Tuesday, April 26, 2016

தலைவரே!,நம்ம கட்சிதான் முன்னிலைன்னு கருத்து கணிப்பு வந்து இருக்கு

இன்ஸ்பெக்டர், விஜய் மல்லைய்யா  இருக்கற இடம் தெரிஞ்சுதா?

50% தெரிஞ்சிடுச்சு

 புரியல

 விஜய் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்ட்டோம், அடுத்து மல்லைய்யா தான்


==============


சிஷ்யா! ஐம்புலன் களை.அடக்கினால் ஆம்புலன்ஸ் உன் வீட்டுக்கு வர தேவை இருக்காது.


குருவே!108 க்கு போன் பண்ணாம இருந்தாலே போதுமே?==============

3 மாப்ளை இதுவரை எவ்ளோ சொத்து சேர்த்திருக்காரு?


10 பைசாக்கூட சேர்த்தலை.ஆனா ட்விட்டர்ல 72,000 * பாலோயர்ஸ் சேர்த்திருக்காரு.==========

4 மிஸ்! இனிமே நீங்க எழுதவே மாட்டேன்னு சொன்னீங்க? உங்க படைப்பு ஃபேஸ்புக்ல வந்திருக்கு?


அது டைப் பண்ணது==============5 உன் சம்சாரத்தை நீ கொலை செய்ய ஜட்ஜ் தான் காரணமா?,எப்டி?டைவர்ஸ் கேட்டேன்.2 பேருக்குள்ள எதுனா பிரச்னைன்னா பேசி "தீர்த்திடு"ன்னார்.


================

6 மேடம்.உங்க கதை படிச்சேன்.அப்டியே நெஞ்சைத்தொட்டுடுச்சு.


யோவ்.கையை எடு.2 அடி தள்ளி நின்னு பாராட்டு


===========

7 டியர்.தொடாம லவ் பண்ணிட்டு கிளம்பனும்.


ஏம்மா.தயிர் சாதத்துக்கே ஊறுகாய் தொட்டுதான் சாப்பிடறோம் நீ தக்காளி சாதம் மாதிரி இருக்கே.


============

8 சார்.உங்க : ஜெயா டிவியில் மட்டும் குடி காட்சிகளில் வார்னிங் நோட்டீஸ் போடாமல் இருக்கீங்களே ஏன்?


சாரி சார்.மப்புல கவனிக்கல


==========

9 விஜய் மல்லைய்யா இருக்கற இடம் தெரிஞ்சுதா?


50% தெரிஞ்சிடுச்சு
புரியல
விஜய் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்ட்டோம், அடுத்து மல்லைய்யா தான்


==============

10 மன்னா! பற்றாக்குறையின் காரணமா மகுடத்தை அடமானம் வெச்ட்டோம், இப்போ நகர் உலா போகனும், எப்டி சமாளிக்க?

 இவன் மகுடம் தரிக்காத கிங்குன்னு ஓப்பனிங்க் சாங்க் போட்டு விடு


================

11  தலைவரே! மேரேஜ் ரிசப்ஷன்ல பன்னீர் தெளிக்க வேணாம்னு ஏன் சொல்றீங்க?

சூழல் சரி இல்லை. பன்னீரையே தோட்டத்தில்  தெளிய வெச்சு  தெளிய வெச்சு அடிச்சுட்டு இருக்காங்களாம்


==================


12   இன்றைய இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் இந்தியா ஜெயிப்பது எந்த அளவுக்கு நிச்சயமான விஷயமோ அதே போல் எங்கள் கட்சியும் எல்லா தொகுதியிலும் டெபாசிட் வாங்குவது உறுதி==============


13 தலைவரே! இன்றைய மேட்சில் பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்னு நீங்களூம், இந்தியா தான் ஜெயிக்க்கும்னு உங்க பையனும் ஏன் சொல்றீங்க?

 அப்போதான் இந்து-முஸ்லீம்   இரு தரப்பு ஓட்டை கவர் பண்ண முடியும்


=================

14   மன்னா! தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சரை ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்?

அப்போதான் ஜனங்க என்னை நல்லவன், அப்பாவின்னு நம்புவாங்க?

==================


15 சார் , மேரேஜ் ஆனபின்பும் எதுக்கு தாடி வெச்சிருக்கீங்க? 

 அப்போதான் ஜனங்க தாடியைப்பத்தியே பேசுவாங்க, நான் வெச்சிருக்கும் லேடியைப்பத்தி பேசமாட்டாங்க


==================


16   நைட் ரொம்ப நேரம் கண் விழிச்சிருக்கக்கூடாதுன்னனே, ஏன் இன்னும் தூங்கலை?

 சாரி டாக்டர், மேட்ச் இருக்கு

 சரி, நாளை?

தெறி ட்ரெய்லர் ரிலீஸ், டெய்லி ஏதோ ஒரு விசேஷம் வந்துடுது டாக்டர்==================

17 டியர்.இன்னைக்கு கோவலம் பீச் போலாமா?உங்க கிட்டே கொஞ்சம் பேசனும்.


ஆ!,பேசறதுன்னா போன் லயே பேசு.கொஞ்சனும்னா வேணா பீச் வரேன்

=============

18 தலைவரே!,நம்ம கட்சிதான் முன்னிலைன்னு கருத்து கணிப்பு வந்து இருக்கு.ஸ்வீட் எடுத்துக்குங்க.


யோவ்.சும்மா வர்லை.10 கோடி அள்ளி இறைச்சிருக்கோம்=============

19 டியர், மேரேஜ்  ஆனதுல இருந்து பாகற்காய் குழம்பு வைப்பதே இல்லையே ஏன்?

 ம்க்கும், நோகாம நொங்கு சாப்ட்டுட்டு “ இவள்:உடன் வாழ்ந்த நாட்கள் கசப்பானைவை”ன்னு சொல்லிக்காட்டுவ


=================

20 
டியர்! நீ அசையும் சொத்தா? அசையா சொத்தா?அசையா சொத்துக்கள் கொண்டவனையும் அசைய வைக்கும் சொத்து


======================

0 comments: