Friday, October 20, 2017

சேலம் சித்த வைத்தியத்துக்கும் கோட்டைதான்

மோடி 15 லட்சம் தருவதாக எப்போது கூறினார். −தமிழிசை # தேர்தல் பிரச்சார மேடையில்.வீடியோ ஆதாரம்"இருக்கு,தந்தா அந்த 15 லட்சம் நீங்க தருவீங்களா?


=============


2 அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்-துரைமுருகன் # எது நடந்தாலும் நமக்கு நல்லதே நடக்க மாட்டேங்குதே?2ஜி தீர்ப்பு வேற வரப்போகுது


===============


3 கன்னியாகுமரியில் நிதி நிறுவனம் நடத்தி 2,000 கோடி ரூபாய் மோசடி # தனி நபரிடம் சீட்டு போடாதீங்க,சீட்டிங்க் தான் நடக்கும் ,சீட்டு நடக்காது


==============


4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி− ராகுல்.# இதை எல்லாம் எப்பவோ சீமான்,ராமதாஸ் சொல்லீட்டாங்க,வேற வேற


=================


5 கிராம ராஜ்யம் இன்றி ராமராஜ்யம் இல்லை - வெங்கய்யா நாயுடு ராமராஜனை கட்சில இழுத்துக்குங்க,அவரும் வெட்டியாதான் இருக்காரு


================


6 5 ஆண்டுகளுக்குள் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத இந்தியா-ராஜ்நாத் வேளை,உ பி போல் குழந்தைகளே இல்லாத நிலை ஏற்படும்னு சொல்லல


===============


7 இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என உலகிற்கு தெரியும்.
-ராஜ்நாத் # எல்லாருக்கும் வளர்பிறையா தெரியுது,எங்களுக்கு மட்டும் தேய்பிறையா


===============


8 ஜெ' சிகிச்சை பெற்ற அறையில் CCTV கேமிரா இல்லை - அப்பல்லோ தலைவர் ஹரி பிரசாத் # கேமரா இல்லாத / அகற்றப்பட்ட அறையில் வேண்டுமென்றே திட்டமிட்டு


================


9 அரசு விழாக்களில் பங்கேற்கும் படி மாணவர்களை அழைக்கலாம், கட்டாயப்படுத்தக் கூடாது: நீதிமன்றம் # சபாஷ்.அந்த"தவில்காரர் காதில் விழுந்தா நல்லது


================


10 ஜெவை ஏமாற்றி தினகரன் குடும்பத்தினர் 20,000் கோடி சொத்து சேர்த்துள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார் # மக்களை ஏமாற்றி ஜெ சேர்த்த சொத்து அது


==================


11 பிரதமரே வந்தாலும் மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல அனுமதியில்லை−கோர்ட்# பண செலவு இல்லாம கூட்டம் காட்ட இனி வேற வழிதான் பாக்கனும்


==================


12 ரஜினியை போட்டியாக நினைத்தது கிடையாது-கமல்,

எப்படி நினைக்க முடியும்?அவரோட பிளாப் பட வசூல் = நம்ம ஹிட் பட வசூல்


==================

13 திருச்சி, ரெயில் நிலையத்தில் சுகாதாரமற்ற குடிநீரை அதிகாரியை குடிக்கவைத்து தண்டனை # அந்நியன் படம் இப்போதான் பாத்திருப்பாங்க போல


===============


14 பிரிந்தோம் இணைந்தோம்" தீபா-மாதவன் இணைந்து மிரட்டும் பேட்டி..# தமிழக அரசியல் சூழல் !ரணகளத்துலயும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு

==========


15 80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார் யஷ்வந்த் சின்ஹா – அருண் ஜேட்லி #58 ஆனா ஓய்வெடுக்கனும்னு சொல்லிடுங்க,இளைஞர்கள் வெய்ட்டிங்


===================


16 திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் - பதிவுத்துறை ஐஜி # நம்மாளு இதுதான் சாக்கு ன்னு ஆதார் அட்டையை வேணும்னே தொலைச்சிடுவான்


================

17 சென்னையில் ரூ.20 கோடி கலால் வரி ஏய்ப்பு செய்த புகாரில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கைது ஏழையை கைது செஞ்சா ஜாதி,ஜாதகம் எல்லாம் போடுவாங்க


=================


18 தமிழக அரசை யாராலும் அசைக்க முடியாது; சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை EPS # சேலம் சித்த வைத்தியத்துக்கும் கோட்டைதான்


================


19 மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குற்றமா?: EPS # இல்லை,ஆனா ஜெ மரண மர்மம் ,பாஜக ஆதிக்கம் பற்றி கேட்டா கமுக்கமா இருப்பது குற்றம்

=============

20 டெங்கு கொசுக்கள் பகலில் கடிப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்-விஜயபாஸ்கர் # நல்ல வேளை,அது நைட் கடிச்சா ஒரு பய தூங்க முடியாது


=============

0 comments: