Tuesday, October 10, 2017

குஷ்பூதான் ஜனாதிபதி,நக்மா தான் கவர்னர்!!!

நான் முதலில் முரசொலியை படித்துவிட்டுத்தான் பைபிளை படிப்பேன் : எஸ்ரா சற்குணம்.

# எல்லாருமே அப்டித்தான்.முதல்ல பாவம் அப்புறம் பரிகாரம்==============

2 எடப்பாடிக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ (கம்பம்) ஜக்கையன் ஆதரவு # ஜக்கம்மா கனவுல வந்து குறி சொல்லி இருக்கும் போல


================

3 அம்பேத்கர்,பெரியார் கொள்கைகள் அந்தகாலத்தை போல் தற்போது ஏற்றதாக இல்லை:Dr் கிருஷ்ணசாமி

# அப்போ நீட் தேர்வு"எழுதி பின் டாக்டர் ஆகப்போறார் போல================


4 திண்டுக்கல்: முதல்வர் பழனிசாமியை வரவேற்க திரண்ட கூட்டத்தில் மூச்சுத்திணறி ஒருவர் உயிரிழப்பு# குவாட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் ஆசைப்பட்டு..


=================

5 கடந்த 3 ஆண்டுகளில் 32% உயர்ந்த உ பி Cm யோகி ஆதித்யநாத்தின் சொத்துமதிப்பு! # வயசான மாமியாருக்கு எதுக்கு கெத்து?சாமியாருக்கு எதுக்கு சொத்து?


================


6 தமிழகம்− தொன்மையான சிலைகளை கடத்த அனுமதிக்க முடியாது : உயர் நீதிமன்றம்.# லேட்டஸ்ட் சிலைகளா பாத்து கடத்திக்கலாமா யுவர் ஆனர்?


=================


7 இந்தி தெரியாதவன் இந்தியாவுல இருக்க கூடாது. -சுப்ரமணிய சாமி

# GK இல்லாதவங்க அரசியல்ல குப்பை கொட்ட முடியாது,ஆனா கொட்றாங்க=================


8 .தினகரனுக்கு ஆதரவு அளித்த பெரியகுளம் MLAவுக்கு கொலை மிரட்டல் கடிதம் # நம்ம கட்சில கடிதம் எழுதும் அளவுக்கு பெரிய படிப்பு முடிச்சவங்க உண்டா?


===============

9 எடப்பாடி பழனிசாமியே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் # ஓசி ல கிடைச்ச திருப்பதி லட்டை தூக்கி போடுங்கன்னா எப்டி?


=================


10 மதுரை விமான நிலையத்தில் தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்ஆதரவாளர்கள் மோதல்: போலீஸ் தடியடியால் பரபரப்பு # அண்ணன் அழகிரி ஊர்ல ரவுடிசமா?அய்யகா!


=================

11 பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவில்லை எனில் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஸ்டாலின் # அவ்ளோ பவர் நம்ம கிட்டே இருக்கா?


==============


12 "உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும்− சூலூர் எம்எல்ஏ கனகராஜ்

# இதுதான் பிக்பாஸ் மோடி கொடுத்த டாஸ்க்கா?


===============


13 அடுத்து ராகுல் தான் பிரதமர், ஸ்டாலின் தான் முதல்வர் - திருநாவுக்கரசர் # குஷ்பூதான் ஜனாதிபதி,நக்மா தான் கவர்னர்,காசா பணமா?அடிச்சு விடுங்க


==============

14 மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வர விரும்புகிறது-ஸ்டாலின்

# இப்போ 4ஜி 5 ஜி னு டெக்னாலஜி வேற டெவலப் ஆகிடுச்சு

=================

15 என்னை விமர்சனம் செய்யுங்கள் உங்களுக்கு முழு உரிமை உள்ளது −மோடி# இப்பவெல்லாம் ஒரு சினிமாவைக்கூட விமர்சனம் பண்ண"முடியறதில்லை


===============


16 அமைச்சரின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இடம்-தமிழிசை#டாக்டராவே ஆகி இருந்தாலும் நீட் எழுதி ஜெயிச்சாதான் செல்லுமாம்


==============


17 காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும்-தருமபுரம் ஆதீனம்# கங்கையை அசுத்தப்படுத்துனது பத்தாதா?


==============


18 நடிகரான சூர்யாவுக்கு எப்படி மருத்துவம் பற்றி தெரியும்? - தமிழிசை# அரசியல்வாதிங்க கூடத்தான் நல்லவர்போல் நடிக்கறாக,பிலிம்இன்ஸ்டிடியுட் போகாமயே

==============


19 உள்ளாட்சித்தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் - CM EPS # முதல்ல இரட்டை இலை சின்னம் மீட்கனும்,பின்தான் கூட்டணிமுடிவு

===============


20 பாஜக கூட்டணி குறித்து பரிசீலிப்போம்-எடப்பாடி

# வெச்சா நாங்க பரிகசிச்சு சிரிப்போம்


============

0 comments: