Saturday, October 07, 2017

ஸ்டார் வேல்யூவை திரைக்கதை முந்தியது

குருபெயர்ச்சியால் (2/9/17 to 1/9/18) அதிக பாதிப்படையும் 4 ராசிகளில் மீன ராசியும் உண்டு.எனவே இந்த வருசம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க


=============

2 காஜல் அகர்வால் ,கஜோல் மாதிரி பொண்ணு வேணும்னு தேடறவங்களுக்கு பிக்பாஸ் சுஜா மாதிரி பொண்ணு அமைஞ்சிடறதுதான் வாழ்க்கை


===============

3 தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா பெண்களை விட கேரளா பெண்கள் தான் ஷார்ட் ஸ்லீவ் ஜாக்கெட் அணிவதில் முன்னிலை வகிக்கிறார்கள்(இது ஒரு செவி வழி செய்தி)


===============


4 நெட் தமிழன் ஒரு புதிரானவன்.எதுனா ஏடாகூடமா பண்ணி யார் கிட்டயாவது பிளாக் வாங்கிக்குவான்,பின் அவங்க கிட்டேயே ஏன் பிளாக்டு?னு காரணம் கேட்பான்


================
5 அரசு ஊழியர் எதுனா தப்பு செஞ்சு மாட்னா 2 மாசம் சம்பளம் ,பணி எல்லாம் கட் பண்ணா பயம் வரும்,ட்ரான்ஸ்பர் செஞ்சா அது எப்டி தண்டனை ஆகும்?


===============


6 உங்கள் பெற்றோர் கல்வி அறிவு பெறாதவர் என்பதை மற்றவர் முன் ஏதோ ஒரு காரணத்துக்காக சொல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கல்வி அறிவு பெற்றது வீணே!


================


7 உறவினர் முன்போ,நண்பர்(கள்)முன்போ உங்கள் துணையுடனான அன்யோன்யத்தை நிரூபிக்கத்தேவை இல்லை,அப்படி தேவை ஏற்பட்டால் அது நிஜ அன்பில்லை


================


8 நன்றி சொல்ல நேரமில்லாதவர்களுக்கு வாழ்த்து சொல்லாதீர்கள் என யாராவது சொன்னா கேட்காதீர்.வாழ்த்துவது நம் மனப்பூர்வம்.நன்றியை எதிர்பார்த்தல்ல


=============

9 மத்திய,மாநில அரசுகளை எதிர்த்து குரல் கொடுங்கள்,அது நம் ஜனநாயக உரிமை,ஆனால் வார்த்தைகளில் கண்ணியம் காப்பீர்,அது நம் கடமை


=================

10 ஓணம் ரிலீஸ்ரிசல்ட்
1 நிவின்பாலி 3.25/5
2 பிருத்விராஜ் 2.75 / 5
3 மம்முட்டி 2.5 / 5
ஸ்டார் வேல்யூவை திரைக்கதை முந்தியது
4 மோகன்லால் 2.5 / 5

=================


11 ஆவேசமா பேசுறவங்க ஆட்சிக்கு வருவார் னா இந்நேரம்

சீமான்
டி.ஆர்
வை கா
எல்லாம்
எப்பவோ சிஎம் ஆகி இருக்கனும்


====================

12 ஒரு கமலோ,ரஜினியோ,விஜயகாந்த்தோ செய்யத்தவறியதை /செய்திருக்க வேண்டியதை விஜய் செய்திருக்கிறார்,நல்ல விஷயம் # அனிதா வீட்டினர்க்கு ஆறுதல்


==============

13 FBல ஒரு பொண்ணு "நானே நொந்து நூடுல்ஸ் ஆகி போயி இருக்கேன் "னு போட்ட ஸ்டேட்டஸ்க்கு பெரும்பாலான கமெண்ட்ஸ் "நூடுல்ஸா?ஐ லைக்.அப்டியே சாப்பிடுவேன்"

==================


14 ஏழைகளின் ஆப்பிள் தக்காளி
ஏழை நெட்டிசன்களின் ஆப்பிள் /ஐ போன் ஆண்ட்ராய்டு போன்கள் சாம்சங்க் ,மைக்ரோமேக்ஸ்


===============


15 சமையல் பண்ண முதல்ல அடுப்பை பத்தவெச்சு வாணலியை வைக்கனும்,ஆனா இப்பவெல்லாம் பொண்ணுங்க "உப்புமா சமைக்கப்போறன்.. வாழ்த்தலாமே "னு ஸ்டேடஸ் போடறாங்க


===============


16 ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வருவது எப்டி−கோர்ட்# கூட்டல் கணக்கு கூடத்தெரியாம தீர்ப்பு சொல்ற குமாரசாமிகளுக்கு சம்பளம் வருதே அப்டி

===============


17 ஊடல் கொள்ளும் பொழுதுகளில் அன்பே அனுஷ் கா
சமாதானம் ஆனபின் அனுஷ்பழம்


===============


18 மிஷ்கின் + விஷால் கூட்டணி ஜெயிச்சுட்டா துப்பறி"வா(வ்")ளன்
இல்லைன்னா துப்பறி"வளவள"ன்


===============


19 துப்பறிவாளன் ஹிட்டாம்,சும்மாவே பஞ்ச் டயலாக்கா பேசுவாரு,இனி கமல் மாதிரி அரசியல் ட்வீட் எல்லாம்"போடுவாப்டி


=================

20 வேலை பார்க்கும் கம்பெனி உன்னை பணி நீக்கம் செய்தால் நேராக வீட்டுக்குப்போகாதே!போட்டியாக இருக்கும் கம்பெனியில் போய் சேர்!ஒரே கல்லில் 2மாங்கா


====================


0 comments: