Wednesday, October 04, 2017

பொண்ணு பார்க்க வரும்போதே தாலி வாங்கிட்டு"வந்துடனும்னா எப்டி?

ஜெ அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை-OPS# அந்த தர்மயுத்தம் என்னங்க ஆச்சு?நீங்கதான் மானஸ்தர் ஆச்சே?விளக்கம் கொடுங்க


================2 ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பது ஆளுநர் வேலை இல்லை: ராமதாஸ் கடும் தாக்கு # குழி வெட்றது ,மரம் வெட்றது இதுக்கெல்லாம் ஆள்க இருக்காங்க
===============3 கமல் மனக்கோட்டை கட்டுகிறார்− தமிழிசை # பல வருசம் முன்"வந்த அவரோட "மனக்கணக்கு" படமும் எடுபடலை,இன்றைய மனக்கணக்கும் எடுபடாது
================4 திமுக பின் வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயல்கிறது− சரத்குமார் கோபமா கிளம்பிட்டாரு,இன்னைக்கு எத்தனை தலைக உருளப்போகுதோ?
================
5 demonetization-க்கு பரிந்துரைத்த பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசு தர வேண்டும்−

-ப.சிதம்பரம்# பிச்சைக்காரன் பட டைரக்டருக்குத்தான் க்ரெடிட்


==================


6 தமிழக பொறுப்பு ஆளுநர் சரியாக செயல்படுவதாக தமிழிசை பாராட்டு!# சொன்னபடி கேளு,மக்கர் பண்ணாதே மொமெண்ட்

===============

7 சகோதரர்களுக்குள் சண்டையை ஏற்படுத்த முயற்சி - ஆர்.பி உதயகுமார் # அழகிரி அண்ணன் அமைதியாத்தானே இருக்காரு?


===============


8 அரசியலை மாற்ற வேண்டும் -கமல்ஹாசன்
# தமிழக,அரசியலுக்கும் (2016−17),கமல் வாழ்வுக்கும் ஒத்துமை,3 பேரை மாத்தியாச்சு


===============


9 ஓட்டுனர் உரிமம்

வைத்திருப்பவர் மட்டுமே
இனி வாகனம் வாங்க முடியும்
# பொண்ணு பார்க்க வரும்போதே தாலி வாங்கிட்டு"வந்துடனும்னா எப்டி?=================

10 கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை - உச்சநீதிமன்றம்# போய்யாங்,அண்ணன்"இருப்பதே இப்போ வெளிநாட்லதான்,ஓவர் ஓவர்


================


11 அதிமுக OPSஅணிக்கு அளித்த ஆதரவை தமாக வாபஸ் −Gkவாசன்# ஏற்கனவே ஒரு காமெடி டிராமா ஓடிட்டிருக்கு,இவரு வேற குறுக்க வந்து எக்ஸ்ட்ரா"காமெடி பண்றாரு


===============

12 மோட்டார் வாகன சட்டப்படி அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க அவசியமில்லை - உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி கருத்து மாத்தி குழப்பறாங்க


=================


13 ஓட்டுனர் உரிமம்
வைத்திருப்பவர் மட்டுமே
இனி வாகனம் வாங்க முடியும்
# பொண்ணு பார்க்க வரும்போதே தாலி வாங்கிட்டு"வந்துடனும்னா எப்டி?


================

14 ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது!'- !CM EPS # அதுதான்"உங்களுக்கு பதவி கிடைக்க காரணி

================

15 எங்களை நம்பியவர்கள் கெட்டுபோக மாட்டார்கள்.கெட்டுப்போக விடமாட்டோம் -OPS # கிராமத்து ஜனங்களுக்கு ஒரு கிணறைக்கூட விட்டுத்தர மனசில்ல,பேச்சுதான்


==============


16 முதல்வர் அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை வாங்க அனிதா குடும்பம் மறுப்பு. # அரசியல்வாதிதான் வருமானம்"பார்ப்பான்,ஏழை தன்மானம்தான் பார்ப்பான்


===============

17 திமுக, அதிமுகவை ஒழித்தால் தமிழகத்திற்கு தீர்வு வரும்” -கிருஷ்ணசாமி # போன தேர்தல் ல திமுக கூட கூட்டு சேர்ந்தப்ப"இந்த அறிவு"டூர் போய்டுச்சா?


==================

18 மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆதரிக்கிறது என்பது தவறானது - தம்பிதுரை # சரி,எதை எல்லாம்"எதிர்த்தீங்க? லிஸ்ட் குடுங்க பார்ப்போம்


===============


19 "எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்"- தமிழிசை # நம்ம பேசவேண்டிய டயலாக்"ஆச்சே?


=================

20 மோடியை அவமரியாதை செய்வதை பொறுக்க முடியாது -தமிழிசை # ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை பலமுறை அவமரியாதை செய்ததை நாங்க பொறுத்துக்கலையா?


================


0 comments: