Wednesday, October 11, 2017

ஜனங்க லூஸ்ங்களையே ஏத்துக்கும்போது பிக்பாஸை ஏத்துக்க மாட்டாகளா?

பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல - மத்தியமைச்சர் # அமைச்சர்னா அரை லூசுங்களாதான் பெரும்பாலும் இருப்பாங்க போல


==============


2 மத்திய அரசிடம் அடிமையாக இல்லை; தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் இணக்கம் -CM EPS # நான் அடிமை இல்லை ரஜினி படம் பாத்துட்டு வந்திருப்பார் போல


==============

3 இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவித்தால் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்: ஹெச்.ராஜா
# ஐ ஆம் வெய்ட்டிங் − அனைத்து தமிழர்கள்


==============


4 கமல்ஹாசனை அரசியலில் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -அமைச்சர் செல்லூர் ராஜூ#ஜனங்க லூஸ்ங்களையே ஏத்துக்கும்போது பிக்பாஸை ஏத்துக்க மாட்டாகளா?


=============


5 68 பைசா காசோலைகளை பிரதமருக்கு அனுப்பிய விவசாயிகள் #10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை,ஒரு காசோலையின் மதிப்பு 2 ரூபா வீணானதுதான் மிச்சம்


==============


6 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் # ஒரு பரபரப்பும் ஒர்க்அவுட் ஆகாது.மழை வர்றதால ஆபீசுக்கு லீவ்ம்பார்


===============


7 மத்திய அரசிடம் தமிழகத்திற்காக சில கோரிக்கைகளை வைப்பதற்காக டெல்லி செல்கிறோம் -அமைச்சர் ஜெயக்குமார் # நீங்க?ஜனங்களுக்காக?இதை நாங்க"நம்பனும்?


==============

8 நாம் தமிழர், பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு # அடிச்சுக்காதீங்க ஏட்டய்யா, 2% க்கும் 4 % க்கும் இடையே ஏன் பைட்டு?


===============


9 சசிகலா ரகசியங்களை வெளிப்படுத்தப்போகிறேன் −OPS தெரிஞ்சும் ஏன்"சசி கால்ல விழுந்தீங்க எனும்"ரகசியத்தையும் வெளிப்படுத்தவும்


===============


10 என்னை சீண்டினால் தினகரன் ரகசியங்களை வெளியிடுவேன்:OPS#இவர் கிட்டே ஏகப்பட்ட ரகசியம் இருக்கு போல்,ஆனா கடைசி வரை வித்தைதான்"காட்றார்


===============

11 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் - சபாநாயகர் உத்தரவு # பிரேக்கிங்"நியூஸ்"ஸ்டார்ட் ஆகிடுச்சு,இனி டெய்லி பரபரப்புதான்


===============


12 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் நகைச்சுவையாகவும்,
மகிழ்ச்சியாகவும் உள்ளது - சீமான் # எலி"க்கு மரண வலியாம் ,பூனைக்கு கொண்டாட்டமாம்


================


13 தீவிர ஆலோசனைக்குப் பிறகே சபாநாயகர் சட்டப்படி முடிவெடுத்திருப்பார் - தமிழிசை # பரமசிவன்(மோடி)கழுத்தில் இருக்கும் பாம்பு(ADMK) தில்லா இருக்கு


=================


14 கமல்தான் ரஜினியோடு
இணையவேண்டும்
ரஜினி கமலோடு
இணையதேவையில்லை−
தமிழருவி மணியன் # ஆரம்பமே சரி இல்லையே?ஈகோ பாத்தா எப்டி?


=================


15 *பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குண்டு ஊசி கூட இலவசமாக கொடுக்கப்படாது - அன்புமணி தானே?அக்கப்போர் வரும்போது பாத்துக்கலாம்


===============

16 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் நடவடிக்கை சரியே... - ஜெ. தீபா # சட்ட மாமேதை சொல்லிட்டாங்க.ரைட்டு


==============


17 ஸ்டாலின், தினகரன் என யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - அமைச்சர் காமராஜ்
# கவர்னரே நினைச்சாலும் முடியாது னு சொல்லல,நல்ல வேளை


===============


18 சென்னை: கொரட்டூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைது
"தெரிஞ்சவங்களாம்


================


19 பெரியார் பற்றி கேட்ட பத்திரிகையாளர்களை ட்விட்டரில் ப்ளாக் செய்த முதல்வர் மற்றும் துணைமுதல்வர்!# பெரியாரா?அவர் யார்?னு கேட்கல,நல்ல வேளை


================


20 மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது: ப.சிதம்பரம்
# ராகுல் காங் தலைவரா"பதவி ஏற்க இருப்பதை"நக்கல்"பண்றாரா?

================

0 comments: