Monday, October 09, 2017

என்னய்யா,அந்த ரசிகர் மன்றம் எப்பவும் உள்பக்கமா தாழ் போட்டிருக்கு?

டெய்லரே!பிரில் வெச்ச ஜாக்கெட் தைக்க தெரியுமா?

அதெல்லாம் ஓல்டு மாடல்ங்க.ஜிமிக்கி கம்மல்"புகழ்"ஷெரில் ஜாக்கெட் தான் ட்ரெண்ட் இப்போ


==============

2 சார்,படத்தோட சஸ்பென்சை வெளில சொல்லிடாதீங்க,

நானே சொல்ல நினைச்சாலும்"அது முடியாது,புரியனுமில்ல?


=============


3 டாக்டர்,இந்த நிலவேம்பு கசாயம் எவ்ளோ குடிக்க?

மிஸ்!ஆம்பளைங்கன்னா ஒரு குவாட்டர் அளவு (180ML).பொண்ணுங்க ஆப்குவாட்டர்


===============


4 120ரூபா கொடுத்து என் படத்தை தியேட்டர்ல பார்த்தா அதுல இருந்து 1 ரூபாய விவசாயிக்கு கொடுப்பேன்
அதுக்கு படமே பாக்காம 120ரூ விவசாயிக்கு தருவோம்


==============


5 மிஸ்,டான்ஸ் ஆடும்போது கைல ஒரு டம்ளர் சரக்கு ஊத்தி அடிக்கறீங்களே,ஏன்?

புரியல?இதுதான் கிளாசிக்கல் டான்ஸ்


==============


6 தமிழ் மிஸ் தன்யா − இப்போ வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்படி?னு பாக்கப்போறோம்

டீச்சர் ,
பதில் இங்கேயே சொல்லு
குடைக்கீச்சிலே வேண்டா,அதானே?


================


7 இஞ்சினியர்ஸ் டே வை விஜய் ரசிகர்கள் கொண்டாட முடியாதா?ஏன்?

சேலையில வீடு கட்டவா பாட்டு அஜித் படம் ஆச்சே?==============


8 திருட்டுபயலே 1 , 2 இந்த 2 படத்துக்கும் என்ன ஒற்றுமை?

சோனியா அகர்வால்
அமலாபால்
னு 2 பட நாயகிக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு
அடப்பாவி


================


9 RK செல்வமணி ஷூட்டிங்ஸ்பாட்ல விஜய்சேதுபதியை கட்டிப்பிடிச்ட்டாராமே?நிஜமா?

பெண் வேஷத்துல வி சே ரோஜா சாயல்ல இருந்தாராம்


===============


10 சார் உங்க எழுத்துக்கு நான் தீவிர ரசிகன்

அப்டியா?அஞ்சு வருசமா டைப் பண்ணிதானே கதை அனுப்பறேன்,எழுதறதை விட்டாச்சே?

================


11 என்னய்யா,அந்த ரசிகர் மன்றம் எப்பவும் உள்பக்கமா தாழ் போட்டிருக்கு?

அது சன்னி லியோன் ரசிகர் கில்மா மன்றம்ங்க


==============


12 என் பையன் ராஜா மாதிரி வருவான்

அய்யய்யோ ,H ராஜா மாதிரியோ , ஆ ராசா மாதிரியோ வந்துடப்போறான்.சந்தி சிரிக்கும் ,சந்து கொதிக்கும்


===============


13 நம்ம படத்தோட பட்ஜெட் 135 கோடினு சொன்னதும் ஹீரோ ஏன் ஜெர்க் ஆகறாரு

பின்னே என்னய்யா?25 கோடி சம்பளம் தந்து 35 கோடி காம்பன்சேசன்னு பிடுங்குவீக


==================


14 சார்,போன தடவை மிட்நைட் ல டீசர் விட்டீங்க,இப்போ ஏன் டே டைம் ல?

நைட் டூட்டி பாத்து லைக்ஸ் போட டபுள் பேமண்ட் அழனுமாம்


=================


15 ஒருவர் நாம் பேசும் போது அப்டியா அப்டியா ? என்று கேட்கிறார் எனில் என்ன அர்த்தம்?

அவர் சரியான சோன்பப்டினு அர்த்தம்


================


16 ஸ்பைடர் மூலம் மகேஷ்பாபு முதல்முறையா தமிழ்ல கால் பதிக்கறாரு

ஓஹோ,அப்போ ஆபத்து ஈரோடு மகேஷ்க்கா?இளைய தளபதி விஜய்க்கா?


==================

17 தலைவரே!எங்கே"கிளம்பீட்டீங்க?

பகுத்தறிவு மாநாட்டுக்கு
சம்சாரம் வர்ல?
கோயிலுக்கு போயிருக்காப்டி.


====================


18 சார்,நீங்க பண்ணுனது காமெடியா?சாரி ,சில்லறை"இல்லை.

அப்டியா?பொதுவா நாங்க சில்லறைங்களை நம்பி எதுவும் பண்றது இல்ல.நோட்டு தான்===================


19 ஜோசியரே! நாளைக்கு நடக்கப்போவதை இன்னைக்கே சொல்வீங்களாமே?

135 கோடி பட்ஜெட் ,ரிலீஸ் ஆகி 5 நாள்ல 100 கோடி வசூலிக்கும்.நட்ட ஈடா 40 கோடி தருவார்

==========


20 டாக்டர்,30 வயசுதான் ஆச்சு,இப்பவே Low pressure, High pressure இருக்குனு சொன்னா எப்படி பிழைப்பை ஓட்ட?

இல்லைனு சொன்னா என் பிழைப்பு ஓடாதே?


==================

0 comments: