Sunday, October 01, 2017

சாமியாரை நம்பாதே- news ( ஆகஸ்ட் 21 , 2017)

ஆதரவு MLAக்களுடன் தினகரன் ஜெ சமாதிக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார் # இணை முதல்வர் பதவி தந்தா சமாதானம் ஆகிடுவாரா?

=============

2 ஆடி’ முடியட்டும்.ஆட்சியைக் கலைக்க நேரம் வரும்- நாஞ்சில் சம்பத்# பாம்பு கீரி சந்தை சண்டை மாதிரி கடைசி வரை போக்கு காட்டிட்டே இருப்பாங்க போல

==============

3 உடல்நிலை சரியில்லாததால், நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பேன்− தினகரன் # எக்சாம் எழுத"ஏன்"வர்ல,?

காய்ச்சல் டீச்சர்


================

4 TTK ஆதரவு MLA அம்மா சமாதியில் தியானம் - செய்தி # நைட் ஆகிடுச்சு.அங்கேயே தங்கிடுங்க.அமாவாசை அன்னைக்கு பேய்களுக்கு பசி ஜாஸ்தியாம்

================

5 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நாளை ஆளுநருடன் சந்திப்பு

# அவரும் உடம்பு சரி இல்லைனு லாங் லீவ் ல போய்டுவாரு பாருங்க


================

6 ரஜினிக்கு 25% வாக்கு வங்கி உள்ளது -தமிழருவி மணியன்

# இது ரஜினிக்கு தெரியுமா?


===================

7 அரசியலில் அதிரடி திருப்பம் முக்கிய முடிவு எடுக்கிறாரா?மாதவன் -செய்தி
− விவேகமான முடிவு எடுங்க

மா − விவேகம் Fdfs போலாமா?


===============

8 1/9/17முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் -விஜயபாஸ்கர் # ஜெராக்ஸ் போதாதா?அசல் வீட்ல இருந்தாதானே பாதுகாப்பு?

=================

9 ஒய்வு தேவைபட்டதால் புதுச்சேரி வந்துள்ளோம்: எம்.எல்.ஏ.தங்க தமிழ்செல்வன் # சரக்கு சீப்பா கிடைக்கும்னு வந்தேன்னு ஓப்பனா சொல்ல முடியுமா?

================


10 கடல் மட்டம் குறைந்துள்ளதால் விவேகானந்தர் பாறை, செல்லும் படகு போக்குவரத்து தடை # விலைவாசி மட்டும்தான் குறையறது இல்லை

=================

11 கருணாநிதியின் கண்ணீர் துளியிலும் புன்னகையிலும் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன - வைகோ #1 3/4 லட்சம் கோடி எதிர்பார்த்தோம்

===================

12 புதுவை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்களுக்காக 30 அறைகள் புக்கிங் # மீதி 11 ரூம் ல யாரு?னு சினேகன்களுக்கு தெரியும்


=================

13 சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்.. சசிகலா தம்பி திவாகரன் # அதுக்கு அமலாபாலை சிஎம் ஆக்கலாம்.


=================

14 தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு பாஜக காரணமல்ல− தமிழிசை # அடிக்கடி வந்து அட்டெண்டென்ஸ் போட்டாதான் டவுட் ஆகுது

=================

15 பெங்களூரு சிறை அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் அடிக்கடி போனார் சசிகலா? தொடரும் பகீர் # டிவி நியூஸ் பாக்கப்போனது தப்பா?


=================

16 காசிருந்தால் ரிசார்ட்டும் சிறை ஆகும்,

சிறையும் ரிசார்ட் ஆகும்
-H.ராஜா # அதிகாரம் இருந்தா யாரையும் ஆட்டுவிக்கலாம்.மாட்டை விக்கலாம்


===================

17 ஒரே நாளில் 9500 பயனுள்ள திட்டங்களைத் தொடங்கிவைக்கும் மோடி -அப்போ அரசாங்கத்துக்கு பயன் உள்ளதாத்தான் இருக்கும்.அடித்தட்டு மக்களுக்கா இருக்காது


===================

18 ஜெ காட்டிய வழியில் EPS ஆட்சி நடத்துகிறார்−Ops # இவருக்கு பதவி தந்தா ஜெ ஆட்சி,தர்லைன்னா ஊழல் ஆட்சி,ஆனா 2 ம் 1 தான்


==============


19 சாமியார் குற்றவாளி என தீர்ப்பு; பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை; 31 பேர் உயிரிழப்பு
நம்பு,கடவுளை நம்பு,இடைத்தரகர் சாமியாரை நம்பாதே

==================

20 இல்லாத இந்தி திணிப்பிற்காக போராடுகின்றனர்- தமிழிசை # வாக்கு வங்கியே இல்லாம தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்னு நாம சொல்லலை?


==================

0 comments: