Saturday, April 09, 2016

உப்புமா அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்??!!!!

1  டாக்டர்.என் கணவர் ரொம்ப கூச்ச சுபாவியா இருக்கார்.சொந்த வீட்லயே சாப்பாடு போடுனு கேட்கக்கூட தயக்கப்படறார்


சாப்பாட்டுக்கே தயக்கமா?சுத்தம்


============

2 டியர். கடவுள் எப்பவும் என் கூட இருக்கட்டும்னு வாழ்த்துங்க


அய்யோ நான் மாட்டேன்.அப்போ நாம எப்போ லவ் பண்ண ?============


3 உங்க பேங்க்ல லோன் வேணும்


இதுக்கு முன்னால ஏதாவது லோன் வாங்கி இருக்கீங்களா?
இந்த பேங்க்குக்குப்பின்னால இருக்கும் பேங்க்கில் வாங்கி இருக்கேன்=============


4 தலைவரே! மகளிர் மாநாட்ல உங்களுக்கு சாதகமாதான் முடிவு அறிவிப்பாங்கனு எப்டி நினைச்ங்க?
எல்லாரும் மஞ்சள் கலர் ஜாக்கெட் போட்டிருந்தாங்க


==============5 ஜட்ஜ் = அந்தப்பொண்ணை ரேப் பண்ணுனியா?
கைதி = ரேப் பண்ணனும்னு அப்டி செய்யலைங்க, எனக்கு குழந்தை-ன்னா பிடிக்கும், மன்னிச்சு விட்ருங்க


==============


6 சார், உங்க FB ஹேண்டில் ல 30K னு போட்டிருக்கே? அது 30,000 ஃபாலோயர்ஸ்னு அர்த்தமா?
இல்லை, பேங்க்ல 30,000 லோன் வாங்கி இருக்கேன், குறியீடு


==============


7 சார், உங்க தலை முடி மெரூன் கலர்ல இருக்கே? கலரிங்க் ஹேரா?


நரை முடியை மறைக்க மருதாணி தேய்ச்சு குளிக்கச்சொன்னார் டாக்டர், இப்போ தாடியும் நரை

=============


8 மிஸ்! வீட்டில் இருக்கும் சில விஷயங்களை பகிர்ந்துக்க முடியலைன்னு வருத்தப்பட்டீங்களே? சொல்லுங்க

ஷேர் பண்ணுவீங்களா?

 யா

 4 மாசமா வீட்டு வாடகை கட்டலை, கட்றியா?


=================

9 சார், சுற்றுப்புற சூழல் சுத்தமா வெச்சுக்க மாட்டார்னு அந்தாள் முகத்தைப்பார்த்தாலே தெரியுது

 எப்டி?

 10 வருசமா ஹேர் கட், தாடி ஷேவிங்கே பண்னலை


=================


10 தலைவரே! உங்க முகத்துல மரு , மச்சம் ஏதாவது இருக்கா?

இல்லை, மருத்துவர் என்பதன் சுருக் தான் மரு, DOCTOR என்பதை DR னு போடற மாதிரி

ஓஹோ, அப்போ மர் தானே கரெக்ட்?


==================


11 மிஸ்! இந்த அல்வா வை வீட்ல செஞ்சதுன்னு சொன்னீங்க, ஆனா ஹோட்டல் பேரு கவர்ல இருக்கே?


 ஐ மீன் WHEAT ல செஞ்சது , ஹோட்டல்ல வாங்குனது


==================

12  மிஸ் ! உங்க வீட்ல அல்வா செஞ்சீங்களா? வாசம் தூக்குது

அதானே ? மூக்கு வேர்த்திடுமே?

இல்ல, நாக்கு வேர்த்துடுச்சு,


=================


13 டாக்டர்,ஆரஞ்சு பழம் சாப்ட்டா முகத்தில் ஷைனிங்  கூடுமாமே? நிஜமா?

 ஒரே டைம் ல ஆறு அஞ்சு பழம் எல்லாம் சாப்ட்டா தொண்டை கட்டிக்கும்


==============


14  எதுனா நல்ல நாவல் இருந்தா சொல்லுங்க , நல்ல நாவலை எப்படி அடையாளம் கண்டு பிடிக்க ?

கருநீலக்கலர்ல பெருசா இருப்பதெல்லாமே நல்ல நாவல் பழம் தான்


==================


15 வீட்டுல துளசி வெச்சா நோய் நொடி எதுவும் வராது

அது சரிதான், துளசி யை வெச்சிருந்தா அவங்கம்மா ராதா சும்மா விடுவாங்களா?


================

16  தலைவரே!உங்க அனுபவத்துக்கும், வயசுக்கும் போயும் போயும் ஒரு நடிகரை ஏன் எதிர்பார்க்கறீங்க?

காரியம் ஆகும் வரை காலைப்பிடி,ஆனதும் கழுத்தைப்பிடி,இதுவே கழகத்தின் தாரகமந்திரம்


===================17  டாக்டர்! உடம்பில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கும், இரவில் கலர் கலரா கனவு வருவதற்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ?

அஸ்கா சுகர்னா கனவு ஒயிட்& பிளாக்ல, பிரவுன்  சுகர்னா கலர்ல கனவு வரும்


===============


18 டாக்டர்! என் வீட்ல இருந்து டெய்லி 4 கிமீ ஜாகிங்க் போனா ஒரு மாசத்துல  என்ன ஆகும்?

உங்க வீட்டை விட்டு 124 கிமீ ( 31*4=124) தள்ளி வந்திருப்பீங்க, வீட்ல தேடிட்டு இருப்பாங்க


==============

19   டாக்டர்! உப்புமா  அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்னு ஒரு பொய்யை என் சம்சாரம் கிட்டே சொல்ல முடியுமா?

 ஏன்?

 வாராவாரம் உப்புமா தான் சமைக்கறா


==============


20 ஜட்ஜ் = 7000 கோடி கடனையே இன்னும் கட்டலை, திருப்பதிக்கு  1000 கோடி ரூபா காணிக்கை தரப்போறீங்களாமே? ஏது பணம்?

ஏதாவது பேங்க்ல தான் லோன் வாங்கனும் இனி, சிக்குவாங்க


=================

0 comments: