Thursday, October 19, 2017

படிச்சவன் எதுக்கு அரசியலுக்கு வர்றான்?

சாய் பல்லவி தனுஷ் கூட ஜோடி சேரப்போறாராமே?எப்டி வாழ்த்தனும்?


அன்பே!என் சாய் பல்லவி !
இனி டெய்லி எஞ்சாய் பல்லவி===============

2 சாமி கும்பிடும்போது எதுக்கு சினிமா பாட்டு போட்டு விடறே?அதுவும் குத்து சாங்?


நீதானே "ஆயுத பூஜை" சாங் போடுன்னே?================


3 ஆயுத பூஜை க்கு எல்லாரும் பொரி ,சுண்டல் வெச்சு படைக்கும்போது அவங்க மட்டும் இட்லி வெச்சு படைக்கறாங்களே,ஏன்?


சி ஆர் சரஸ்வதி பூஜை ஆச்சே?=================


4 அந்த டைரக்டர் ஒரு பழமை விரும்பி னு எப்டி சொல்றே?


பிந்து மாதவி பேரை டைட்டில்ல போடும்போது பிந்து கண்ணகி னு ஆல்டர் பண்ணிட்டாரே?=================


5 மிஸ்,சரஸ்வதி பூஜை க்கு லட்சுமி போட்டோ வெச்சு கும்பிடறீங்க?


போன தடவை மகாலட்சுமி பூஜைக்கு தவறுதலா சரஸ்வதி போட்டோ வெச்ட்டேன்.தானிக்கு தீனி================


6 மேடம்,24 மணி நேரமும் தூங்காம ஆன் லைன்லயே இருக்கீங்களே ஏன்?


தூங்கினா ஆபத்து,நம்ம பாலோயர்சை கூட்டிட்டு போயிடுவாங்களாம்================


7 சார்,கவுதமி சுயசரிதை எழுதப்போகுதாமே?டைட்டில் என்னவா இருக்கும்?


உத்தம வில்லி==================


8 எனக்கு பரோல் வேணும்,என் நெருங்கிய சொந்தம் சீரியஸ்


ஜெயில்ல இருக்கும் உனக்கு எப்டி நியூஸ் வந்தது?
சீரியஸ் ஆக்க வெச்சதே நான்தானே?


===============


9 இந்தியன் 2 படத்தோட பினாமி புரொடியூசரே சசிகலாவாத்தான் இருக்கும்


ஷங்கர் படம் முடிய 3 வருசம் ஆகும், அதுவரை ஆட்சிக்கு ஆபத்தில்லைல?


===============


10 டியர்,நான் குழம்பு வச்சா

எட்டு ஊருக்கு மணக்கும்
மேரேஜ் ஆகி 18 வருசமா இப்டியேதான் வாய்ல வடை சுட்டுட்டு இருக்கே,ஆனா சமைச்ச பாட்டை காணோம்


==================


11 ரஜினியை"விட கமலுக்குத்தான் தமிழக முதல்வர் ஆக வாய்ப்பிருக்கு


எப்டி?
MGR,கலைஞர்,கமல் இந்த 3 பேருக்குமே 3 சம்சாரம் ,பல சமாச்சாரம்


===============


12 கவரிமான் தெரியும், புள்ளிமான் தெரியும்... அதென்ன சுலைமான்???


வேலையே செய்யாத டேமேஜருங்க மாசமானா சுளையா சம்பளம் வாங்குனா அதான் சுளைMAN================


13 டியர்,பேசாம
வைராக்கியமா இருந்து
ஏதாவது சாதிக்கப் போறீங்களா??
இல்ல,ஆனா பேசினா அதை வாங்கிக்குடு,இதை வாங்கிக்குடு னு நச்சரிப்பே


===============


14 பாரதிராஜா வின் தாஜ்மகால் மொக்கைப்படமாச்சே?அதுக்கு ஏன் இப்போ தடை?

தெரில,மேலிட உத்தரவு,உ பி சி எம் மை கூல் பண்ணனுமாம்


==============

15 டியர்.சும்மா கடி ஜோக் சொல்லி மொக்க போடாதீங்க

நான் கடிச்சா பரவால்ல,கொசு கடிக்காம பாத்துக்க,டெங்கு பரவிட்டிருக்காம்


================


16 உ பி முதல்வர் க்கு பிடிச்ச தமிழ்ப்பாட்டு எது?

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே. காடுமலைமேடு எல்லாம் காதலின் சின்னமே


===============


17 கமல் ரசிகர் =ரஜினிக்கு ஆதரவா ட்வீட் போடறீங்களே?பணம் தந்தாரா?

ஆசிரம ஸ்கூல் வாடகையே 5 வருசமா தர்லையாம்,அவர் எப்டி எனக்கு தருவாரு?


=================


18 பரோல் மனு கூட ஒழுங்கா பில்லப் பண்ணத்தெரியாதவங்களையா கட்சில வெச்சிருக்கீங்க?

படிச்சவன் எதுக்கு அரசியலுக்கு வர்றான்?கவுரவமான வேலைல இருப்பான்


================


19 டாக்டர், 4 கிலோ வெயிட் குறைஞ்சா போதும் ,அதுக்கு என்ன செய்யனும்?

டெய்லி 4 வேளை சாப்பிடறதை 3 வேளையா குறைக்கனும் மேடம்

===============


20 சார்,கமல்,ரஜினி 2 பேரோட அழுகை நடிப்புல எது டாப்?

அது தெரில்.2 பேர்ல அரசியலுக்கு வந்தா யார் நம்மை அழ வைக்கப்போறாங்கனு தெரில


================

0 comments: