பிரதமரை சந்தித்தேன்- ஓபிஎஸ் # மத்தவங்க முகத்துல கரி பூசித்தானே பழக்கம்,நாட்டுக்கு நல்லது செஞ்சு பாத்ததில்ல


===============


10 தாடி பாலாஜி தன்னை கொடுமைப்படுத்துவதாக மகளை பிரிக்க நினைப்பதாக் அவரது மனைவி புகார்# பெரும்பாலான தாடிகள் கேடிகளாக இருப்பதன் உறவியல் என்ன?


============+

11 திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அனைத்தும் எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்யப்படும்: அபிராமி ராமநாதன் # கோன் ஐஸ்க்ரீம்க்கு MRP எங்கே இருக்கும்


===============


12 விருதுநகரில் டெங்குவை நுழையவிடமாட்டோம்-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி # ஊர் எல்லைல கொசு வலை கட்டி விட்டுடுவாரோ?


===============


13 மழைக்காலம் முடிந்தஉடன் டெங்கு கொசுக்களின் ்வீரியம்
குறையும்-இம்காப்ஸ் செயலாளர்
#" அதுக்கு பெண் கொசுக்கள் தானே கவலைப்படனும்?


==================


14 ராமன் வானரப்படையைப் பயன்படுத்திக்கொண்டது போல, சிதறிய அ.தி.மு.க.வை மோடி பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்
பழ.கருப்பையா # வானரம் ஆயிரம்


================


15 பத்து லட்சத்தை தராமல் ஏமாற்றியதாலேயே அடித்தேன் −சந்தானம் # 15 லட்சம் தர்றதா சொல்லி தராம ஏமாத்தறவங்க ஜாக்கிரதை


===============


16 மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டதாக அட்லி வெளியிட்ட தகவலுக்கு தணிக்கை குழு மறுப்பு # நாம எடுக்கற படங்கள்தான் டூப்ளிகேட்னு பாத்தா..


===============


17 ஜெ க்கு சுகர் கொடுத்து கொன்றாரா சசிகலா" எதிரும் புதிரும் நிகழ்ச்சியில சன் நியூஸில் # அவர் அவருக்கு அல்வா கொடுத்துட்டார்னு இவங்க நமக்கு அல்வா


================


18 காங் தலைவராக விரைவில் ராகுல் பொறுப்பேற்பார் – சோனியா# கல்யாணம் பண்ணின பின்தான் பையனுக்கு பொறுப்பு வரும்னு சொல்வாங்க,ஆனா இவருக்கு வந்துடுச்சே


==================


19 டெல்லியில் பட்டாசு வெடிக்கலாம்.ஆனால் பட்டாசு விற்க கூடாது.# டாஸ்மாக்ல எவ்ளோ"வேணா குடி,ஆனா குடிச்ட்டு வண்டி ஓட்டாதே


==============


20 கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக பருவமழை பெய்வதால் டெங்கு பரவுகிறது செல்லூர் ராஜூ ஆண்டு கலைஞர் ஆட்சி,அதனால்தான் மழையே"இல்லைனு சொல்லல?


================

0 comments: