Saturday, October 21, 2017

டாக்டர்,மருதாணி போட்டுக்கிட்டா எனக்கு ஒத்துக்கறதில்ல,

1தலைவரே!நடிகை ரியா சென் மேல எதுக்கு தேச துரோக வழக்கு போட்டிருக்கீங்க?


தாஜ்மகால் பட ஹீரோயின் ஆச்சே?


===========


2 டாக்டர்.கற்பூர புத்தி இருந்தா டெங்கு ல இருந்து தப்பிக்கலாமா?எப்டி?


அறைக்கதவுகளை மூடி
சிறிது கற்பூரம்
கொளுத்தி வெச்சா கொசுக்கள் ஓடிடும்==================

3 டியர்,

தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவ் வருதே?என்ன என்ன (பலகாரங்கள்) செய்வே?
எதுவும் செய்ய மாட்டேன்,புல் ரெஸ்ட்,ஆளை விடுங்க சாமி===============


4 மேடம்,Fb ல ஒவ்வொரு ஸ்டேட்டஸ் போடும்போதும் உங்க புருசனை செருப்பால அடிப்பீங்களாமே?எதுக்கு?


செப்பல் ஷாட் போராளி னு பேர் எடுக்க=============


5 சிவகார்த்திகேயன்தான் Tராஜேந்தரோட அடுத்த டார்கெட்டா?எப்டி?
சிம்புவை ஹன்சிகா கழட்டி விட்டுடுச்சு அந்த கோபத்தை தன்சிகா மேல காட்டியாச்,இனி சி கா


=============


6 சார்,சிங்கிள் னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கீங்களே Fb ல,ஆனா மேரேஜ் ஆகிடுச்சுல்ல?


யா,அம்மா வீட்டுக்கு போயிருக்காப்டி,வர்ற வரை சிங்கிள்தானே?==============


7 சன் டிவி அண்ணன் னா விஜய் டிவி தம்பி


புரியல
தமிழ்க்கடவுள் முருகர் சீரியல் விஜய் டிவி போட்டதும் வினாயகர் சீரியல் சன் டிவி ல போட்டுட்டாகளே?===============


8 ரெஜினா மோட்டா என்பதை ஒத்துக்க மாட்டேன்


ஏன்?
ரெஜினா அவ்ளோ மோட்டா ஒண்ணும் இல்லையே?ஒல்லி இல்லைன்னாலும் மீடியம் தானே?==============


9 தலைவரே!பருவ மழை ஏமாற்றாதுனு எப்டி உறுதியா சொல்றீங்க?


18 வருசத்துக்கு முன் பார்த்தப்பவே 4 சீன் இருந்தது,இப்போ டிடிஎஸ் வேற===============


10 டியர்,என் லவ்வை ஏன் ஏத்துக்க மாட்டேங்கறீங்க?


இல்லை,லவ்வ ஏத்துக்காம விட்டா 50 லட்சம் பரிசு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன்===============


11 இன்ஸ்பெக்டர்,சமூக வலைத்தளங்கள்ல ஜெ சாப்பிட்ட இட்லி பத்தி மீம்ஸ் வருது,என்ன பண்ணலாம்?


இட்லி னு ஒரு ஐடி இருக்கு,கமுக்கமா அமுக்கி டலாமா?


===============


12 AR முருகதாஸ் = அட்லீ


எப்டி?
7ம் அறிவு தமிழில் போதி தர்மர் தமிழர்,தெலுங்கில் தெலுங்கர்
மெர்சல் தெலுங்கில் ஆளப்போறான் தெலுங்கன்


================


13 ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவரா கமல் வந்தா என்ன ஆகும்?


தமிழன் குழம்பிப்போய் அப்போ ஆம் அவுரத் கவுதமி யா?னு மொக்கை போடுவான்


================

14 ப்ரைடு ரைஸ் 5 கிலோ போடுப்பா


இந்தாங்க
இன்னும் கொஞ்சம் சன்னமான ரைசா கிடைக்குமா?
பிக்பாஸ் பாத்ததில்ல?ரைசா எந்தக்காலத்துல ஒல்லியா இருந்தது?===============


15 DR.50 நாள் டயட்ல இருந்து 5 கிலோ வெயிட் குறைக்க திட்டம் போட்டிருக்கேன்,முடியுமா?;


51 வது நாள் புல் கட்டு கட்டுவீங்களே மேடம்?==============


16 ஆல் ஓவர் இந்தியா அஜித் படம் ஹிட் ஆகும்னு 15 வருசம் முன்பே Sv சேகருக்கு தெரிஞ்சிருக்கு


எப்டி?
நாடக டைட்டில் "மகா பாரதத்தில் மங்காத்தா"===============


17 மேடம்,எனக்கு குடுத்த அசைன்மென்ட்டை எப்போ முடிக்கட்டும்?


நான் மீண்டும் உள்ளே போன பின்,இப்பவே முடிச்சா என்னை முடிச்சுடுவாங்க==============


18 டாக்டர்,மருதாணி போட்டுக்கிட்டா எனக்கு ஒத்துக்கறதில்ல,அலர்ஜி ஆகிடுது

ஓஹோ,என்ன ஆகுது?மிஸ்
மருதாணி வெச்ச இடம் எல்லாம் சிவந்திடுது
சுத்தம்

===================

19 மேடம்.தியாகத்தலைவி னு கூப்பிடறாங்களே?என்ன தியாகம்?

எத்தனையோ பேரை உயிர் தியாகம் பண்ண வெச்சிருக்கேன்


=================


20 நானெல்லாம்
பணியாரக்கடை போட்டுக் கூட
பொழச்சிக்குவேன்,
மேடம்,நீங்க பிழைச்சுக்குவீங்க"பணியாரம் சாப்ட்டவன் பிழைப்பானா?மில்லியன் டாலர் கேள்வி


================


0 comments: