Wednesday, October 11, 2017

சடன் பிரேக்கிங் நியூஸ்

ஜட்ஜ்= இந்தியன் வங்கில ஏன் கொள்ளை அடிச்சே?

கைதி = ஏன்னா நான் ஒரு இந்தியன் ,பாரீன் பேங்க் ல கொள்ளை அடிக்க மாட்டேன்


===============


2 ரிலீசாகப்போகும் சிவகார்த்திகேயன் ,கார்த்தி 2 பேர் படமும் ஓடும்னு எப்டி யூகிக்கற?

டைட்டில்லயே க்ளூ
வேலைக்கா"ரன்"
தீ"ரன்"


==============

3 நயன்தாராவின் இந்நாள் காதலர் இயக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" யாரை குறிக்கும்?

சிம்பு,
பிரபுதேவா
ஆர்யா,
விக்னேஷ் சிவன்
உதயநிதி
மற்றும் பலர்

==============


4 விக்ரம் நடிச்ச புதுப்படத்தை பார்க்காமயே எதுக்கு ஏ சர்ட்டிபிகேட் தந்தீங்க?

டைட்டில்லயே (இ)ச் இருக்கே?( ஸ்கெட்ச்)


===============

5 டேய்,எதுக்காக குடைக்கீச்சு வந்து குட் மார்னிங் சொல்ற?நான்தான் வராதே ன்னேனே?

1 பயங்கர மழை மிஸ்
2 பொண்ணுங்க வராதே ன்னா வா னு அர்த்தமாம்


==============


6 தலைவரே!89 பேரும் ராஜினாமா பண்ணீட்டா என்னாகும்?

89 * ₹1,05000 *45 மாசம் =42,05,25,000 ₹ எங்களுக்கு நட்டம் ஆகும்.இது சம்பளக்கணக்கு மட்டும்


================


7 Interviewing a cool personality today . Guess his/her name ? 😊

simple.ra"cool" preethisingh===================


8 மெர்சல் ஹிட் ஆகிடும்னு எப்டி சொல்றே?

பாமா ருக்மணி படம் ஹிட் ஆகறப்ப ஹேமா ருக்மணி படம் மட்டும் ஹிட் ஆகாமயா போய்டும்?


===============


9 சார்,எதுக்கு ஊரே ஒண்ணு கூடி சிரிக்குது?

கம்முனு ரிலீஸ் பண்ணி இருந்தாக்கூட தப்பி இருக்கும்,மிரட்டும்னு பில்டப் குடுத்தீங்களே?


===================10 சார்,பொங்கல் வாழ்த்து அட்டை நல்லாருக்கு

யோவ்,இது தான் டீசர் போஸ்டர்
டீஸ் பண்ணப்போறாங்க பாருங்க


===============


11 சார்,ஹீரோ பொங்கல் வைக்கறாரு,ஜல்லிக்கட்டில் காளையை அடக்கறாரு

ஓஹோ,படத்தோட கதை என்ன?
அதான் சொன்னேனே இப்போ?

================


12 சார்,நம்ம படத்துல ஒரு புதுமை,படம் பார்க்க வர்ற ரசிகர்களுக்கு சுடச்சுட பொங்கல் தர்றோம்

ம்க்கும்,கடைசில நமக்கு அல்வா குடுத்துடப்போறாங்க


==================


13 சார்,கழுத்துல என்ன உத்திராட்சக்கொட்டை?ரசிகர்களை கவர புது ஐடியாவா?

அதெல்லாம் இல்ல,ரஜினி என்னவெல்லாம் செஞ்சாரோ அதெல்லாம் நானும் செய்வேன்


================


14 அஞ்சலி க்குப்பிடிச்ச தெலுங்குப்படம் எது?

"ஜெய்" லவ குசா


=================


15 சார்,டீசர் போஸ்டர்ல ஹீரோயின் எப்டி இருக்காங்க?

மாசமா இருக்காங்க
யோவ்,சரி,ஹீரோ?
நாசமா போச்சு,உன் கிட்டே கேட்டேன் பாரு
மோசமா இருக்காரு


=================


16 டாக்டர்,ஹேர் கலரிங் பண்ணா முடி கொட்டுமா 😧?
மருதாணி தழை அரைச்சு தேய்ச்சு மெரூன் ஆக்கலாம்,மத்ததெல்லாம் கெமிக்கல்.ஆபத்துதான்


==================


17 ஆளுநர்,சார் என்ன முடிவு எடுத்தீங்க?
விஜய் படம் தடை எதும் இல்லாம ,கேஸ் ஏதும் போடாம சொன்ன தேதில ரிலீஸ் ஆகுமா?
டவுட்தான்
டிட்டோ

==================


18 குருவே!பாவம் செய்த அரசியல்வாதிகள் நதியில் மூழ்கி எழுந்து வந்தா நல்லதா?
மூழ்கி அப்டியே போய்ட்டா நாட்டுக்கு நல்லது,


================


19 வீட்ல இருந்துட்டே ஆன்லைன்ல மாசம் 50,000 சம்பாதிக்கலாம்
அடேங்கப்பா,எப்டி?
17*3000 =51000
3000 குடுத்து இந்த CD வாங்கு,அதுல விளக்கம் இருக்கும்


=================

20 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ் நம்ம சேனல்ல வரும்
ஓஹோ,சடன் பிரேக்கிங் நியூசா?


================0 comments: