Wednesday, April 13, 2016

நித்யானந்தா, ரஞ்சிதா திருப்பதி திருபத்னி

கலைஞரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது - செய்தி.# ஐ ஜாலி , 3 ஹீரோயின்கள் இருப்பாங்க, அது போக குஷ்பூ, நக்மா
============2சீட் கொடுத்தால் சரி.. இல்லாவிட்டாலும் சங்கடம் இல்லை-தனியரசு # தியாகியரசு?==============

3 அம்மாவிடம் ஐந்து தொகுதி கேட்டுள்ளோம் - ஷேக் தாவுத் #1,கொடுத்தாலும் உவகையுடன் ஏற்றுக்கொள்வோம்


=============

4 இந்தியாவுக்கு திரும்ப இது சரியான நேரம் கிடையாது -விஜய் மல்லையா #5 வருசம் போனா எல்லாரும் மறந்திடுவாங்க.அப்போ நல்ல நேரம்

============

5 ஆண்களை விட பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்..# பெண்கள்.நாட்டின் கண்கள்னு சொன்னாங்க.கண் கெட்டுடாது?


============

6 கூட்டணிக்கு விஜயகாந்த் வராததால் கருணாநிதி கலங்க மாட்டார்:-திண்டுக்கல் ஐ லியோனி # கழகத்துடன் கூட்டணி வைக்காதோர் விளங்க மாட்டார்னு சாபம் விட்டிருப்பாரே?


===========

7 அட்ரஸ் இல்லாமல் போஸ்டர் அடித்தால் ஆப்செட் உரிமம் ரத்துசெய்யப்படும்- தேர்தல்ஆணையம்# நாங்க தான் இன்னும் உரிமம் (லைசென்ஸ்)எடுக்கவே இல்லையே ?


===========

8 அதிமுக ,திமுக ,பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் நலக்கூட்டணியில் இடம் இல்லை -முத்தரசன்# உதிரிக்கட்சிகளுக்கு மட்டுமே இடமா?"


=============

9 HDFC வங்கிக்கு இந்தியா மீது அக்கறை இல்லை-நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் #,இந்தியன் வங்கிக்கே அக்கறை இல்லை.விவசாயிக்கு லோன் தர்றதில்ல


============

10 மக்கள் விஜய்காந்த் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் - அன்பு மணி # மக்கள் உங்க மேல நம்பிக்கை வைக்கும் ஸ்டேஜுக்கே இன்னும் நீங்க வ(ள)ர்லையே?


==============


11 மருத்துவர் ராமதாஸ் மீது கொண்டிருக்கும் மதிப்பு என்றுமே மாறாதவை- கலைஞர் # பழம் நழுவிடுச்சுன்னு மாம்பழம் பறிக்க கல் விட்டுப்பார்க்கறார்

===============

12 அதிமுக 234 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்: நாஞ்சில் சம்பத் நம்பிக்கை # ஆசை, பேராசை , நப்பாசை அதையும் தாண்டிப்போய்ட்டீங்க


==================


13 தலித் இளைஞர் சங்கர்  படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்க  ராமதாஸ் மறுப்பு #  ஊழல் பற்றி ஊழல் கட்சியும், ஜாதி பற்றி ஜாதிக்கட்சியும் பேசமாட்டாக


================


14 

போர்வைகளை தினமும் சலவை செய்ய ரயில்வே முடிவு # சுத்தம், இந்த முடிவையே இப்போதான் எடுத்தீங்களா?=================

15 

தமாகாவின் சைக்கிள் சின்னம் பறிப்பு: தமிழக தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்தும் # இதனால த மா க வின் லைஃப் சைக்கிள் பாதிக்காதில்ல
================


16 

நித்யானந்தா, ரஞ்சிதா திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் # ஜோடிப்பொருத்தம் பிரமாதம்னு ஜனங்க பேசிக்கிட்டாங்களாம்=============


17 ஜெ ஆட்சியில் நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கம்: இளங்கோவன் குற்றச்சாட்டு # இரட்டை இலை ஆட்சி என்பதால் இரு வழிச்சாலை மட்டும் அமைக்கறாங்களோ என்னவோ?

===============

18  

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் மக்கள் நலக் கூட்டணிக்கு தயக்கம் கிடையாது-சி.மகேந்திரன் # நட்டாத்துல தத்தளிச்ட்டு இருக்கும்போது கிடைச்ச மரக்கலத்துல குவாலிட்டி பார்த்துட்டு இருக்க முடியுமா?=================


19  

இப்போதைக்கு நான் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை - மல்லைய்யா #அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் , இன்னைக்கு சொல்றதுதான் என்னைக்கும்================


20  

 ஏப்ரல் 2 முதல் ஜெ பிரச்சாரம் = செய்தி # ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம், ஏப்ரல் 2 அதிமுக தினம் வெரிகுட்==================

0 comments: