Saturday, October 21, 2017

ஓவியா சிபாரிசு தேவைப்பட்டா

FB மக்களை இணைக்கவில்லை; பிரித்துவிட்டது - வலைதளத்தை உருவாக்கிய மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்பு # காலம் கடந்த ஞானம் தான் மனித வழக்கம்


=============


2 மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார்: நடிகை சுஹாசினி
# சுஹாஹாஹாஹாசினி


===========


3 சென்னை ஆழ்வார்பேட்டையில் ரசிகர்களுடன் கமல் திடீர் ஆலோசனை # தலைவா!போர் வரும்போது பார்த்துக்கலாம்னீங்க,ஆழ்War முந்திக்கும் போல

============


4 தூய்மையான இந்தியா 125 கோடி மக்கள் கையில் இருக்கிறது/மோடி; # இந்தியாவ தூய்மை ஆக்கிட்டா அந்த 15 லட்சம் ரூ தந்துடுவீங்களா?


====================


5 பட்டுப்பூச்சியைக் கொல்லாமல் தயாரிக்கப்படும் 'அகிம்சா' புடவைக்கு பெண்கள் வரவேற்பு# கொல்லாம தயாரிச்சா பூச்சி புடவை ல ஊறிட்டே இருக்குமே?கூசாதா


=============


6 தனது பிறந்த நாளான நவம்பர் 7ந்தேதி அன்று அரசியல் கட்சி தொடங்குகிறார் கமல் # அப்போ ரஜினி டிசம்பர் 12?


=============


7 மோடிக்கு எதிராக பேசிய பிரகாஷ்ராஜ் மீது வழக்கு # இந்தியாவை ஆளப்போறான் தமிழன் னு சவால் விட்டாரே எங்க தளபதி,முடிஞ்சா அவர் மேல கை வை பாப்பம்


==============

8 நேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது.. சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் திருடனுங்க தான் போலீசை ,ஜட்ஜை மிரட்றாங்க


============


9 ஜி.எஸ்.டி வரியில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும் - மோடி # சாமி சத்தியமா மக்கள் தேவைக்கேற்ப இருக்காது,அரசின் தேவைக்கேற்ப


===============


10 என்னை கேட்காமலேயே RSS ஊர்வல அழைப்பிதழில் எனது பெயரை அச்சிடப்பட்டுள்ளது - செல்லூர் ராஜு சமாளிச்ட்டாராம்


==============


11 உபியில் மோடிக்கு 100 அடியில் சிலை-செய்தி
# நீங்க சிலை வைங்க,அடுத்த தேர்தல்ல ஜனங்க உங்க ஆட்சிக்கு உலை வைக்கட்டும்


===============


12 ஓவியாவை நான் மறக்கமாட்டேன்: "பிக் பாஸ்" ஆரவ் # சினிமால ஹீரோ சான்ஸ் க்கு ஓவியா சிபாரிசு தேவைப்பட்டா திடீர்னு 143 ம்பார் பாருங்க


=============


13 மோடியின் திட்டம் தமிழகத்தில் புயல் வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது-செல்லூரார்
,சுனாமி இதெல்லாம் அழிவின் குறியீடு தானே?


===============


14 சசிகலா இருக்கும் இடமே உண்மையான அதிமுக - திவாகரன்.
# அப்போ அதிமுக அமைச்சர்கள் ,MLAக்கள் எல்லாரும் ஜெயிலுக்கு போய்டுவாங்களா?


===============


15 பாகிஸ்தான், சீனா இரண்டு நாடுகளுடன் போருக்கு இந்தியா தயார் - விமானப்படை தளபதி
வரும்போது பாத்துக்கலாம்னாரே?அவருக்கு தகவல் தந்தாச்சா?


===============


16 காவல்துறையில், ஒரு வாக்கி-டாக்கி ரூ.2.08 லட்சம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது - ராமதாஸ் # பணம் குடுத்து வாங்கற பழக்கமே அவங்களுக்கு இல்லயே

===============


17 5மரங்கள் நட்டால் 5 மதிப்பெண் தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
# ஒரு பயலும் படிக்க மாட்டான் 100 மரக்கன்று நட்டுட்டு 100 மார்க் வாங்கிட்டா?

==============


18 "ரஜினி கமல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் மாற்றம் வருமா? : -விஜயகாந்த்# அஜித்,விஜய் இவங்களும் வந்துடனும்,தமிழக அரசியல் ரணகளம் ஆகிடுமில்ல?

===============


19 பணமதிப்பிழப்பு,GST நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் சரிந்திருக்கிறது-மோடி
ஊருக்கே தெரிந்திருக்கிறது,சரிவிலிருந்து மீள வழி?


===============


20 பொருளாதார வளர்ச்சி மீண்டும் உச்சம் அடையும்- பிரதமர்!# அதுக்கு இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ"னு ஒரு அச்சம் எல்லார் மனதிலும்

==============