Thursday, October 12, 2017

ரிலீசே ஆக முடியாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு?அட்வான்ஸ் புக்கிங் எதுக்கு?

திமுக எம்.எல்.ஏ க்கள் ஆலோசனை கூட்டம் - மு.க.ஸ்டாலின் தலைமையில் # ரிலீசே ஆக முடியாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு?அட்வான்ஸ் புக்கிங் எதுக்கு?


=============

2 பாதிரியாராக மாறும் இயக்குநர் மிஷ்கின் # படத்தோட டைட்டில் "பாதிரி"ஒரு மாதிரி"?


==============

3 ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்தேன்: சஞ்சய் தத்..# காதல் என்பது சதுரங்கம் மாதிரி,2 பேர் தான் ஆடனும்.கூட்டமா கும்மி அடிக்கக்கூடாது


===============


4 தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்: சி.பி.ராதா #4% மக்கள் என முழுமையாக சொல்லவும்


==============

5 தினகரன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார் #"உதய சூரிய நமஸ்காரமா?"


==============


6 இன்று நடைபெறும் திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது: TKSஇளங்கோவன் கால் கிலோ மிக்சர் அல்வா உண்டாம்


===============


7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு # காலம் பூரா இனி களி தான்

=============================


8 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது மத்திய அரசின் தவறான அணுகுமுறை: உச்சநீதிமன்றம் கண்டனம் மண்டைலயே குட்டுங்க


================

9 2011-ல் பள்ளியில் 90-மாணவிகளை துன்புறுத்தல் செய்த HMஆரோக்கிய சாமி மீது வழக்கு # பள்ளிக்கூடத்தை பள்ளியறையா மாத்தப்பாத்திருக்கான்


===============

10 திமுக MLA-க்கள் அனைவரும் இன்று சென்னையில் தங்க,ஸ்டாலின் அறிவுறுத்தல்
# இவரும் மாற்றம் வரும்னு நம்பிக்கையா"இருக்காரு,தடுமாற்றம்,ஏமாற்றம்தான்


=================


11 "பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டிருந்தால் சசிகலா சிறை சென்றிருக்க மாட்டார்"
- கே.நாராயணன்,# பாஜக நல்லமாரினறீங்களா?சசி மொள்ளமாரின்றீங்களா?

===============


12 'பப்' களுக்கு வருகிறவர்களுக்கு இனி ஆதார் அட்டை அவசியம்# பேங்க்ல கொள்ளையடிக்கனும்னாக்கூட ஆதார் அவசியம்பாங்களோ?


=================

13 1துண்டு சீட்டு இல்லாமல் மணி கணக்கில் பேசக்கூடியவர் அன்புமணி-Gk மணி முத்து கூடத்தான் பத்திரிக்கைல வந்த ஜோக்சை 3 மணிநேரம் ஒப்பிப்பாரு


=====================


14 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன- தி ஜப்பான் டைம்ஸ் பத்திரிகை# கடல் தாண்டி மலை தாண்டி பேர் பரவுனது நமக்கு தாண்டி


================

15 சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள்! நம்பு,நம்பாம போ,சாமியார்களை நம்பாதே ன்னா யார் கேட்கறா?


================

`16 அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் நாளை கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.
# இருவரும் என்ன பேசினார்கள் என "விளக்குமாறு" கேட்டுக்கொள்கிறேன்


===================


17 எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்:Ops வாத்தியார் வேலையை ரிசைன் பண்ணிட்டு வாத்து மேய்க்க போலாம்


=====================


18 விவசாய கடனை மத் அரசால் தள்ளுபடி செய்ய முடியாது; மாநில அரசே தள்ளுபடி செய்யும் - அருண்ஜெட்லி # 2 பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு,யாராவது செஞ்சா சரி


================


19 கமல்் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தாலும் கவலை இல்லை: ஜெயக்குமார்# நம்ம கவலை எல்லாம் நம்ம பதவி தப்பிக்கனும்.யார் எப்டி போனா என்ன?


================

20 மாநில சுயாட்சி பேசும் திமுக வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வக்கீலை கூப்பிடுவது ஏன்? தமிழிசை # தமிழன் எப்பவும் முள்ளை முள்ளாலதான் எடுப்பான்


================


0 comments: